(Reading time: 44 - 88 minutes)

21. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ங்களுக்கும் ஸ்ரீக்கும் வித்தியாசமே தெரியலையே“ ஆச்சர்யத்துடன் கேட்டான் கார்த்திக், பூமாவிடம்.

 

“நீங்க வேற. நான் பூ வை பொண்ணு பாக்க வந்தப்போ ஸ்ரீக்கு கல்யாணம் ஆகலை.எது பொண்ணுன்னு கொஞ்சம் குழம்பிட்டேன். அப்போ எங்க மாமனார், புருவத்து பக்கத்தில பூமாக்கு சின்ன தழும்பு இருக்கும்ன்னு குறிப்பு கொடுத்தார்.” என்ற குணா மேலும்,

 

“அவர் அதோட விட்டுருக்கலாம். பாப்பா கூட எதுவும் தனியா பேசணும்ன்னு நினைக்கிறீங்களா”ன்னு கேட்டாரு. நானும் ஆசையாய் சரின்னு சொல்ல, ஆளில்லாம இருந்த வீட்டின் கொல்லைப் பக்கம் கூட்டிட்டு போய்,

 

“பேசுங்க” ன்னு கூடவே நின்னார். நானும் கொஞ்சம் தள்ளி நின்னு பேசுவோம்னு பூமாட்ட சொல்லிட்டு ரெண்டு எட்டு வைச்சா அவரும் கூடவே வந்தாரு. என்னன்னு கேட்டா,

 

“பாப்பா தனியா பேச கூச்சப்படும். அதான் துணைக்கு நிக்கிறேன்” ன்னு சொன்னாரே பாக்கணும், “அப்படியா”ன்னு இவளைப் பாத்தா, இவ கண்ணடிக்கிறா “, என்ற குணா,

 

“அப்பா….இவ கூச்ச சுபாவத்தை பாத்து மெய் சிலிர்த்துட்டேன்” என்னும் போது கார்த்திக் விழுந்து விழுந்து சிரிக்க,

 

“எங்கப்பா ஒரு முழு பூசணிக்காவை சோத்துல மறைக்க பாத்தாரு. அதான். என்னை ஷை டைப்ன்னு இவர் எதிர்பார்த்து அப்புறம் சிக்கலாகிட கூடாதே. அதான் அப்படி செய்தேன் “ என்றாள் பூமா.

 

 “உங்களுக்கு குணா நோ சொல்லிடுவாருன்னு பயமே இல்லையா?”

 

“குணாவை பிடிச்சது. ஆனா, எனக்கு அந்த யோசனை எல்லாம் இல்லை. இளங்கன்று பயமறியாதுன்னு சொல்லுவாங்களே… அந்த மாதிரி. அப்போ எனக்கு 19 வயசு தான். இப்படி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நடந்துக்கிற பக்குவம் சந்தியாக்கு தான் வரும். நான் எமோஷனலா ரியாக்ட் பண்ணிடுவேன். “, என கார்த்திக் அவளின் கருத்தை வழி மொழிந்தான்.

 

இப்படி எதை பேச ஆரம்பித்தாலும் பூமாவின் பேச்சில் சந்தியா வந்து விடுவாள். சிறு வயது முதல் முந்தைய தினம் வரை நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ஆசை ஆசையாக சொல்லிக் கொண்டிருந்தாள் பூமா. கார்த்திக்கோ அதை தெரிந்து கொள்வதே ஒரே ஆசையாக கேட்டுக் கொண்டிருந்தான். குணா வேறு பேச்சுக்கு திசை திருப்பினாலும், கார்த்திக் சந்தியா விஷயத்துக்கே பூமாவை இழுத்து வர, அவளும் ஆர்வமாக அதைப் பற்றி பேச, ஒரு சமயத்தில் பொறுமையிழந்த குணா,

 

“போதும் பாப்பூ, அந்த குட்டி சாத்தானை பத்தி பேசி அரைச்ச மாவை அரச்சு, துவைச்ச துணியை துவைச்சு எங்களை போர் அடிக்காத!” என்று பூமாவிடம் சொல்ல,

 

“அய்யய்யோ அப்படியெல்லாம் இல்ல….இண்டர்ஸ்டிங். சொல்லுங்க சொல்லுங்க” என்றான் கார்த்திக். (பி.கு. இதை நடிகர் கார்த்திக் குரலில் வாசிக்கவும் )

 

குணாவோ கார்த்திக்கை பார்த்து, “உங்களுக்கு தெரியாது கார்த்திக். இதை மூணு வருஷமா கேட்டு கேட்டு என்னோட ஒரு காது கேக்காமலே போயிடுச்சு. “ என்றவன் பூமாவிடம்,

 

“குணாஸ் கிச்சன்ல லஞ்ச் ஸ்பெஷல் என்னன்னு தெரியுமா பாப்பூ? உனக்கு பிடிச்ச டிஷ்”

 

“அய்யோ” பதறினாள் பூமா. கார்த்திக் பதறியதை விட இரண்டு மடங்கு.

 

“போன வாரம் சாப்பிட்டு நான் பட்ட அவஸ்தை போதாதா….வீட்டுக்கு வந்த கெஸ்ட்டை கொடுமை படுத்தணுமா. அவரை ஏதாவது ரெஸ்ட்டாராண்ட்க்கு கூட்டி போலாம்” என்றாள் பூமா கெஞ்சாத குறையாக.

 

“லஞ்ச் வேண்டாம். கொஞ்சம் நேரம் இருந்துட்டு கிளம்புறேன். நாளைக்கு வொர்க்குக்கு போகணும்.” என மறுத்தான் கார்த்திக்.

 

அவனை ஓரிரு முறை இருவரும் சொல்லி பார்த்தும் கார்த்திக் மறுத்து விட்டான்.

 

பேச்சு வாக்கில் அவர்கள் வீட்டை நோட்டம் விட்ட கார்த்திக் சுவற்றில் இருந்த அற்புதமான ஓவியத்தை பார்த்து அருகில் சென்றவன் கையெழுத்தை கவனித்து விட்டு,

 

“இந்த பெயிண்டிங் உங்களோடதா?”, பூமாவிடம் கேட்டான் கார்த்திக்.

 

“ஆமா, சௌபர்ணிகா மேடம் லயனஸ் கிளப் சார்பா முந்தி அன்பு இல்லத்துக்கு வந்து பெயிண்டிங் கத்துக் கொடுப்பாங்க. அப்போ அந்த பசங்களோட கத்துகிட்டது. ட்ராயிங்ல நான் தான் பெஸ்ட். ஆனா உங்கம்மாவுக்கு சந்தியா தான் பிடிக்கும்” என்றாள் சிரித்த படி.

 

“சொர்ணாக்கா பார்சியாளிட்டி பாப்பாங்களா?” சிரித்துக் கொண்டே கேட்டான் கார்த்திக்.

 

“இவனுக்கு நாம வைச்ச பட்டா பேரு தெரியுமா" என்பது போல கேள்வியுடன் பார்த்த பூமா,

 

“சந்தியா எங்க அண்ணிகிட்ட பேச்சுவாக்கில என் அம்மான்னு தெரியாம சொல்லியிருக்கா. ஆனா அவ இப்படி பேரு வைச்சதை மம்மி இன்னைக்கு வரைக்கும் நம்பவே இல்லை”, கார்த்திக் சாதாரணமாகத் தான் சொன்னான். ஆனால், பூமாவிற்கு என்னவோ போலிருந்தது. குணா அவளை பார்த்து, “எல்லாரும் இந்த கேலி, கிண்டலை ஸ்போர்டிவ்வா எடுத்துக்க மாட்டாங்க. பூ. பாரு அவங்க அம்மா அவளை எப்படி நம்புறாங்க. அவங்களை கிண்டல் பண்றது தெரியுறப்போ ஹர்ட் ஆவாங்க தானே” கேட்டான் குணா.

 

“அய்யோ குணா. நான் சும்மா தான் சொன்னேன். இந்த மாதிரி சின்ன விஷயத்தை யோசிக்கிற மனநிலையில் இப்போ மம்மி இல்லை.” என்றான் கவலையுடன்.

 

அதைக் கவனித்த பூமாவும், குணாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு மேல எதுவும் பேசவில்லை. “அந்த போட்டோ பாத்தீங்களா, நானும் சந்துவும் சின்ன வயசுல எடுத்தது” பேச்சை மாற்றினாள் பூமா.

 

அவள் சொன்னது தான் தாமதம் அவன் கால்கள் கீ கொடுத்த பொம்மையை போல பூமா காட்டிய புகைப்படத்தை நோக்கி நடக்க, அவன் மனதோ பறந்து போய் அதிலிருந்த சந்தியாவிற்கு ஆயிரம் முத்தங்களிட்டது.

 

அவளை விட சற்று உயரமான பூமா தோள் மீது கையை போட்ட படி அளவாய் சிரித்தவாறு நின்றிருந்தாள். மெலிந்த உடலாய், விடலை பருவம்... அதுவும் தாவணியில்! வெள்ளியிரவு அவன் தாவணியில் பார்த்த சந்தியாவா அது??...பூக்க தயாராயிருக்கும் மொட்டிற்கும், பூத்துக் குழுங்கும் ரோஜாவிற்கும் எத்தனை வித்தியாசம்….

வளைந்த புருவங்கள் வில்லாக….

குறும்பு பார்வைஅம்பாக…. 

சரிந்து விழுந்தான் அவள் இமைகளுக்குள்!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.