(Reading time: 10 - 20 minutes)

கோவில் நல்ல பரந்துவிரிந்திருந்தது.. திருவிழா நெருங்குவதால் கோவிலுக்கு முன் கடைகள் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது... தெருக்கூத்துக்கான மேடைகளும் ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டிருந்தது...வண்ண விளக்குகள் பொருத்துவதற்காக ஆட்கள் வந்து வயரிங் வேலை  செய்துக் கொண்டிருந்தார்கள்.. மற்றும் விழா நடக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைச்சபையிலிருந்து நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, அதற்கான கலர் பானர்கள் வைக்கப்பட்டிருந்தது... கோவிலுக்கு சற்று தொலைவில் சில பேர் சேர்ந்து கோவில் தேரை பழுதுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. அதாவது தேரை புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள்.. இவை அனைத்தையும் பார்த்த சுபா திருவிழாவை எதிர்ப்பார்த்து கொண்டிருந்தாள்.. இவற்றையெல்லாம் முதன்முறையாக வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுபா.. பிரமாண்டமான வாசல், வானுயர்ந்த கோபுரம், சுகமானக் காற்று.. எல்லாமும் பிடித்திருந்தது... அதே சமயம் இவற்றையெல்லாம் இத்தனை வருடம் இழந்திருக்கிறோம் வருத்தப்பட்டாள்... பாவம் வருங்காலத்தைப் பற்றி அறியாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள்...

Neerum neruppumதே சமயம் ரவி தன் தாயையும், தமக்கையோடு சோலைபுரம் கோவிலில் சுபாவிற்காக காத்துக் கொண்டிருந்தான்...

கோவில் குருக்கள் வசலிற்கே வந்து வரவேற்றார்... இந்த செய்கை அபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை... பின்பு சொல்லிக்கொள்ளலாம் என்று கோவிலுக்குள் செல்ல எத்தனித்தாள்.. சுபாவின் மனநிலையில் தான் ஹரியும்.. இத்தனை வருடம் இழந்ததை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்... அதே சமயம் அபியின் அருகாமையால் அவனது மனம் கட்டுப்பாட்டை இழந்துக் கொண்டிருந்தது... அவர்களுக்கிடையே ஒரு மெல்லிய ஊடல் கலந்த காதல் இருப்பதை உணர்ந்தனர்...

கிலம் காக்கும் ஆதிபாரசக்தி தெய்வத்தை வணங்கி பின்னர் பால், தயிர், பழம், குங்குமம், மஞ்சள், சந்தனம்,, திருநீர், இளநீர் முதலியவற்றில் அபிஷேகம் செய்து ஸ்வர்ண அலங்காரத்தில் பார்த்த பொழுது அங்கிருந்த அனைவருமே பரவசநிலையில் இருந்தனர்.. இவற்றை ஒரு சின்ன சிரிப்புடன் அங்கிருந்த அம்மன் பார்த்துக்கொண்டிருந்தார்.. ‘இதற்கே இவர்கள் இப்படி பரவசம் அடைந்தால், நான் நடத்த போகும் லீலைகளைக் கண்டால் இன்னும் எத்தனை பரவசம் அடைவார்கள்?... ‘ இவர்களின் பரவசநிலையை குறித்து அம்பாள் சொன்னது அந்த மனிதரின் காதுகளில் விழுந்திருக்கும், அதனால் தானோ என்னமோ உடனே சிரித்து விட்டார்... மனதில் ‘ நீ நடத்து தாயே...’ என்று சொல்லிகொண்டார்..

பழக்கப்பட்ட சிரிப்பு சத்தம் கேட்கவும் அங்கிருந்த அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.. அவரைக் கண்டதும் அபி துள்ளி குதித்துக் கொண்டு ஆசிர்வாதம் வாங்க அருகில் சென்றாள்.. அவரும் அனைத்து சௌபகியங்களும் கிட்டும் என்று வாழ்த்தினார்... பாலாவும் பிரேமாவும் ஆனந்தத்தில் திளைத்தனர்.. அவள் பிறந்தது முதல் ஒவ்வொரு பிறந்தநாளிற்கும் தவறாமல் வந்து வாழ்த்துபவர் ஆயிற்றே!... திளைக்காமல் இருக்குமா?.... அங்கிருந்த புதியவர்களுக்கு அந்த மகா புனிதரை அறிமுகம் செய்து வைத்தார் பாலா.. பின் அவர் அபியின் ஒவ்வொரு பிறந்தநாளிர்க்கும் வந்து வாழ்த்துவார் என்றதும் ஹரிக்கு ஒரு சந்தேகமும் சுபாவிற்கு சந்தோசமும் உண்டானது...

ஹரியின் முகத்தை வைத்தே அவன் என்ன நினைத்தான் என்று கண்டுக்கொண்டார் அந்த மகாமுனிவர்... அவனை தனியே அழைத்து சென்று,

“உன் தாய் சுகமா ஹரி “ என்று கேட்டார்...

இத்தனை நாட்கள் பழக்கம் மாமா இவருக்கு சொல்லியிருப்பார் என்று நினைத்துகொண்டு “அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் “ என்று பதில் அழித்தான்...

அவருக்கு தெரியும் அவனுக்கு தெய்வம்,கோவில் இதிலெல்லாம் நாட்டம் இல்லையென்று, மற்றவர் விருப்பத்தை மதித்தே கோவிலுக்கு வந்திருந்தான்..

“ம்ம்... நீ இத்தனை வருடம் இழந்த எதையும் திரும்ப பெறமுடியாது.. ஆனால், இனி நீ எதையும் இழக்க போவதில்லை...”

கவிதை போல் சொன்னவரை கூர்ந்து நோக்கினான்.. அவனது இந்த செய்கையால் அவருக்கு சிரிப்பு வந்தது...

சிரித்துக் கொண்டே “நீ நம்பலாம்.. உன் திட்டம் நிச்சயம் வெற்றி அடையும்...”

அதிர்ந்தே விட்டான் ஹரி... ‘என் திட்டம்.. அது இவருக்கெப்படி தெரியும்...’ நினைத்ததை கேட்டும் விட்டான்...

அவர் அதற்கும் சிரித்து வைத்தார்...” இதற்கே இப்படி வியந்தால் எப்படி?...”

“உங்களுக்கு எப்படி தெரியும் “

“எனக்கு உன் திட்டமும் தெரியும், அது எப்போது நடக்கும் என்றும் தெரியும்.. இதையெல்லாம் நீ செய்வதாய் நினைத்துக் கொண்டிருக்கிறாய்.. செய்வதெல்லாம் உன்னுள் இருக்கும் அபியின் பக்தியின் சக்தி தான்”...மேலும் தொடர்ந்தார்..

“அபி பிறக்கும் பொழுது உனக்கு சரியாக வயது இரண்டு... அப்பொழுதே இந்த எதிர்காலம் எனக்கு தெரிந்து விட்டது.. தெரிந்ததனால் தான் நான் அவளை காண வந்தேன்... “

“ஆனால், இதெல்லாம் எப்படி சாத்தியம், உங்களுக்கெப்படி தெரியும்?... நீங்கள் யார்?...”

சிரித்துக்கொண்டே “நான் ஒரு சாதாரண ஆன்மா மட்டுமே.. இப்பிறவி எனக்கு மனித பிறவி... போதுமா என்னை பற்றிய விளக்கம்...” என்று சொல்லி அவனை மீண்டும் அதிர வைத்தார்...

“நான் சித்தர்களின் பிறப்பிடமான சிவனின் திருவடியான திருவண்ணாமலையில் தியானத்தில் இருந்த பொழுது பார்வதி தேவியின் இடதுக்கை அம்சமான மேல்மலையனூரிலிருந்து எனக்கொரு உத்தரவு வந்தது... உத்தரவு என்னவென்றால் உடனடியாக சோலைபுரம் சென்று அன்றே இத்திருபூமியில் அவதரித்திருந்த அபியை ஆசிர்வதிக்க வேண்டுமென்று.... பின்பு என் தியானசக்தியால் ஏன் எனக்கு இந்த உத்தரவு வந்தது மற்றும் இப்படி ஒரு மகான் பிறந்த தினமே வந்து ஆசீர்வதிக்கும் அளவிற்கு அவள் வருங்காலத்தில் என்ன நிகழ்த்த போகிறாள் என்றும் அறிந்துக்கொண்டேன்...அறிந்ததும், உடனே சோலைபுரம் நோக்கி பயணித்தேன்.. அதன்பின் அவளது ஒவ்வொரு பிறந்தநாளிற்கும் அவளை சோலைபுரம் வந்து ஆசிர்வதிக்க சொல்லி எனக்கு மலையனூரில் இருந்து உத்தரவு வரும்.. நானும் உடனே சோலைபுரம் வந்து அவளை ஆசிர்வதிப்பேன்... “

எதோ விந்தையாய் இருந்தது ஹரிக்கு..

“அப்படியென்றால் எங்கள் எதிர்காலம் பற்றியும் அறிவீர்களா?...”

“கண்டிப்பாக...  அபி தான் உன் மனைவி..உன்னால் தான் அவள் அவளது பிறவிப் பயனை அறியப்போகிறாள்... இனிமேல் தான் உனக்கு ஆச்சர்யமாகவும் , அதிசயமாகவும், விந்தையுமாக இருக்கும்.. உனக்கு மட்டும் இல்லை.. அவளுக்கும் தான்... அவள் ஒரு சிறப்பான மகத்துவமான ஒரு செயலை செய்ய போகிறாள்.. தெரிந்தோ தெரியாமலோ நீ அதற்கு உறுதுணையாய் இருக்க போகிறாய்... இப்போதைக்கு உனக்கு இது மட்டும் தெரிந்தால் போதும்...சரி நான் கிளன்ப வேண்டும்... வரட்டுமா?...” என்று விறு விறு வென்று வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார்..... 

Go to Episode # 05

Go to Episode # 07

தொடர்ந்து பாயும்.......

{kunena_discuss:685}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.