(Reading time: 44 - 88 minutes)

 

மா மயினி. வடிவு பேசுதேன். நல்லாயிருக்கீகளா மயினி? நாளைக்கு நாள் நல்லாருக்கு. பெண் பேசி பரிசம் போட்டுடுலாம்ன்னு வேன்ல வந்தோம். மழைல மாட்டிக்கிட்டோம். தண்ணி வடிஞ்ச பிறகு தான் வண்டிய நம்ம வீட்டுப்பக்கம் கொண்டார முடியும் டிர்ரைவரு தம்பி சொல்லிப்புடுச்சு மயினி...அதுக்கு தேன் காத்துக்கிட்டு இருக்கோம். நாங்க சித்த நேரத்தில வந்திடுதோம். மயினி,  பெரியாத்தாக்கு சூடா டீ போட்டு வைச்சுடுங்க. மழைக்கும்  அதுக்கும்  நச் நச்ன்னு தும்மிக்கிட்டு கிடக்கு.. அதை சொல்லத்தேன் கூப்பிட்டேன்” என்று சொன்னார் வடிவுக்கரசி.

 

அவர் பேசி முடித்ததும் அதிர்ச்சியுடன் லக்ஷிமி தன்ராஜிடம் சொல்ல அவருக்கும் லேசான அதிர்ச்சி. “நாளைக்கு பாண்டியனை வரச் சொல்லி பேசலாம்ன்னு தான சொன்னேன். இவ பெண் பேசணும் ஊரை கூட்டிகிட்டு வந்துட்டாளா?” என்று அதிர்ந்தவர், “சரி விடு. என்னைக்கு இருந்தாலும் இதை தான செய்திருப்போம். நிச்சயத்துக்கு திடு திப்புன்னு ஏற்பாடு பண்ணனுமேன்னு தான் யோசனையா இருக்கு.” என்று யோசனையுடனே சொன்னார்.

 

அருகில் இருத்த ஸ்ரீமாவின் கணவர், “கவலைப்படாதீங்க மாமா. என்ன செய்யணும்ன்னு  மட்டும்  சொல்லுங்க நான் பண்றேன். “ என உதவ முன் வர, இருவரும் நிச்சயத்திற்கு என்ன என்ன ஏற்பாடு செய்வதென ஆலோசனை செய்ய ஆரம்பித்தனர்.

 

கார்த்திக் வீட்டில், குளியலறைக்குள் நுழைந்து கண்ணாடியை பார்த்தவள்  “என்ன சார்ம் இல்ல?..நல்லா தானே இருக்கேன்.. பொட்டு மிஸ்ஸிங்...குளியலை போட்டு பிரெஷ் ஆகிடுவோம்” என்று குளித்து விட்டு, தலையை துவட்டி ஜார்ஜட் தாவணியும், வாயில் சட்டையையும் மெல்லிய உடைகளாததால்   ஹேர் ட்ரையர் வைத்தே  ஓரளவிற்கு உலர வைத்து அணிந்து கொண்டாள். பாவாடை மட்டும் காயாமல் ஈரம் இருந்து அவளுக்கு குளிரடித்தது. வெளியே வந்தவள் கார்த்திக்கை அந்த மாளிகையில் அங்கும் இங்கும் சுற்றி தேடும் போது, வரவேற்பறையில் அவள் வரைந்த ஓவியம் இருப்பதை கண்டு அசந்து விட்டாள். பின், ஒருவழியாக, சமையலறை பக்கம்  இருந்து மேற்கத்திய இசை வருவது போல் கேட்க, கூடவே கம கம வென்ற வாசமும் இழுக்க, “முருகா! பசிக்குதே!” என்று விட்டு, “...இது என்ன வாசம்...எதுவரை போகும்...” என்ற பாட்டு பாடிய படி உள்ளே நுழைய அவளை ஒருவித ஆர்வத்துடன்  பார்த்தான் கார்த்திக்.

 

பாதி காய்ந்தும் காயாத விரித்த கூந்தல் காற்றிலாட, தாவணியில் என்ன தான் இடை தெரியாமல் அவள் இழுத்து சொருகி இருந்தாலும் பளிச்சென்ற ஒளிக் கீற்று இடைவெளியில்   அவள்  இடை, வெளியில் தெரிந்ததை ஒரு பார்வை வீச்சிலே பொறுப்பாக குறித்துக் கொண்டன கார்த்திக்கின் கண்கள். “ஒன்னு மட்டும் மிஸ்ஸிங். “ என்ற சொல்லி விட்டு குளிர் சாதன பெட்டியில் சொருகியிருந்த பேனாவை எடுத்து அவள் நெற்றியில் திலகமிட போக, “பாஸ் என் ஸ்கின்னுக்கு கெமிக்கல்ஸ் ஒத்துக்காது.” என்று அவனை  தடுத்து விட்டு, கைப்பையில் இருந்த கோவிலில் வாங்கிய குங்குமத்தை எடுத்தாள்.

 

அவன் கையில் இருந்த பேனாவின் வட்டமான அடிபாகத்தை தண்ணீரில் நனைத்து, அதில் குங்குமத்தை ஒட்ட வைத்து நெற்றியில் திலகமிட்டு கொண்டாள். “இப்போ  எப்படி இருக்கு பாஸ்” என இருமுறை புருவத்தை ஏற்றி இறக்கி கேட்டாள். அருகில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவன் “ம்...கொஞ்சம் டச் அப் பண்ணா பெர்பெக்ட்டா இருக்கும்..மூக்கு மேல லேசா குங்குமம் ஒட்டி இருக்கு” என சொல்ல, அவள் கைக் குட்டையை சரி செய்ய போனவளிடம் அதை வாங்கி துடைத்து விட்டான். அந்த சாக்கில் அவள்  விழிகளில் கலந்தான்.

 

அவளை ரசித்த படி,  “மயக்கு மோகினி” என்று புது பட்டத்தை சூட்டினான் கார்த்திக்.  அவன் சொன்னவுடன் வந்த வெட்கத்தை மறைத்தவள், இடுப்பில் கை வைத்தவாறு, “மயக்கு மோகினியா இருந்தா என்ன? கவர்ச்சி காமினியா இருந்தா என்ன பாஸ்?.....ஜொள்ளு விடாம சீக்கிரம் ரெடி பண்ணுங்க. பசிக்குது” என்றாள் அவன் சமைத்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டு.

 

கையில் கரண்டியை எடுத்த கார்த்திக், “சாப்பிட சொன்னா...இமோஷனல் ப்ளாக் மெயில் அப்படி இப்படின்னு பெரிய வார்த்தை பேசுவ...இது சரி வராது....நீ வீட்டுக்கு கிளம்பு...” விளையாட்டாக அவளை விரட்டினான். “பழச பத்தி பேசாம சியர் அப் அண்ட் பி ஹேப்பி மேன்...அம்மாகிட்ட பேசிட்டேன். எங்க வீட்டு பக்கம் தண்ணி ட்ரைன் ஆக டைம் ஆகும்...வந்தாலும் மாட்டிக்கிடுவேன்னு பொறுத்து வர சொன்னாங்க. கார்த்திக், உங்க ஹால்ல என்னோட பெயிண்டிங் இருக்கு??” என்றாள் வியப்பாக.

 

“ஓ...அதை பாத்தியா...பக்கத்தில என்னோட போட்டோ ஷாட் ஒன்னு கூட இருக்கும்.எப்படியோ, அந்த பெயிண்டிங் மூலமா பல வருஷத்துக்கு முன்னாடியே எங்க வீட்டில என்ட்ரி கொடுத்திட்ட..அதுல “லதா” ன்னு போட்டு இருந்ததே. அதான் உன்னோட சிக்னேச்சரா?” கேட்டான் கார்த்திக்.

 

“ல லக்ஷ்மி, த - தன்ராஜ்...அவங்களுக்கு பக்க பலமா நான், ல,த பக்கத்தில உள்ள துணை எழுத்து” என்று விளக்கம் அளித்தாள் சந்தியா.

 

“வாவ் மயக்கு மோகினி….அந்த பையிண்டிங்கை பாராட்டாதவங்களே இருக்க முடியாது.  அதை கேக்கிறவங்ககிட்ட எல்லாம் என்னோட ஸ்டூடன்ட்டோட பெயிண்டிங்ன்னு மம்மி பெருமையா சொல்லுவாங்க. மேத் அண்ட் ஆர்ட் இரண்டுலையும் பெஸ்ட்டா இருக்கிறது பெரிய விஷயம் கண்ணு.“ என்று பாராட்டினான்.

 

“சொர்ணாக்கா என்னை பத்தி பெருமையா சொல்லுவாங்களா?” என வியப்பு காட்டிவிட்டு, “குரு சரியா அமைஞ்சா, கலையானாலும் சரி, கணக்கானாலும் சரி கலக்கலாம்... ஆண்ட்டி நேத்து எங்க வீட்டுக்கு வந்தபோ பெயின்ட்டிங் பண்றதை  விட்டுட்டேன்னு சொன்னாங்க. அவங்களை மறுபடியும் மோட்டிவேட் பண்ணறதுக்கு, இரண்டு வருசமா நடத்தாம இருந்த ஆர்ட் எக்சிபிஷனை மறுபடியும் நடத்த ஆண்ட்டி கிட்ட கேட்டிருக்கேன்” என்றாள் சந்தியா.

 

“அந்த மாறி நடத்தினா என்னோட பிக்ச்சர்ஸ்ஸும் வைக்க முடியுமா...அல்மோஸ்ட் அமேரிக்கா, ஈரோப் முழுக்க சுத்தி எடுத்த பிக்ச்சர்ஸ் இருக்கும். அது சும்மா, ஹார்ட் டிஸ்க்ல தூங்கிட்டு இருக்கிறதுக்கு இந்த மாதிரி சேரிட்டிக்காவது உபயோகமா இருந்தா சரி தான்” என்றான் கார்த்திக், அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கிய படியே.

 

“சுயர்...கார்த்திக். உங்களுக்கு பொண்ணுங்களை போட்டோ எடுக்க தெரியாதே! மரம், செடி, மட்டைன்னு எடுத்திருப்பீங்க...கண்டிப்பா நல்லாயிருக்கும்.” என்றாள் நக்கலாக.

 

“யார் சொன்னா? இந்த மயக்கு மோகினியையும் எடுப்பேனே...தாவணில கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்க. எடுக்காம விடுவேனா..” என்று சொல்லிக் கொண்டே போனில் அவளை படமெடுத்து விட்டு, சாப்பிட அழைத்தான்.

 

அவன் தயாரித்த உணவை பார்த்து விட்டு, “இந்த வாசனை நல்லா இருக்கே….உங்களுக்கு சமைக்க தெரியுமா  பாஸ்” என்றாள் விழிகள் விரிய. “ம்...சமைக்க பிடிக்கும்....இடாலியன் ரெசிபி ...பேசில் கேள்வி பட்டு இருக்கியா...ஒரு  மூலிகை...அந்த வாசனை தான்”  என்றான்.

 

“இட்டாலியன் எல்லாம் சமைக்கிறீங்க. ப்ரொபசனல் குக்கு லுக்கு தெரியுதே பாஸ். நீங்க ஹார்ட்வேர்ட்ல கேட்டரிங் கோர்ஸ் படிச்சிட்டு எம்.பி.ஏ ன்னு ஊரை ஏமாத்திறீங்களோ?” என்று கிண்டலடித்த படி சமையல் மேடையில் ஏறி உட்கார்ந்தாள்.

 

“விட்டா இங்கயே இலை போட்டு சாப்பிடுவ போல. இறங்கு” என்று அவளை கிளப்பினான்.

 

“பாவாடையில் ஈரமடிக்குது பாஸ்..அடுப்பு பக்கம் தான் கத கதன்னு இருக்கு. ப்ளீஸ்..இங்கயே இருக்கேன்..” என்று கெஞ்சலாக கேட்டாள்.

 

“பவர் இல்லாம பேக் அப்ல  ட்ரையரை ஓட்ட முடியாது. இல்லாட்டி அப்பவே ட்ரை பண்ணியிருக்கலாம். மதுகிட்ட போன் பண்ணி கேட்டு அவ டிரஸ் எடுத்து போட்டுக்கோ. ” என  அவன் சொன்ன ஆலோசனையை “இட்ஸ் ஓகே கார்த்திக்.. சாப்பிட்டு கிளம்பிடுவேன்...இங்கயே ஒரு பவுல்ல குடுத்துடுங்க“என்று மறுத்து விட்டு சாப்பிட ஆயத்தமானாள்.

 

“அதெல்லாம் வேண்டாம்….அங்க வா...இத்தாலியன் பீல்லோட டேபிள் செட் பண்றேன்” என்று விட்டு சில நொடிகளில் மேஜையில் மெழுவர்த்தி சகிதம், பின்புலத்தில் மென்மையான இசை ஒலிக்க,  ரம்யான சூழ்நிலையை உருவாக்கினான்.

 

சந்தியாவோ இருந்த பசியில் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. சூப்பை விட சற்று கெட்டியான பதத்தில் அவன் தயாரித்திருந்த பாஸ்டா ரக உணவை ஐந்து நிமிடத்தில் உண்டு முடித்தாள். கன்னத்தில் கை வைத்தவாறு அவளை பார்த்த படி உட்கார்ந்திருந்த கார்த்திக்கை பார்த்து, “பாஸ்...சைட் அடிச்சுகிட்டு இருக்கீங்க...டசர்ட் எங்க? “ அவள் கேட்டதும் சிரித்து விட்டான். “அடிப்பாவி...இதை சாப்பிடுறதுக்கு என்ன பந்தா விட்ட..இப்போ டிசர்ட் கேக்குறா? இப்போ வீட்டுக்கு போக லேட் ஆகாதா?” என கேட்டான். “எனக்கு ஸ்வீட் டூத் கார்த்திக். சாப்பிட்டு முடிச்சதும் ஸ்வீட் சாப்பிடணும் ...உங்க ஹார்ட்வேர்ட் கேட்டரிங் கோர்ஸ்ல பாஸ்தா செய்ய மட்டும் தான் சொல்லி கொடுப்பாங்களா?...எங்க வீட்டில சாப்பிட்டு இருந்தா அம்மா பாயசம் கொடுத்திருப்பாங்க..ப்ச்...என்ன இருந்தாலும் அம்மா கை போல வருமா”  என்று அலுத்துக் கோண்டே மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள்.

 

நாற்காலியை அவளின் அருகில் இழுத்து போட்டு உட்கார்ந்து, “மயக்கு மோகினி….ஒரு பவுல் பாஸ்டாவை மூச்சு விடாம மொக்கிறப்போ உங்க அம்மா நியாபகம் வரலையா?” என்று கிண்டல் செய்து கொண்டே அவளிடம் நெருங்கி, நேருக்கு நேர் பார்த்து குறும்பாக சிரித்தவன், “இந்தா, கார்த்திகேயனுக்காக உழைத்த வல்லிகண்ணுவிற்கு ஒரு சிறப்பு பரிசு” என்று அறிவிப்பு வழங்கி தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த மெல்லிய செவ்வக பெட்டியை கொடுத்தான்.

 

நன்றி சொல்லிக் கொண்டே வாங்கியவள் என்னவாயிருக்கும் என்று யோசனையோடு அவனைப் பார்க்க,  அவளை முழுங்குவது போல பார்த்துக்  கொண்டிருந்த கார்த்திக், அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவனாய், “மயக்கு மோகினி...யு நோ வாட்...எனக்கு ஸ்ட்ராபெர்ரி ப்ளேவர் ரொம்ப பிடிக்கும்...” என்று ரகசிய குரலில் சொல்லி விட்டு, ஏதோ நினைவு வந்தவனாய் புருவத்தை  சுருக்கி, “ஹே...என்னோட பர்ஸ்ட் ரிவார்ட்டை பாத்தியா?” என கேட்க அவள் இல்லை என்று மறுப்பாக பதிலளித்தாள். அவளையே ஒரு நொடி பார்த்தவன் படக்கென சிரித்து விட்டு, “எப்படியும் அதை பாத்தவுடேனே என்னை திட்டுவ...அதை பாத்த பிறகே இதை ஓபன் பண்ணு…ம்ம்ம்??” என தலையை சாய்த்த படி அவளை பதிலுக்காக பார்க்க, மனதிற்குள் பொங்கிய ஆர்வத்தை மறைத்தவள் “ஓகே” வென்று தலையாட்டி விட்டு,

 

“டிசர்ட்  ஆர்டர் பண்ணா வர எவ்வளோ நேரம் ஆகும் சார்?” என்று அவனை  உணவக சிப்பந்தி போல உருவகப்படுத்தி கேட்டாள்.

 

“நான் கேக்கிற டிப்ஸ்ஸை குடுத்தீங்கன்னா அடுத்த நிமிசம் டிசர்ட் உங்க டேபிள்ல இருக்கும் மேடம்” என்று குறும்பாக கூற,  உச்சுக் கொட்டிக் கொண்டே,

 

“இது வேலைக்கு ஆகாது. வீட்டு பாயாசம் பெட்டர்” என்று கிளம்ப, “மயக்கு மோகினி, எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. பத்து நிமிஷத்தில தயாராகிடும்.” என்று அவளை சமையலறைக்கு அழைத்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.