(Reading time: 12 - 24 minutes)

னாலும் பொம்மு  அதற்கான விடையை கண்டுபிடித்தாள்.

“இதுக்கு விடை........மரக்கப்பலில் வாழும் ஆவிகள் ” – பொம்மு உரக்க.

அந்த நீர்ப்பெண் முகத்தில் இன்னும் கோபம் இருந்தது. பொம்மு தான் கூறியது தவறில்லை என்று எண்ணினாள். ஆனால் கோக்கியோ பயத்தில் மெல்ல நழுவுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது

“சரியான விடை.....” என்று நீர்ப்பெண் கத்தினாள். உடனே பொம்முவுக்கும் கோக்கிக்கும் ஒரே சந்தோஷம்தான்.

“உங்களில் ஒருவர் மட்டும் கிணறுக்குள்ள போகலாம்....” – நீர்ப்பெண்.

“என்னால் தண்ணிக்குள்ள நீந்தமுடியாது.....கோக்கி உன்னால் போக முடியுமே...” – பொம்மு.

“என்ன சொல்றீங்க நானா?...எனக்கு பயமா இருக்கு” – கோக்கி பயத்துடன்.

“பயப்படாத.....உனக்கு ஆபத்து வராம உன்னை பாத்துக்குறேன்....தயவுசெஞ்சு இதை மட்டும் செய்” – பொம்மு மெல்ல.

“ச...சரி...உங்களை நம்பிதான் போறேன்!” – கோக்கி பயத்துடன் . பொம்முவும் கோக்கியும் அந்த பெரிய கிணற்றின் பக்கம் வந்து உள்ளே கிழே எட்டி பார்த்தார்கள். அங்கே அடியில் நீரின் மேல் அந்த நீர்ப்பெண்ணால் கொல்லப்பட்ட மனிதர்களின் சடலங்கள் நிறைய நீரின் மேல் மிதந்துக்கொண்டிருந்தன.

“இங்க நிறைய சடலங்கள் இருக்கே” – பொம்மு அதிர்ச்சியில்.

“ஆம்.....அவங்க எல்லாருமே கிணறுக்குள்ளே உங்களை போல அமிர்தப்பானையை தேடி வந்தவங்கதான்....அவங்களும் புதிர்களுக்கு சரியான பதிலெல்லாம் சொன்னார்கள்....ஆனால் அவர்களில் யாருமே கிணறுக்குள் சென்று அமைதியா இல்ல...அதான் இப்படி இறந்துகிடக்காங்க” – நீர்ப்பெண்.

“என்ன சொல்றீங்க?” – பொம்மு அதிர்ச்சியாய்.

“கிணறுக்குள்ள யாரு போனாலும் சத்தம் போட கூடாது....அப்படி சத்தம் போட்டா.....நீர்ப்பாம்புகள் உங்களை தண்ணீரிலே முழுகடிச்சு கொன்னுடும்....ஏன்னா அதுங்களுக்கு தண்ணீர் சத்தம் மட்டும் தான் பிடிக்கும்” – நீர்ப்பெண்.

கோக்கிக்கு பயம் அதிகமானது. அங்கே அந்த நீரின் ஒரு மூலையில் ஒரு பானை மிதந்துக் கொண்டிருந்தது. அந்த பானைக்குள் எதோ மின்னும் நீர் இருந்தது. அதுதான் அமிர்தப்பானை.

“அதோ பார் அங்க இருக்கு அந்த அமிர்தப்பானை....பயப்படாம...முக்கியமா சத்தம் போடாம அந்த பானையை எடு.....போ” – பொம்மு மெல்ல.

கோக்கி நடுக்கத்துடன் கிணற்றில் குதித்தது. உள்ளே நீ பாம்புகள் இங்கயும் அங்கேயுமாக மிதந்துக் கொண்டு இருந்தன. அதனால் கோக்கியால் சரியாக நீந்த முடியவில்லை. பொம்மு கோக்கிக்கு அமிர்தப்பானை இருக்கும் திசையை சைகையாலே காட்டி வந்தாள், கோக்கியும் அவள் காட்டும் சைகைகளை புரிந்துகொண்டு அமிர்தப்பானையை இருக்கும் இடத்திருக்கு வந்தான். கோக்கி தாவி அந்த பானையை பிடிக்க நினைத்தான். ஆனால் முடியவில்லை. மீண்டும் பானையை பிடிக்க கோக்கி முயன்றது. ஆனால் முடியவில்லை. அப்போதுதான் கோக்கிக்கு உண்மை புரியவந்தது. அங்கே இருப்பது பானை இல்ல. அது கண்களுக்கு மட்டும் தெரியும் ஒரு மாயை.

அதிர்ச்சியுடன் மேலே போம்முவை பார்த்த கோக்கி “ இங்க இருக்கிறது பானை இல்ல....இது வெறும் மாயை” என்று கத்தியது.

பொம்முவுக்கு  அதிர்ச்சி. கோக்கி கத்தியதால் அங்கே நீர்ப்பாம்புகள் கலவரம். நடத்த ஆரம்பித்துவிட்டன.

“முட்டாள்...அந்த குட்டிச்சாத்தான் சத்தம் போட்டுச்சு...இனி அது சாகவேண்டியதான்” – நீர்ப்பெண் சாதரணமாக.

“என்ன இது?...அங்கே இருக்கிறது உண்மையான பானை இல்லையா?” – பொம்மு அதிர்ச்சியில் கத்தினாள்.

“....உண்மையான பானையை  ஷானுதா என்னும் ஒரு சூனியக்காரி பலவருடம் முன்னாடியே எடுத்திட்டாள்...அவள் ஏற்படுத்திய மாயைதான் அங்கே இருக்குது....” – நீர்ப்பெண்.

“இதை ஏன் என்கிட்டே சொல்லலை?” – பொம்மு கோபமாக.

“நீ கேட்கவே இல்லையே” – நீர்ப்பெண். திமிராக.

“ஆஆஆ! பொம்மு என்னை காப்பாத்துங்க!” என்று கிணற்றில் அடியில் கோக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. நீப்பாம்புகள் கோக்கியை சுற்றி வளைத்து கொல்ல முயன்றுக் கொண்டிருந்தன.

“எதாவது வழி சொல்லுங்க!” – பொம்மு.

“வழியே இல்லை.....இந்த கிணற்று தண்ணீர் மேலே வந்தாதான் அவனால் தப்பிக்க முடியும்” – நீர்ப்பெண்.

பொம்மு யோசித்தாள். என்ன செய்வது? எப்படி தண்ணீரை மேலே கொண்டு வருவது என்று அவள் சுற்றி பார்த்தபோது அவள் பின்னே சிறு தூரத்தில் ஏதோ இரண்டு உருவங்கள் வருவது தெரிந்தது. உடனே பொம்மு திரும்பி பார்த்தாள். அதுதான் சில நாட்களுக்கு முன் அரவிந்தும் பொம்முவும் துறவீகளை காப்பாற்ற ஏமாற்றி ஓட வைத்த அதே இரண்டு மலை அரக்கர்கள்.

“”ஏய் இது யாருனு தெரியுதா?...அன்னிக்கு ஒருநாள் நம்ம ரெண்டு பேருகிட்டையும் தானா வந்து ஒரு பொம்மையும் ஒரு பையனும் சிக்கினாங்களே...அதே பொம்மைதான் இது...இன்னைக்கு இந்த பொம்மை மட்டும் தனியா வந்து நம்மகிட்ட மாட்டிக்கிச்சு!” – முதல் அரக்கன்.

“நீங்க சொல்றது சரிதான்....ஆனா நான் உங்களுக்கு நிறைய மாமிசங்களை வச்சுருக்கேன்!” – பொம்மு. அவரசரமாக.

“என்ன சொல்ற...நிஜமாவா?...சரி அதெல்லாம் எங்க இருக்கு” – இரண்டாவது

“அதோ அந்த கிணத்துல தான் இருக்கு!” – பொம்மு கிணற்றை காட்டியபடி.

“வாடா போய் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு வருவோம்” என்று இரண்டு அரக்கர்களும் வேகமாக ஓடி அந்த கிணற்றில் குதித்தனர். உடனே நீரானது வேகமாக மேல வந்தது. அதில் கோக்கி தண்ணீரின் வேகத்தில் வேகமாக மேலே வந்தான். கிணறுக்குள் அரக்கர்கள் இருவரும் சடலங்களை அடித்து பிடித்து கொண்டு அள்ளின. கிணற்றில் இடமில்லாமல் தவிக்கும் நீர்பாம்புகள் எல்லாம் கிணற்றுக்கு வெளியே தப்பி சென்றன.

பொம்மு ஒடி சென்று தரையில் இருக்கும் கொக்கியை தூக்கினாள். கோக்கி எந்த காயமில்லாமல் உயிர் தப்பியது. எந்த பலனும் இல்லாமல் ஏமாற்றத்துடன் பொம்முவும் கோக்கியும் அந்த இடத்தை விட்டு செல்ல ஆரம்பித்தனர்.

து இரவு நேரம். நிலாயுகத்தின் எல்லையில் உள்ள கடற்கரை. பொம்முவும் கோக்கியும் நீண்ட தூரம் கடந்து அங்கே வந்தார்கள்.

“எல்லாமே வீனாபோச்சு!” – பொம்மு வெறுப்பாக.

“பரவாயில்ல விடுங்க நல்லவேளை...அந்த ரெண்டு அரக்கர்கள் அங்கே வந்தாங்க...இல்லனா நான் இறந்திருப்பேன்!” – கோக்கி.

“ரெண்டு அமிர்தப்பானையில ஒண்ணு அந்த ஷானுதா எடுத்திட்டாள்...இன்னும் இருக்கிற ஒண்ணு இருக்குமான்னு...சந்தேகமா இருக்கு!” – பொம்மு.வருத்தமாக.

“கண்டிப்பா இருக்கும் கவலைபடாதீங்க!” – கோக்கி.

அவர்கள் இருவரும் இருந்த களைப்புக்குதொப்பென அந்த கடற்கரை மணலில் விழுந்தார்கள். பொம்மு அந்த கருப்பு வானத்தையே பார்த்துகொண்டு இருந்தாள்.

“நீ அந்த நீர்ப்பெண் என்னை கேட்ட புதிர்களை நினைச்சுப் பாத்தியா?” – பொம்மு.

“நான் அதை நினைச்சு கூட பாக்க விரும்பலை....எனக்கு இன்னும் பயம் போகலை” – கோக்கி.

“நான் அதை சொல்ல வரலை.....அந்த நீர்ப்பெண் கேட்ட முதல் மூணு கேள்விகளும் என்னோட ஜென்மங்களை சம்பந்தப்படுத்தி கேட்டாள். ஆனா ....கடைசி கேள்வி?....அந்த புதிருக்கும் என் ஜென்மத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா?” – பொம்மு யோசித்தபடி.

பொம்மு மனதில் அந்த நான்காவது புதிரும் அவள் அதற்கான கூறிய பதிலும்தான் ஓடிக்கொண்டு இருந்தது.

“எனக்கு பசிக்குது....இப்பவே எதாவது சாப்பிடனும்” – கோக்கி

“எனக்கு பசிக்காது...ஆனா உனக்குசாப்பிடறது இங்க எதுவும் இல்லையே....மீன் பிடிக்கறதுக்குகூட தூண்டில் இல்லையே...” – பொம்மு

“ஐயோ...நான் என்ன பண்ணுவேன்...பசிக்குதே” – கோக்கி புலம்பியது

பொம்முவுக்கு கோகியின் வேதனையை கண்டால் கஷ்டமாக இருந்தது. உடனே எழுந்தாள்.

“சரி வா....எதாவது இங்க உனக்கு சாப்பிட கிடைக்குதான்னு பாப்போம்!” என்று பொம்மு எழுந்தாள். கோக்கி பசியில் துடித்தபடி அவளுடன் தேட கிளம்பியது, நீண்ட தூரம் அந்த கடற்கரை பக்கம் வந்தார்கள்.

திடிரென அங்கே ஒரு பெரிய பழைய மரக்கப்பல் கரையில் நிற்பதை அவர்கள் கண்டனர். பொம்முவும் கோக்கி மெல்ல அந்த கப்பலி நெருங்கி அந்த கப்பலை சிறிது நேரம் நோட்டமிட்டனர். அந்த கப்பலில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. அதனால் பொம்முவும் கோக்கியும் மெல்ல அந்த கப்பலின் ஒரு நுழைவாயில் வழியாக உள்ளே சென்றனர். உள்ள அலைகளால் மோதி வந்து கப்பலில் விழுந்த மீன்களி கண்டனர். உடனே கோக்கி அந்த மீன்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது. பொம்மு அந்த கப்பலை சுற்றி பார்க்க நினைத்தாள். அந்த கப்பலில் இருந்த எல்லா பொருளுமே பழையதுதான்.

அந்த பெரிய மரக்கப்பலில் நிறைய அறைகள் இருந்தது. பொம்மு  அந்த கப்பிலில் அந்த அறைகளின் பக்கம் வந்தாள்.. அங்கே யாருமில்லை என்று அவள் நினைத்தபோது அங்கே இருந்த அறைகளில் ஏதோ சத்தம் வந்தது. 

தொடரும்

Go to Bommuvin Thedal episode # 08

Go to Bommuvin Thedal episode # 10

{kunena_discuss:697}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.