(Reading time: 18 - 35 minutes)

ரி....அந்த ஷானுதாவை அழிக்க வழியை சொல்றேன்......நான் சகானியன் ஜென்மரகசியத்தை படிச்சேன். அதுல பிரம்மாஸ்திரம் பத்தி போட்டிருந்தது....அது என்ன அஸ்திரம்னு உங்களுக்கு எதாவது தெரியுமா?...” – பொம்மு

“பிரம்மாஸ்திரம்....பல புராணங்களில் அதை பத்தி போட்டிருக்காங்க....அந்த பிரம்மாஸ்திரம் வச்சு உலகில் எந்த விஷயத்தையும் நம்மளால் அழிக்க முடியும்! அது முதலில் குமரிகாண்டத்தில் இருந்துச்சு.... ஆனா அது தொலைந்து போய்டுச்சுன்னு பலபேர் பேசிகிட்டாங்க....” – துரயுகன்.

“ஆனா அதை சகானியன் கண்டுபிடிச்சார்னு அந்த ஜென்மரகசியத்துல போட்டிருக்கு! அதை மறைச்சு வச்ச இடத்தில் என்னோட இரண்டாம் ஜென்மம் கொல்லபட்டுச்சுனு போட்டிருக்கு ” – பொம்மு.

“நீ சொல்றது உண்மையா...என்னால நம்ப முடியல....ஒருவேளை நாம அங்க போனா அந்த பிரமாஸ்திரத்தை எடுக்கலாம்....அந்த ஷானுதாவை அழிக்க அது உதவலாம்” – துரயுகன் வியந்து.

“அதைதான் நானும் நினைச்சேன்....அந்த ஷானுதாவை அழிக்கிற சக்தி அந்த அஸ்திரத்துக்கு இருக்கு.......அந்த அஸ்திரம் மறைச்சு வச்ச இடத்தை அந்த கப்பல் ஆவிகளுக்கு தெரியும்.....நாளை அந்த அஸ்திரத்தை தேடி நாம குமரிகாண்டம் போகணும் “– பொம்மு.

“ஒருவேளை அந்த அஸ்திரம் அந்த ஷானுதா ஏற்கனவே எடுத்திட்டா?..” –அரவிந்த்.

“நான் அதுக்காக மட்டும் அங்கே போக நினைக்கல....அந்த அஸ்திரத்தை மறைச்சு வச்ச இடத்தில்தான் என்னோட இரண்டாம் ஜென்மம் கொல்லபட்டிருக்கு....நான் என்னோட இரண்டாம் ஜென்மத்தோட ஜென்மரகசியத்தையும் தெரிஞ்சுக்கணும்....” – பொம்மு.

“நிச்சயம்...நாம நாளைக்கு அங்க போகணும் பொம்மு...அதுமட்டுமில்ல எங்களோட நாட்டு படையும் நமக்கு துணையா அங்க வரும்” – துரயுகன்.

“அரவிந்த்....உன்னை காப்பாத்த தான் ராஜேந்திரன் போனாரு....அவருக்கு என்ன ஆச்சு?” – பொம்மு பதட்டமாக.

“ர...ராஜேந்திரனா?....யாரு?” – அரவிந்த்.

“அவரு கழுகுகளின் அரசன்....உன்னை காப்பாத்த தான் போனாரு இன்னும் வரலை....” – பொம்மு.

“எனக்கும் அப்படி யாரயும் தெரியாது பொம்மு...நான் அவரை பாத்ததே இல்லை....” – அரவிந்த்.

“அப்படியா?...அவரு எங்க போயிருப்பாரு?” – பொம்மு வருத்ததுடன்

ந்த இரவு நேரத்தில் மாதவன் அந்த காட்டில் எப்போதும் போல தனியாக உலாவிக்கொண்டு இருந்தான்.

“ரொம்ப தூரம் வந்தாச்சு....களைப்பா இருக்கு....குதிரைகளா இன்னும் கொஞ்சம் தூரம் போங்க உங்களுக்கு தாகம் தனிய அற்புதமான அமிர்தத்தை காட்டுறேன்” என்று புலம்பியபடி மாதவன் வண்டியை மெல்ல ஒட்டி சென்றான்.

அவன் சொன்னதை மரத்தின் மேலே இருந்த ஒரு அணில் கேட்டது. அதுதான் சபிக்கப்பட்டு அணிலாக இருக்கும் ராஜேந்திரன். ராஜேந்திரன் ஒருவேளை மாதவனுக்கு உண்மையான அமிர்தம் இருக்கும் இடம் தெரிய வைப்பு உள்ளது என்று எண்ணினான். அதனால் ராஜேந்திரன் மரத்துக்கு மரத்துக்கு மரம் தாவி மாதவனின் வண்டியை பின் தொடர்ந்தான். ராஜேந்திரனை தொடர்ந்து சபிக்கப்பட்ட மொத்த அணில்களும் வந்தன. மாதவன் அங்கும் இங்குமாக நெடும் த்ஹோரம் வந்து நிலாயுகத்தின் மலையின் அடிவாரத்துக்கு வந்தான். அங்கே ஒரு சிறிய நீர்விழ்ச்சி இறந்தது. அந்த நீர்விழிச்சியின் தண்ணீரை குடிக்கத்தான் மாதவன் அந்த குதிரைகளை அங்கே கூட்டி வந்தான் என்று ராஜேந்திரனுக்கு அப்போதுதான் புரிய வந்த்ஹது.

மாதவன் வண்டியை விட்டு இறங்கி அந்த தண்ணீரை குடித்தான்.

“அப்பா....அமிர்தம் மாதிரி இருக்கு இந்த தண்ணீரின் சுவை” – மாதவன் சத்தமாக.

ராஜேந்திரனும் மற்ற அணில்களும் நீண்ட தூரம் வந்து ஏமாந்துப் போயினர். மாதவன் மீண்டும் குதிரையில் ஏறி எங்கோ கிளம்பி சென்றான். ராஜேந்திரனுக்கும் மற்ற அணிலுக்கும் பயங்கர தாகம் உடனே மரத்திலிருந்து இறங்கி ஓடி சென்று அந்த நீர் விழ்ச்சியின் தண்ணீரை குடித்தனர். ராஜேந்திரன் இருந்த களைப்புக்கு தண்ணீரில் தன் தலையை நனைத்தான். மற்ற அணில்கள் தண்ணீரில் ஆட்டம் போட ஆரம்பித்தனர். மூச்சு வாங்கியபடி  சோகமாக கிழே உள்ள தண்ணீரில் தன பிரதிபலிப்பை பார்த்தான். அவனின் அணில் முகத்தில் திடிரென ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. மீண்டும் உற்று பார்த்தான். அதில் அவனின் அணில் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி அவனுடைய சுய உருவத்துக்கு திரும்பி கொண்டிருந்தான். உடனே ஆச்சிரியத்தில் தன உடம்பை பார்த்தபோது ராஜேந்திரன் அந்த அந்த சாபம் நீங்கி தன்னுடய பழைய உருவத்துக்கு வந்திருந்தான். அவன் மட்டும் அல்ல அவனுடன் சேர்ந்து தண்ணீரை குடித்த அத்தனை அணில்களும் மனிதர்களாக சாபம் நீங்கி காணப்பட்டன.

ராஜேந்திரனுக்கு ஒரே ஆச்சிரியம் இறுதியில் உண்மையான அமிர்தம் அதுதான் எபது அவனுக்கு புரிந்தது. எல்லாரும் அந்த வரும் இடத்தை மேலே பார்த்தபோது அந்த நீரானது நிலாயுகத்தின் கோயிலில் இருந்து வந்துக்கொண்டிருப்பது அவர்களுக்கு தெரிந்தது. 

தொடரும்

Go to Bommuvin Thedal episode # 09

Go to Bommuvin Thedal episode # 11

{kunena_discuss:697}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.