(Reading time: 8 - 15 minutes)

14. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

ட…கீர்த்தி கூப்பிடுகிறாள்…..என்னவோ நேரில் அவள் இருபது போல வேகமாக தலையைச் சிலுப்பிக் கொண்டான். புன்னகைத்துக் கொண்டே ஃபோனை எடுக்கப் போனான். அழைப்பு மணி நின்று விட்டது…..இப்போ என்ன செய்வது? ….மீண்டும் மணி அடிக்காதா ?....என்று மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 இதென்னது….ஃபோன் பண்ண வேண்டும் என நினைத்தவுடனேயே கீர்த்தியின் ஃபோன் வந்தது …இப்போ எடுக்கும் முன் நின்று போனது காலை நேர ரம்யமான சூழலையே மாற்றியது.

சரி……பேசவேண்டும் என்று நினைத்திருந்தோமே……நாமே கூப்பிட்டு விடலாம் என்று தீபக் ஃபோனை எடுத்து கீர்த்தியை அழைத்தான்…….ஹ்ம்ம்… பிஸி.

இனி வருவது வரட்டும் என மீண்டும் மீண்டும் அழைத்தான்.

ஐந்தாவது தடவையில் கீர்த்தி ஃபோனை எடுத்தாள்.

“ஹலோ”

“ஹெலோ கீர்த்தி ….நான் தீபக்……உங்க கால் வந்தது….நான் எடுக்கும் முன் …”

“சாரி…..நான் என் ஃப்ரெண்ட் தீபா கிட்டே பேச நினைத்து தெரியாமல் உங்க நம்பரை அழைத்து விட்டேன்…சாரி…..காலைலே டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.”

“ஓ…நான் ஏதோ அம்மாவுக்கு உடம்புக்கு என்னவோ என்று பயந்துட்டேன்…..அம்மா எப்பிடி இருக்காங்க?..........”

“அம்மாவுக்கு ரொம்பப் பரவால்லை………..”

அடுத்து என்ன கேட்பது என்று புரியாமல் தீபக்கும் என்ன சொல்வது எனத் தெரியாமல் கீர்த்தியும் ஒரு நிமிட மௌனம் அவர்களைக் கடந்து போனது.

திடீரெனத் தோன்றியது போல

“ நேற்று ஷைனி மேடம் உங்க அம்மாவைப் பார்க்க வந்திருந்தாங்க போல….?”

என்றான்.

“ஆமா…..அவசர அவசரமா வந்துட்டுப் போனா….ஷைனி…….ஏய்…இருங்க…ஷைனியை எப்பிடி உங்களுக்குத் தெரியும்? அவ எங்கம்மாவைப் பார்க்க வந்தது எப்படி உங்களுக்குத் தெரியும்?......” என்று கொஞ்சம் சத்தமாகவே அதிசயத்துடன் கேட்டாள்.

“ஹேய்…கூல்……இதெல்லாம் சொல்லணும்னா அரை நாள் ஆகும்…..உங்களுக்கு ஆஃபீஸ் லேட்டாப் போனா ஒண்ணுமில்லையா…..?”

தீபக் ரொம்ப ஜாலியான மூடில் பேசிக் கொண்டிருக்கும் போது

“தீபக் ஆஃபீஸ் போக வேண்டாமா….? லேட்டாகலையா…..” சுபாக்கா கீழிருந்து கேட்டது காதில் விழவும்

“அதனாலே எல்லாத்தையும் நிதானமா…நேரில் பேசலாம் ஓகேவா?.....பார்க்கலாம்….”

என்றவாறு பதிலுக்குக் காத்திராமல் வைத்தான்.

கீர்த்தி குழம்பிப் போயிருந்தாள். ஷைனி….தீபக்…… இவங்க ரெண்டு பேரும் சொந்தமா….ஷைனி சொல்லவேயில்லையே….என்று குழம்பிக் கொண்டேயிருந்தாள்.

ன்னை வதை செய்யும் தயா ஆழ்ந்து உறங்குவதைப் பார்த்து எரிச்சலாக வந்தது……போலீஸ் ஸ்டேஷன்….காணாமல் போய் விட்டாள் அது இது என்று எவ்வ்ளோ……பிரச்னைகள்…..வேண்டும் என்றூ செய்கிறானா….அல்லது உண்மையிலேயே மறந்துதான் போய்விட்டானா?......என்று புரியாமலேயே தடுமாறினாள்.

இவன் மேல் வைத்திருந்த காதல் எல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டது?....இவனைப் பார்த்தாலே பொங்கி வரும் அன்பு எங்கே போய் அழிந்து போனது?......இவனைப் பார்த்தா காதல் வந்தது?....இவனுக்காகவா….பெற்றோரை..உற்றாரை உதறி விட்டு வந்தோம்….இதெல்லாம் ஏன் எனக்கு நடக்கிறது? ஒரே மூச்சில் முடித்து விடும் நாவல் போல தன் வாழ்க்கை இப்பிடியா சிக்கல் சிக்கலாக இருக்கவேண்டும். என நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ யாரோ உலுக்கி எழுப்புவது போல விலுக்கென்று எழுந்து தலையைச் சிலுப்பிக் கொண்டான் தயா. ஷைனி அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்

 " என்னடா செல்லம் அப்படிப் பார்த்துக்கிட்டுருக்கே? "

ஷைனி தலையைத் திருப்பிக் கொண்டாள். தயா இரவு எதுவுமே நடக்காதது போல "இங்கே வாடா செல்லம் "என்று கையை நீட்டினான்.
ஷைனி வராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

"இங்கே வாடீ........கூப்பிடுறேன்லே...."

ஷைனி ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன திமிரா....? இந்தத் திமிருக்காகத்தானே இந்தப் பாடு........கூப்பிட்டா வர மாட்டியா?"

"உங்களுக்கு ஃபோனை ரிப்பேருக்குக் கொடுத்தது நிஜம்மாவே மறந்துடுச்சா....?"

"ஓ....அதுவா.......அதை இன்னமுமா நினைச்சுட்டிருக்கே?"

“ப்ச்....பதில் சொல்லுங்க.....நிஜம்மாவே மறந்துடுச்சா....? இல்லே..............."

"இல்லே.........இல்லேன்னா என்ன செய்வே?................நிஜம்மாவே மறக்கலைன்னே வச்சுக்கோ........இப்போ என்னடா செல்லம் செய்வே.....?

"சே.....ஏன் தான் இப்பிடி இருக்கீங்களோ.....எனக்கு ஒருநாள் கூட நிம்மதி கிடையாது....உங்களோட...." என்றவாறு அழுது கொண்டே குளிக்கக் கிளம்பினாள்.

" ம்ம்ம்....இதைவிட்டா வேறெ என்ன தெரியும்.......தானாவே கடிக்கவேண்டியது....தானாகவே அழ வேண்டியது...சே....." என்று மறுபடியும் படுத்துக் கொண்டான்.

வண்டியை எடுக்கும் முன் வாசலில் வந்து நின்று கொண்டு
"இன்னிக்கு எத்தனை மணிக்கு வருவே.....எத்தனை போலீஸ் ஸ்டேஷன் போய் நிக்கணும்....எத்தனை பேரைக் கூட்டிக் கொண்டு தேடக் கிளம்பணும்?" என்றான் தயா.

சீ....என்று ஒரு பார்வையை வீசி விட்டுக் கிளம்பினாள் ஷைனி.

வழியில் ஆஃபீசுக்குப் போகும் மனநிலையே இல்லாமலிருந்தாள் ஷைனி. தெரு முனையில் இருக்கும் அம்மன் கோவிலில் வண்டியை நிறுத்தினாள். மார்கழி மாசக் கோவிலுக்கே உரித்தான பொங்கல் புளியோதரை மணத்துடன் விபூதிக் குங்குமம் வாசனையுடன் கோவில் கமகமத்தது. கோவில் சன்னதியில் ஒன்றும் தோன்றாமல் ஆஃபீஸுக்குப் போகும் அவசரம் கூட இல்லாமல் உட்கார்ந்து விட்டாள். கண்ணிலிருந்து கரகரவென்று கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாளோ தெரியாது.......தயா வந்து
"ஓ................. நீ இங்கேருக்கியா.....என்ன ப்ளான் வச்சுருக்கே சொல்லு....ஆஃபீஸ் போகாமே இங்கே என்ன பண்ணிக்கிட்டிருக்கே?....எனக்கு ரொம்ப நாளா இப்பிடி ஒரு டவுட் உண்டு....நீ ஒழுங்கா ஆஃபீசுக்குத்தான் போறியா......இல்லே ஊர் மேயுறியான்னு....இப்போதானே தெரியுது....." என்று அவன் கத்திக் கொண்டிருக்கும் போதே ஷைனி ஒன்றும் சொல்லாமல் அவனைத் தாண்டி வண்டியில் ஏறிக் கொண்டாள்.

"இங்கே நான் கத்திக்கிட்டிருக்கேன்................நீ எவ்வ்ளோ தைரியமா பதில் சொல்லாமல் கிளம்புவே.....உன்னை....."
என்று கத்திக் கொண்டே அவளை நோக்கி வர.......ஷைனி வண்டியைக் கிளப்பிப் போயே போய் விட்டிருந்தாள்.

டிப்பு அறிவைத் தருகிறது.கூடவே திமிரையும் தருகிறது. ரொம்பத் தைரியத்தையும் தந்து விடுகிறது. அந்தத் தைரியமும் திமிரும் சேர்ந்து தை தை என்று ஆடும் போது கண்ணைக் கட்டிப் போடுகிறது. நாம் எடுக்கும் முடிவுதான் சரியென்று குதியாட்டம் போடுகிறது. காதல் என்ற வலை பின்ன வைக்கிறது. அதில் விழுந்து வாழ்க்கையை இது போல் உண்டா....என்று அழகாக்குகிறது.....அம்மா அப்பாவை எதிர்த்துப் பேசச் சொல்லுகிறது. பொய் சொல்ல வைக்கிறது. பிடிவாதம் பிடித்துச் சாக்கடைக்குள் விழவும் வைக்கிறது. ஆனால் வாழ்க்கையே இருண்டு போனபின் அதை உணரவும் வைக்கிறது. ஆனால் அத்தனையும் உணர்ந்தபின் அம்மா அப்பாவிடம் சரணடைவதைத் தடுத்தும் தொலைக்கிறது. இவ்வளவு எதற்கு ஈகோ?........அம்மா அப்பாவிடம் போய் "அவ்வளவுதாம்பா.....நீங்க சொன்னது சரிதாம்பா......நாந்தாம்பா தப்புப் பண்ணிட்டேம்பா....இந்தக் குழிக்குள்ளேயிருந்து என்னைத் தூக்கி விடுங்கப்பா என்று என்னால் ஏன் கேட்க முடியவில்லை என்று தன்னிரக்கத்தில் அழுது கொண்டே வண்டியை ஓட்டினாள் ஷைனி.

இப்போ இந்த நிமிடம் அம்மாவைப் பார்த்தால் அப்படியே கட்டிக் கொண்டு அழுது விடலாம் போலிருந்தது ஷைனிக்கு. எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா...இவன் கூட வாழ்வதை விட ஓடுகாலி என்று பேர் எடுப்பது எவ்வளவோ மேல் .....
கீர்த்தி ஆஃபீஸ் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். நமக்கு யாருமேயில்லையே என்று நினைக்கும் போது பார்த்து யாராவது புன்னகைத்தால் கூட மனசு அப்படியே கழன்று விழுந்து விடும்தானே. ஷைனிக்கு உதடு துடித்து அழுகை அழுகையாக வந்தது. ஹெல்மேட் போட்டதால் கீர்த்தி கவனிக்கவில்லை உற்சாகமாய்க் கையை ஆட்டினாள். கீர்த்தி தீபக்கிடம் பேசியதிலிருந்தே உற்சாகமாய் .இருந்தாள்.அதைவிட தீபக்குக்கு ஷைனியைத் தெரிந்திருக்கிறதென்பது ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.
ஷைனி ஹெல்மேட்டைக் கழற்றியதும் முகத்தைப் பார்த்தே கீர்த்திக்குத் தெரிந்தது..பிரச்னை பெரிதென்று.

"என்ன ஷைனி.....இன்னிக்கு என்ன?"

"ப்ச்"

"சொல்லுடா......"

"பேசி என்ன ஆகப் போகுது?"

"சரி வேண்டாம் விடு.......வேற பேசலாம்...."

"ம்"

"ஏய் தீபக்கை உனக்கு எப்படித் தெரியும் ஷைனி?"

"எந்த தீபக்?"

"அட..............எங்கம்மாவை ஹாஸ்பிடல்லே சேர்த்து விட்ட தீபக்......"

"அவரை எனக்குத் தெரியாதே....."

"ஏய்.... நீ சொல்லலைன்னா....எனக்குத் தெரியாதா............"

"இல்லைடி.......நிஜம்மா நினைவுக்கு வர்லை........."

"இப்போ இருக்குற நிலமையிலே உனக்கு ஒண்ணும் நினவுக்கு வராது......நீ எங்க அம்மாவைப் பார்க்க வந்தது அவருக்கு எப்பிடித் தெரியும்?"

"ஓ.....அவரா.....தயாவோட ஃப்ரெண்ட்....."

"தயாவோட ஃப்ரெண்டா.............." என்று ஷாக்கானாள் கீர்த்தி.

கீர்த்திக்குத் தலை சுற்றியது. தயாவோட ஃப்ரெண்ட்னா.....தயா மாதிரிதானே இருப்பார்....என்று தீபக்கின் மேல் வைத்திருந்த அபிப்ராயம் சட்டென்று சுருங்கியது.

"ஓ....அவர்தான் உங்க அம்மாவுக்கு உதவி பண்ணினாரா......."
என்றவள் சட்டென்று நினைவுக்கு வந்தவளாக கீர்த்தியின் கையைப் பிடித்து

"கீர்த்தி அந்தத் தீபக் நம்பர் தெரியுமா?........நம்ம அவரைப் பார்க்கப் போலாமா....? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு கீர்த்தி........அவர் கூட நேற்று ஏதும் பிரச்னைன்னா கூப்பிடும்மான்னு சொன்னார்........."

"அவர் நம்பர் தெரியும் ஷைனி ஆனா இப்பிடிச் சட்டுனு கூப்பிட்டு உதவி கேக்குற அளவுக்குத் தெரியாது.......ஆனாலும் உனக்கு ஒரு உதவின்னா எதையும் செய்வேன் ஷைனி.......இரு கூப்பிட்டுப் பார்க்கலாம் " என தீபக்கின் நம்பரைச் சுழற்றினாள் கீர்த்தி. 

தொடரும்

Karai othungum meengal - 13

Karai othungum meengal - 15

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.