(Reading time: 4 - 8 minutes)

05. என் இதய கீதம் - Parimala Kathir

போன் திரையில்  விழுந்த  மதனின் எண்ணை பார்த்து விட்டு சிரித்து கொண்டே அதனை ஆன் செய்தான்.

மதனும் அஸ்வினும் கொடைக்கானல் இன்டெர் நேஷனல் ஸ்கூலில் தமது பள்ளிப்பருவத்தை பகிர்ந்து  கொண்டனர். அதன் பின் தமது கல்லூரி காலத்தையும் இணைந்தே பொன்னாக்கினர்.

En ithaya geetham"ஹலோ ..... மச்சி  " அஸ்வின்

 "ஹாய் டா ...எப்பிடி இருகாய் ?" மதன்

 "ம் ஐ ஆம் குட்,  ஹௌவ் ஆர் யு மேன்.."  அஸ்வின்

 " ம்.....  ஐ.. ஆம் ஆல் சோ பைன்..  அப்புறம் அடுத்த வாரம் எனக்கு வெடிங் பிக்ஸ் பண்ணி இருக்கு கண்டிப்பா நீ வரணும் "

 "ஹேய் கங்கிராட்ஸ் டா ஆமா பொண்ணு யாரு? ஏன் இவளவு பக்கத்தில்ல டேற் விக்ஸ் பண்ணி இருக்கீங்க?"

 "பொண்ணு உனக்கும் தெரியும் "

 "அப்பிடியா?  ம்.....  காலேஜில  உன் பின்னாலேயே  சுத்திக்கிட்டிருந்த ப்ரியாவா?"

 " ம்.... நோப் "

 "அட போடா நீயே சொல்லு என்னால முடியல"

 "அது வேற யாருமில்லடா  நம்ம ஸ்கூல் கிளாஸ் மேற் ரூபா தாண்டா"

 "என்ன ? அவளா இரண்டு பெரும் எப்ப பார்த்தாலும் எலியும் பூனையுமாய் இருப்பீங்க....  நம்பவே முடியலடா?"  ஆமா எப்பிடி அவளை அவதான் ஸ்கூல் படிக்கும் போதே அவ அப்பாக்கு transfer என்று கோயம்புத்தூர் போய்ட்டாளே அப்புறம் எப்பிடி?"

 "அவங்க அப்பா ரிடையர் ஆகி திரும்ப இங்கயே வந்திட்டார். அப்புறம் அவ என்கூட தான் ஆபிசில வேலை பார்க்கிறா.  இரண்டு பேருக்கும் பிடிச்சு போச்சு. அவ அப்பத்தாவுகும் கொஞ்சம் சீரியஸ் அது தான் கலியாணத்தை சீக்கிரம் வச்சிருக்கோம்."

 "வாழ்த்துக்கள்டா மச்சி கண்டிப்பா நான் வந்திடுறன். ஒகே பாய்டா"

"ம்... ஓகேடா........"

அவர்களின் உரையால் முடிந்ததும் ,

"யாருக்கன்னா வெட்டிங் உங்க க்ளோஸ் பிரண்ட்டுக்கா? இப்பிடி சந்தோஷப் படுறீங்க?"

"ஆமாண்டா.....  "

அதற்குள் காலேஜ் வந்து விடவே தங்கைக்கு பாய் சொல்லி விடை பெற்று சென்றான்.

"ய் அபி அங்க பாரு அழு மூஞ்சி ஜோதி வர்ரா அவள கொஞ்சம் கலாய்க்கலாமா?" 

"பிச்... எனக்கு இன்னிக்கு மூட் இல்லடி."

"அட நம்ம அபி குட்டிகா மூடு சரி லஇல்லாம போச்சு. என்னாச்சடி என் தங்கமே?"

என சிவாஜி பாணியில் கேட்டாள் புவிக்கா.

" அபி நடந்த அனைத்தையும் கூறினாள்.

"என்னமோ டென்சனாவே இருக்கடி. இரண்டு பேரும் இன்னிக்கு மீற் பண்ணிடுவாங்க. அண்ணாக்கு கண்டிப்பா சங்கரை பிடிச்சிரும்."

"அது தான் உங்க அண்ணனுக்கு ஊன் ஆளை பிடிச்சிரும் என்று இவ்வளவு கான்விடன்சா சொல்றியே அப்புறம் என்ன கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு. ஆமா ஒரு விஷயம் எங்கயோ இடிக்குதே?"

"என்னடி  இடிக்குது சும்மா உளறாத நம்ம அபிம்மா ஏற்கனவே ரென்ஸ்டா இருக்கா நீவேற ஏம்மா?" என்றால் காயா.

"பிச்.... அது இல்ல காயா நீ கவனிச்சியா? அபி எப்பவும் அவ அண்ணனை பெயர் சொல் வாடா போடான்னு தான் கூப்பிடுவா இன்னிக்கு பாரு அண்ணாங்கிறா புதுசா அண்ணனுக்கு மரியாதை எல்லாம் கொடுக்கிறா.  என்னடி உங்க அண்ணனால காரியம் ஆகணும் எண்டதால மரியாத தூள் பறக்கிறது போல?"

அபி ஆச்சரியப்பட்டாள்.  "ஹேய் புவி இதயேதாண்டி அண்ணனும் சொன்னான். நீயும் அதேதான் சொல்றே.  ம்....ம்....ம்..."

"இந்த ரெலிபதி ரெலிபதி என்கிறார்களே இது தான் போல அது " என சொல்லி மூவரும்  சிரித்து கொண்டே வகுப்பறைய நோக்கி சென்றனர்.

புவிகாவை சந்திக்க சென்ற சுதன் அதன் பின் கல்லூரிக்கே வரவில்லை. அவனது நண்பர்கள்  சற்று குழம்பி போனார்கள்.   அவனது தொலைபேசியை தொடர்பு கொண்டால் அதுவும் பாவனையில் இல்லை என்றே வந்தது.

அன்று  முழுவதும்  அபி கொஞ்சம் டென்சனாவே   இருந்தாள்.  மதிய இடைவேளையின் போது

"ஏம்பா நீங்க இரண்டு பேரும்  இன்னிக்கு வண்டி  கொண்டரல தானே அதனால...... "

"ம்...... அதனால " ஏதோ  கதாப்பிரசங்கம்  கேட்பது போல் காயா, அபி முடித்த வார்த்தையிலே தந்து கேள்வியை ஆரம்பித்தாள்.

"ம்.... வந்து அதனால இன்னிக்கு காலேஜ் முடிந்ததும் என்கூட வர்றீங்களா? இன்னும் கொஞ்ச நேரத்தில சங்கர் அண்ணனை மீற் பண்ணிடுவான்.  அண்ணனோட முடிவும் காலேஜ் முடிந்ததும் தெரிஞ்சிடும்அது தான் பயமா இருக்கு. நீங்க என் கூட இருந்தால் கொஞ்சம் தெம்பா இருக்கும் அது தான்   " என்று திக்கித்திணறினாள்.

"அடடடடா ........  இங்க பாடா பாருடா......  நம்ம அபி குட்டிக்கு புதுசு புதுசா ரியாக்ஷன் எல்லாம் வருதே நம்ப முடிய வில்லை இல்லை..... இல்லை....." என்று சொல்லி அபியை வம்முக்கு இழுத்தாள்.

இதுவே சாதாரண நேரமாய் இருந்திருந்தால் இந்நேரம் காயா ஒரு வழி ஆகியிருந்திருப்பாள்.  அவள் இருந்த டென்சனில் காயாவை முறைத்து பார்த்ததோடு நிறுத்திக் கொண்டாள்.

"ஸ்.. காயா என்ன இது,  இப்ப எதுக்கு அவள வம்புக்கு இழுக்கிற  இவ நார்மலி இப்பிடியா இருப்பாள்.  கொஞ்சம் அவ பீலிங்க்சையும் புரிஞ்சுக்கோ" என்று இதுவரை அமைதியாக இருந்த புவி காயவை அதட்டினாள்.

"ப்ச்.....  அதுக்கில்லடி இவ சங்கர்கிட்ட தனது காதலை ப்ரொப்போஸ் பண்றப்போ நாம கூட இறந்தோம் அது ஒகே  பட் இப்ப இவ அண்ணன் தன் முடிவை பத்தி இவோட கதைக்கபோறார் இந்த டயம் எப்பிடிடி?"

"ம்... ஆமடி இவ சொல்றதும் சரி தான் இத உங்க அண்ணனும் விரும்ப மாட்டார் என்று தான் தோணுது .  நீ எதுக்கு பயப்படுறாய் சங்கர் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்ல ?"

"ம்......"

'அப்புறம் என்ன உன்னோட அண்ணணும்  உன்மேல ரொம்ப அன்பு வச்ருக்கார்  என்று சொல்லுவா பிறகென்ன   பீ ஹப்பி ஓகே.  குட் கேர்ள்." என்று ஒருவாறு புவிகா அபியை சமாதனப்படுத்தினாள். 

தொடரும்!

Go to episode # 04

Go to episode # 06


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.