(Reading time: 23 - 46 minutes)

வளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

அவளுக்கு அங்கு செல்ல விருப்பமில்லை. ஆனால் அவள் விருப்பத்தை யாரும் கேட்கவில்லையே. அவள் மனமே அவள் பேச்சைக் கேட்காமல் அவனை நினைக்கும் போது, மற்றவர்கள் கேட்காததில் என்ன இருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள்.

இதைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தால் பெரியம்மா வந்து விட்டார். ஏதேதோ விசாரணைகளும்.

ஆனால் தானும் இப்படி எல்லோரும் என்னவென்று கேட்கும் படி வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அதன் படி ஒரு சின்ன சிரிப்புடன் எழுந்து இனியாவை பார்க்க சென்றாள்.

இனியா அவள் அறையில் தான் இருந்தாள்.

கதவை தட்டலாமா என்று எண்ணிய பவித்ரா, ஒரு வேளை அக்கா தூங்கிக் கொண்டிருந்தால் டிஸ்டர்ப் செய்தது போலாகி விடுமே என்று மெல்ல கதவை திறந்தாள்.

கதவை திறக்கும் சத்தம் கேட்டவுடன் இனியா ஓடி சென்று படுக்கையில் விழுந்தாள்.

உள்ளே நுழைந்த பவித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அவளை பார்த்த இனியா “ஓ  நீ தானா, எங்கே அம்மா தான் வந்தாங்களோன்னு நினைச்சிட்டேன்”

“ஏன்க்கா”

“அம்மா என்னை பெட்ல இருந்து இப்படி அப்படி நகர கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. புல் பெட் ரெஸ்ட்” என்று சிரித்தாள்.

“ஓ அதான் நீங்க நான் வந்த உடனே ஓடி குதிச்சீங்களா. பெரியம்மா. இங்க வாங்க. இனியாக்கா என்ன பண்றாங்க பாருங்க” என்று மெதுவாக கத்தினாள்.

“அடிப்பாவி. ஏன் டீ என்னை இப்படி பழி வாங்கற”

“ஹாஹஹா. பெரியம்மா கிட்ட சொல்ல கூடாதுன்னா எனக்கு என்ன கிடைக்கும்”

“ஓ மேடம் லஞ்சம் கேட்கறீங்களா”

அதற்குள் ஜோதி வந்தாள்.

திரும்ப இனியா படுக்கப் போனாள். பின்பு அக்காவை பார்த்து ரிலாக்ஸ் ஆனாள்.

ஜோதி “என்னடி” எனவும், பவித்ரா தான் நடந்ததை சொல்லி சிரித்தாள்.

ஜோதியும், பவித்ராவும் சிரிக்க இனியா முறைத்தாள்.

“அக்கா, அது சரி என் ட்ரீட் மறந்துடாதீங்க”

“நீ கேட்டது ட்ரீட்டா, லஞ்சம்”

“அதை ஏன்க்கா லஞ்சமா நினைக்கறீங்க. ட்ரீட்ன்னு நினைங்க. உங்க லவ்க்காக எனக்கு ட்ரீட் தரலாம் இல்ல”

“என்ன”

“அது கூட வேண்டாம். உங்க ஆளு உங்களை கவனிச்சிக்கற கவனிப்புக்கு நீங்க எனக்கு ட்ரீட் தரலாம்”

“ஏய் என்னடி என்னென்னவோ பேசற”

“ம்ம்ம். உங்க மேல என்ன ஒரு அக்கறை. பாசம், லவ், இன்னும் இப்படி நிறைய சொல்லலாம்”

“என்னடி பேசிட்டே போற”

“ஆமா இனியா. நானும் இதை அக்ரீ பண்றேன். உன் ஆளு நிஜமாவே சூப்பர் தான். ரொம்ப தான் உருகறாரு”

“அக்கா. வேண்டாம்” என இனியா கூறிக் கொண்டிருக்கும் போதே,

“ஐயோ ஜோதிக்கா. நீங்க பார்த்தது வெறும் ட்ரைலர் தான். நான் எல்லாம் கிளைமாக்சே பார்த்தேன்” என்றாள் பெரிய சிரிப்புடன்.

“ஏய்” என்று இனியா போலியாக மிரட்ட,

ஜோதியோ “என்னது டீ, கிளைமாக்ஸா” என்றாள் ஆர்வமாக.

“நேத்து நைட் அத்தான் வந்தாரு. பெரியப்பாவும் உங்களை வீட்டுல கொண்டு விட போய்ட்டாரு இல்ல. அத்தை என்னன்னு கேட்டாங்க. அத்தானும் மாமாவை பார்க்க வந்தேன் அத்தைன்னு சொன்னாரு. அப்புறம் தயங்கி தயங்கி கிளம்பனார், அப்புறம் திடீர்னு, அத்தை ப்ளீஸ் இனியாவை ஒரே ஒரு முறை பார்த்துட்டு போயிடறேன்னு கேட்டாரு பாருங்க. அத்தைக்கு ஒரே ஷாக்” என்று விட்டு சிரித்தாள்.

ஜோதியும், பவித்ராவும் இதையே சொல்லி அவளை சீண்ட இனியாவாலோ ஒன்றும் சொல்ல இயலவில்லை.

ஒன்றும் சொல்லாமல் திரும்பிக் கொண்டவளின் முகத்தை திருப்பி ஜோதி “ஹேய் வெட்கப் படுறா. பாருடா என் தங்கச்சி கூட வெட்கப் படுறா” என்று மாற்றி மாற்றி கிண்டல் செய்தார்கள்.

இனியாவை வெட்கம் பிடிங்கித் தின்றது.

“அக்கா ப்ளீஸ்”

“ஹேய்” என்று இருவரும் கத்தி கேலி செய்தார்கள்.

இவர்கள் போட்ட சத்தத்தில் உள்ளே வந்த லக்ஷ்மி “என்ன நடக்குது இங்கே. ஒரே சத்தம் போட்டுக்கிட்டு” என்று திட்டினார்.

“பாருங்கம்மா இவங்க ரெண்டு பேரையும்” என்றாள் இனியா.

ஜோதி “ம்ம்ம். சொல்லு சொல்லு. நாங்க என்ன பண்ணோம்ன்னு சொல்லு” என்றாள்.

எதையும் கூற இயலாமல் இனியா விழிக்க திரும்ப இருவரும் சிரித்தார்கள்.

உடனே இனியா ரோசமாக “என்னை ரெஸ்ட் எடுக்க விடாம டிஸ்டர்ப் பண்றாங்கம்மா” என்றாள்.

இருவரும் திரும்ப அவளை கேலிப் பார்வை பார்க்க, லக்ஷ்மி “ரெண்டு பேரும் இங்க என்ன கேலி செய்துட்டிருக்கீங்க. அவ ரெஸ்ட் எடுக்கட்டும். வெளிய வாங்க” என்றார்.

“இதோ ஒரு பைவ் மினிட்ஸ் மா. வந்துடறோம். நீங்க போங்க” என்று அவரை அனுப்பி வைத்தனர்.

உடனே இருவரும் அவளிடம் பார்வையை திருப்ப அவளோ எங்கோ பார்த்தாள்.

“சரி. அக்கா. ட்ரீட் மறந்துடாதீங்க.” என்றாள் பவித்ரா.

“சரி. ட்ரீட் தானே. தந்துட்டா போச்சி”

“ம்ம்ம். அவ ஏன் ட்ரீட் தர மாட்டா பவித்ரா. அவங்க ஆள் தான் அப்படியே  பிளாட் ஆகிட்டாரே.” என்று திரும்ப ஆரம்பித்தாள்.

“அக்கா. வேண்டாம்” என்று இனியா மிரட்ட

“அக்கா, நீங்க நிஜமாவே லக்கி தெரியுமா. அத்தான் உங்க மேல ரொம்ப அபெச்ஷன் வச்சிருக்கார்” என்றவளின் கண்களில் சோகம் இருந்தது.

இனியா அதை கவனிக்க வில்லை. ஆனால் ஜோதி அதை கண்டு கொண்டாள். ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

“சரி. நாம ரெண்டு பேரும் கிளம்பலாம் பவித்ரா. நாம ஏன் இவ ரெஸ்ட் எடுக்கறத டிஸ்டர்ப் பண்ணணும்” என்றாள் ஜோதி.

“அக்கா ரொம்ப டீஸ் பண்ணாத”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.