(Reading time: 44 - 88 minutes)

 வள் சொல்லவதை கேட்ட  நிரு, “ஐ கான்ட் சீ மை கேர்ள் இன் பெயின்..அகைன்” என்றான் நிரஞ்சன் சோர்ந்த குரலில்.

 

கார்த்திக் அதற்கு, “எட்டு வருஷம் நிரு…..இன்னும் எத்தனை வருஷம் இப்படியே இருக்க போற?. சேன்ஜ் இஸ் தி ஒன்லி கான்ஸ்டன்ட் திங் சொல்வாங்க. மாத்தி யோசி. நாங்களும் அவ நல்லாயிருக்க தான் ட்ரை பண்றோம். லெட்ஸ் ஹோப் பார் தி பெஸ்ட்” என்று நிரஞ்சனுக்கு தைரியம் சொன்னான் கார்த்திக்.

 

அரைமனதாக சரியென்றான் நிரு. “நிரு நீ இப்படி தமிழை குத்துயிரும் கொலவுயிருமா பேசுறதுக்கு, மதுகிட்ட தினமும் மிட்நைட்ல  தமிழ் கத்துக்கோ.. சந்தியா விஷயத்தில மிட் நைட் மசாலா தான் வொர்க் அவுட் ஆச்சு” என்றான்.

 

சந்தியா “ஒரு மண்ணும் வொர்க் அவுட் ஆகல” என்று சிலிர்த்துக் கொண்டு சொன்னாள்.

 

நிருவிற்கு ஒன்னும் புரியவில்லை. “மிட் நைட் மசாலா? வாட்?”

 

“தினமும் ரொமான்ஸ் தூக்கலா இருக்கிற லிரிக்ஸ் தேடி பிடிச்சு சந்தியாவுக்கு பாடணும். அப்போ தான் அவ தூங்குவா.” என்றான் கார்த்திக்.

 

“லிரிக்ஸ்சை எல்லாம் யாரு ஆராய்ச்சி பண்ணுவா? நான் கார்த்திக் பாடுறதுக்கு முன்னாடியே தூங்கிடுவேன்” என்றாள் சந்தியா.

 

“அப்போ இன்னைக்கு மிட் நைட் மசாலாக்கு என்ன பாடினாலும் கண்ணை மூடிட்டு தூங்குவ…..ம்….பாக்கலாம். நிரு, நீ தினமும் மதுகிட்ட தமிழ் பேசப்  படிச்சுக்கோ” என்றான் கார்த்திக்.

 

“மது ஓகே சொல்லுமா? “ என கேட்டான் நிரஞ்சன்.

 

“சந்தியா மதுவை ஓகே  சொல்ல வச்சிடுவா..டோன்ட் வொர்ரி..அப்புறம் லவ் பண்ணா நிறைய பொய் சொல்லணும். அதுனால தமிழே தெரியாத மாதிரி ஆரம்பி “ என பல பல யோசனைகளை வாரி வழங்கினான் கார்த்திக்.

 

“பழுத்த பழனியப்பா எப்புடி இப்படி?” கேட்டாள் சந்தியா.

 

“பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் வல்லிகண்ணு” என்றான் காலரை தூக்கிவிட்ட படி கார்த்திக்.

 

“பாஸ், இப்போ ஜீரால சேர்ந்த ரசகுல்லாவும் இனிக்கணும். நான் ஜீராட்ட இதமா பேசி பதமா ரெடி பண்றேன்...ரசகுல்லா உள்ள குதிக்க ரெடி ஆகிக்கோங்க...உங்கள் காதலை சேர்க்கும் கருவியான எங்கள் தமிழ் தாய்யை போற்றி,” என்று விட்டு,

 

“நீராரும் கடலெடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்

சீராரும் வதனமென கண்டமிதிழ்

தெக்கணமும் அதிற்சிறந்த..” என  பாட ஆரம்பிக்க,

 

“ஸ்டாப்… “ நிரஞ்சனும், கார்த்திக்கும் ஒன்றாக கதறினர்.  “என்ன வல்லிகண்ணு கொஞ்சம் கூட வார்னிங் குடுக்காம நீ பாட்டுக்கு பாட ஆரம்பிச்சிட்ட. நிரு ஆர் யு ஓகே?” அக்கறையாய் நிரஞ்சனிடம் கேட்டான்.

 

“எஸ்.. பீலிங் பெட்டர்” என்றான் ஓடி கலைத்தது போல. “நம்ம ஹார்ட் எவ்ளோ ஸ்ட்ராங்கா இற்குன்னு இதே வைச்சு பாக்கலாம்” என்றான் நிரஞ்சன்.

 

“யே ரசகுல்லா, விழுக் விழுக்குன்னு தமிழ் வழுக்கிகிட்டு  போகுது...இதுல என்னை கலாய்க்கிறீங்களாக்கும்! நான் தமிழ் தாய் வாழ்த்து பாடினா உங்க ரெண்டு பேருக்கும் நக்கல் நையாண்டி…...மது உங்களுக்கு பர்ஸ்ட் பாடமா இதை தான் கத்து கொடுக்க போறா… சென்னை வர்றபோ எங்களுக்கு  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் போறீங்க”

 

“வாட்? “ என்றான் நிரஞ்சன்.

 

“ம்..கதம்...கதம்.. முடிஞ்ச்சு போச்சு. சென்னை போறதுக்குள்ள ஜீராவை எவ்வளோ மாத்த முடியுமோ அவ்வளோ ட்ரை பண்றேன். உங்க தமிழ் கிளாஸ்க்கு அப்போ அப்போ நாங்க வருவோம். ஆனா நிரு, சைட் ட்ராக்ல கொஞ்சம் விக்காம தமிழ் பேச கத்துக்கோங்க. ஓகே…..நான் கெட்ட பசில இருக்கேன். இதுக்கு மேல பேச  முடியாது. சாயங்காலம்  கோவிலுக்கு போகணும்.” என்று நிருவிடமும் கார்த்திக்கிடமும் விடைபெற முயன்ற சந்தியாவிடம் “இன்னைக்கு மது உங்க வீட்டிக்கு வர மாட்டா தெரியுமா?” என்றான் கார்த்திக். “ம்...மது சொன்னா டின்னருக்கு உங்க சித்தப்பா வீட்டுக்கு போறீங்கன்னு. உங்களுக்கு ப்ளைட் எப்போ?” என கேட்டாள். “நாளைக்கு மார்னிங்...நீ லோடு வேன்ல அனுப்பி விட்டதயெல்லாம் டவுன்லோட் பண்ணி என் பேகேஜ்ல விடிய விடிய அப்லோட் பண்ணனும். ஹெல்ப் பண்ண வர்றியா?” என்று முடிக்கும் போது இரகசிய குரலில் கேட்டான் கார்த்திக்.

 

“ஆசை தோசை... பொண்ணை இம்ப்ரஸ் பண்ண பாட்டும் பாடணும்  ...பொட்டியும் தூக்கணும்...அப்போ தான் கைம்மேல் பலன் கிடைக்கும். நான் விடை பெறுகிறேன்  பாஸ்...ஹே ரசகுல்லா சென்னை வர்றபோ ஒரு டப்பா  ரசகுல்லாவோட வாங்க..” என்று விடை பெற்றாள்.

 

அவள் சென்றவுடன் “இஸ் ஷி யுவர் கேர்ள்?” என நிரஞ்சன் கேட்க, “ம்...ஹூம்” என மறுப்பாக தலையாட்டி விட்டு “ ஐ அம் ஹர் பாஸ்” என்றான் முதலாளி  தோரணையில்.

 

“தென்  வாட் அபொவ்ட்  மிட் நைட் மசாலா ???”

 

“அது சும்மா. உனக்கு என்னை பத்தி தெரியும்ல.”

 

“அதான் சர்ப்ரைஸிங்... நீ கேர்ள்ஸ்கிட்ட பேசாதுல…”

 

“இவகிட்ட பேசி தான் காரியத்தை சாதிக்க முடியும். மாஸ்டர் மேனிபுலேட்டர் கேள்விப்பட்டு இருக்கியா? அது தான் சந்தியா. ஆளுக்கு ஏத்த மாதிரி பேசுவா. நீயும்  எட்டு வருசமா மதுகிட்ட பேசுற. ஆனா அவ ஒரே நாள்ல மதுவை அவ பக்கம் இழுத்துட்டா”

 

“அப்படின்னாலும்  சந்தியா எதுக்கு என் லவ்க்கு ஹெல்ப் செய்யுது.”

 

“அவ அப்படி தான்...அவ எப்பவும் அவளுக்கு தான் மத்தவங்க மேல அக்கறை  இருக்கிற மாதிரி ப்ரஜெக்ட் பண்ணி காமிப்பா....எல்லாரும் அவ கைண்ட் ஹார்ட்டட் நினைக்கணும்ன்னு சீன் போடுவா. இப்போ எங்க மொத்த குடும்பமே அவ நடிப்பை நம்புது…..என் நடிப்பை அவ நம்ப ஆரம்பிச்சிருக்கா  ” என்றான் கார்த்திக்.

 

“அப்போ லவ் பண்ற மாறி நடிக்குது? அதே பாத்து சந்தியா லவ் பண்ணுது??”

 

“ம்...அதுக்காக தான் இவ்வளோ கஷ்டப்பட்டு  இப்படி நடுராத்திரி எல்லாம் பாட வேண்டியிருக்கு. என்னோட இத்தனை வருஷ ஸ்லீப் பேட்டர்னை இவளுக்காக மாத்தி, சே...என்னை நினைச்சா எனக்கே பிடிக்கல. வேற வழியில்லை அவ திமிர அடக்கணுமே. நிரு, எந்த பொண்ணாவது என்னை இக்னோர் பண்ணி பாத்திருக்கியா?”

 

நிரஞ்சன் சிரித்து விட்டு, “அது எப்படி...உன்  பேரே  மேக்னெட்...நம்ம காலேஜ்ல  மோஸ்ட் அபீளிங் பெர்சனாலிட்டி பேரு வாங்கி இருக்குது.“

 

“ஆனா இவ ஒரு அடங்காத திமிர் பிடிச்ச பேய்! அவளை மாறி ஒருத்தியை  லைப்ல பாத்ததே கிடையாது. அவ என்கிட்ட வரம்பு மீறி விளையாண்ட மாதிரி நானும் எல்லை மீறி காதல் விளாட்டு விளாடலாம்ன்னு தான் நினைச்சேன்...தெரிஞ்சோ தெரியாமலோ மதுக்கு அவ ஹெல்ப் பண்றா...அதான் மனசளவுல மட்டும் காயப்படுத்திட்டு  விட்டுடுலாம்ன்னு நினைக்கிறேன்.”

 

அவன் பேசுவதை கேட்டு “கார்த்திக், அது கொஞ்சம்  நாட்டி மாறி தெரியுது. நீ எதுக்கு இப்படி சீரியஸ்ஸ யோசிக்குது??” என்று கேட்டான் நிரஞ்சன்.

 

“நாட்டியா?? ஒரு ஹாஸ்பிட்டலே   என்னை பைத்தியனாட்டம் பாத்ததை  என்னால ஜென்மத்துக்கும் மறக்கவே முடியாது….அவள என் மேல பைத்தியமாக்கி ஒவ்வொரு நாளும் என்னை நினச்சு ஏங்க வைப்பேன்“ என்று வெறித்தனமாக சொன்னவன் ஒரு நொடி தாமதத்திற்கு பின், “ப்ச்ச்…..நிரு இது உனக்கு புரியாது. என் பிரச்சினை. நானே டீல் பண்ணிக்குவேன். விடு”  என்று அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்.

 

ன்று மாலை நேரம், சந்தியா குளித்து விட்டு, சிவப்பு நிறத்தில் ஊதா நிற கரை போட்ட பட்டு பாவாடை, சிவப்பு சட்டை, ஊதா தாவணியில் தேவதையாக மிளிர்ந்தாள். அவளை பார்த்ததும் தவழ்ந்து கொண்டிருந்த தருண்  “தீ...தீ” என  கை தட்டி சிரித்தான். “சித்தி அழகா இருக்கேனாடா? கொழு கொழு கண்ணா”, என அவனை அள்ளி முகர்ந்து உச்சி முகர்ந்து முத்த மாரி பொழிந்தாள். “அட உன் பெர்பூயூம்  தான்டா எனக்கும் வேணும். என்னம்மா கிறங்கடிக்குது ” என்று சொல்லிக் கொண்டே, ஸ்ரீமாவிடம் ஜவ்வாது வாங்கி தன்  கழுத்தில் போட்டுக் கொண்டாள்.  

 

“ஸ்ரீ, நீ  கோவிலுக்கு வர்றியா?” என கேட்க,

 

“இல்லடி. இப்போ மாமா வந்திடுவாரு” என ஸ்ரீமா  சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “சித்தி நான்  வர்றேன்” என அவளது காலை கட்டிய யாழினியிடம், “யாழு...அம்மா ஆபிஸ் இப்போ தான் முடிஞ்சிருக்கும். எப்படா இந்த யாழு குட்டிய பாப்போம்ன்னு வந்துகிட்டு இருப்பா. நீ என்கூட வந்துட்டா அம்மா வந்ததும் யாழு காணோம் காணோம் ன்னு தேடுவாங்க. நீ சமத்தா இங்க இருந்தேனா அம்மா வர்றபோ ஒளிஞ்சு கிட்டு அம்மாக்கு முட்டாச்சு காமிக்கலாம்.” என்று குழந்தை போலவே கொஞ்சு குரலில் அவள் புரியும் படி விளக்கி விட்டு, தலை வாரி விட சொல்லி லக்ஷிமியிடம் ஓடினாள். “பாப்பா, நீ பூமாக்காக விரதம் இருக்கிறேன்னு அப்பாவும்  விரதம் இருக்கிறாங்க. அப்பா வந்த பிறகு ஒன்னா விரதத்தை முடிங்க” என்று  சொல்லிக் கொண்டே ஒற்றை சடை பின்னி விட்டு அவளுக்கு மல்லிகைப் பூவை சூட்டி அனுப்பி வைத்தார்.

 

சுப்ரமணியர் திருக்கோவில். சந்தியா உயிருக்கு உயிரான ஆறுமுகன். அவனிடம் தன் பாரத்தை எல்லாம் இறக்கி வைத்து கொண்டிருந்தாள். “முருகா...போ உன் கூட பேச மாட்டேன். உன் கூட ரெண்டு தடவை சண்டை போட்டேன். கொஞ்சம் கூட எனக்காக பீல் பண்ணவே மாட்டிங்கிற. ஆனா, ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ. நீ எவ்வளவு அடிச்சாலும் உன்கிட்ட தான ஓடி வருவேன். எங்க பூக்கு  இனிமேலும் கஷ்டம் குடுக்காத. முதல்ல அசையாத பொம்மை கொடுத்த  ….ரெண்டாவது குழந்தைய  உருப் பெறாமலே சிதைச்சுயே...முருகா...போதும்….அவ உடம்பாலயும் மனசாலயும் பட்ட கஷ்டம் போதும்..இனிமேலும் அவ தாங்க மாட்டா...பூ பத்து மாசம் சுமக்கும் பாக்கியத்தை குடுத்து, பால முருகனை அவ வயுத்துல குடு முருகா” கண்களை மூடி மனம் உருகி வேண்டிக் கொண்டிருக்க...இத்தனை நாளும் அழாமல் உபயோகமன்றி இருந்த அவள் கண்ணர் சுரப்பிகள் தாரை தாரையாக கண்ணீரை சுரந்தன…

 

கண்களை திறந்தாள்.  முருகன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அந்த உருவத்தை அப்படியே மனதிற்குள் வாங்கியவள் மீண்டும் கண்களை மூடி தனக்கு பிடித்த முருகன் பாடல்களை மனதிற்குள் ஜபித்தாள். எத்தனை நேரம் கண்களை மூடி மானசீகமாக முருகனுக்கு கண்ணீர் அபிஷேகம் செய்து தவம் கிடந்தாளோ, விழித்து பார்த்த போது, மேகம் பெருமழையை இறக்குவதற்கு அடையாளமாக  தூறலை அனுப்பி முன்னெச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தது.

 

 “சந்து குட்டி ” என்ற அழைப்பை கேட்டு திரும்ப அங்கே நின்றது சீனியம்மா. லக்ஷ்மி பணிபுரியும் பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்து  ஓய்வு பெற்றவர். முதுமை நெருங்க நெருங்க கோயில், குளம் என்று தன்னை பக்தியில் ஈடுப்படுத்திக் கொண்டவர். “சீனி அத்தை!!!” அழைப்பிலே  சந்தோசத்தையும் பாசத்தையும் வெளிபடுத்த, “குட்டி…அப்பதே உன்னை பாத்துட்டேன். எம்முட்டு அழுகை. அதை பாத்து தான் வானமே பொத்துகிட்டு வருதோ என்னமோ? “ என்று இன்னும் அவள் முகத்தில் சரியாக காயாமல் இருந்த கண்ணீரை துடைத்து விட்டவரிடம் பூமாவுக்காக வேண்டுவதை சொன்னாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.