03. ஆசை ஆசையாய் - அனிதா S

“என்ன தான் நெனச்சுகிட்டு இருக்க நீ மனசுல, முன்னாடி இருந்த ராதா இல்ல நீ, எங்க எல்லாரையும் கஷ்டப்படுதுறது உனக்கு நல்லா இருக்கா, உனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரலாம்ன்னு நெனச்சா, நீ இல்ல நான் வீணா தான் போவேனு இருக்கியா, பதில சொல்லுடி, அவனோட தான் போகனும்னா போய்ரு அப்படியே, ஒன்னும் செய்ய மாட்டோம் உனக்கு" என்றார் ராதாவின் அம்மா ராதாவிடம்.
“அதெல்லாம் என் மனசுல ஒன்னும் இல்ல, உங்கள மீறி நான் எங்கயும் போக மாட்டேன், இதை நான் ஆரம்பதுலயே சொல்லிட்டேன், மறுபடி மறுபடி சந்தேகமா கேக்காதிங்க" என்றாள் ராதா உள்ளுக்குள் தாங்காத வேதனையுடன்.
பிரிவின் பிறகு இரண்டு தடவை குறுந்தகவல் மூலம் பேசினாள் ராதா கிரிஷ்னாவிடம்.
“கிரிஷ்னா நல்லா இருக்கியா..?"
“இருக்கேன் ஏதோ...சாப்ட்டியா..?"
“ம்ம் சாப்டேன்...நீ சாப்ட்டியா..?"
“ம்ம்..."
“உங்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமானு தெரியல, நீ இல்லாம நான் இருந்துருவேனானு தெரியல, உன்ன தொந்தரவு பண்றேன்ல நான், மன்னிச்சுருடா.."
“அதெல்லாம் இல்ல, நான் எப்படி இருக்கேனு உனக்கு தெரியுமா ராதா.."
“தெரியும், நீயும் என்ன மாதிரி தான இருப்ப.."
“ம்ம்"
“உன் கூட வந்துறவா நா"
“சரி வா"
“நா சீரியஸா கேக்குறேன்"
“உன் அம்மா அப்பா சந்தோஷமா சம்மதிச்சா மட்டும் வா, அவங்கள கஷ்டப்படுத்திட்டு வேணாம்"
“ம்ம், அப்போ என்ன தான் பண்ண"
“ஒன்னும் பண்ண வேணாம், அம்மா அப்பா சொல்றத கேளு, நடக்குறது நடக்கும்"
“ம்ம் சரி"
இது தான் அவர்கள் கடைசியாக பேசியது... அம்மா அப்பாவிற்காக தான் தங்களின் காதலை தியாகம் செய்தார்கள் என்பது அவளின் அம்மா அப்பாவிற்கு புரியவில்லை... கிரிஷ்னா மனதில் துளி கூட நம்பிக்கை இருந்ததாக ராதாவுக்கு தெரியவில்லை, அதனால் இனி கிரிஷ்னாவிடம் பேசி எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்தாள்... ஆனால் ராதா மனதில் முழு நம்பிக்கை இருந்தது.
ராதா அப்படி கூறிய பிறகு, ரோஹித் வனிதாவிடம் பேச ஆரம்பித்தான், வனிதா ரோஹித்தின் பள்ளி தோழி.. அப்பொழுதிலிருந்தே ரோஹித்தை காதலித்து வந்தாள்... வனிதாவின் காதல் ரோஹித்திற்கும் தெரியும்.. வனிதா கூறியிருந்தாள் ரோஹித்திடம்.. அவள் கூறும் சமயத்தில் ரோஹித் ராதா திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது... அதை கூறி மறுத்து விட்டான்.. ஆனால் அவளிடம் பேசுவதை தவிர்க்கவில்லை... சிறிது காலத்திற்கு பிறகு ராதா சரியாக பேசுவதை நிறுத்திய தருணம், மீண்டும் வனிதாவிடம் பேச ஆரம்பித்தான்...
அவளின் புகைப்படம் அனுப்ப சொன்னான்.. அவனின் புகைப்படத்தை அவள் கேட்டதால் அவளுக்கு அனுப்பினான்... அவர்கள் இருவரும் சிட்டியில் வளர்ந்ததால் இது ஒரு பெரிய விஷயமில்லை என்றாலும் அவன் பேச்சில் சமாளிப்பு இருந்தது, அவள் தன்னை விட்டு போவதையும் விரும்பவில்லை.... வனிதா தன் காதலை இன்னும் மறக்கவில்லை என்று கூறினாள்.... அதற்கு ரோஹித்,
“நீ வேற நல்ல பையனா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ" என்றான்..
இப்படியே தொடர்ந்துகொண்டிருந்தது.... இவை அனைத்தும் ராதாவிற்கும் தெரியும் வனிதா மூலம்.... வனிதா ரோஹித்தின் மூலம் ராதாவிற்கு அறிமுகம் என்றாலும் இருவரும் நல்ல தோழிகள்... ஆனால் ராதாவும் வனிதாவும் தற்போது தொடர்பில் இருப்பது ரோஹித்திற்கு தெரியாது..
ராதா ஒரு முடிவுக்கு வந்தாள்... அவள் லட்சியத்திற்கும் காதல் கல்யாணத்திற்கும் ஒத்து வராது என்று... ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது மட்டும் தான் அவள் மனதில்.... அதற்காக முயற்சி செய்ய தொடங்கினாள்...
ஆனால் கிரிஷாவின் மீது அவள் கொண்ட காதலை மறக்க முடியவில்லை... தவித்துக் கொண்டிருந்தாள்.. கிரிஷ்னாவும் செய்வதறியாமல் ராதாவை தவிர்த்தான். ஒருவரிடம் ஒருவர் பேசுவதை தவிர்த்தனர்.
இயல்பு நிலைக்கு திரும்ப வெகு நாட்கள் ஆகும் போல இருந்தது.....
வேறு வேறு வழியில் சென்றனர்... காலங்கள் சென்றது...
இவை அனைத்தும் ராமிற்கும் தெரியும்....காதல் என்பதே தனது வாழ்க்கையில் கிடையாது என்று உறுதியாக இருந்தான். ராமும் கிரிஷ்னாவும் சேர்ந்து வேலை தேட ஆரம்பித்தனர்.. ஒரு பக்கம் ராதாவும் அதே பணியில் ஈடுபட்டிருந்தாள்...
இந்த சூழலில் ஒரு வார காலம் வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது கல்லூரியில்... அங்கு சென்றால் இருவரும் சந்திக்க நேரிடும் என்ற நெருடல் இருந்தாலும் ராதா உறுதியாக இருந்தாள் சமாளிக்க..
அதே வாரத்தில் ஒரு நாள் அவர்கள் அனைவருக்கும் இண்டர்வியு இருந்தது வேறு கல்லூரியில்... மீண்டும் நண்பர்கள் அனைவரும் சந்தித்தனர்.... மகிழ்ச்சியாக இருந்தனர்.. இண்டர்வியுவில் செலக்ட் ஆவதற்கு முழு முயற்சி செய்தாள் ராதா.... ராதாவின் விழிகள் தேடின கிரிஷ்னாவை... கட்டுப்படுத்திக் கொண்டாள்.. கிரிஷ்னா வந்தானா இல்லையா என்று தெரிந்து கொள்ள முயற்சித்தாள்....
தொடரும்...
Next episode will be published on 19th May. This story is updated once in two weeks on Mondays
{kunena_discuss:699}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.