(Reading time: 44 - 88 minutes)

சௌபர்ணிகாவின் பிண்ணனி அறிந்து சந்தியா அரண்டே போய்விட்டாள். கார்த்திக் அவளுக்காக எடுக்கும் முயற்சியை கண்டு நெகிழ்ந்தாலும், ஏற்கனவே அவனிடம் மனதை வெளிபடுத்த தயங்கியவளை இந்த விவரங்கள் இன்னும் பின்னோக்கி இழுத்துச் சென்றது.

 

“ஹலோ...சிஸ்டர்..லைன்ல தான் இருக்கீங்களா?” சிவாவின் கேள்வியில், தன் நினைவிற்கு வந்த அவள், “ம்...ஆமா ப்ரோ. டவுசர் பாண்டி சென்னைக்கு கிளம்பி போயிட்டான். பொண்ணு கொடுக்க மாட்டேன்னு அப்பா சொன்னதுக்கு பயங்கரமா சண்டை போட்டு போயிட்டான். “ என்றாள் வருத்தத்துடன்.

 

“சில்வர்ஸ்டர் ஸ்டாலன் பாடி உங்க டாடிக்கு. அந்த பில்டப் பாத்தாலே தொடையெல்லாம் நடுங்கும். அவரையே பேசுனானா அவனுக்கு தில் அதிகம் தான். அவனை கஞ்சா கேசுல சிக்க வைச்சு மாமியார் வீட்டை விட்டு வெளிய வர முடியாத படி ட்ரீட்மெண்ட் குடுத்தா தான் சரி வரும். கார்த்திக் மாமாட்ட சொல்லி அவனை ஒரு வழி பண்ணிடலாம்”, யோசனை சொன்னான் சிவா.

 

“அய்யோ...பயங்கரமா தண்டனை எல்லாம் வேண்டாம். ” என்றது அவள் இரக்க குணம்.

 

“அப்போ வாய் பேசுனதுக்கு ரெண்டு தட்டு தட்ட சொல்வோம்”, சிவா

 

இன்று பாண்டியன் இந்த ஆட்டம் ஆடாமல் இருந்திருந்தால் சந்தியா வேண்டாம் என்றிருப்பாள். அவன் மீது கடுப்பில் இருந்தவள், “ப்ரோ, அவனை தட்ட வேண்டாம், ஆனா அவனுக்கு சாவு பயம் வர்ற மாதிரி அவன் கொதவளையை நெரிச்சு ரெண்டு மிரட்டு மிரட்டினா போதும் எனக்கு. வீட்டில எல்லாத்தையும் கேவலமா பேசிட்டான். கார்த்திக் US நம்பர் இருந்தா அனுப்புங்க. நான் வேணா அவர்கிட்ட பேசுறேன்” என்றாள் சந்தியா.

 

“கார்த்திக் நம்பர் அனுப்புறேன் சிஸ்டர். ஆனா, நான் உங்ககிட்ட ஐடியா கேட்டது, அப்புறம் காப் சிரப்ல சொதப்புனது இதெல்லாம் அவன்கிட்ட சொல்லிடாதீங்க சிஸ்டர். அப்புறம் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகிடும். ப்ளீஸ்” என்று கெஞ்சினான் சிவா.

 

“சீரியஸ் சீன்லயும் காமெடி பண்ண உங்களால மட்டும் தான் முடியும் ப்ரோ” என்று சொன்னவளால் சிரிக்க முடியவில்லை. லக்ஷ்மியின் உடல்நிலை பற்றிய கவலை நெறிஞ்சி முள் போல மனதிற்குள் குத்திக் கொண்டிருந்தது.

 

“சரி சிஸ்டர். எப்படியும் கார்த்திக் கொஞ்ச நேரத்தில் அங்க ரீச் ஆனதும் என்ன ஆச்சுன்னு கேக்க கால் பண்ணுவான். அப்போ நான் சொல்லிடுறேன். நீங்க இனிமே பாண்டியனை பத்தி கவலைப்படாம நிம்மதியா இருங்க” என்று ஆறுதல் சொல்லி இணைப்பை துண்டித்தவன், கார்த்திக்கின் அழைப்பு எண்ணை அவளுக்கு அனுப்பி வைத்தான்.

 

சிவாவின் அழைப்பு வர, அதை எடுத்த கார்த்திக், வேகமாக பூமா வீட்டு வரவேற்பறையில் இருந்த பிரன்ச் விண்டோவின் கதவைத் திறந்து பால்கனிக்கு வந்து சிவாவிடம் பேசினான்.

 

“இரண்டு தடவை கால் பண்ணியிருந்த போல. பேபிக்கு பேர்வெல் சாங் பாடினாங்க அந்த சத்தத்தில மிஸ் பண்ணிட்டேன், மாப்ளே. “ என்றான் சிவா.

 

“என்ன பேபி பேர்வெல்ன்னு உளறிகிட்டு இருக்க?”

 

“அது பேபி இறந்த வீட்டில ஒப்பாரி பாடினதை சொன்னேன்”

 

“அய்யோ… பேபியா? எத்தனை வயசு குழந்தை?”

 

“அது ஒரு 90 வயசு பாட்டி. எங்கப்பாவோட பாட்டி. பேரு பேபி…அதுக்கு அதோட ஜூனியர்ஸ் எல்லாம் சேர்ந்து ஒப்பாரி பாடினாங்க. அப்பா பெரிய சாவு. கண்டிப்பா இருக்கணும்னு சொல்லிட்டாரு. அதான் உங்கூட பேச முடியலை. பாண்டியன் ஆப்பரேஷன் சக்ஸஸ். கடைசில ஒரு சின்ன ட்விஸ்ட். ஆனா, உனக்கு நல்லது தான் மாப்ளே. சந்தியாவே அவனை வெறுத்துட்டா” என்றான் சிவா.

 

பின் சந்தியா சொன்னதை விவரித்தான்.

 

“அப்போ அவளுக்கு பாண்டியனை பிடிக்கலையா?” சந்தோஷமாக கேட்டான் கார்த்திக்.

 

“பிடிக்கலை மாப்ளே. அவளே உன்கூட பேசுறேன்னு சொன்னா “

 

“எங்கூட பேசுறேன்னு சொன்னாளா ?”, ஆச்சர்யமாக கேட்டான் கார்த்திக்.

 

“ஆமா. அந்த பாண்டியனை பத்தி பேசணும்னு சொன்னா”, சிவா.

 

“ஓ..அதான்னா….”, சிறிது ஏமாற்றம். பின், “வேற என்ன சொன்னா”,

 

“அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே மாப்ளே”, அலுத்துக் கொண்டான் சிவா.

 

“சும்மா பந்தா பண்ணாம சொல்லு மச்சி. “, கார்த்திக்.

 

“டேய். அவ்வளவு தான்டா சொன்னா”, லேசாக கடுப்பில் சொன்னான்.

 

“நல்லா யோசிச்சு பாரு மச்சி. ஏதாவது மிஸ் பண்ணியிருக்கப் போற”, கார்த்திக்.

 

“டேய். போனை எடுத்தப்போ ஹலோ சொன்னா. வைக்கிறப்போ பை சொன்னா போதுமா?”, எரிச்சலாக சொன்னான் சிவா.

 

“ஏன் மச்சி டென்ஷன் ஆகுற. நான் கேட்ட பிறகு தான் ஹலோ பை சொன்னது எல்லாம் உனக்கு நியாபகம் வருது. வேற என்ன சொன்னா?” அலுப்பு தட்டாமல் கேட்ட கேள்வியையே கேட்டான் கார்த்திக்.

 

“மாப்பிளே, நீ பேசாம அங்க உள்ள FBIல போய் சேந்துடு. தீவிரவாதிகளை எல்லாம் ஒரே ஒரு கேள்விய கேட்டே கொலை பண்ணிடுவ.”, நொந்து வெந்து போய் சொன்னான் சிவா.

 

“சரி டா...அதை நான் பாத்துக்கிறேன். சந்தியா வேற என்ன சொன்னா?”, மீண்டும் அதே கேள்வியில் நின்றான் கார்த்திக்.

 

“மாப்பிளே…முடியலைடா…” அழுதே விட்டான் சிவா. அவன் அருகில் வந்த பேபி வயது தோழி “அழாதய்யா...ஆம்பிளை அழக்கூடாதய்யா...போற உசிரை பிடிச்சா வைக்க முடியும்?” என்று கூறி விட்டு “என்னை பெத்த ராசாத்தி…” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க,

 

“மாப்ளே..சீக்கிரம் இடத்தை காலி பண்ணனும். இல்லாட்டி இந்த கும்பல் என்னை சுத்தி வளச்சு எனக்கு பேர்வெல் குடுத்துடும்.“ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்திலிருந்து மாயமானான்.

 

சிவாவிடம் பேசிய பின் அருகிலிருந்த ரோஜா செடியில் பூத்திருந்த சிகப்பு ரோஜா...அவள் வருடிய ரோஜாக்களை நினைவூட்டின.

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்

உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்

அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்

உனை வேறு கைகளில் தரமாட்டேன்

நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.