(Reading time: 7 - 14 minutes)

02. நீரும் நெருப்பும் - மோஹனா

நீரும் நெருப்பும்

‘சோலைபுரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...’

“என்ன மாமா வீடே கலை கட்டுது..என்ன விஷயம்..”

“திருவிழா வருது தானே ....”

“திருவிழாவிற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்!!! ...”

“அதுமட்டும் இல்லைப்பா.. இன்னைக்கு என் தங்கச்சி மகன் ஊரில் இருந்து வரார்....”

“எந்த ஊர் மாமா .. எங்களுக்கு தெரியாமல் ஒரு தங்கச்சி மகன்? ..”

“அடே ராசா... எங்களுக்குன்னு சொல்லாதே, உனக்குன்னு சொல்லு... “

“ஆத்தா . அப்ப உனக்கு தெரியுமா!!!!?”

“தெரியும் ..சொந்த தங்கச்சி மகன் தான் ... அந்த தம்பி அபிக்கு மாமன் முறைடா....”

“ஆத்தா!!!!...........”

‘சைகையில் சத்தம் போட வேண்டாமென்றும், தான் பார்த்துக்கொள்வதாகவும் சொன்னார் சோழனின் தாய்’...

 

திருச்சி ஏர்போர்ட்...

“மாமாவின் ஆல் வந்து நம்மை கூடி செல்வார்களாம்...”

“அட... நீ இவ்வளவு நல்லா தமிழ் பேசுவியா ஹரி??!!!!!...........”

“என்ன பண்றது தமிழ்நாடு வந்திருக்கோம்.. இங்க தமிழ் தானா பேசுவாங்க... அதுதான் நானும் தமிழ் பேசுறேன்..”

“கலக்குற ஹரி...அப்புறம் உன் மாமா குடும்பத்தை பற்றி ஓர் அல்லது இரண்டு வரிகள் சொல்லலாமே...”

“ஓர் இரண்டென்ன ஓர் ஆயிரம் வரிகளில் கட்டுரை எழுதித்தரட்டுமா ...”

“அடேயப்பா .. நான் உன்னை எப்படி சமாளிப்பதுன்னு பயந்தேன் .. ஆனால், நீ பின்னி பெடல் எடுக்குறடா ஹரி..”

“எல்லாம் அம்மாவின் போதனை தான்.. தமிழ் பிடிக்காது தான்... ஆனால், அம்மாவிற்கு ரொம்ப பிடிக்கும்.. அதனால் தான் நான் அம்மாவிற்கு தெரியாமல் தமிழ் படித்தேன்.... நேரம் வரும்போது அம்மாவிற்கு தெரிய படுத்தலாம் ன்னு விட்டுடேன்...”

“பிரமாதம் பேஷ் பேஷ்....”

“ம்ம்ம்”

“சரி .. உங்க மாமா குடும்பத்தைபற்றி சொல்லுப்பா ....”

“மாமா , அத்தை , மூன்று மகள்கள்... இது தான் எனக்கு தெரியும்... மாமாவின் பெயர் பாலா , அத்தையின் பெயர் பிரேமா , கடைசி புதல்வியின் பெயர் தாயார் அம்மாள், இரண்டாவது புதல்வியின் பெயர் மஹா, முதல் புதல்வியின் பெயர் அபிநயா...போதுமா இல்லை இன்னும் வேணுமா.....”

“போதும் போதும்... மீதி நானே தெரிந்து கொல்கிறேன்....”

“ஹும்.. “

“இதெல்லாம் வரும்போது அம்மா சொன்னாங்களா?.....”

“இல்லப்பா... எல்லாம் நானே தெரிந்து கொண்டது... அம்மா போன் பேசும்போது கேட்டது... நானாக எதும் அம்மாவிடம் கேட்டதில்லை ...”

“ஹும்... நீ எப்பத்தான் திருந்தபோகிறாயோ.....”

“நான் திருந்துவது இருக்கட்டும் ... அங்கே உனக்கு போட்டியாய் ஒரு ஜீவன் இருக்கிறது... அதை நீ எப்படி சமாளிக்க போகிறாய்.....”

“எந்த விதத்தில் அந்த ஜீவன் எனக்கு போட்டி....”

“எல்லா விதத்திலும் தான்.... அவள் சரியானவள்... “

“நீ எவளை சொல்கிறாய் என்று சொன்னால் தேவலை...”

“அதை அங்கே வந்து சொல்றேன்ப்பா...”

“ஹும் அந்த ஜீவனை பார்க்க ஆசையாய் உள்ளது...”

“கவலை வேண்டாம்... தட்டாமல் தரிசனம் கிட்டும்....”

அவன் சொன்ன விதம் அவளுக்கு சிரிப்பு வர இருவரும் சேர்ந்து சிரித்தனர்...

“அய்யா... வீடு வந்தாச்சுங்க ....”

“ஹரி இவ்வளவு பெரிய வீடா!!!!.............”

“பாத்து பாத்து... கொசு உள்ள போயிடபோகுது....”

“உன்னை....”

“உனக்கு ஆச்சர்யமாய் இல்லையா ஹரி...”

“அதெல்லாம் அப்படித்தான் இருந்தது .... உன்னை போல் காட்டிக்கொள்ளவில்லை... அவ்வளவே....”

னோ ஹரி அவளுக்கு புதிதாய் தெரிந்தான்... இத்தனை காலம் காலில் விழுந்தால் கூட தமிழ் பேசாதவன் இன்று நன்றாக தமிழ் பேசுகிறான்... உணர்சிகளின் பிம்பமாய் இருக்கும் அவனது முகம் இன்று உணர்ச்சிகளை அடக்குகிறது... ஹும் இது புது ஹரி தான்... இன்னும் என்னென்ன ஒலித்து வைத்திருக்கிறானோ.... கடவுளே எல்லா அதிர்ச்சியும் ஒன்றாய் தராமல் ஒன்றொன்றாய் தருவீராக  மானசிகமாய் கடவுளிடம் வேண்டினாள் சுபா...

“ஹலோ ... அப்படித்தான் அப்படித்தான் ... இன்னும் கொஞ்சம் கிழே.......”

“என்ன....”

“அப்பாடா... அம்மையார் வேறு உலகம் சென்றிருந்திர்களாக்கும்... “

“போதும்... ரொம்பதான் வாருகிறாய்... உனக்கு நேரம் நன்றாக இருகிறது.... அதனால் தப்பித்தாய்...”

“தோடா....” அழகாய் வரிசைப்பல் தெரிய இறங்கியவனை இரண்டு ஜோடி கண்கள் கவனித்தன.....

ஒன்று  சோழன் மற்றொன்று சோழனின் அருகில் நின்றிருந்த ரவி!!!!!!!!!!!........

‘என்னமாய் இளிக்கிறான்..... பாத்துக்கொள்கிறேன்.....’ கூவியது சோழனின் மனது....

‘இவன் யாரிவன் ... அந்த அழகு தேவதை அருகில்..’ சலித்துக்கொண்டது ரவியின் மனது....

இறங்கியவன் வீட்டை நோட்டம் விட்டான்....

‘வண்ண வண்ண பூக்கள் கொண்டு செண்டமைத்து

அதை தோரணங்களாக தொங்கவிட்டு

வண்ணபூக்கோலமிட்டு மங்கள மஞ்சள் தெளித்து

ரோஜாவின் செவ்விதழ்கள் கொண்டு மாலையமைத்து

பட்டின் சிகரமாம் காஞ்சிபுரப்பட்டு அணிந்து

மேளதாளங்கள் முழங்க

ஆரத்தி எடுத்து பெரும் புன்னகையுடன் வரவேற்றனர் பாலா – பிரேமா தம்பதியினர்’....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.