(Reading time: 12 - 24 minutes)

08. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

ர்ச்சனாவையே சுற்றிக்கொண்டிருந்தது அப்பாவின் மனம்.

'என் மகள் என்னை விட்டுப்போய்விடுவாளா?

மனோ நிச்சியதார்த்தலிருந்து துவங்கிய பயமிது.

னோ நிச்சயதார்த்ததிர்க்கு மறுநாள் எல்லாரும் மனோ வீட்டிலிருந்தனர். அன்று மாலை எல்லாரும் அவரவர் ஊருக்கு கிளம்புவதாய் திட்டம்.

அன்று காலை பத்து மணி இருக்கும்.

அவர் அருகே அமர்ந்திருந்த அர்ச்சனாவிடம் வந்தான் மனோ.

'உன் மாமனார் உன்னை பார்க்கணுமாம். மாடியிலே இருக்கார். வா.'

சட்டென எழுந்து விட்டிருந்தாள் அர்ச்சனா.' நீயும் கூட வா மனோ ப்ளீஸ்'

'ஏன் பயமாயிருக்கா?' சிரித்தப்படியே அவள் தோளை அணைத்து அழைத்து சென்றான் மனோ.

சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தார் அப்பா.

ர்ச்சனாவும் மனோவும் மாடிப்படி ஏறிய போது எதிர்ப்பட்டான் வசந்த்.

'யார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு? என்றான் அவள் முகத்தைப்பார்த்தபடியே.

'சார். நாங்க உங்கப்பாவை பார்க்கணும் சார்' என்றான் மனோ.

'எங்கப்பாவையெல்லாம் அவ்வளவு ஈஸியா பார்க்க முடியாது. அப்பாயின்ட்மென்ட் இருக்கா? முதல்ல மேடம் யாரு? அவங்க எதுக்கு எங்கப்பாவை பார்க்கணும் அதைச்சொல்லு?' என்றான் வசந்த் அவள் முகத்தை ஆராய்ந்தபடியே.

'அடப்பாவி. இந்த உலகத்துல உன் மூஞ்சியை பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே பொண்ணை பார்த்து யாருன்னு கேட்டுட்டியே டா? என்றான் மனோ

பிடிச்சிருக்குன்னு சொன்னாளா? அது எப்போ? என்னை பிடிச்சிருக்குன்னா அதை நேரடியா என் முகத்தைப்பார்த்து சொல்லணும். சும்மா பப்ளிக்கா அன்னௌன்ஸ் பண்றதையெல்லாம் அக்செப்ட் பண்ண முடியாது.

'சரிப்பா ராசா' என்றான் மனோ  'சட்டுன்னு பிடிச்சிருக்குன்னு சொல்லிடு அர்ச்சனா'

'சும்மா இரு மனோ' கண்களை தாழ்த்திக்கொண்டு அழகாய் சிரித்தாள் அர்ச்சனா.  'வேணும்னா கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன்.

அவள் முகத்தில் ஓடிய வெட்க ரேகைகளை ரசித்தப்படியே 'ஏன்? அறுபதாம் கல்யாணத்துல சொல்லேன்." என்றவன்  அவ என் முகத்தை பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லாமல் நான் தாலிக்கட்ட மாட்டேன். சொல்லி வை, உன் தங்கச்சிக்கிட்டே' என்றபடியே படியிறங்கி சென்றுவிட்டிருந்தான் வசந்த்.

ர்ச்சனா மாடியறைக்குள் நுழைந்ததும் சில நொடிகள் கழித்து மாடிப்படியில் சென்று அமர்ந்தார் அர்ச்சனாவின் அப்பா

அவர்கள் பேசுவது தெளிவாய் அவர் காதுகளில் விழுந்தது.

அப்போது வசந்தின் அப்பா சொன்ன அந்த ஒரு வார்த்தை அவரை சடாரென தாக்கியது.

அர்ச்சனாவை பார்த்து, 'என்னையும், அப்பானே கூப்பிடுமா' என்றார் வசந்தின் அப்பா.

'சரிப்பா' என்றாள் அர்ச்சனா.

அந்த நொடியில் அர்ச்சனாவின் அப்பாவினுள்ளே ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியே போனது.

'என் பெண் இன்னொருவரை எப்படி அப்பாவென்று அழைக்கலாம்.?

வசந்தின் அப்பாவுடன் அத்தனை உற்சாகமாய் பேசிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. மெல்ல மெல்ல அவர்களுடன் அர்ச்சனா ஒட்டிக்கொள்வது புரிந்தது அர்ச்சனாவின் அப்பாவுக்கு.

என் பெண் இப்போதே என்னை விட்டு மெது மெதுவாய் விலகுகிறாள். இந்தத்திருமணம் நடந்து விட்டால் என்னவாகும்?

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த வசந்தின் அப்பா 'உங்கப்பா கிட்டே நான் கொஞ்சம் பேசணுமே' என்றார் அர்ச்சனாவிடம்.

'நான் வர சொல்றேன்பா' என்றபடி எழுந்தாள் அர்ச்சனா

வர்  சென்று வசந்தின் அப்பாவின் முன்னால் அமர்ந்தார்.

அர்ச்சனாவை தன் மருமகளாய், இவரை தன் சம்மந்தியாய் மனதார ஏற்றுக்கொண்டுவிட்டவராய், பின் விளைவுகள் எதைப்பற்றியுமே யோசிக்காமல் தன் மனதில் உள்ளதையெல்லாம் மொத்தமாய் கொட்டி விட்டிருந்தார் வசந்தின் அப்பா.

.அர்ச்சனா இத்தனை நேரம் பெங்களூர் போய் சேர்ந்திருப்பாளா' அவளிடம் பேச விரும்பியவராய் பழைய நினைவுகளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எழுந்தார் அப்பா.

கார் பெங்களூரை நெருங்கிக்கொண்டிருகிறது என்பதை ஜன்னலின் வழியே காருக்குள் வந்து தழுவிய குளிர் காற்று உணர்த்திக்கொண்டிருந்தது.

அவளாக ஏதாவது துவங்குவாள் என்று  இத்தனை நேரம் எதிர்ப்பார்த்து விட்டு, அவனாகவே மெல்ல துவங்கினான் மனோ,

'அது எப்படி அர்ச்சனா? இப்படி சட்டுனு சம்மதம் சொல்லிட்டே?'

பதில் சொல்லாமல் தன் விரல்களை ஆராய்ந்தபடியே அமர்ந்திருந்தாள்.

'தயவுசெய்து எனக்கு மனசில்லை, மண்ணாங்கட்டி இல்லைன்னு பொய் சொல்லாதே'

மௌனம்.

'பதில்சொல்லு அர்ச்சனா' என்றான் மனோ.

'நான் வேண்டாம்ன்னு சொன்னா அப்பா விட்டுடுவார்னு நினைக்கிறியா மனோ? இந்த பேச்சு இப்போ இல்லை ஒண்ணு, ஒன்றரை வருஷமா வந்து வந்து போயிட்டிருக்கு. எனக்கு எங்கப்பா என் கூட இருக்கணும். அவர் சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான். அதனாலேதான் சரின்னு சொன்னேன். என்றாள் நிதானமாய்.

ஒரு திருப்பத்தில் காரை திருப்பி ஸ்டீயரிங்கை நேர் படுத்தியபடியே கேட்டான் மனோ

'இந்த உலகத்துலே உங்கப்பா மட்டும் சந்தோஷமா இருந்தாப்போதும் அப்படிதானே?

'இது அப்படி இல்லை மனோ. என்னாலே மத்த  யாரையும் சந்தோஷப்படுத்த முடியலை. அட்லீஸ்ட் அப்பாவையாவது சந்தோஷமா வெச்சுக்கலாம்ன்னு பார்க்கிறேன் அவ்வளவுதான்'

'அதுக்காக யார் கூட வேணும்னாலும் வாழ்ந்திட முடியுமா?

'முயற்சிப்பண்ணனும். பழகிக்கணும்' என்றாள் அர்ச்சனா ஜன்னலுக்கு வெளியே சூழ்ந்திருந்த இருட்டை  வெறித்தபடி.

ஆமாமாம் பழகிக்கலாம். என்ன இப்போ.? போன் ஏதாவது வந்தா மட்டும் கொஞ்சம் அழுகை வரும் அவ்வளவுதானே.

ட்டென்று திரும்பி அவனை பார்த்தவள்,பதில் சொல்லாமல் பார்வையை ஜன்னலுக்கு வெளியே திருப்பிக்கொண்டாள்.

சில நிமிடங்கள் இருவருக்குமிடையே  மௌனமே நிலவியது.

கார் பெங்களூருக்குள்ளே நுழைந்ததை சாலையின் இருபக்கத்திலும் வண்ண விளக்குகளுடன் ஜொலித்த கடைகள் உணர்த்தின.

மறுபடியும் தொடர்ந்தான் மனோ,

ஏன் அர்ச்சனா, 'நீ வசந்தை இத்தனை நாள் கழிச்சு திரும்ப பார்த்தியே. நீ எப்படி இருக்கே? என்ன பண்றேன்னு ஒரு வார்தைக்கேட்டியா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.