(Reading time: 4 - 7 minutes)

01. என் இதய கீதம் - Parimala Kathir

தவனின் ஒளிக் கீற்றுகள் மெல்ல புலரத் தொடங்கின. மலர்களும் வண்டுகளும் காதல் செய்ய துவங்கினர், பனித்துளி தன் ஆசை முத்தத்தால் அழகிய புல் வெளியினை நனைத்தன, குருவிகளின் கீச் கீச் சப்தம், அந்த இனிய் நாதம் கேட்டு மெல்ல தன் துயில் கலைந்து எழுந்தாள் லட்சுமி.

En ithaya geethamகிருஷ்ண கிருஷ்ணா என மும்முறை கிருஷ்ண நாமம் ஜபித்து கொண்டே தனது கண்களை திறந்தாள்.

தோட்டத்திலிருந்து பூ எடுத்து மாலை தொடுத்து ஆயிடையனுக்கு சாத்தினார், பின்பு

"ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் 

மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின்

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ.........."

என்று பய பக்தியோடு கண்ணண் புகழ் பாடினார்.

இறைவனிடம் கணவன் நாராயணன் தனது (கட்டிட கலை நிபுணர்) தொழிலில்  இன்னும் உயர வேண்டும் என்றும்; தங்களின் ஒரே ஒரு செல்லப் புதல்வி புவிகா சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும்  இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டார்.

காலை நடை பயில சென்ற கணபதி வியர்வை அடங்க சிறிது நேரம் வரவேற்பறையில் இருந்து அன்றைய நாளிதலை வாசித்து கொண்டிருந்தார்.

"லட்சுமி..  coffee “ என்று கூறி விட்டு மீண்டும் அன்றைய நாளிதலை வாசிக்கத்  தொடங்கினார்.

கணவனின் குரல் கேட்டு அவசரமாக சுவாமி அறையில் இருந்து சமையல் அறைக்குள் புகுந்த ல்க்ஷ்மி விரைவிலேயே கையில் இரண்டு cup coffeeயோடு வந்தார்.

அவர்கள் வீட்டில் வேலையாட்கள் இருந்தாலும் கணவனுக்கும் மகளுக்கும் தானேதான் எல்லா வேலைகளையும் செய்வார். அதிலவருக்கு ஒரு ஆனந்தம்.

இருவரும் சேர்ந்து தமது பானங்களை பருக துவங்கினர்.

"ஏம்மா நேரம் எட்டு ஆகப் போகிறது பாப்பா இன்னுமா தூங்கிறா?" (பாப்பா என்றதும் ஏதோ 3 வயது குழந்தை என்று நினைக்காதீங்க்கள் மகா ஜனங்களா அவங்க பாப்பாக்கு 19 வயது!!! )

“ஆமாங்க night ரொம்ப நேரமா படிச்சிட்டிருந்தா எக்ஸாம் வரப் போகுதில்ல;”

வர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மாடிப் படிகளில் இருந்து அன்றலர்ந்த செந்தாமரை போல் இருந்த புவிகா இறங்கி வந்தாள். தலை குளித்து இடுப்பு வரை நீண்ட கார் மேகம் போன்ற அடர் கூந்தலை நுனியிலே சமமாக கத்தரித்திருந்தாள்.

காதிலே சின்ன வைரத்தோடு கழுத்திலே சிறிய தங்க சங்கிலி  அடர் பச்சை நிற ஹொட்டன் சல்வார்.

இந்த பூலோக தேவதையை கண்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பொருத்தமாக தான் அவளுக்கு  நாராயணன் லக்ஷ்மி தம்பதியினர் புவிகா என பெயர் வைத்தார்கள் போலும்.

“குட் மோனிங் அம்மா மோனிங் அப்பா”  என்று கூறியவாறே அவர்கள் இருவரையும் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

“மோனிங் பாப்பா” என்று கூறி அவளது பட்டு கன்னத்தில் தம் இதழ் பதித்தார்கள்.

“என்ன பாப்பா நீ தூங்கிறதா அம்மா சொன்னா?  நீ என்னடா என்றால் காலேஜூக்கு போக ரெடி ஆகிட்ட போல.”

“ம்ம்ம்  நீங்க வோக்கிங் கிளம்பும் போதே நான் எழுந்தாச்சு.”

“சரிம்மா நீ சாப்பிடு நான் குளிச்சு ரெடி ஆகி 5 மினிற்ஸ்ல வந்திடுறன்”

“ஒகே அப்பா; “

சாப்பாட்டு மேசையில் புத்தகங்களை வைத்து விட்டு பாத்திரத்தை திறந்து பார்த்து விட்டு,

அம்மா இன்னிக்கும் இட்லியா? டிபறன்ரா செய்யவே மாட்டீங்களா?” என தாயை வம்புக்கிழுத்தாள்.

" ஏம்மா,  உனக்கு என்னை வம்புக்கு இழுக்காட்டால் சாப்பாடு இறங்காதா பாப்பாஂ என முகத்தை பாவம் போல வைத்துக்கொண்டு புவிகாவுக்கு பிடித்த பிட்டும் சம்பலும் எடுத்து அவள் தட்டில் வைத்துக்கொண்டிருந்தார்.

தட்டில் பிட்டை கண்டதும் தாய்க்கு அவசரமாக முத்தத்தை அள்ளி தெளித்து விட்டு பிட்டை ருசித்து உண்ண தொடங்கினாள்.

““ம்ம்ம்ம்...  ஆகா ஆகா என்ன ருசி சூப்பர் அம்மா.”

ரியாக அதே நேரம் அஸ்வின் அமெரிக்காவில் பலரை கொன்று குவித்து கொண்டிருந்தான்.

பலரும் அதை வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் அவனை தடுப்பதாக இல்லை.

(ஆமாங்க அஸ்வின் தான் இந்த கதையோட ஹீரோ.)

அடுத்த அத்தியாயத்தில் பார்போம் அஸ்வினுக்கு என்ன நடந்ததென்று.

தொடரும்!

Go to episode # 02


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.