(Reading time: 18 - 35 minutes)

ந்த மரக்கப்பல் கனிஸ் நாட்டு எல்லையில் வந்து சேர்ந்தது. பொம்மு கோக்கி  மட்டும் அந்த நாட்டுக்குள் நாய்களை தொடர்ந்து செல்ல ஆயிரம் அடிமை ஆவிகள் கப்பலில் காத்திருந்தன. அந்த கனிஸ் நாட்டில் எங்கும் நாய்களின் சிலைகள் காணப்பட்டது. வித விதமான நாய்கள் அங்கே எங்கும் பொம்முவை ஆச்சிரியமாக பார்த்தபடி இருந்தன. நீண்ட தூர பயணத்திற்கு பின் பொம்மு கனிஸ் நாட்டின் ராஜா துரயுகனை சந்தித்தாள். அந்த துரயுகன் பார்க்கவே மிகவும் கம்பிரமாகவும் இருந்தது. அந்த நாய்களின் சபைக்கு நாய்கள் படையுடன் வந்தாள் பொம்மு.

“ஜரானை காப்பாத்த சொல்லியிருந்தேனே...என்னாச்சு?” – துரயுகன்.

“அவனையும் மற்ற மக்களையும்  அந்த கப்பலில் இருந்து காப்பாத்தியாச்சு அரசே!“ – நாய்கள் படை

“அப்புறம் என்ன? அந்த ஆவிகளை அழிச்சாச்சா?” – துரயுகன்.

“இல்ல அரசே! அதுக்குள்ள இந்த பொம்மை!...” என்று ஒரு நாய் கூறவருவதற்குள் பொம்மு பேசினாள்.

“ அந்த ஆவிகள் இனிமே எனக்கு அடிமைகள்....அதனால் இனிமே அதுங்க தப்பு பண்ணாதுங்க! “ – பொம்மு.

“அது முடியாது! இந்த ஆவிகளால் பல நாட்டில ஆட்கள் கடத்திட்டு போக பட்டிருக்காங்க...இதுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட நாட்டு நாயை கடத்திட்டு போக தோணும்?....என் நாடு எந்த தீயசக்திளாலும் பாதிக்க படக்கூடாது......ஆவிகளைளை கொன்னால்தான் என் நாட்டுக்கு மதிப்பு!” – துரயுகன்.

“என்னை பொறுத்தவரை உங்க நாட்டுக்கு மத்திப்பு போய்டுச்சு அரசே!” – பொம்மு கோபமாக கூற சுற்றியுள்ள நாய்கள் பொம்முவை முறைக்க ஆரம்பித்தன.

“என்ன சொல்ற நீ?” – துரயுகன் போம்முவை நெருங்கியபடி.

“உங்க மகன் பைரவனை நீங்க இழந்ததிற்கு காரணம் அந்த  ஷானுதாதானே?....அவளோட காட்டேரிகள் தானே பைரவனை கொன்னுச்சு?.....அவளை  கொல்ல முயற்சி பண்ணீங்களா?” – பொம்மு வேகமாக.

எல்லா நாய்களுக்கும் அதிர்ச்சி.

“பைரவன் இறந்தது உண்மைதான்...ஆனா நீ சொல்றமாதிரி அவன் காட்டேரிகளால் கொல்லப்படலை.....அவன் மலையை கடந்து போகும் போது அவன் மேல் பாறை சரிந்து விழுந்து இறந்துட்டான்.” – துரயுகன்.

“இதை சொன்னது மாதவன்தானே?...அவன்தான் பைரவன் இறந்ததிற்கு காரணம்!” – பொம்மு சத்தமாக.

“என்ன சொல்ற நீ?” – துரயுகன்.

பொம்மு நடந்த உண்மைகள் அத்தனையும் துரயுகனிடம் கூறினாள். துரயுகன் கண்கள் கோபத்தில் சிவந்தது. மற்ற நாய்கள் எல்லாம் கோவத்தில் சத்தம் போட ஆரம்பித்தன.

“அந்த ஷானுதாவையும் மாதவனையும் காட்டேரிகளையும் பழிவாங்காம விடமாட்டேன்....இப்பவே அவளை எதிர்த்து போர்படையோட கிளம்புறேன்!” – துர்யுகன் கத்தினார். அத்தனை நாய்களும் அவருக்காக கரகோஷம் எழுப்பின.

“ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க....அவளை எதிர்கிறது உங்களுக்கு ஆபத்து!” – பொம்மு.

“அந்த ஷானுதா எப்பேர்பட்ட சூனியக்காரியாகவும் இருக்கட்டும்! எங்க நாட்டு படையின் பலம் தெரியாது அவளுக்கு!.... நீ யாரு என்னை தடுக்க?,....” – துரயுகன் ஆக்ரோஷமாக.

“நான்....நான்தான் பைரவன்!” – பொம்மு தயக்கத்துடன்.

எல்லா  நாய்களும் ஒரு நிமிடம் திகைத்தன.

“என்னோட நாலாவது ஜென்மம்தான் பைரவன்....” – பொம்மு.

“நீ சொல்றதை நான் எப்படி நம்புறது?....” – துரயுகன் சந்தேகப்பார்வையுடன்.

“என்னால பைரவனோட ஜென்மரகசியத்தை படிக்க முடியும்....” என்று பொம்மு தைரியமாக கூறினாள்,

துரயுகன் பொம்முவை பைரவனின் உடல் புதைக்கப்பட்ட இடத்திருக்கு அழைத்து சென்றார். அவர்களை தொடர்ந்து கோக்கியும் அரவிந்தும் மற்றும் நாட்டில் உள்ள அத்தனை நாய்களும் பின் தொடர்ந்தன. ஒரு பெரிய பாலைவனம் போன்ற இடத்தின் நடுவே உள்ள பைரவனின் கல்லறைக்கு எல்லாரும் வந்து சேர்ந்தார்கள்.

துரயுகனின் உத்தரவுடன் நாய்கள் சில அந்த கல்லறையை  ஓடைத்து உள்ளே இருக்கும் பைரவனின் எலும்புகளை தோண்டி எடுக்க ஆரம்பித்தன. சிறிது நேரம் சென்றது. பைரவனின் மண்டையோடு அதில் கிடைத்தது. பொம்மு அந்த கல்லறையின் பக்கம் சென்று அந்த மண்டையோட்டை எடுத்துப் பார்த்தாள். அதில் நேற்றியில் மின்னும் எழுத்துக்களை அவளால் படிக்க முடிந்தது.

இந்த நாலாவது ஜென்மத்தில் நாயாக பிறந்த உன்னிடம்  ஜென்மங்களை ஆராயும் மோப்ப சக்தி உள்ளது.

உன்னுடைய சக்தியை அறிந்து உன்னை தேடி வரும் ஒரு சூனியகாரியிடம் நீ ஒரு பொய் சொல்வாய்..

நீ சொல்லும் பொய்யை உண்மை என்று நம்பும் அந்த முட்டாள் சூனியக்காரியால் தான் உனக்கு சாவு.

அந்த சூனியக்காரியை எதிர்த்து நடக்க போகும் போரில் உன் நாட்டுக்கும் ஒரு பங்கு உண்டு.

 

பொம்மு அந்த ஜென்மகரகசியத்தை படித்ததும். அங்கே எல்லா நாய்களும் சந்தோஷாமாக கத்தின. துரயுகன் பொம்முவை நம்பிகையுடன் பார்த்தார். பொம்முவுக்கு அந்த பைரவனின் ஜென்மரகசியம் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். பைரவனை தேடி வந்த ஷானுதா பைரவனிடம் என்ன கேட்டிருப்பாள்?....அதற்க்கு பைரவன் என்ன பொய் சொல்லிருக்கும்?,,,,

பொம்முவும் கோக்கியும் அரவிந்தும் கனிஸ் நாட்டில் அன்றிரவு தங்கினார்கள்.

ரசர் துரயுகன் அரவிந்துக்கும் கோக்கிக்கும் விருந்தளிதளித்தார். வெளிச்சத்துக்காக தீயை எரியவைத்து அதை சுற்றி அமர்ந்த அரசர் துரக்ன் பொம்மு அரவிந்த் மற்றும் கோக்கி பேச ஆரம்பித்தார்கள். பொம்மு அரவிந்துக்கு நடந்த எல்லா விஷயத்தையும் கூறினாள். அரவிந்தும்  ஷானுதாவிடம் தான் அறிந்த அத்தனை விஷயங்களையும் பொம்முவிடம் கூறினான்.

“அப்படினா....என்னோட எல்லா ஜென்மங்களையும் கொன்னா ஷானுதாவுக்கு சாகவரம் கிடைக்கும்...” – பொம்மு தெளிவாக

“ஆமாம்” – அரவிந்த்.

“அவளோட அடுத்த ஜென்மங்களை தியாகம் பண்ணி இப்போ அவளோட ஆயுள் காலத்தை அதிகமாகிகிட்டா...அதாவது இப்போ அவளுக்கு இதுதான் ரெண்டாவது ஜென்மம்...அதுவும் கடைசி ஜென்மம் ” – பொம்மு தெளிவாக.

“ஆமாம்......” – அரவிந்த்.

“ஜென்மங்களை எப்படி தியாகம் பண்ண முடியும்?....இது சாத்தியமா?” – பொம்மு

“நடக்கும்....ஆனா அதுக்கு தேவலோக அமிர்தத்தை அவள் குடிக்கணும்...அப்போதான் அவளால் ஜென்மங்களை தியாகம் செஞ்சு ஆயுளை அதிகமாக்க முடியும்” – துரயுகன்.

“”எனக்கு இப்போதான் புர்யுது...நிலாயுகத்தில இனிக்கு நாங்க ஒரு மரணகிணறு பார்த்தோம்...அதுல இருக்கிற அமிர்தத்தை ஷானுதா எப்பவோ எடுத்திட்டு போட்டாள்னு அந்த கிணத்தை காக்கிற நீர்ப்பெண் சொன்னாள்.....ஷானுதா அந்த அமிர்தத்தை குடிச்சுத்தான் அவளோட ஜென்மங்களை தியாகம் பண்ணி இப்போ ஆயுசை அதிகமாகி இருக்காள்.” – பொம்மு.

“அப்படினா அவளை அழிக்கிறது இப்போ ரொம்ப கஷ்டம்....அவளை அழிக்க எதாவது ஒரு பெரிய விஷயம் நமக்கு தேவைப்படுது!” -  துரயுகன்.

“அதுக்கு என்கிட்டே ஒரு யோசனை இருக்கு...ஆனா அதுக்கு முன்னாடி ஷானுதாவை பத்தி உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை என்கிட்டே சொல்லுங்க...” – பொம்மு

“பல வருஷத்துக்கு முன்னாடி அந்த ஷானுதா எங்க நாட்டுக்கு வந்திருந்தா...அவளை அப்போ நாங்க ஒரு சாதாரண பெண் என்றுதான் நினைச்சோம்....அவள் பைரவனை சந்திச்சு ஏதோ ஒரு சந்தேகத்தை கேட்டாள். அதுக்கும் பைரவனும் ஏதோ பதில் சொன்னான்....அவ அந்த பதில் தெரிஞ்ச அடுத்த நிமிஷமே பைரவனை கொல்லனும் முயற்ச்சி பண்ணாள்....ஆனால் அதுக்குள்ள நாங்க பைரவனை காப்பாத்தி அந்த ஷானுதகிட்ட சண்டை போட்டோம்....அதுக்கப்புறம்தான் அவள் ஒரு சூனியக்காரின்னு எங்களுக்கு தெரிஞ்சுது.....ஆனா அவளால எங்ககிட்ட மோதி ஜெய்க்க முடியில.....என்னிக்காவது ஒருநாள் பைரவனை நான் கொல்லுவேன்னு மட்டும் சொல்லிட்டு போயிட்டாள்....ஆனா கடைசில பைரவன் அவ நினைச்சமாதிரி அவளோட காட்டேரிகள் அவனை கொன்னுடுச்சு!” – என்று சொல்லிமுடித்தார் துரயுகன்.

“அது என்ன பொய்? எதாவது உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?” – பொம்மு.

“இல்ல...எனக்கு தெரியாது!” – துரயுகன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.