(Reading time: 14 - 28 minutes)

19. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா

'கேன் ஐ ஸ்பீக் டு டாக்டர் சிதம்பரம் ப்ளீஸ்' நிதானமான குரலில் கேட்டாள் அர்ச்சனா.

'சாரி மேடம்' என்றது மறுமுனையில் இருந்த பெண் குரல். டாக்டர் இஸ் ஆன் அ ட்ரிப் டு யூ.எஸ்'

மனதிலே ஒரு பாட்டு சட்டென்று அர்ச்சனாவினிடத்தில் ஏமாற்றம் பரவியது. அந்த ஏமாற்றத்துடனே அவளேயறியாமல் தமிழில் கேட்டு விட்டிருந்தாள் 'அப்படியா? எப்போ வருவார்?

'சட்டென சுதாரித்து சாரி....'என்று அவள் ஆங்கிலத்துக்கு மாறும் முன்பாக அந்த தில்லிப்பெண் தமிழுக்கு மாறிவிட்டிருந்தாள்.

'இன்னும் மூணு, நாலு நாளிலே வந்திடுவார் மேடம்.' 'நீங்க....?

'நான் நா...ன் அவர் பிரெண்டோட டாட்டர் அர்ச்சனா. அவர் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.'

அப்படியா? சரி நீங்க ரெண்டு நாள் கழிச்சு கால் பண்ணுங்க. அப்படியே உங்க நம்பர் கொடுங்க. நான் டாக்டர் வந்ததும் கண்டிப்பா சொல்றேன்.'

தன் எண்ணை அந்த பெண்ணிடம் தந்து விட்டு சின்னதான ஒரு ஏமாற்றத்துடனே அழைப்பை துண்டித்தாள் அர்ச்சனா.

ஆனால் இன்னமும் அவள் மனதின் இன்னொரு ஓரத்தில் தன் அப்பாவின் மீது  நம்பிக்கை தேங்கிக்கிடந்தது.

தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். 'நிஜமாகவே என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்வதற்காகவே முயற்சி செய்கிறேன். எனக்கு தெரியும். என் அப்பா  தவறு செய்திருக்கமாட்டார். அவர் என்னிடம் பொய் சொல்ல மாட்டார்

ஏன் இப்படி என்னுடன் பேச மறுக்கிறார் அப்பா.? பிறந்தநாளுக்கு வராமல் இருந்தது அவரை இத்தனை தூரம் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறதா?

மூன்று வருடங்களுக்கு முன்னால் கூட ஒரு முறை இப்படிதானே நிகழ்ந்தது.

அவளது கால் எலும்பு முறிந்து மூன்று நாளைக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து வசந்த் வீட்டிற்கு வந்தாள் அர்ச்சனா.

காலில் இருந்த கட்டு இன்னும் பிரிக்க படவில்லை. எலும்புகள் சேர்வதற்கு இன்னும் பதினைந்து நாட்களாவது ஆகுமென சொல்லியிருந்தார் டாக்டர்.

மிகவும் சிரமப்பட்டே நடந்து வந்தாள் அர்ச்சனா. வசந்தின் தோளை பற்றியிருந்தது அவள் கை. அந்த நிலையிலும் அனுவை இருவருக்கும் ஆரத்தி எடுக்க வைத்தார் வசந்தின் அப்பா.

அவளை சென்னைக்கு அழைத்து செல்வதிலேயே குறியாய் இருந்தார். அவள் அப்பா.

'அவளாலே நடக்கவே முடியலை. இதோட எப்படி ஊருக்கு கூட்டிட்டு போவீங்க? ஒரு பதினைஞ்சு நாள் இங்கேயே இருக்கட்டுமே என்றார் வசந்தின் அப்பா.

ஒப்புக்கொள்ளவே முடியாதவராய் சொன்னார் அவள் அப்பா 'கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இங்கே தங்குவா? நான் ப்ளைட்லே கூட்டிட்டு போறேன். ஒண்ணும் பிரச்சனை வராது.

'சரி அங்கிள்.' என்றான் வசந்த் ஏதோ ஒரு திட்டத்துடன். 'நம்ம டாக்டரை கேட்போம் அவர் சரின்னு சொல்லிட்டா நீங்க கூட்டிட்டு போங்க.'

அவளை அனுப்பிவிட மனமில்லை வசந்துக்கு. திருமணதிற்கு முன் ஒரே வீட்டில் இருந்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ரகசியமாய் ரசித்துகொள்வதும், திடீரென்று கிடைக்கும் சின்ன சின்ன தனிமைகளில் பார்த்துவிடக்கூடாது யாருமென்று ஒரு சின்ன தவிப்புடனே  பேசிகொள்வதும் ,சிரித்துகொள்வதும்.............

இதற்கெல்லாம் கையில் கிடைத்த இந்த இனிமையான வாய்ப்பை எப்படி இழப்பதாம்?  அந்த வாய்ப்பு கை நழுவி போகாமல் இருக்க டாக்டரை துணைக்கு அழைத்துக்கொண்டான் வசந்த்.

அவரிடம் கேட்ட போது இப்போ ட்ராவெல் வேண்டாமே. தேவை இல்லாம எதுக்கு ரிஸ்க். ஒரு பதினெஞ்சு நாள் ஆகட்டும்' என்று மறுத்தார்.

'நிச்சியதார்த்தம் முடிஞ்சதுமே அவ எங்க வீட்டு பொண்ணு.  நீங்க தைரியமா கிளம்புங்க. நாங்க அவளை பத்திரமா பார்த்துப்போம்'  என்றார் வசந்தின் அப்பா,.

என்னதான் அவனுடன் மனதால் நெருங்கிக்கொண்டிருந்தாலும் திருமணதிற்கு முன் அப்பாவை விட்டு  அங்கே தங்கிவிடுவதற்கு அர்ச்சனாவுக்கும்  தயக்கம் இருக்கத்தான் செய்தது.

டாக்டர் சொல்வதை மீறவும் முடியாமல், அர்ச்சனாவை விட்டு செல்ல மனமும் இல்லாமல், பதினைந்து நாட்கள் விடுப்பு எடுக்கவும் இயலாமல் ஊருக்கு கிளம்பி சென்றார் அப்பா.

ப்பா கிளம்பி சென்றவுடன் அவள் முகம் வாடித்தான் போனது.

மெல்லகேட்டாள் அவனிடம் 'ஏன் வசந்த் நான் ட்ராவெல் பண்ணா என்ன ஆகும்?

'என்ன ஆகும்? ஒண்ணுமே ஆகாதே.' சிரித்தான் வசந்த்.

அப்ப ஏன் டாக்டர் அப்படி சொன்னார்?

'அவர் நம்ம டாக்டர். நான் என்ன சொல்ல சொன்னாலும் சொல்லுவார்' கண் சிமிட்டி மலர்ந்து சிரித்தான் வசந்த்.

அய்யய்யோ....என்றாள் கண்கள் விரிய 'பொய் சொன்னிங்களா? எதுக்கு?'

'எதுக்கு தெரியுமா? அவளருகில் வந்து ரகசியமான குரலில் 'அது..... அது இப்போ வேண்டாம். ராத்திரி எல்லா......ரும் தூங்கின அப்புறம் தனியா வந்து ரகசியமா சொல்றேன்.' கண்களை விரித்து சுருக்கி  சொல்லிவிட்டு  அவன் நகர, அவன் சென்ற திசையையே பார்த்துகொண்டிருந்தவளின் இதழ்களில் மெல்ல மெல்ல ஒரு புன்னகை விரிந்தது.

அவன் டாக்டரிடம்  சொல்ல சொன்ன பொய் கூட அவளுக்கு பிடிக்கவே செய்தது.

மூன்று நாட்கள் கழித்து வந்தது அவள் பிறந்தநாள். யாரிடமும் சொல்லவில்லை அவள். வசந்த் கூட அறிந்திருக்கவில்லை.

வீட்டிற்கு வந்து மூன்று நாட்களுக்குள் பிறந்தநாள் கொண்டாடுவதா? சின்னதாய் ஒரு வெட்கமும், ஒரு தயக்கமும் அவளுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்க   யாரிடமுமே சொல்லவில்லை அவள்

அவள் கீழே விழுந்தபோது கைப்பேசி உடைந்து போன பிறகு, புதியது இன்னமும் வாங்கியிருக்க வில்லை அவள். வசந்தின் கைபேசியை அவ்வப்போது வாங்கி பயன் படுத்திக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

அன்று அவள் பிறந்தநாள் என்பதால் அப்பா அவள் அழைப்புக்காக காத்துக்கொண்டிருந்தார். காலை இரண்டு முறை அவள் முயற்சித்தபோது ஏனோ இணைப்பு கிடைக்கவில்லை. பின்னர் பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் விட்டு விட்டாள் அர்ச்சனா.

காலையிலேயே அவன் அப்பாவும் அனுவும் ஒரு திருமணதிற்கு  சென்று விட்டிருந்தனர்.

வசந்திடம் மட்டும் சொல்லிவிடலாமா? சொன்னால் என்ன செய்வான் அவன்? .மனம் தவித்துக்கொண்டே இருந்தது.

அவனிடம் எப்படி சொல்வது என்று யோசித்தபடியே, அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தவனிடம் மெல்லக்கேட்டாள் அர்ச்சனா 'இன்னைக்கு லீவ் போட்டுடுங்களேன்'

ஹேய். நான் கூட அதைதான் நினைச்சேன். ரெண்டு பெரும் வீட்டிலே தனியா வேற இருக்கோம். எவ்வளோ வேலை இருக்கு. இப்போ போய் எந்த மடையனாவது ஆபீஸ் போவானா? இதோ வரேன் இரு.

சில நிமிடங்களில் விடுப்பு சொல்லிவிட்டு திரும்ப வந்தவன்  தன் உள்ளங்கைகளை தேய்த்தபடியே 'ரெடியா?' என்றான்

'அய்யய்யோ........ அதெல்லாம் வேண்டாம் நீங்க ஆபீசுக்கே கிளம்புங்க.' சற்று திகைப்பு கலந்த குரலில் சொன்னாள் அர்ச்சனா.

என்ன வேண்டாம்? சாப்பாடு வேண்டாமா?

சாப்பாடா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.