(Reading time: 12 - 24 minutes)

09. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

பொம்முவும் கோக்கியும் சிறிது  தூரத்தில் உள்ள  மரணக்கிணறு வந்து அடைந்தார்கள். அது ஒரு பத்து யானைகள் ஒரே நேரத்தில் இறங்கும் அளவுக்கு அகலம் கொண்ட கிணறு. அந்த கிணற்றில் இருந்து நீர் பாம்புகள் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தன. நீரின் சத்தம் பயங்கரமாக அந்த கிணற்றில் இருந்து வந்துக் கொண்டிருந்தது. பொம்மு தன் வரைப்படத்தை பார்த்தாள். அவள் தேடி வந்த அந்த பானை அந்த கிணறு இருக்கும் இடத்தில்தான் உள்ளது என வரைப்படம் தெரிவித்தது.

Bommuvin thedal“நான் நினைச்ச மாதிரியே பானை அந்த கிணருல தான் இருக்கு” – பொம்மு மெல்ல

“வேணாம் பொம்மு...நம்ம போய்டலாம்....அதான் மூணு அமிர்தப்பானை இருக்குனு சொன்னீங்களே...இந்த ஒன்னை மட்டும் விட்டுட்டு நம்ம வேற பானைகளை தேடுவோம்.” – கோக்கி நடுக்கத்தில்.

“பேசாம வா!” – பொம்மு கிணற்றை நோக்கி நடந்தாள்.

பொம்மு அந்த கிணற்றுக்குள் அடியில் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்திலேயே வேகமாக அந்த கிணற்றை நெருங்கினாள். அவள் பின்னே பயத்தோடு கோக்கியும் வந்தது. அவர்களை கடந்து சில நீர் பாம்புகள் சென்று கொண்டிருந்தன. அந்த கிணற்றை சுற்றி எங்கும் ஈரம் இருந்தது.

திடிரென அந்த கிணற்றின் நடுப்பக்கத்தில் இருந்து ஒரு பெண் மேலே வந்தாள். அவள் நீராலான பெண். அவள் மிகவும் கோவமாக இருந்தாள்.

“நில்லு அங்கே! எவ்வளோ தைரியம் இருந்தா இந்த கிணறு பக்கம் வருவ?” – அந்த நீர்ப்பெண்

பொம்மு அதிர்ச்சியில் அங்கேயே நிற்க கோக்கியோ பயத்தில் பொம்முவின் தலைக்கு மேல் ஏறிக்கொண்டது.

“ஏய் கோக்கி கிழே இறங்கு!” என்று பொம்மு அதை கோக்கியை கிழே தள்ளிவிட்டாள்.

பொம்மு அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்தாள்.

“”நான் ஒரு பானையை தேடி வந்தேன்! அது அந்த கிணறுலதான் இருக்குது! அது எனக்கு வேணும்!” – பொம்மு.

“இந்த வார்த்தைகளை கேட்டு ரொம்ப நாளாச்சு..... இப்படி கிணற்றை தேடி வந்த நிறைய பேர் அவங்க உயிரை விட்டுட்டு போறதுதான் இங்க வழக்கம்......” என்று சொல்லி பயங்கரமாக சிரித்தாள் அந்த நீர்ப்பெண்.

பொம்முவும் கோக்கியும் பயத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“உங்க ரெண்டுப்பேர்ல யாரு என் கிணத்துக்குள்ள நுழைய நினைச்சாலும்...நான் கேக்குற புதிர்களுக்கு நீ சரியா பதில் சொல்லணும்!...இல்லனா உங்களை கிணறுக்குள்ள அனுமதிக்க மாட்டேன்.” – நீர்ப்பெண்.

“சரி!” – பொம்மு மெல்ல

“நான் கேக்குற புதிர்கள் உன்னை  சம்பந்தப்பட்டதை தான் கேட்பேன்....நான் எதை சம்பந்தபடுத்தி உன்னால் கண்டுபிடிக்க முடியாது” – நீர்ப்பெண்.

“சரி” – பொம்மு.

நீர்ப்பெண் புதிர்களை கேட்க தாயராகினாள். பொம்முவும் அந்த பெண் என்ன கேட்கபோகின்றாள் என்ற பயத்தில் இருந்தாள். நீர்ப்பெண் முதல் புதிரை கேட்க ஆரம்பித்தாள்.

எனக்கும் கைகள் உண்டு கால்கள் உண்டு! என்னை நீங்கள் அடித்தாலும் அணைத்தாலும் எனக்கு கவலை இல்லை....ஆனால் என்னை அழிக்க நினைத்தால் எனக்காக வருந்துவது குழந்தைகளே!....அது என்ன?” – நீர்ப்பெண் பாடியபடி.

பொம்முவும் கோக்கியும் குழம்ப ஆரம்பித்தனர். அந்த புதிருக்கான விடை அவர்களுக்கு தெரியவில்லை.

“ஒருவேளை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எதாவது இனிப்பாக இருக்குமோ?” – கோக்கி பொம்முவின் காதில்.

“இனிப்புக்கு கை கால்கள் கிடயாது கோக்கி!” – பொம்மு மெல்ல.

பொம்முவும் கோக்கி எவ்வளவோ யோசித்தும் ஒன்றும் அவர்களுக்கும் தோன்றவில்லை. பயத்தில் நடுங்க ஆரம்பித்தது கோக்கி.

“இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க பதில் வரலானா?....உங்களை நான் கொன்னுடுவேன்!” – நீர்ப்பெண்.

“பொம்மு பொம்மு! தயவு செய்து எதாவது யோசிங்க பொம்மு!.....நான் ஒரு குட்டிச்சாத்தான் என்னால எவ்வளோதான் யோசிக்க முடியும்?” – கோக்கி பயத்தில் குதித்தபடி.

“ஏய்....நான் மட்டும் என்ன மனுஷனா?....நானும் ஒரு பொம்மைதான்..எனக்கும் கொஞ்சம்தான் யோசிக்க வரும்!” – பொம்மு மெல்ல.

திடிரென பொம்முவுக்கு அவள் தற்போது கூறியதில் ஏதோ பதில் இருப்பது போல தோன்றியது. மீண்டும் அதை மனதில் கூறியபோது அவளுக்கு விடை தெரிந்தது. “பொம்மை” தான் அதற்கான விடை.

“கண்டுபிடிச்சிட்டேன்!.....அதுக்கான விடை பொம்மை!” – பொம்மு மெல்ல.

அந்த நீர்ப்பெண் மெல்ல தலையசைத்தாள். பொம்முவுக்கும் கோக்கிக்கும் சந்தோஷம். அவர்கள் கூறியது சரியான பதில்.

“சந்தோஷம்தான்.....அடுத்தது இரண்டாவது புதிர்......” – நீர்ப்பெண்.

உடனே பொம்மு மற்றும் கோக்கியின் முகத்தில் சிரிப்பு மறைந்தது.

எனது நிறம் வெள்ளை ஆனால் நான் மனிதனில்லை....நான் மனிதனை தொல்லை செய்ப விரும்புபவன் பயம் வந்தால்  தலைக்கு மேல் ஏறுபவன்!....அது என்ன?” – நீர்பபெண்.

“இது என்ன வித்தியாசமான புதிர்?” – பொம்மு புலம்பினாள்.

“ஒருவேளை பூண்டு வெள்ளை நிறத்தில்தான இருக்கும்.....அது மனிதன் இல்லையே?” – குட்டிச்சாத்தான்.

“ஆனால் பூண்டு மனிதனை தொல்லை செய்யாது பயந்தா யார் தலைக்கு மேலயும் ஏறாதே” – பொம்மு மெல்ல.

“அப்போ மாட்டிகிட்டோம்....பொம்மு இனி நாம சொர்கத்தில சந்திப்போம்!” என்று கோக்கி  பயத்தில் தாவி பொம்முவின் தலைக்கு மேல் அமர்ந்தது. பொம்மு மீண்டும் கோக்கியை தள்ளி விட்டாள்.

“முதல என் தலையில ஏறி தொல்ல பண்றத நிறுத்து கோக்கி....”- பொம்மு கத்தினாள்.

திடிரென பொம்முவுக்கு மீண்டும் ஏதோ விடை தெரிவது போல தோன்றியது. சட்டென பொம்மு கோக்கியை பார்த்தாள். கோக்கி நடுக்கத்தில் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தது. பொம்மு விடையை கண்டுபிடித்தாள்.

“எனக்கு விடை தெரியும்.....குட்டிச்சாத்தான்.” – பொம்மு உரக்க.

நீர்ப்பெண் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது. ஏனென்றால் பொம்முவின் விடை சரியானது. அந்த பெண் மீண்டும் தலையசைத்தவுடன் கோக்கி சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. ஆனால் பொம்முவுக்கு ஏதோ ஒன்று விளங்க ஆரம்பித்தது. அந்த நீர்ப்பெண் கேட்கும் ஒவ்வொரு புதிரும் போம்முவின் ஜென்மங்களை வைத்துதான் கேட்கிறாள் என்று பொம்முவுக்கு புரிய வந்தது.

“முன்றாவது புதிர்,,,,,,எனது குடும்பம் அத்தனையும் காட்டில் வெறியுடன் வாழ்ந்தாலும் நான் நாட்டில் நன்றியுடன் வாழ்பவன்.....அது என்ன?” – நீர்ப்பெண் வெறுப்புடன்.

பொம்மு அந்த புதிருக்கான விடையை உடனே கண்டுபிடித்தாள். ஏனேன்றால் அந்த புதிரும் பொம்முவின் ஜென்மங்களை சம்பந்தப்பட்ட ஒரு கேள்விதான்.  பொம்முவின் நான்காவது ஜென்மம் பைரவன் என்னும் நாய்தான்.

“நாய் தான் அதற்கான விடை” – பொம்மு தெளிவாக.

நீர்ப்பெண் மீண்டும் தலையசைத்தாள். ஆனால் அவள் முகத்தில் கோவம் இருந்தது.

“சரியான விடைதான்.....நான் கேட்கும் புதிர்கள் எதை சம்பந்தப்பட்டதுனு  நீ கண்டுபிடிசிட்டனு நினைக்கிறன்....கடைசி நான்காவது புதிர் கேக்குறேன்....” – நீர்ப்பெண்.

பொம்மு தயாராகினாள். கோக்கி சந்தோஷத்தில் இருந்தது.

எங்களை வாழவைக்கும் இந்த மரத்துக்கு வழியில்லை ஆனால் காற்று உண்டு.......எங்களுக்கு  உடல் இல்லை ஆனால் சக்தி உண்டு......அது என்ன?” – நீர்பெண்.

பொம்மு யோசித்தாள். அந்த புதிருக்கு விடை பொம்முவின் முன்றாவது ஜென்மம்மாக இருக்கலாம். ஆனால் பொம்முவுக்கு அவளின் மூன்றாவது ஜென்மம் என்னவென்று தெரியாதே.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.