(Reading time: 5 - 10 minutes)

01. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!

வாழ்கையில் சில நேரங்களில் கதவுகளை அடைத்து வைத்திட வேண்டும், அது பயத்தினாலோ, தான் என்ற அகங்காரத்தினாலோ, வீம்பிற்காகவோ அல்ல சில நேரம் கதவுகள் தவறான பாதைக்கு திறந்து விட்டால்... எண்ணங்கள் ஓடி கொண்டிருக்க கவிதா குழப்பங்களுடன் அடுத்த ஒரு  மணி நேரத்தில் அந்த சிங்கார சென்னை மண்ணில் கால் வைக்க போகிறாள். 

நிஷா," பயப்படாதே கவி எல்லாம் அந்த கடவுள்  பார்த்துப்பான்"

கவிதாக்குள் நெஞ்சம் படபடத்து. ஆனாலும் வேறு வழி கிடையாது. சென்னையில் யாரையும் தெரியாது. நிஷாவின் திட்டம் அவளுக்கு சம்மதம் தான். ஒரே ஒரு சின்ன சிக்கல் மட்டும் தான். அதை தெளிவு படுத்த எத்தனித்தாள்.

கவிதா," என்னங்க? உங்கள பார்த்தாலே பணக்கார வீட்டு பெண் மாதிரி தெரிகிறது, அப்படியே நான் போய் நின்னு நான் தான் நிஷானு சொன்னா ஏத்துக்குவாங்களா என்ன?"

நிஷா சாந்தமாய்," சந்தேகம் வரும் தான், ஆனால் நீ சமாளிக்கிற விதத்துல சமாளிச்சேனா பிரச்சனையே இல்ல, இன்பாக்ட் நீ சொதப்பினாலும் எனக்கு நன்மை தான்"

கவிதாவிற்கு அப்படியே அந்த ஓடும் ரயிலில் இருந்து குதிக்கலாம் போல் இருந்தது நிஷா குழப்புவதை கேட்டால். முடியுமா என்ன? சாதிக்க எவ்வளவு இருக்கு என்று அமைதி காத்தாள்.

பின் கவிதாவை சுடிதாரில் இருந்து ஜீன் டாப்பிர்க்கு மாற்றினாள் நிஷா.தொடர்ந்து "யு லுக் ப்ரெட்டி" என்று அவள் இறு கன்னங்களை பிடித்து கிள்ளினாள். கவிதாவிற்கு மனம் நெகிழ்ந்தது.ஏதோ அவளுக்கென்று ஒரு சொந்தம் உருவனதுப்போல் இருந்தது. 

கவி "ஏங்க கல்யாணம் செய்துக்க பிடிக்கல என்று அப்பா கிட்டே சொல்லலாம் தானே"'

நிஷா,"நோ சான்ஸ் கவி, பையனுக்கு என்னை பிடிக்கல, அவன் பாட்டிக்கும் அக்காவிற்கும் பிடிக்கல என்றால் மட்டுமே என் கல்யாணம் நிற்கும்"

 "அப்போ நான் அங்க எப்படி நடந்துக்கனும்."- கவிதா 

"உன் இஷ்டம் கவி, அந்த பையனுக்கு நிஷாவை பிடிக்க கூடாது"

கவிதா மனம் உள்ளுக்குள் நெருடினாலும் அவள் கீழ் வானம் விடிவதுபோல் எண்ணம் தோன்றியது.

ரயில் ஏறி  எட்டு மணி நேரத்தில் தன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று  நிஷா எதிர்பார்க்கவே இல்லை. அவளின் நீண்ட நாள் ஆசை நிறைவேற்றுவது எப்படி என்ற தவிப்பில் தந்தையை மீற முடியாமல் தவித்தவளிற்கு கவிதா கிடைத்தது அவள் வெற்றி படியில் முன்னேற்றாம் போல் உணர்ந்தாள்.

போட்டோகிராப்பியில் சாதிக்க வேண்டும் என்பது நிஷாவின் கனவு. கல்யாணம் அதுவும் அவள் தந்தை போலவே சதா சர்வகாலமும் பணம் செய்யும் எந்திரத்துடன் மணம்!! முடியாத காரியம். எந்த வகையிலும் முடியாத காரியம். இந்த பணத்தினால் அவள் இழந்தது எண்ணற்றவை. அன்பு, ஆதரவு, பாசம் என்பதர்கெல்லாம் அர்த்தம் தெரியுமா என்ன அந்த காகிதத்திற்கு.

ஆனால் அவள் அறிந்தவளே அதனால் அந்த யெங் பிஸ்னெஸ்மேனை கல்யாணம் செய்துக்க முடியாது. கவிதாவை வைத்து நிறுத்துவதில் அவளுக்குள் சிறு நெருடலே ஆனாலும் அந்த பெண்ணிற்கு ஏதாவது வகையில் உதவி செய்யவே அவளையும் பிரச்சனையில் இழுத்து விட்டாள்.

கவிதாவிற்கு சென்னையில் போனவுடன் தங்க இடம் வேண்டும், அவள் படிப்பிற்கு தகுந்த வேலை வேண்டும் கூடவே பாதுகாப்பு வேண்டும் அதற்க்கு கொஞ்ச நாட்கள் நிஷா என்று அந்த ஆங்கிரி பார்ட், வெரச்ச சட்டையிடம் கவிதா நடித்துக்கொண்டே சம்பாதித்து விடலாம். அந்த கணிசமான இடைவெளியில் சிங்கப்பூர் சென்று போட்டோகிராபி போட்டியில் பங்கெடுத்து வென்று வந்து கல்யாண பிரச்னையை கையாண்டுகொள்ளலாம். நிஷாவின் எண்ணங்கள் ரீட்டா புயல் போல் அதிவேகமாக செயல் பட்டது.

 

யில் நிலையம் வந்தாயிற்று கவிதா நிஷாவின் சில அறிவுரைகளை கேட்டுக்கொண்டு அதிக பட்சமாக யாருக்கேனும் தெரிய வரும் முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடைவடிக்கை பற்றி பேசிவிட்டு விமான நிலையம் புறப்பட்டு சென்றனர்.

 

நிஷா டெல்லியில் இருந்து விமானத்தில் வருவதாக சொல்ல பட்டிருக்கிறது. அவர்கள் விமான நிலையம் செல்லும் முன்னேயே விமானம் வந்து விட்டிருந்தது. 

 

கவிதா நிஷா ஆட்டுவிக்கும் பொம்மை போல் ஆடி கொண்டிருந்தாள். நிஷா அங்கே வாஷ்ரூம் சென்று கவியின் முகத்தில் அலங்காரம் செய்தாள்."புஸ் புஸ் " என்று இரண்டு வகையான ஸ்ப்ரேயில் குளிப்பாட்டினாள். நிறைய பேசினாள் நிஷா ஆனால் அது எதுவும் கவி காதுக்கே செல்லவில்லை. 

 

பதட்டமும் பயமுமாக அதை மறைக்க என்று கவிதா கிளர்ந்த நிலையில் இருந்தாள். நிஷா அவளை தொந்தரவு செய்யவில்லை. கடைசி நிமிடம் முடியாது என்று கவிதா சொல்லிவிடுவாளோ என்ற பயம்.

 

கவியின் கைகளை பிடித்துக்கொண்டு தரதரவென்று இழுத்துக்கொண்டே தேடியவள் கண்களில் பட்டுவிட்டான் ஆகாஷ். அவனை பார்த்த நிமிடம் உடம்பெல்லாம் மின்சாரம் பாயந்தது போல் உணர்ந்தாள் நிஷா.  

 

சட்டென்று நின்றவள் கவிதா பக்கம் திரும்பி " அதோ அங்கே ஆகாஷ் நிற்கிறார் கவி" என்றாள் 

 

இதென்ன இப்படி இவள் மரியாதையும் பேச்சின் விதமும் மாறுகிறதே என்று யோசித்து கவிதா திரும்ப "போ கவி,எல்லாமே நன்மைக்கு தான்" என்றவள் திரும்பி நடக்க தொடங்கிவிட்டாள்.

 

கவிதாவின் கால்கள் தன் இயல்பாய் ஆகாஷை நோக்கி சென்றது. ஆகாஷ் உதட்டில் சிரிப்பு மறைத்து ஆராய்ச்சி கண்களுடன் கைகளை நீட்டியப்படியே  "ஐ... ஆம் ஆகாஷ்" என்று இழுத்து பேச.

 

கவி கைகளை நீட்டி "ஐ அம் கவி " என்று சொல்ல அவன் "வாட் நிஷா !??" எனவும் கவி பதறிவிட்டாள்.

 

சமாளிதப்படியே " ஐ  ஆம் நிஷா பட் கால்டு ஆஸ் கவி" என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தாள்.

 

ஆகாஷ் வெளிப்படையாகவே சிரித்து " நல்லது க..வி! கவி தானே நிஷா"

 

"ஆமாம்" என்று சொல்லிக்கொண்டே எதிரில் வந்தவர் மேல் கவி மோத.

 

"கவனம் தேவை கவி.., எப்பவுமே எதுலயுமே" என்றான் ஆகாஷ்.

 

அந்த வார்த்தைகள் அவளுக்கென்றே சொன்னதுப்போல் உணர்ந்தாள் கவி.

 

மறைந்திருந்து ஆகாஷ் கவியை அழைத்து செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற நிஷா " என்னை மன்னிச்சிடு ஆகாஷ் " என்று சொல்லிக்கொண்டு கனத்த மனதுடன் திரும்பி நடந்தாள்.

 

அள்ளி தெறிக்க வார்த்தைகள் இருந்தும் தேடி பிடித்து சொல்ல முடியாது தவிக்கும் தவிப்பு காதலுக்கு மட்டுமே சொந்தம். காதல் அனுமதி கேட்பதில்லை. கேட்காமல் உள்ளே புகுந்து உயிரினை குடிக்கும் வல்லமை கொண்டது. நிஷாவினுள் நுழைந்து காதல் படுத்தும் படு யாரும் அறியவில்லை, அவள் அறியாது அவளை அறிந்தவனும் அறியவில்லை.

தொடரும்!

Go to episode # 02


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.