(Reading time: 10 - 20 minutes)

04. என் இதய கீதம் - Parimala Kathir

"புவிக்கா நான் உங்களோட ஒரு இரண்டு நிமிடம் தனியா பேச முடியுமா ?"

"என்ன சீனியர் நீங்க, பெர்மிசன் எல்லாம் கேட்டுக்கிட்டு, நீங்க பேசுங்க நாங்க அப்பிடியே கிளாசுக்கு கிளம்புறம்." என்று புவிகாவை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு அபி காயாவை அழைத்துக் கொண்டு தமது வகுப்பறையை  நோக்கி சென்றனர்.

புவி அவர்களை முறைத்துப் பார்த்து விட்டு சுதனிடம் திரும்பி என்ன விஷயம்  என்று கேட்டாள்.

En ithaya geethamஅவர்களின் சம்பாசனை ஒரு சில நிமிடங்களில் நிறைவு  பெற்றது. அவள் அவனிடம் பைய் சொல்லிவிட்டு வகுப்பறையை நோக்கி செல்லலானாள்.

சுதன் அவள் சொன்ன ஒற்றை வார்த்தையில் அப்படியே இடிந்து போனான்.

புவி ஓட்டமும் நடையுமாக வகுப்பறைக்குள் நுழைந்தாள்.  

"ஸ்... அப்பாடா நல்ல காலம் அந்த பென்சில் மீசை பிரின்சி வாரதுக்குள்ள வந்திட்டன் இல்லையென்றால் பெரிய லெக்சரே எடுத்து சாகடிச்சிருப்பான் அந்த வழுக்க மண்டை ."

"அடியே ஆத்தா...   அந்த வழுக்கு மரத்துக்கு ரெலிபோன் வந்ததால   நீ தப்பிச்ச இல்லன்னு வச்சுக்கோ " என்றாள் காயா.

"ஏய் அத விடுடி,  நம்ப சீனியர் தனியா அழைச்சிட்டு போய் என்ன பேசினார்? ஆ......  ஆ...... சும்மா சொல்லுடி..."

என்று அபியும் காயாவும் புவியின் இரு பக்கவாட்டிலும் அமர்ந்து கொண்டு அவளை இடித்து இடித்து கேட்டனர்.

"ப்பா.... இரண்டு கையும் வலிக்குதடி இடிக்காதிங்கடி பிளீஸ் . 

உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் சொல்லணும் என்று தயங்கி தயங்கி நின்றார் எதோ ஹெல்ப் வேணும் போல அது தான் கேட்க தயங்குறார்  என்று நினைத்து கேட்டேன். அதெல்லாம் இல்ல பெல் அடிச்சிரிச்சு நீங்க கிளாசுக்கு போங்க நான் அப்புறமா உங்ககூட பேசறேன் என்று கிளம்பிட்டார் உங்க சீ.....னி....யர்." போதுமா இனியாவது இடிக்கிறதை நிறுத்துங்கடி நியமாவே வலிக்குது."

அபியும் காயாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். காயா எதோ சொல்ல முனைகையில் ப்ரின்சிப்பால் அங்கு வந்து சேர்ந்தார்.

" ன்டா சுதன் புவிகாவை மீற் பண்ண போய் வண் அவர்க்கும் மேல ஆகுது இன்னும் அவனை காணமேடா?"

என்றான் சுதனின் நெருங்கிய நண்பன் வாசு.

"அவள் இவனை பார்த்து சிரிச்சாலே மச்சான் குஷி ஆயிடுவான் அவன் இப்போ லவ்வ சொல்ல போயிருக்கான் அவ ஒகே சொல்லிருப்பா இவன் யாளி மூட்டில் எங்காவது மரத்துக்கு கீழ இருந்து டுயட் பாடிட்டிருப்பான் வா போய் பாக்கலாம்."  என்றான் தாஸ்

 அவனை எங்கு தேடியும் காணாததால் புவியை நாடிச் சென்றனர் சுதனின் நண்பர்கள் . அங்கு ப்ரின்சியை கண்டதும் அந்த பக்கமே எட்டிப் பாராமல் கல்லூரியின் நுழைவாயிலை வந்தடைந்தனர். அங்கு சுதனது சைக்கிளைக் காணவில்லை என்றதும் அவன் கல்லூரியில் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

"பிகரு கூட இருந்தால் தான் தி....க்...க்...க்... பிரன்டையே சுத்தல்ல விடுவாங்க நம்ப பசங்க...    ஆனா நம்ப நண்பன் வ்விகர உஷார் பண்ணினதும் நம்பலை கழட்டியே விட்டிட்டாண்டா?" என்றான் தாஸ் .

" தா...ஸு...... பயல் இப்ப தான் லவ் மூடுக்கே வந்திருக்கான் கொஞ்ச நாள் அனுபவிக்கட்டுமே" என்றான் இன்னுமொரு நண்பன் வரதன்.

அவன் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்துக் கொண்டே தமது வகுப்பறையை நாடிச் சென்றனர்.

ன்று தமது வகுப்பில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பேசியபடியே ஸ்கூட்டி ஸ்ராண்டிற்கு வந்தனர்  புவி மற்றும் அவளின் இரு தோழியர்.

"ஒ..ஓ... தனாண்ணா ன்னும் வண்டியை கொண்டு வரல போல இருக்கே? இப்ப எப்பிடி போறது? ம்...... அப்பாக்கு போன் செய்யலாமா? " எமன்று புவி தனக்குள் யோசித்து கொண்டு இருக்கும் போது தனா காரோடு அவள் அருகே வந்து நின்றான்.

"என்னாச்சண்ணா? என்னோட வண்டி இன்னும் ரெடி ஆகலயா?"

"இல்லம்மா இன்னும் ஒருவாரம் ஆகுமாம். நீங்க காரில ஏறுங்க."

"ம்  ஓகேடி பாய் மண்டே மீற் பண்ணுவம்" 

"பா.....ய்...." என்று அபியும் காயாவும் புவிக்கு பாய் சொல்லி பிரியாவிடை கொடுத்த பின் காயா அபியின் வண்டியில் ஏறி  புறப்பட்டனர்.

வீட்டிற்கு வந்த புவி தாய் லக்ஷ்மி கொடுத்த தேனீரையும் வடையையும் உள்ளே தள்ளி விட்டு தந்தையின் வரவிற்காக காத்திருந்தாள்.  

"ம்மா..... அப்பா வந்தாச்சு சீக்கிரம் கிளம்புங்க லேற் ஆகுது ம்..... ஹரி அப்....ஹரி அப்"  

"ஏய் என்னடி இது சின்ன பசங்க போல கிடந்து குதிக்கிற? இப்ப தானே வந்திருக்கறார் கை கால் கழுவி கொஞ்சம் கொதி தண்ணியை வயித்துக் குள்ள ஊத்தட்டும் அதுவரை பேசாமலிரு."

புவியின் முகம் சோர்ந்து விட்டது.  

"ஏம்மா பிள்ள எவளவு சந்தோஷமாய் இருந்திச்சு இப்ப பார் முகமே வாடி போச்சு. தங்கம் நீ ரெடியா நாம கிளம்புவமா?"  

புவி உடனே முக மலர்ந்தாள்

"ஆனா நீங்க இன்னும் ரீ குடிக்கலயே அப்பா" 

"இல்லடா நான் இப்ப தான் ஆப்பீசில குடிச்சனான் வாங்க போலாம்"

மூவரும் சந்தோஷமாக கிளம்பி சென்று விட்டனர் ஜில்லா படத்துக்கு.

ன்று புதன் கிழமை  அதி காலை மூன்று மணி இருக்கும் ஒரு குட்டி மாளிகை போன்று தோற்றம் அளித்த அபி வீட்டின் முன் கால் ராக்ஸி ஒன்று வந்து நின்றது.  அதிலிருந்து இறங்கிய ஒருவன் முகத்தினை மறைக்க குள்ளா கப் அணிந்திருந்தான். மதில் ஏறிக்குதித்து விட்டின் பல்கனி வழியாக ஏறி மாடியில் உள்ள அஸ்வின் அறைக்குள் புகுந்தான். 

தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிக்க எழுந்த அபி வோட்டர் பாட்டில் கால் ஆக இருந்ததால்   கிச்சினுக்கு சென்று கொண்டிருந்த போது அஸ்வின் அறையில் அரவம் கேட்டு  தனது தாயையும் தந்தையையும் அழைத்து கொண்டு அஸ்வின் அறையை நாடி சென்றாள்.

அங்கு சில பொருட்களை தேடி கொண்டிருந்தவன்  அது அவனது கையில் கிடைத்த சமயம் பார்த்து  அபி தனது பெற்றோருடன் அஸ்வின் அறை கதவை திறந்தாள்.

உள்ளே நுழைந்தவர்கள்  ஒரு நிமிடம் திகைத்து போயினர். குல்லா அணிந்திருந்த நெடு மனிதன் அஸ்வினின் தந்தை தாய் முன் கத்தியை நீட்டினான். 

குல்லா அணிந்திருந்தவன் தனது குள்லாவை கழட்டிய அதே நேரம் அபி அறை விளக்கை போட்டாள். 

அபியின் பெற்றோர் மணிமேகலை மேகநாதன் அதிச்சிக்கடலில் மூழ்கினர். அந்த நெடியவன் தன் கையில் இருந்த கத்தியால் மணிமேகலை மேகநாதன் தம்பதியினரின் தலையின் மேலே கட்டப்பட்டுள்ள பலூனை குத்தினான் அது பலத்த சத்தத்தோடு  வெடித்து அதனுள் இருந்த ரோயா இதழ்கள் மழையாக பொழிந்தது.

"ஹப்பி அனிவசரி"  என சிரித்தது கொண்டே அபியும் அஸ்வினும்  ஒருங்கே இணைந்து  கூறி தம் பெற்றோரை அணைத்து முத்தம் கொடுத்தனர்.

"வாலுங்களா இரண்டு பேரும் சேர்ந்து இப்பிடி கதி கலங்க வச்சிட்டீங்ஙளே‎? கடவுளே.....  இன்னும் கொஞ்சம் என்றால் எனக்கு ஹாட்டே நின்னு போயிருக்கும்." என செல்லமாக தனது பிள்ளைகளை கண்டித்தாள். அதே நேரம ரசிக்கவும் செய்தார்.

"ஆமாண்டா... நீ எப்ப ஊரில இருந்து வந்தாய்? வண்டி இல்லாமல் எப்படிடா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.