(Reading time: 4 - 7 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

ஓ, இது தானா விஷயம் என கிருத்திகா மனதினுள் நினைத்துக் கொள்ள, மிருதுளா,

   

“நல்ல வேளை நான் உன்னை திட்டாமல் இருந்தேன் நிலா! இல்லைனா, உன் ஹீரோ எனக்கும் ஏதாவது தண்டனை அரேஞ் செய்திருப்பார் போலிருக்கே...” என்றாள் கிண்டலாக.

   

“பின்னே நாங்க எல்லாம் யாரு... சூப்பர் டெரர் பீப்புள்...! எங்க குடும்பமே அப்படி தான்!” என்று பெருமை பட்டுக் கொண்டாள் கிருத்திகா...

   

மாடசாமியையும், குமாரையும், மிரட்டி விட்டு போலீஸ்காரர் கிளம்பி விட, தியாகுவும், கிருத்திகாவும், டாக்டர் மோகனையும் அவர் மனைவியையும் சந்தித்து நன்றி சொல்லி விட்டு, விடைப் பெற்று சென்னை நோக்கி கிளம்பினார்கள்...

   

சென்னையில் தங்கள் வீட்டில் கணவனின் அருகே இருந்த கிருத்திகாவின் மனம் நெகிழ்ந்திருந்தது... அவளுக்காக எவ்வளவு யோசித்திருக்கிறான்... அந்த ரோமியோ குமாரை கூட விட்டு வைக்கவில்லை!!!!

   

அருகில் இருந்தவனின் தோளில் சலுகையாக சாய்ந்துக் கொண்டவள்,

   

“என் மேலே உங்களுக்கு எதனால இவ்வளவு அன்பு ராஜ்... நான் பெர்ஃபெக்ட் எல்லாம் இல்லை... ரொம்ப கோபப்படுற... ஷார்ட் டெம்பர் இருக்க, யோசிக்காமல் பேசுற, ஒரு ரொம்ப சாதாரணமானவள்... அப்புறம் எப்படி...” என்றாள் கேள்வியாக!

   

“பிகாஸ் யூ ஆர் மை கீர்த்தி...! ஆஸ் சிம்பிள ஆஸ் தட் டார்லிங்...! இந்த உலகத்துல இருக்க யாருமே பெர்ஃபெக்ட் ஆனவங்க இல்லை... எல்லோர் கிட்டேயும் ஏதாவது குறை இருக்கு... பட் அஃப் கோர்ஸ் நீ சொன்னது எதுவுமே உன்னோட குறை இல்லை... அதெல்லாம் உன்னோட நல்ல கேரக்டர் வெளியே தெரியாமல் மறைக்குற ஸ்க்ரீன் மாதிரி அவ்வளவு தான்... இன் அ வே, அதெல்லாம் ரோஜாவை சுத்தி இருக்க முள் மாதிரி... எனக்கு தெரியும் நீ ஒரு ரோஜா... ரொம்ப ரொம்ப அழகான, மென்மையான ரோஜா...”

   

கணவனை இறுக இறுக அணைத்துக் கொண்டாள் அவள்...!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.