(Reading time: 18 - 35 minutes)

10. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

பொம்மு பதட்டத்தில் பின்னே வந்தாள். கப்பல் உள்ள சத்தங்கள் அதிகமானது. கோக்கி பயத்தில் பொம்மு பக்கம் ஓடி வந்தது. நிறைய மக்கள் அவர்களை நெருங்குவது போல பொம்முவுக்கும் கோக்கிக்கும் தோன்றியது.


“நாம போய்டுவோம்....வா “ என்று பொம்மு கோக்கியுடன் கப்பலை விட்டு வெளிய எல்லா முயன்ற போது திடிரென கப்பல் அறைகளின் கதவுகளை “படார்” “படார்” என உடைத்துக்கொண்டு வெளியே வர ஆரம்பித்தன ஆவிகள். அந்த ஆவிகள் காற்றில் இங்கும் அங்கும் வேகமாக பறந்தபடி பொம்முவையும் கோக்கியையும் நோக்கி வெறித்தனமாக வந்தன. பொம்மு கோக்கி ஆவிகளை கண்டு ஓட ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள் அத்தனை ஆவிகளும் பொம்முவையும் கோக்கியையும் சுற்றி வளைத்தன. அந்த ஆவிகள் வாயிலிருந்து பச்சை நிறத்தில் புகையானது வெளிப்பட ஆரம்பித்தது. அந்த புகையானது பொம்முவுக்கும் கோக்கிக்கும் மயக்கத்தை தந்தது.

பொம்முவும் கோக்கியும் கண்விழித்த போது அவர்கள் கயிற்றால் கட்டப்பட்டு அடியில் உள்ள அறைகளை தாண்டி இரண்டு ஆவிகளால் இழுத்து வரப்பட்டனர். பொம்மு வலதுப்பக்கம் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் பல மனிதர்கள் மற்றும் மிருகங்கள் அவர்களை போல கயிற்றால் கட்டப்பட்டு தரையில் தவிப்பதை கண்டாள். அந்த ஆவிகள் பொம்முவையும் கோக்கியையும் கடைசியாக ஒரு இருட்டறையில் கொண்டு வந்து அடைத்தார்கள். பொம்முவும் கோக்கியும் நக முடியாமல் தரையில் கிடந்தனர்.

“இந்த ஆவிகள் யாரு? எதுக்காக நம்மை பிடிச்சிகிட்டு போறாங்க?” – பொம்மு நகரமுடியாமல்.

“நாம இனிமே இந்த ஆவிகளுக்கு அடிமை..” என்று ஒரு குரல் அந்த அறையின் முலையில் இருந்து வந்தது, பொம்மு அந்த இடத்தை கஷ்டப்பட்டு திரும்பி பார்த்தாள். அங்கே ஒரு நாய் அவர்களை போல கட்டப்பட்டு தரையில் நகர முடியாமல் பொம்முவை பார்த்தபடி இருந்தது. பொம்முவுக்கு அந்த நாய்

“உன்னால் பேச முடியுமா? என்னை பத்தி உனக்கு எப்படி தெரியும்?” – பொம்மு.


Bommuvin thedal“என் பேர் ஜரான்....நான் கனிஸ் நாட்டை சேர்ந்த நாய்...என்னால்  பேச முடியும்!” – அந்த நாய்.

“கனிஸ் நாடா?.....பைரவன் பிறந்த நாடா?” பொம்மு.

“ஆம்....பைரவன் எங்க நாட்டு நாய்கள் ராஜாவான துரயுகனோட  மகன்! அவரு இப்ப ஒரு விபத்துல இறந்துட்டாரு...!”

“என்ன சொல்ற? விபத்தா?” – பொம்மு அதிர்ச்சியுடன். ஏனென்றால் பைரவன் அவள் கண் முன்னே கட்டேரிகளால் கொல்லப்பட்டதை இன்னும் அவள் மறக்கவில்லை.

“ஆம்....பைரவன் பல எங்க நாட்டு எல்லையில் இருக்கிற மலையை கடந்து போகும்போது...பாறை சரிந்து அவர் மேல விழுந்துடுச்சு...அதனால் அவர் அதில் சிக்கி இறந்திட்டார்...” –ஜரான்.

“பைரவன் அப்படிதான் இறந்தார்னு யாரு உங்களுக்கு சொன்னாங்க?” – பொம்மு.

“மாதவன்னு ஒரு பையன் எங்க நாட்டுக்கு பைரவனோட சடலத்தை கொண்டு வந்து ஒப்படச்சான்...அவன்தான் சொன்னான்...பாவம் எங்க நாடே இப்போ அந்த சோகத்துலதான் இருக்கு” – ஜரான்.

பொம்மு உண்மையை சொல்ல நினைக்கவில்லை.

“ஆனா பைரவன் உன்னை மாதிரி பேசாதே?..” பொம்மு.

“பைரவன் சுலபமா யார்கிட்டயும் பேசிட மாட்டான்....” – ஜரான்.

“இந்த ஆவிகளுக்கு நாம ஏன் அடிமை?” - பொம்மு.

“ஆமாம்...இந்த ஆயிரம் ஆவிகள் பத்தி நீ எதுவுமே கேள்வி  படலையா?....” – ஜரான்.

“இல்லை எனக்கு எதுவும் தெரியாது!” - பொம்மு.

“பல வருஷத்துக்கு முன்னாடி சகானியன் என்னும் ஒரு மாவிரனோட கப்பல்தான் இது...அவன் எப்பவும் பல ஆபத்தான பயணத்தில் செல்வது வழக்கம்.....அப்படி ஒரு ஆபத்தில் போய் ஆயிரம் ஆவிகளை காப்பாற்றி தனக்கு அடிமை ஆக்கிகிட்டான்....அதுதான் இந்த ஆவிகள்!” – ஜரான்.

“”இப்போ அந்த சகானியன் இந்த கப்பலில் இருக்காரா? அவரை நான் பாக்க முடியுமா?” - பொம்மு.

“முடியாது...அவரை தான் எப்பவோ அந்த சூனியக்காரி கொன்னுடாளே” – ஜரான்.

“என்ன சொல்ற?...சகானியன் இறந்துட்டாரா?” - பொம்மு.

“ஆம்...பல வருஷத்துக்கு முன்னாடியே...அவரை ஷானுதான்னு ஒரு சூனியக்காரி கொன்னுட்டாள்...இதே கப்பலில் இதே இடத்தில “ – ஜரான்.

“இந்த இடத்திலயா? அவரை ஏன் அந்த ஷானுதா கொல்லனும்?” - பொம்மு.

“தெரியலை....ஆனா அவரோட மரணத்துக்கு காரணமா இருக்கிற அந்த ஷானுதாவை கொல்றதுக்கு இப்போ இந்த ஆவிகள் பல நாடுகள் போய் நம்மை மாதிரி அடிமைகளை தேடிகிட்டு இருக்கு!”

“என்ன சொல்றீங்க?...” - பொம்மு.

“அந்த சகானியன் இறந்த பிறகு பலவருஷமா நாடு நாடா போய் நம்மை மாதிரி அடிமைகளை பிடிச்சுக்கிட்டு ஒரு போர் படையை உருவாக்க தயார் பண்ணுதுங்க இந்த ஆவிகள்...” – ஜரான்.

“அந்த ஷானுதாவை எதிர்த்து இந்த ஆவிகள் நம்மை வச்சு போர் நடத்த போகுதா? அதுக்குதான் இந்த கப்பலில் நிறைய பேரை அடைச்சு வச்சுருகாங்களா? அது நடக்கவே நடக்காது...அந்த ஷானுதாவோட மந்திரசக்திக்கும் அவளோட போர்ப்படைக்கும் முன்னால நம்மளால் என்ன செய்ய முடியும்?” - பொம்மு.

“அது நமக்கு தெரியுது...ஆனா இந்த முட்டாள் ஆவிகளுக்கு தெரியலையே...” – ஜரான்

“நீங்க எப்படி இதுங்ககிட்ட மாட்டிகிடீங்க?” - பொம்மு.

“நாய்கள் ராஜா துரயுகன் என்னை நிலாயுகத்தில் உலவுபாக்க அனுப்பினாரு....தவறி வந்து இந்த ஆவிகள்கிட்ட மாட்டிகிட்டேன்”

“நாம எப்படி தப்பிக்கறது?” – பொம்மு

உடனே ஜரான் பயங்கர சத்தமாக ஒரு ஊளையை விட்டது.  பொம்முவுக்கு காது கிழியும் போல இருந்தது அந்த சத்தம்.

“ஏன் இப்படி சத்தம் போடுற?” - பொம்மு. எரிச்சலாக.

“இது மாயக்கூவல்....இந்த சத்தம் என் நாட்டு நாய்களுக்கு போய் சேரும்....அவங்களுக்கு நாம இருக்கிற இடம் தெரியவரும்...” – ஜரான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.