(Reading time: 10 - 20 minutes)

"ப்பா ஈசி..... ஈசி..... இப்ப எதுக்கு இவ்ளோ ரென்சன் நான் ராக்சில வந்தன். ஒரு சப்ரைசா இருக்கட்டும் என்று தான் உங்களுக்கு சொல்லாமல் அபிக்கு மட்டும் இன்வ்வோம் பண்ணினனான். "

"நல்லா பண்ணினாய் போ இன்வ்வோம்! ஏண்டி அப்ப இந்த ரூம் அலங்காரம் எல்லாம் நீயா செய்தாய்."

" யா யா " என இல்லாத சட்டை காலரை தூக்கி காட்டினாள்.

கடிகார முள் சரியாக ஐந்தை தொடும் போது மணிமேகலை மேகநாதன் தம்பதியினர் தமது முப்பதாவது திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடினர். சரியாக இதே நேரத்தில் தான் மேகநாதன்  மணிமேகலை கழுத்தில் மங்கள நான் ஏத்தினார்.

"சரிப்பா நீ களைச்சுப் போயிருப்பாய் நல்லா தூங்குடா கண்ணா! " என அஸ்வினின் முகவாயை தடவி உச்சி முகர்ந்து விட்டு அறையில் இருந்து வெளி ஏறினார் மேகலை.

காலை எட்டு முப்பத்தை நெருங்கும் போது புவிகாவின் வீட்டு தொலைபேசி சிணுங்க தொடங்கியது.

" ஹலோ.... ஹ... ஹேய் பெரிப்பா.... எப்பிடி இருக்கீங்க?"

"......"

"ம்...... ம்...... நான் சூப்பரா இருக்கன். ஆமா மதுண்ணா எங்க இப்ப எல்லாம் என்னை கண்டு கொல்றதே இல்ல."

"..........."

" நியமாவா!!!  எப்போ கலியாணம் சென்னையிலையா இல்ல கொடைகனல்லையா?"

"............."

" ப்ச்.. கொடைக்கனல் என்றால் எனக்கு காலேஜ்ல லீவ் தருவாங்களா தெரியலையே நான் ரை பண்றான் பெரிப்பா. ம்  அம்மா வந்திட்டாங்க இந்தாங்க பேசுங்க." என தாயின் கையில் போனை கொடுத்தாள். சிறிது நேர உரையாடலின் பின் போனை தாங்கியில் வைத்து விட்டு மகளிடம் திரும்பி

" அடுத்த வாரம் கலியானமம் நீ இன்னைக்கே காலேஜ்ல பிரின்சிபாலிடம் லீவ் கேடு பாரேன் தங்கம்."

" இல்லம்மா மாரல் எக்சாம் என்றதால லீவ் தரமாட்டாங்க நான் பெரியப்பாக்காக தான் அப்பிடி சொன்னனான் அம்மா, இப்ப போய் லீவ் வேணும் என்று கேட்டன் என்று வச்சுக்கோங்க அந்த வழுக்கை காட்டு கத்து கத்தியே சாகடிச்சிருவாரம்மா."

"இரண்டு நாள் தானேம்மா கேட்டு தான் பாரேன்."

"ஹிம்..... சரிம்மா ரை பண்றன். சரிம்மா டிபன் எடுத்து வைங்க வாங்க எனக்கு லேற் ஆகுது."

"குட் மோர்னிங் ஹைஸ்."

"என்னாப்பா இப்ப தான் படுத்தாய் அதுக்குள்ள எங்க போறத்துக்கு ரெடி ஆகிட்டு   வந்திருக்கிறாய்." என்றார் மேகலை.

கையில் உள்ள காப்பியை சுவைத்தபடியே " அம்மா இன்னிக்கு பத்து மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் இருக்கு அததுக்கு தான் ஆபீசுக்கு போக ரெடி ஆகிட்டன்."

" என்னமோ போ இப்பதான் வந்தாய் அதுக்குள்ள கிளம்பிட்டாய். கடல் போல உங்கப்பா தீ நகர்ல பெரிய ஜவுளிக் கடலே வசிக்கிறார் அதில போய் சொகுசா கல்லாவில உக்காருரத விட்டுட்டு கேம் அது இது என்று இரவு பகல் தூங்காமல் எதுக்கு இப்பிடி கஷ்ட படுறாய்."

அவனது முகக் கருக்களை கண்ணுற்ற தந்தை "மணி அவன் தனக்கு எதில சந்தோஷம என்று நினைக்கிறானோ அதை செய்றான். இது அவனோட வாழ்க்கை இதில நாம குறுக்க நிக்கப் படாது. எனக்கு துணி வியாபரத்தில ஆர்வம் இருந்திச்சு நான் ஜவுளிக்கடை திறந்தான் அயராது உழைத்து முன்னுக்கு வந்திருக்கன் அது போல தான் நம்ப மகனும் புரியுதா?"   

"ம்..... புரியுது.... புரியுது......"

"தாங்க்ஸ் அப்பா தாங்க்ஸ் அம்மா என்னை புரிந்து கொண்டதற்கு."

"சரிம்மா நான் கிளம்புறன்.  பை ம்மா"

"ம.. பை..ப் பாத்து போடா" 

"அ.. அண்ணா என்னை இன்னிக்கு காலேஜ்ல ட்ரோப் பண்றியா பிளீஸ்."

அவளை ஒரு முறை ஆச்சரியமாக பார்த்தவன் அதற்கு மேல் ஒன்றும் பேசாது அவளை தன்னுடன் அழைத்து சென்றான்.

காரில் நிலவிய அமைதியை அஸ்வின் கலைத்தான்.

" ஆமா அந்த பையன் என்ன உன்னோட காலேஜ்ஜா இல்ல கிளாஸ் மேற்றா?"

" தமையனது எதிர் பாராத இந்த கேள்வியில் சற்றே தடுமாறிப் போனாள் அபி .

"அ... அ... அது..... வ... வந்து..."

" தங்கையின் இந்த தடுமாற்றத்தை ரசித்தவனாக, அது தான் காரில் வந்து  இருந்திட்டியே ம் ..... மிச்சத்தை சொல்லு."

" மிச்சத்தை என்றால் எதை " என்று மீண்டும் தடுமாறினாள். அவள் உண்மையில் தனது காதலனான சங்கர் பற்றி பேசவே அஸ்வினுடன் வந்தாள். ஆனால் எப்படி தொடங்குவது என்று தெரியாமல் அவள் யோசனையில் ஆழ்ந்திருந்த போது தான் அவனே இந்த கேள்வியை எடுத்தான். ஆனால்,......

" உனக்... உ.. உங்களுக்கு எப்பிடி தெரியும்."

" பரவாயில்லையே மரியாதை எல்லாம் பலமாய் இருக்கிறது. காரியம் ஆக வேண்டும் என்றால் மரியாதை எல்லாம் வரும் போல"

அவளது தவிப்பை அதிகரிக்காது

"நீயும் ஒரு பையனும் உங்க காலேஜுக்கு பக்கததில் இருந்த காபி ஷாப்பில பேசிட்டிருந்ததை பார்தேன். பிளைற்றுக்கு போற அவசரத்தில உங்கூட எதுவும் கதைக்க முடியல. அப்பவே டௌட் வந்தி்ச்சு அப்ப்புறம் நானே உன்னை ட்ரோப் பண்றான் என்று ஆசையா கேட்டாளும் ஒத்துக்க மாட்டாய் இன்னிக்கு நீயே  அண்ணா நான் உன் கூட வாறன் என்று மரியாதையா எல்லாம் கேட்டாயே  அப்பவே எதோ கிலியரான மாதிரி இருந்திச்சு அப்புறம் இப்ப நீயே உளறிக் கொட்டினியே. "

"ச்சா....  அவனுக்கு எதோ டௌட் தான் வந்திருக்கு நம்ம கிட்ட போட்டு வாங்கிருக்கான். இப்பிடி உளறி கொட்டிற்றோமே" என தன்னஈ தானே கடிந்து கொண்டாள்.

'என்ன யோசனை சொல்லு யாரவன், எத்தனை நாள் பழக்கம், அவன் குடும்பம், சம்பாத்தியம் எல்லாம் எப்பிடி?" என அன்னைக்கே உரிய பொறுப்புனர்ச்சியில் கேட்டான். 

" ஷங்கர் ரொம்ம நல்லவன் அண்ணா அவங்களும் ஓரளவுக்கு வசதியானவங்க தான் சின்னதா ஒரு  சுப்பர் மாக்கற் வச்சிருக்காங்க. அவர் என்னோட காலேஜ் சீனியர் தான் அவன் இப்ப தான் D&D pvt கம்பனில join பண்ணி இருக்கான் நீ ஒரு தடவை அவனை மிற் பண்ணி கதைச்சு பார் கண்டிப்பா உனக்கும் அவனை பிடிக்கும் அண்ணா. ப்ளீஸ்."

"ம் சரி அவனுக்கு இன்னிக்கு பிறீ என்றால் இன்னிக்கே நான் அவரை மீற் பண்றான் ஹிம் "

"தாங்க்ஸ் அண்ணா நான் இப்பவே அவனுக்கு  கால் பண்றான்.'

சிறுது நேர சங்கரோடான உரையாடலின் பின் லன்ஞ அவர்ல நீ பிசி இல்லன்னா ---காலேஜ் பக்கத்தில இறக்கிற காபி ஷாப்ல மீற் பண்ணலாமா என்று கேக்கிறான்."

"ம்.... சரி நான் போய் பார்க்கிறேன். நீ எதுக்கும் அவனோட போன் நம்பர் கொடு."

 பி  என்றும் இல்லாத ஒரு படபடப்புடன் அமைதியாக இருந்தாள். அவளது மன நிலை புரிந்ததால். அஸ்வின் அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட்டான்.  அவனும் சும்மா வீதியையே பராக்கு பார்த்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது அஸ்வினின் போன் 

அந்த வானவில்லின் பாதி 

வெண்ணிலவின் மீதி 

பெண்ணுருவில் வந்தாலே 

இவள் தானா ஓ இவள் தானா

மழை மின்னல் என மோதி 

மந்திரங்கள் மோதி 

என் கனவை வென்றானே

இவன் தானா ஓ இவன் தானா 

 என அழ‎காக பாடியது. 

திடீரென ஒலித்த தொலை பேசி அழைப்பினால் மௌனம் கலைந்த அபி அஸ்வினை விசித்திரமாக பார்த்தாள். ஏனென்றாள் அவனது தொலைபேசியில் எப்பொழுதும் மெல்லிய வீணா கானமே இசைக்கும். அதனால் தான் அபி விசித்திரமாக பார்த்தாள்.

அழைப்பது யார் என்று தெரிந்ததும் அவன் முகத்தில் புன்னகை விரிந்தது. 

தொடரும்!

Go to episode # 03

Go to episode # 05


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.