(Reading time: 5 - 10 minutes)

01. நீரும் நெருப்பும் - மோஹனா

நீரும் நெருப்பும்

காலை சூரியோதத்தை ரசித்து எழுந்தாள் ஹேமா.. என்றும் இல்லாமல் ஒரு உற்சாகம் பொங்கியது அவளுக்கு.. அவளுடைய திட்டத்தை செயல் படுத்த வேண்டிய நாள் தொடங்கியாயிற்று..

தன் மகனை நாடிச்சென்றாள்... மேற்கத்திய முறையில் வடிவமைக்கபட்டிருந்த அவனின் அறையை அடைந்தாள்.. அதை காணும் போதெல்லாம் அவளுக்கு தோன்றுவது இது தான் ‘ இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றவேண்டிய இந்தியர்களே இப்படி மேற்கத்திய கலாச்சாரத்தில் மயங்கி இருந்தால் ,பிறகு வெளிநாட்டவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தின் மீது மதிப்பு எப்படி வரும்’.. தன் எண்ணஓட்டத்திலிருந்து வெளியே வந்தவள் தன் மகனை அழைத்தாள்...

“ஹரி  உங்கிட்ட பேசணும்.. “

அழைப்பு வந்த திசையிலிருந்து அழைப்பு மட்டும் வராமல் உற்சாகமும் சேர்ந்து வந்ததை உணர்த்து, மகிழ்ந்து தன் தாயை பார்த்தான்...என்றுமில்லாத புன்னகையுடன் தன் தாயை கண்டு மகிழ்ந்தான்.. அவனை பொறுத்தவரையில் அவனின் தாய் தான் அவனின் கடவுள்..

அவள் சொல்வது தான் வேதம் என்பான் அவன் ,ஒரு  விஷயத்தை தவிர..

தமிழ் கலாச்சாரத்தை சிறிதும் விரும்பாதவன், அவனின் தாயை அம்மா என்று இதுவரை அழைத்தது இல்லை.. அவள் எத்தனை முறை வேண்டியும் அவன் அப்படி அழைத்தது இல்லை... அப்படி இருக்க  அவன் விரும்பாத தமிழ் கலாச்சாரத்தில் சிறிது காலம் வசிக்க கேட்டால் என்ன சொல்வானோ என்று பயமுற்றாள்..

“எஸ் சொல்லுங்க  மாம்..”

காலக்கொடுமை அம்மாவை மாம் ஆக்கிவிட  மகனை விரக்தியாய் பார்த்தார்.. அம்மா என்று அழைக்க பெரும் தாய்மார்கள் மீது பொறாமை பொங்கியது அவளுக்கு.

“மாம்”...

“ஹரி.. நான் சொல்வதை செய்வியா?”

“வாட் இஸ் திஸ் மாம்?.. நீங்க சொல்றத தான் நான் செய்வேன் ...”

“ம்ம்ம்... அப்போ நீ உடனே இந்தியா போகணும்...”

“இந்தியா!!!...  வை மா?”

“அங்க உங்க மாமா வீட்ல கொஞ்ச நாள் தங்கிட்டு வாப்பா...”

“ம்ம்ம்.........”

“எனக்காக போகமாட்டிய?..........”

“ஓகே மாம்... ஐ’ அம் கோயிங் .. பட், ரீசன் தெரிஞ்சுக்கலாமா??......”

“எனக்கு இந்தியால கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசை... ஆனால், என்னால அங்க வரமுடியாது... என்னோட இறந்த காலம் என்னை துரத்தும்.. என் சார்பா நீ போகணும் ..”

“ஆனா, வை நவ்?..”

“உங்க மாமா ஊரில திருவிழா நடத்துறாங்க.. நல்ல இருக்கும்.. நீயும் அந்த மாறி திருவிழாக்கு போனதில்லை.. உனக்கு ஒரு புது அனுபவமா இருக்கும் , அதோட என் ஆசையும் நிறைவேறும்...”

“ஓகே.. நான் போறேன் ...

அவள் எதிர்பார்த்ததை விட எதிர்ப்பு பெரிதாக வரவில்லை. ஆனால், அங்கே என்ன நடக்குமோ என்ற பயம் அவள் மனதை விட்டு நீங்காமல் இருந்தது..

தே நேரத்தில் சரியாக அதே நேரத்தில் சென்னையில் இருந்து தன் சொந்த ஊருக்கு போக ட்ரைன் டிக்கெட் ரிசெர்வ் செய்தான் சோழன்... ரிசெர்வ் செய்துவிட்டு தன் தாயை போனில் தொடர்பு கொண்டான் ...

“சொல்லுடா என் மகனே..”

“ஆத்தா நான் திருவிழாக்கு வாரேன்... இன்னும் இரண்டு நாள் கழிச்சு ட்ரைன்... இப்போதான்  டிக்கெட் ரிசெர்வ் செய்தேன்....”

“வாடா என் ராசா.. நீ இல்லாம திருவிழா கொண்டாட்டமா?.... இந்த முறை கண்டிப்பா உன் மாமன் பொண்ண உனக்கு கட்டிவைக்கலாம்னு பாக்குறேன்....”

“சரிம்மா ... நான் அப்புறமா பேசுறேன்...”

போனை வைத்ததும் கனவுலகத்திற்கு சென்றான் சோழன்...

அதற்கேற்ப ரேடியோவில்

ராஜா ராஜா சோழன் நான் ..

என்னை ஆழும் காதல் தேசம் நீதான் ........

பூவே காதல் தேனே........” பாடல் பாடத்தொடங்கியது..

அவனும் அவன் மாமா பெண் அபியும் டூயட் பாடுவது போல் கனவு கண்டான்........

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.