(Reading time: 11 - 21 minutes)

தில் பேசாமல் நடையில் வேகத்தை கூட்டினாள்.

'சரி உன்னை கார்லே ஏற சொல்லலை. அப்படி சொன்னா அப்புறம் 'எனக்கு உன்னை பிடிக்கலை' அப்படின்னு கத்துவே. அந்த ஸீன் தான் நாங்க பார்த்துட்டோமே.

சட்டென்று நின்றவள், கண்களில் வெறுப்பு தெறிக்க அவனை பார்த்தாள் 'நான் வசந்தை காயப்படுத்தியது இவனுக்கு மகிழ்ச்சியா?'

'ஹேய்....ஹேய்...சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.' சரி விடு. உங்கப்பா கிட்டே பேசறியா?

அப்பா என்ற வார்த்தை அவளை சற்று நிமிர்த்தியது.

காலையிலிருந்து அவள் அழைத்த அழைப்புகள் எதையுமே ஏற்கவில்லை அப்பா. தன் கைப்பேசியிலிருந்து அவர் எண்ணை அழுத்தினான் விவேக்.

டில்லியில் அன்றைய வேலை முடிந்து தான் தங்கி இருக்கும் அறைக்கு வந்துவிட்டிருந்தார் அப்பா. ஏனோ டில்லி பிடிக்கவில்லை அவருக்கு. தெரியாத ஹிந்தியில் போராட வேண்டியிருந்தது.

அந்த அறையில் அமர்ந்திருந்தவரின் மனம் அர்ச்சனாவையே சுற்றிக்கொண்டிருந்தது.

'ஏன் அத்தனை கோபம் எனக்கு? தன்னையே கேட்டுக்கொண்டார் அப்பா. இது அர்ச்சனா மீதிருந்த கோபமா? வசந்தின் மீதிருந்த வெறுப்பா?

'அப்பா ப்ளீஸ்பா...... கெஞ்சிய அர்ச்சனாவின் குரல் காதில் கேட்டது போல் தோன்ற, மனம் வலித்தது. கண்களில் நீர் சேர்ந்தது. என் மகளை ரொம்பவும் தவிக்க விடுகிறேனோ?

சரியாய் அந்த நேரத்தில் ஒலித்தது அவர் கைப்பேசி. 'அழைத்தது விவேக்.

சட்டென்று எடுத்துவிட்டிருந்தார் அப்பா.

'சொல்லுப்பா என்றார்'

அங்கே கைப்பேசியை காதில் வைத்திருந்தாள் அர்ச்சனா.

'அப்பா....' என்றாள்

அப்படியே மௌனமானார் அப்பா.

'அப்பா பேசுங்கப்பா...ப்ளீஸ்.....'

பேசியிருந்திருக்க வேண்டும் அப்பா. உள்ளிருந்த தேவையற்ற வீம்பு அவரை தடுத்தது.

'அப்பா ப்ளீஸ்...' என்றாள் அர்ச்சனா. அவள் குரல் மெல்ல மாறியது.

நிதானமான குரலில் அழுத்தமாக  சொன்னாள் அர்ச்சனா. ''நான் உங்க பேச்சை எப்பவும் மீற மாட்டேன். ஆனா ஒரு சில நேரம் நான் என் மனசாட்சிக்கும் மரியாதை குடுக்கணும் இல்லையாப்பா.?

பதில் சொல்லவில்லை அப்பா. சற்று திகைத்துத்தான் போனார். அர்ச்சனா இப்படி பேசி பார்த்ததில்லை அவர்.

'என்னை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ். உங்களை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்.'

அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் விவேக்.

பதில் சொல்லவில்லை அப்பா.

'நீங்க என்னை புரிஞ்சிப்பீங்கன்னு நம்பறேன் பா. எப்பவும் போலே தினமும் காலையிலே ஒரு தடவை ,ஈவினிங் ஒரு தடவை உங்களுக்கு போன் பண்.ணுவேன்.உங்களுக்கு எப்போ பேசணும்னு தோணுதோ அப்ப பேசுங்க. நான் காத்திட்டிருப்பேன். இப்போ வெச்சிடறேன்.'

கைபேசியை விவேக்கிடம் நீட்டிவிட்டு நிமிர்ந்து கூட பார்க்காமல் நடந்தாள் அர்ச்சனா. அவளையே பார்த்தபடியே நின்றிருந்தான் விவேக்.

திகைத்து போய் அமர்ந்திருந்தார் அப்பா. பேசியிருக்க வேண்டும் அவர். உறவுகளிடமும், ரத்த பந்தகளிடமும் காட்டும் தேவையற்ற வீம்பு நம்மையே பாதிக்க கூடும் என்பதை புரிந்துக்கொள்ளவில்லை அவர்.

பின்னாளில் அர்ச்சனாவுடன் பேச வேண்டுமென்று அவர் மனம் தவிக்கும் போது , அது முடியாமல் போய்விடும் என்று தெரியவில்லை அவருக்கு.

கையில் கிடைத்ததை எல்லாம் வாங்கிக்கொண்டு, மாலை ஆறரை மணிக்கு வீட்டிற்கு ஓடி வந்தான் மனோ.

வாசலில் அவளது ஸ்கூட்டி நின்றுகொண்டிருந்தது.

அவளை அப்படியே அள்ளிக்கொண்டுவிட வேண்டும் என்று உள்ளே ஓடியவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

ஹாலில் விவேக் அமர்ந்திருந்தான். சமையலறையிலும் இல்லை அவள்.

ஸ்வேதா எங்கே? என்றான் மனோ.

இன்னைக்கு என்னமோ சீக்கிரமே வந்திட்டா. அப்புறம் யாரோ ப்ரெண்ட்க்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது. ஹாஸ்பிடல் போயிருக்கா. இப்போ வந்திடுவா உட்காருங்க.

பேசாமல் தன் அறைக்கு சென்று அமர்ந்தான் மனோ.

மனம் தவித்து பொங்கி வழிந்தது. தினமும் என்னையே சுற்றி சுற்றி வருபவள்தானே அவள். ஏன் அவளுக்காக இவ்வளவு தவிக்கிறேன். அவனுக்கே புரியவில்லை.

உற்சாகத்தின் எல்லையில் இருந்தான் மனோ. சுற்றியுள்ள எல்லாமே புதிதாய் மாறிவிட்டதைப் போல், எல்லாமே மகிழ்ச்சியின் அடையாளங்களாய் மாறிவிட்டதைப்போல் தோன்றியது.

இந்த நிமிடமே கண் முன்னே வந்து விட மாட்டாளா என்று தவித்தது மனம்.

ஒரு மணி நேரத்தை மிகவும் சிரமப்பட்டு பிடித்து தள்ளினான்.

அந்த நேரத்தில் அவள் வந்துவிட்டதை அவன் காதில் விழுந்த அவளது குரல் உணர்த்த ,ஓடியே வந்தான் மனோ.

அங்கே ஹாலில் நின்றிருந்தாள் அவள். அவளையே பார்த்தபடி அப்படியே நின்று விட்டான். மனோ.

அவளுடனே  அவளது தோழிகள் இரண்டு பேர் நின்றிருந்தனர். அவர்களுடன் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாளே தவிர அவள் கண்கள் மனோவின் மீதே இருந்தன.

கண்களால் அவனை கெஞ்சிக்கொண்டிருந்தாள் ' கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன் ப்ளீஸ்.

கைகெட்டும் தூரத்தில் நின்றுக்கொண்டு அவளை கண்களால் அளந்தபடியே நின்றிருந்தான் மனோ. புதிதாய் எதோ ஒரு அழகு வந்து அவளிடம் ஒட்டிக்கொண்டது போல் தோன்றியது அவனுக்கு.

தோழிகள் சென்று விட்டபோதிலும், அவளால் அவனருகே வரமுடியவில்லை. ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் விவேக்.

மனதிற்குள்ளே சொல்லிகொண்டான் மனோ' நீ வசந்துக்கு தான் எம்.என்.நம்பியார்ன்னு நினைச்சேன் எனக்குமாடா?

ஒவ்வொரு நொடியாய் கடத்தி, இரவு உணவை முடித்து, விவேக் உறங்க சென்றவுடன் அறைக்குள் நுழைந்தாள் ஸ்வேதா. கட்டிலில் அமர்ந்திருந்தான் மனோ. அவன் எதிரில் நின்றாள் ஸ்வேதா. 

எதுவுமே பேசிக்கொள்ள தோன்றவில்லை இருவருக்கும். கட்டிலை விட்டு எழுந்தவன் சில நிமிடங்கள் அவளையே பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான் மனோ.

பின்னர் தன் கைகளை முன்னால் நீட்டி வாவென அவன் அழைத்த நிமிடம், தன்னை மறந்து ஓடிச்சென்று அவள் அவன் தோள்களில் சேர்ந்த நிமிடம்,அவள் கன்னங்களில் மாறி மாறி இதழ் பதித்து அவளை தன்னோடு அவன் இறுக்கிகொண்ட நிமிடம்,அவர்கள் வாழ்க்கையில் எப்போதுமே மறக்கவே முடியாத நிமிடமாகிப்போக, இருவரும் ஒருவருக்குள் ஒருவர் கரைந்துக்கொண்டிருந்தனர்.     

றுநாள் காலை. விழித்தெழுந்தான் மனோ. காலை மிக அழகாய் விடிந்திருப்பதைப்போலே தோன்றியது அவனுக்கு.

அப்போது ஒலித்தது அவன் கைப்பேசி. அழைத்திருந்தார் அந்த மனிதர்.

எப்போதுமே வாழ்கையை ரொம்பவே எளிதாக,அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்ளும் மனிதர் அவர்.

அவர் கவலை பட்டு மனோ பார்த்ததே இல்லை. அவருடன் பேசும் போதே மனதின் பாரங்கள் குறைந்து விடுவதை போல் உணர்ந்திருக்கிறான் மனோ.

எப்போதும் உற்சாகமாய் ஜீன்ஸும்,டீ-ஷர்ட்டும் அணிந்து கொண்டு சுற்றிக்கொண்டிருப்பார் அந்த மனிதர்.

உடையிலும் சரி,எண்ணங்களிலும் சரி தன் தம்பிக்கு நேர் எதிர் அவர்.

அவர் வேறு யாருமில்லை மனோவின் அப்பா. அர்ச்சனாவின் பெரியப்பா.

'டேய். எப்படி டா இருக்கே? என்றார் அப்பா.

'எங்கேப்பா இருக்கீங்க? என்றான் மனோ. நீங்க போன் பண்ணி பத்து நாளைக்கு மேலே ஆச்சு.

'மலேசியாவிலே' சிரித்தார் அப்பா.

இந்த வயசிலே வோர்ல்ட் டூர் அவசியமா உங்களுக்கு? சுகரையும், பிபியையும் ஹையா  வச்சிட்டு என்னமோ பதினெட்டு வயசு பேச்சிலர் மாதிரி சுத்திட்டிருக்கீங்க. எனக்கு பயமா இருக்குபா.

'எனக்கு எப்பவுமே பதினெட்டு வயசுதாண்டா. நீதான் கிழவன். எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகி, கவலை பட்டு வாழ்கையை கெடுத்துக்கறே. என்றார் அப்பா ஆமாம் அர்ச்சனாவும்,வசந்தும் எப்படி இருக்காங்க? எல்லாம் சரி ஆயிடுச்சா?

'எல்லாம் பழைய மாதிரிதான் இருக்கு. எந்த மாற்றமும் இல்லை. நீங்க கிளம்பி இங்கே வாங்கப்பா ப்ளீஸ்.

'வருவேண்டா. வருவேன்'' சிரித்தார் அப்பா. வர வேண்டிய நேரத்துலே கரெக்டா வருவேன்.

தொடரும்

Manathile oru paattu episode # 12

Manathile oru paattu episode # 14

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.