(Reading time: 10 - 20 minutes)

06. நீரும் நெருப்பும் - மோஹனா

ரஞ்சு வண்ண பட்டுப் புடவை சரசரக்க, மிக பொருத்தமான அணிகலன்களோடு, காதில் ஜமிக்கி ஆட, மல்லிகை சரங்களை சூடி விண்ணுலகத்து தேவதையை போல் காட்சியளிதாள் அபி. காண்பவர்களுக்கு அழகுப் பதுமையாக தோன்றினாள் படியிறங்கி வருபவள். அவளைக் கண்ட ஹரி சொக்கிப் போய்விட்டான். படியிறங்கி வந்துக்கொண்டிருந்தவள் ஹரியைத் தேடிக் கொண்டிருந்தாள். சற்று நேரம் அவளைத் தேடவிட்டு மறைந்திருந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான். மறைமுகமாகத் தேடத் தொடங்கியவள் பொறுமையிழந்து வெளிப்படையாகவேத் தேடத் தொடங்கிவிட்டாள். அவள் தேடுவதைப் பார்த்து மனமிரங்கினான். சிரித்துக் கொண்டே அவளப் பார்வையில் படும்படி சட்டென வெளிப்பட்டான். குப் என குங்குமமாய் சிவந்து விட்டது அவள் முகம்.

Neerum neruppum‘சரியான ப்ராட். இவ்வளவு நேரம் ஒளிந்திருந்து நான் தேடுவதைப் பார்த்து வெளிவருகிறான்..’

அவள் எண்ணத்தை படித்ததுப் போல் அவன் மந்தகாசமாய்  புன்னகைத்தான். அவன் எதிர்பார்த்தது போலவே அவள் முகம் ரத்த நிறமாய் சிவந்து விட்டிருந்தது.. சுற்றியிருப்பவர்களை மறந்துவிட்டு அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அபி என்ற அழைப்பில் தான் இருவரும் கனவுலகத்தில் இருந்து நனவுலகத்திற்கு வந்தார்கள்.

அபி என்று அழைத்தவாறே பிரேமா ஆரத்தித் தட்டை எடுத்துக் கொண்டு வந்தார்..

“என் கண்ணேப் பட்டுவிடும் போல் இருக்கு.. சீக்கிரம் உனக்கொரு கல்யாணத்தை பண்ணிப் பார்க்க ஆசையாய் இருக்கு..”

‘கல்யாணம் ‘ என்ற வார்த்தையைக் கேட்டதும் காதில் நெருப்பு விழுந்தது போல் நிமிர்ந்தாள் அபி.

இவை அனைத்தையும் புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி.. அவன் நினைத்தது போலவே அவளும் நடந்துக் கொண்டிருந்தாள்..

வாசலில் ஆரவாரம் கேட்டு வாசல்பக்கம் நோக்கினாள் அபி. ‘ஹாப்பி பர்த்டே அபி அக்கா’ ஆனந்த கூவலோடு அபியை நோக்கி அழகிய இளம் தென்றலாக வந்துக் கொண்டிருந்தாள் தியா. பிரேமாவின் ஒன்று விட்ட தங்கையின் ஒரே செல்ல புதல்வி. இருவரும் சகோதிரிகள் என்பதைவிட உயிர்த் தோழிகள் என்று கூறலாம்.. விடுமுறை என்றால் எல்லோரும் சுற்றுலா செல்வார்கள். நிறைய சொந்தங்களின் வீட்டிற்கு  சென்று வருவார்கள். ஆனால், தியா விடுமுறை விட்டால் சோலைபுரம் வந்துவிடுவாள்.. சுற்றுலா தலம், மற்றும் சொந்தங்களின் வீடு என்று எதிலுமே நாட்டம் இல்லை அவளுக்கு.. எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவள் பெரியம்மாவின் விடு தான் என்றும் அவளுக்கு பிடித்த சுற்றுலா தலம், சொந்தங்கள் வீடு எல்லாமும் ..

“ஹாப்பி பர்த்டே அக்கா.....” அபியை கட்டிக் கொண்டு மீண்டும்  வாழ்த்து கூறினாள் தியா.

யாராகி மாடிப் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தான் விஷ்ணு. ‘அட யாருடா அது, நம்ம அண்ணி பக்கத்துல,’ யோசித்தவாரே கிழே இறங்கி வந்தவன் மயங்காத குறை தான்.

“என்ன விஷ்ணு.. இதுக்கு முன்னாள் தியாவைப் பார்த்ததேயில்லையா?.. ஏன் அப்படி பார்க்கிறாய்?..” கேட்டார் பிரேமா..

“ஒன்னுமில்லை அத்தை.. திடீர்னு ‘தானே‘ புயல் தாக்கின மாறி இருந்துச்சு...” சமாளித்தவாறு பதில் கூறினான் விஷ்ணு..

“இருக்கும் இருக்கும்......”

தியாவை தாவணியில் பார்க்கவும் விஷ்விற்கு உள்ளுக்குள் என்னமோ செய்தது... ஏனோ தியா அவனுக்கு புதிதாக தெரிந்தாள்...

‘போகிறப் போக்கை பார்த்தாள் எனக்கு இவளை பிடித்து விடும் போல் இருக்கே... ஹ்ம்ம் நடப்பதை யாரால் தடுக்க முடியும்...’ எண்ணியபடி அண்ணியை நோக்கினான் ..

“அண்ணி செம அழகா இருக்கிங்க... என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறது “ என்று பிரேமாவின் ஸ்டைலில் சொன்னான்..

“டேய் ... உன்னை ... என் அம்மாவையே கிண்டல் பண்ணுகிறாயா? உன்னை ..”என்று துரத்த எத்தனித்தாள். “அண்ணி பார்த்து புடவை கட்டியிருக்கிறீர்கள்...” என்ற விஷ்ணுவின் எச்சரிக்கைக்கு பின் அமைதிக்காத்தாள்...

இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தியாவிற்கு ஹரியையும், சுபாவையும் அறிமுகம் செய்து வைத்தாள் அபி..

புன்னகை பரிமாற்றத்திற்கு பிறகு தியா அத்தையிடம் ஓடினாள்.. பின் நேரே அபியின் அறைக்கு சென்று சிறிது நேர ஆராய்ச்சிக்கு பின் கையில் சில புடவைகளுடன் வந்தாள்...

வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு இனிப்பு கொடுக்க சென்றாள் அபி... அவளுடன் விஷ்ணுவும் சென்றான்....

சுபாவை அழைத்த பிரேமா, கையில் தியாக் கொண்டுவந்த புடவைகளைக் கொடுத்து எது பிடித்திருகிறது என்று கேட்டார்.. அவளும் சிறிது நேர ஆராய்ச்சிக்கு பின் ஒரு புடவையை தேர்வு செய்தாள்.. பிரேமாவும், தியாவும் சிரித்துக் கொண்டே “நாங்களும் அதைத் தான் தேர்வு செய்தோம்..”

“ஆனால் எதற்கு அத்தை..” ஹரியும் விஷ்ணுவும் அவளை அத்தை என்று அழைப்பதை பார்த்து அவளும் அப்படியே அழைத்தாள்.. பிரேமாவும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்..

“உனக்கு தான் சுபி... எங்கே இதை கட்டிக்கொண்டு வா பார்ப்போம்...”

“எனக்கு வேண்டாமே அத்தை..”

“அதில்லை சுபி... நாம் எல்லோரும் இப்பொழுது கோவிலுக்கு போகிறோம்... அதனால் தான் உன்னை கட்டச் சொன்னேன்...”

“ஓ... அப்படியா?... “ என்று நெளிந்துக் கொண்டிருந்தாள் சுபா... “என்னாச்சு சுபா?....” பல சினுங்களுக்குகிடையே அவளுக்கு புடவை கட்டிவிட்டு அலங்காரமும் முடித்து கோவிலுக்கு கிளம்பினர்...

ந்தியா என்றாலே அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. முக்கியமாக இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. இத்தனை நாட்களாய் இந்தியாவின் பிரபல கிராமங்களை கூகுள் இமேஜஸிலும், சில பிரபல இந்திய புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த அவளுக்கு இன்று கோவில் போகும் வழியில் இருந்த வயல்களும், அருவிகளும், ஆறுகளும், கிராமத்திற்கு நெருக்கமாக இருந்த மலைகளும் பார்பதற்கு குளிர்ச்சியாகவும் ஓர் புதிய அனுபவமாகவும் இருந்தது.. சீக்கிரமே கோவிலை அடைந்தார் போல் உணர்ந்தாள்.. அப்பொழுதே, பாலாவிடம்

“இந்த ஊர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது மாமா.. ஆனால், ஒரே ஒரு குறை இத்தனை அழகான கிராமத்தை சுற்றிப் பார்க்க முடியவில்லை என்பது தான் அது.....”

“அட, இவ்வளவு தானா.. நாளை முதல் நீ இந்த கிராமத்தை சுற்றிப் பார்க்க போகிறாய்... என்ன சந்தோசமா?....” அவளது தலையை தடவி விட்டு கோவிலுக்குள் சென்றார்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.