(Reading time: 44 - 88 minutes)

 

மெரிக்காவில் திங்கள் கிழமை ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகியது. அவன் செல்போன் ஒலித்தது. பன்னிரெண்டு மணிக்கு அழைப்பது சந்தியாவாக இருக்குமோ என ஒரு நப்பாசை அவனுக்கு. ஆர்வமாய் பார்த்தால் அவனது மாமா.

 

“காதி நடுராத்திரில எழுப்பிட்டேனா?”

 

“இல்லை மாமா. சொல்லுங்க”

 

“அந்த பாண்டியனை கூப்பிட்டு மிரட்டி விட்டுட சொன்னேன். போலீஸ்கிட்ட நான் பத்திரிகைக்காரன் அப்படி இப்படின்னு வம்பு பண்ணியிருக்கான். அவங்க கோபத்தில ரெண்டு தட்டி தட்டி அனுப்பி விட்டாங்க போல. “

 

“அய்யோ… அவனுக்கு பெரிய காய்மாகிடுச்சா? இதுனால ப்ரெஸ்ல உங்களுக்கு எதுவும் சிக்கலாகுமா மாமா? ஐ ஆம் சோ சாரி” பயந்து வருந்தினான் கார்த்திக்.

 

“அந்த ப்ரஸ் டைரக்டர் என்னோட பெஸ்ட் ப்ரண்ட். கஷ்டப்பட்டு முன்னேறின பையன் வேலையில கை வைக்க வேண்டாமேன்னு தான் போலீஸ் மூலமா மிரட்ட சொன்னேன். எஸ். ஐ. லேசா தான் தட்டுனேன்னு சொன்னாரு. ஒன்னும் பெரிசா இருக்காது.”

 

“பெரிசா இல்லன்னா சரி தான் மாமா. தேங்க்ஸ். அவன் மறுபடியும் அந்த பொண்ணுட்டயோ இல்ல அவங்க குடும்பத்துலயோ வாலாட்டாம இருந்தா போதும்”

 

“அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. அந்த பொண்ணு மேல அவ்வளவு அக்கறையா உனக்கு?”

 

“நல்ல பொண்ணு மாமா. நம்ம மதுக்கு க்ளோஸ் ப்ரண்ட்”

 

“ஓ….அப்ப சரி. அம்மா அப்பாகிட்ட ஏன் சொல்ல வேண்டாம்னு சொல்ற?”

 

“அப்பா பத்தி தான் தெரியும்ல மாமா. இதெல்லாம் பிடிக்காதே. அம்மாவும் ஏதாவது யோசிப்பாங்க. அதான்”

 

“உங்கப்பா மாதிரி யாராலும் இருக்க முடியாது தான். சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வா. பாட்டி இஸ் மிஸ்ஸிங் யு.”

 

சென்னை வந்தால் வருவதாக சொல்லி விட்டு உறவினர்களை விசாரித்து சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.

 

தாம்பரம் கிழக்கு காவல் நிலையம்.

 

“என்ன சார், என்ன தப்பு செய்தான்னு என் ப்ரண்டை இந்த துவை துவைச்சிருக்கீங்க” ஆதங்கமாய் கேட்டான் பாண்டியனின் நண்பன் கண்ணன். பாண்டியன் பலத்த அடி வாங்கி பேசக் கூட முடியாமல் இருந்தான்.

 

“அவன் போன மாசம் என்னை பத்தி தப்பு தப்பா எழுதி எனக்கு வர வேண்டிய ப்ரொமோஷனை தடுத்து நிப்பாட்டின ‘மார்னிங் இந்தியா’ பத்திரிக்கையில வேலை பாக்கிறது தான் தப்பு. அதுவும் சென்னை கிளையின் மேனேஜர், இந்த மாமாவை பற்றி பெருமையாக சொன்ன பத்திரிகையாச்சே, சும்மா விடுவேனா, மாமியார் வீட்டு கவனிப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காம ஸ்பெஷலா கவனிச்சாச்சு. இவன் இத்தனை காயத்தோட உங்க ஆபிஸ்க்கு வந்தா தான் உங்களுக்கும் போலீஸ்காரனை பத்தி பயமிருக்கும்”, ஏகத்தாளமாய் சொன்னான் அந்த சப் - இன்ஸ்பெக்டர்.

 

“நீ செய்ததை நாங்க பேப்பர்ல போட எவ்வளவு நேரம் ஆகும்”, கோபத்துடன் கேட்டான் கண்ணன்.

 

“அதுக்கு வாய்ப்பே இல்லை. ஏன்னா இது எஸ்.எஸ்.வி யோட ஆர்டர்”, திமிராய் பதிலளித்தான் எஸ்.ஐ.

 

ஒரு நொடி அதிர்ந்தவன், “எஸ்.எஸ்.வி யா?”

 

“முறை பொண்ணு வீட்டில பொண்ணு கொடுக்கலைன்னு வம்பு பண்ணியிருக்கான். அது அவங்களுக்கு வேண்டப்பட்ட பொண்ணாம். என்ன கொழுப்பிருந்தா எஸ்.எஸ்.விகிட்ட மோதுவான்? எங்களுக்கும் இதை விட்டா உங்களை துவைக்க வாய்ப்பு கிடைக்காதே” என்று சொல்ல கண்ணனால் ஒன்றும் பேச முடியவில்லை. எஸ்.எஸ்.விக்கு அவர்கள் பத்திரிக்கை மேலிடத்தில் மிகுந்த செல்வாக்கு என்பது தெரியும் அவனுக்கு.  

 

உடம்பில் பலத்த காயத்துடனும் கட்டுக்களுடனும் நண்பனுடன் வீட்டிற்கு வந்த பாண்டியனை பார்த்த வடிவு

 

“உன்னை இப்படி குத்துயிரும் குலை உயிருமா பாக்கவா நான் பெத்து வளத்தேன்! ராசா…” மகனை அந்த கோலத்தில் பார்த்து தலையிலும் நெஞ்சிலும் அடித்து அழுதாள் வடிவு. நடந்ததை சுருக்கமாக சொல்லி விட்டு சென்றான் கண்ணன்.

 

“செய்றது எல்லாம் செஞ்சு புட்டு அந்த வெக்கங்கெட்டவ நல்லாயிருக்கா நான் என் பிள்ளையை பரிகொடுக்கவா...என் யய்யா..இரும்பு மாறி இருந்தவன் துரும்பா கிடக்குறியேயா” என நாள் முழுதும் புலம்பியவள், வலி நிவாரணியின் தாக்கம் குறைய விழிப்பு வந்தவனிடம்,

 

“ராசா இப்போ எப்படிய்யா இருக்கு? முதுகை காட்டு லேசா ஒத்தணம் கொடுக்கிறேன் “ என்று சொல்ல சிரமப்பட்டு திரும்பி படுத்தவனின் சட்டையை விளக்கி பார்த்த வடிவு, அவன் முதுகில் இருந்த காயங்களை பார்த்து அதிர்ந்து விட்டாள். “அய்யோ…. ராசா….அந்த பொட்டைச்சிக்காகவா உன்னை போட்டு இந்த அடி அடிச்சாங்க” வேதனையில் குமுறிய வடிவு,

 

“ச்சே…. கண்றாவி….எத்தனை பேருக்கு முந்தானை விரிச்சு உன்னை இப்படி அடி வாங்க வச்சாலோ பாவி ….. இதோ பாருய்யா...நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ, அவ வெளங்காம போவணும்….. நீ அவளை வெட்டி சாச்சு செயிலுக்கு போனா கூட நான் கவலைப்பட மாட்டேன் ராசா. நான் பண்ண சத்தியத்தை நெசமாக்கு. ஊரு ஒலகம் என் பிறப்பை தப்பா பேசிடக் கூடாது” மகனின் நிலையை பார்த்து கண்ணீர் விட்ட படி அவனுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டே விஷப் பாம்பிற்கு மேலும் விஷத்தை ஏற்றினாள் வடிவு.

ஆட்டம் தொடரும் ...

Go to Episode 20

Go to Episode 22

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.