(Reading time: 10 - 20 minutes)

"வேஸ்ட்...இது எதையும் புரிஞ்சுக்காத நாய்...வா போலாம்!” என்று அரவிந்த் சைக்கிலில் ஏறினான்.  பொம்மு போக விருப்பமில்லாமல் அந்த நாயை பார்த்தபடி நின்றாள். அரவிந்த் சைக்கிளை விட்டு பொம்மு அருகில் வந்தான்.

“போகலாம் பொம்மு...இந்த நாய்கிட்ட அப்படி என்ன தான் எதிர் பாக்குற?” – அரவிந்த் வெறுப்பாக.

“எனக்கு நான் யார்னு தெரியனும்னு ஆசைப்பட்டேன்!” என்றாள் பொம்மு ஏக்கமாக.

“வொவ்வவ்வவ்வ்வ்வ் !” என்று அந்த கருப்பு ஊளையிட ஆரம்பித்தது. பொம்முவும் அரவிந்தும் சற்று திடுக்கிட்டனர். அந்த நாயின் சத்தம் சற்று வித்தியாசமாகவும் பயமுறுத்தும்படி இருந்தது. அந்த நாயின் நீண்ட உளை சத்தத்திற்கு பிறகு ஒரு குதிரை வண்டி ஒன்று அங்கே அவர்களை நெருங்கி கொண்டிருந்தது .பொம்முவும் பயத்துடன் காலடிகளை பின்னே வைத்தனர்.

ந்த குதிரை வண்டி மெல்ல கருப்பு நாயின் பின்னே வந்து நின்றது. அந்த வண்டியின் ஓட்டுபவர் கிழே இறங்கினார். அவரின் உருவம் இருட்டில் சரியாக தெரியவில்லை. இருட்டிலிருந்து மெல்ல அந்த உருவம் தென்பட ஆரம்பித்தது. அது ஒரு சிறுவன். மிகவும் பிரகாசமான உருவத்தையும் அழகையும் கொண்டிருந்தான் அந்த சிறுவன். அவன் கையிலிருந்த குச்சியும் அவனது உடைகளும் பார்க்கும்போதே அவன் ஒரு கிராமத்து சிறுவன் என்று புரிந்தது.

கருப்பு நாயின் தலையை தடவிய அந்த சிறுவன் “சொன்னபடி உதவி செஞ்சுருக்க பைரவா....ரொம்ப நன்றி ” என்றான். அதன் பிறகு அவன் பொம்முவையும் அரவிந்தையும் கண்டான்.

“எப்படி இருக்க பொம்மு?...நான் நினைச்ச மாதிரியே நீ திரும்பவும் வந்திருக்க” என்றான் அந்த சிறுவன்.

“யாரு நீ?” – அரவிந்த்.

“நானா?...என் பெயர் மாதவன்.” என்றான் புன்னகையுடன் அந்த சிறுவன்.

பொம்முவும் அரவிந்தும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

“புரியுது...நான் யாருனு உங்களுக்கு தெரியனும்ல?....நான் தான் உன்னை அரவிந்த் கிட்ட அனுப்பினேன் பொம்மு!” – மாதவன்.

“நீயா?...ஏன்?” – பொம்மு மெல்ல

“அவசியம் வந்துச்சு....அதனாலதான்...” – மாதவன்.

“என்ன அவசியம்? எதுக்காக இப்படி பண்ண? எதுக்காக உன்னோட நாய வச்சு என்ன அரவிந்த் கிட்ட அனுப்பின?” – பொம்மு

“என்ன என்னோட நாயா? பைரவன் என்னோட நாய் இல்ல பொம்மு...பைரவன் மூலமாதான் நீ அரவிந்த் கிட்ட சேரனும்கறது விதி!...” – மாதவன்

பொம்முவுக்கும் அரவிந்துக்கும் ஒன்றும் புரியவில்லை.

புன்னகையுடன் பொம்முவை பார்த்த பொம்மு “ அது மட்டும் தான் உன் கேள்விகளா?...வேற எதாவது கேள்வி மிச்சம் இருக்கனுமே?” என்றான்.

 “நான்....நான் யாரு?” – பொம்மு.

“நீ ஒரு பொம்மை கிடையாது....அதை மட்டும் தான் என்னால இப்ப உனக்கு சொல்ல முடியும்.” என்றான் மாதவன்.

“முடியாது...எனக்கு முழுசா தெரியனும்...சொல்லு...” – பொம்மு.

“உனக்கு எல்லாமே தெரியனும் தான்...ஆனா அதுக்கு நீ என்ககூட வந்தாகணும்.” – மாதவன்.

“ஏன்?” – அரவிந்த்.

“அதுதான் நியாயம் அரவிந்த்...பொம்மு இங்க உன்கூட இருக்க வேண்டியவ இல்ல...அவளை எதிர்பார்த்து நிறைய பேர் இருக்காக...அவளோட இடத்துல.” – மாதவன்.

“நீ சொல்றது எனக்கு புரியல//” – பொம்மு.

மாதவன் சிரிப்பை மட்டும் நிறுத்தவே இல்லை,.

“நான் உனக்கு சொல்லபோறது ஒரு விஷயம் தான் பொம்மு.....நீ என்கூட வந்தா உனக்கு நீ யாருனு தெரியும்!...நீ வரலானா....ஒரு பிரச்னையும் இல்ல..நீ இங்கேயே இருக்கலாம்...சந்தோஷமா” – மாதவன்

பொம்மு யோசித்தாள். மாதவன் தன் குதிரை வண்டியில் ஏறினான். குதிரை கனைத்தது. கருப்பு நாயும் குதிரை வண்டியில் தாவியது.

“சரி...பொம்மு ! உனக்கு பிடிச்ச வாழ்க்கைய எடுத்தால் எனக்கும் சந்தோஷம்தான்! நான் கிளம்புறேன்” என்ற மாதவன் தன் குச்சி வைத்து குதிரைகளை நகர வைத்தான்.

“நில்லு!” என்று அரவிந்த் குரல் கொடுத்தவுடன் வண்டியை நிறுத்தினான் மாதவன்.

“பொம்மு வருவாள்...ஆனா நானும் அவள் கூட வருவேன்!” – அரவிந்த்.

மாதவன் ஆனந்த பார்வையுடன் அவர்களை கண்டான்

“தன் கையே தனக்கு உதவினு பெரியோர்கள் சும்மாவா சொன்னாங்க?” – மாதவன்

பொம்முவுக்கும் அரவிந்துக்கும் அவன் கூறியது ஒன்றும் புரியவில்லை. அவர்கள் இருவரும் மாதவனின் வண்டியில் ஏறினர். மாதவன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். வண்டி வேகமாக பாய்ந்தது. திடிரென வண்டியின் சக்கரங்களில் இருந்து வண்ண ஒளிகள் சிதற ஆரம்பித்தது. பொம்முவும் அரவிந்தும் வண்டியை இறுக்கமாக பிடித்து கொண்டனர். வண்டியின் வேகத்தில் சுற்றியுள்ள இயற்கையே மறைந்தது.  அரவிந்த் வண்டியில் இருந்து சற்று வெளியே எட்டி பார்த்த போது அகினிகளின்  பாதையில் வண்டி பயணித்து கொண்டிருந்தது. மாய பாதையில் அவர்கள் பயணித்து கொண்டிருப்பது அப்போது அவர்களுக்கு புரிய வந்தது.

நீண்ட நேர பயணத்தின் பின் திடிரென வண்டி எங்கோ விண்ணில் பாய்வது போல இருந்தது. பொம்முவும் அரவிந்தும் கிழே பார்த்த போது வர்களுக்கு அதிர்ச்சி. குதிரை வண்டி ஒரு பெரிய மலை மேட்டை தாண்டி கட்டுபாடில்லாமல் ஒரு நதியின் நடுவே சென்று சிக்கி நின்றது. பொம்முவும் அரவிந்தும் பதறி போய் வண்டியை விட்டு நதியில் இறங்கி நின்றனர்.

பொம்முவும் அரவிந்தும் சுற்றி பார்த்தபோது அவர்கள் ஒரு காடு பகுதியில் இருப்பது அவர்களுக்கு புரிய வந்தது. பச்சை கருப்பு நிறத்தில், வானம் இருந்ததால் எங்கும் இருள் நிறைந்து காணப்பட்டது.

“அடடா வண்டி நல்லா எங்கயோ சிக்கிக்கிட்டு இருக்கு போல...ரொம்ப கஷ்டமா போச்சே!” என்றான் மாதவன் வண்டியின் சக்கரங்களை பார்த்து.

“நாம எங்கே வந்திருக்கோம்?...இது என்ன இடம்?” – பொம்மு பதட்டமாக.

“இது நிலாயுகம்....பலவருஷமா திய சக்திகளால அடிமையாக்க பட்டிருக்கு...இதுதான் நீ பிறந்த இடம் பொம்மு!” – மாதவன் சுற்றி பார்த்தபடி.

பொம்முவுக்கும் அரவிந்துக்கும் என்ன சொல்வதென்றே தெரியாமல் முழித்தனர்.

“என்ன பாக்குறீங்க?....நீங்க இந்த காடு வழியா போய்கிட்டே இருங்க! இந்த பைரவனும் உங்களோட வருவான்! நான் வண்டியை எப்படியாவது நகர்த்திகிட்டு வந்திடறேன்.” என்று மாதவன் கிழே இறங்கி வண்டியின் சக்கரங்களை பார்க்க சென்றான். கருப்பு நாய் வழிக்காட்டுவது போல பொம்மு அரவிந்த் முன்னே நடந்து சென்றது.

“மாதவா....” – பொம்மு தயக்கத்துடன்.

“என்ன பொம்மு?” - மாதவன்

“உண்மையிலேயே நாம எங்கதான் வந்திருக்கோம்?” – பொம்மு

சற்று பொம்முவையே பார்த்த மாதவன் “நீ வாழவேண்டியே ஜென்மத்துக்கு வந்திருக்கோம் பொம்மு! இன்னும் சுருக்கமாக சொல்லனும்னா......ஜென்மம் விட்டு ஜென்மம் தாவி வந்திருக்கோம்!” என்றான்.

பொம்மு மற்றும் அரவிந்தின்  உடல் அதிர்ச்சியில் உறைந்து போனது. 

தொடரும்

Go to Bommuvin Thedal episode # 02

Go to Bommuvin Thedal episode # 04

{kunena_discuss:697}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.