(Reading time: 18 - 35 minutes)

டலில் பலத்த காற்றுடன் மழை பெய்ந்து கொண்டிருந்தது. கடலில் நீந்தியபடி நிறைய நாய்கள் அந்த ஆவிகளின் கப்பலை சுற்றி வளைத்தன. அந்த நாய்கள் கப்பலில் புகுந்ததும். ஆவிகளுக்கும் அந்த நாய்களுக்கும் சண்டை ஆரம்பித்து கப்பலே கலவரமாகியது. ஒரு சில நாய்கள் கப்பலின் அடியில் உள்ள அறைகளுக்கு சென்று கைதிகளை விடுவித்து கொண்டிருந்தன.

Bommuvin thedalபொம்முவும் திடிரென அந்த இருட்டு அறையில் யாரோ வருவதை கண்டாள். அது ஒரு சிறுவன் போல இருந்தது. அவன் பொம்மு கோக்கி மற்றும் அந்த ஜரான் மூன்று பேரையும் கயிற்றில் இருந்து விடுவித்தான். பொம்மு எழுந்து நின்று அந்த சிறுவன் யாரென்று பார்க்க அவளுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி.

அது அரவிந்த்.

“அரவிந்த்...நீயா?எப்படி இங்க வந்த?” – அரவிந்த்.

“அந்த மாதவன் என்னை இந்த ஆவிகளுக்கு அடிமையா விட்டுட்டான் பொம்மு....அவன் ஒரு கெட்டவன் “ – அரவிந்த்.

“அது எனக்கும் தெரியும்....சரி நாம இங்கிருந்து அந்த ஆவிகள் கண்ணுல படாம இருக்கணும் சீக்கிரம் எதாவது ஒரு மறைவான இடத்துக்கு போய்டுவோம்” – பொம்மு வேகமாக.

அவர்கள் பேசும்போதே அங்கே ஆவிகள் நுழைந்தன. உடனே காப்பாற்ற வந்த நாய்கள் அங்கே மின்னலென நுழைந்து அந்த ஆவிகளுடன் சண்டை போட்ட்டு ஆவிகளை விரட்டின. கடைசியாக அந்த நாய்கள் பொம்முவையும் கோக்கி மற்றும்  ஜரானையும்  காப்பாற்றி அவர்களை அறைகளை விட்டு வெளியே கூட்டி வந்தன. திடிரென மொத்த ஆவிகள் கப்பலின் அடியில் வந்து நாய்களை தாக்க ஆரம்பித்தன. அங்கேயும் கலவரம் ஆரம்பிக்க மக்கள் இங்கேயும் அங்கேயுமாக பதுங்க ஆரம்பித்தனர்.பொம்முவும் ஜரான் பொம்முவையும் அரவிந்தையும் கோக்கியையும் ஒரு பாதுக்காப்பான அறைக்கு அழைத்து சென்றது.

“நீங்க நான் வரும்வரை இங்கேயே இருங்க....” என்று சொல்லி ஜரான் அந்த அறையை விட்டு சென்றது.

அந்த இருட்டு அறையில் பொம்முவும் கோக்கியும் பதுங்கி இருக்க. ஜரான் வெளியே சென்று தன மற்ற நாய்களுடன் ஆவிகளை எதிர்த்துதாக்க சென்றது. மக்கள் எங்கும் அந்த கப்பலில் கத்தும் சத்தம் கேட்டது. மிருங்கள் அங்கே இங்கே என ஓடின.

“கோக்கி ...அரவிந்த்...அங்கே ஏதோ மின்னுது பாரு!” – பொம்மு.

“ஆம்...மின்னுது...” – அரவிந்த்.

“அங்கேயா?....எனக்கு ஒன்னும் தெரியலயே?” – கோக்கி அந்த இடத்தை பார்த்து.

“உன் கண்ணுக்கு தெரில? அதோ மின்னுது பாரு?” – பொம்மு.

ஆனால் கோக்கிக்கு எதுவும் தெரியவில்லை. பொம்மு மெல்ல நகர்ந்து அந்த அறையின் முலைக்கு சென்றாள். கோக்கியும் அரவிந்தும் பயத்தில் அந்த பதுங்கியபடி இருந்தனர்.  அங்கே அந்த முலையில் ஒரு சவப்பெட்டி ஒன்று இருந்தது. அந்த சவப்பெட்டியில் இருந்த ஓட்டை வழியாக தான் அந்த மின்னும் ஒளி வந்தது. பொம்மு குனித்து அந்த சவப்பெட்டியில் ஏதோ எழுதி இருப்பதை கண்டாள். அந்த சவப்பெட்டி மேல்

சகானியன்

என்று எழுதியிருந்தது. பொம்மு அந்த சவப்பெட்டியை மெல்ல திறந்தாள். உள்ளே சகானியனின் எலும்புகள்தான் இருந்தது. பொம்மு சகானியனின் மண்டையோட்டை பார்த்தபோது. அந்த மண்டையோட்டில் மின்னும் எழுத்துக்கள் இருந்தன. அதிலிருந்துதான் பொம்முவுக்கு மின்னும் ஒளியானது தெரிகிறது. பொம்முவுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் சகானியனின் ஜென்மரகசியத்தை பொம்முவால் பார்க்க முடிகிறது. பொம்மு அந்த மண்டையோட்டை எடுத்தாள். அதில் இருக்கும் எழுத்துக்களைபடிக்க ஆரம்பித்தாள்.

இந்த உலகத்தில் எதையும் அழிக்கும் சக்திகொண்ட பிரம்மாஸ்திரம்

குமரிகாண்டத்தில் இருந்து தொலைந்து வந்த பிரம்மாஸ்திரம் கடலில் உனக்கு கிடைக்கும்

நீ அதை சேர்க்க  குமரிகாண்டம் செல்லலாம்....ஆனால் அதற்குள் நீ அந்த ஷானுதாவால்  கொல்லப்படுவாய்

அந்த பிரமாஸ்திரம் அந்த குமரிகாண்டத்தின் கரையிலேயே புதைந்து இருப்பதை எவரும் அறியமாட்டார்கள்.

நீ இறந்தவுடன் அடுத்து  நாலாவது ஜென்மமாக நாயாக பிறப்பாய். ஆனால் உனக்காக உன் அடிமைகளான உன்னுடைய ஆயிரம் ஆவிகள் உனக்காக போராடுவார்கள்.

பொம்முவுக்கு அதிர்ச்சி சகானியன் தான் அவளுடைய மூன்றாம் ஜென்மம்.

ல்லாரும் நிறுத்துங்க.....” – பொம்முவின் சத்தத்தில் அங்கே கப்பலில் நடந்த கலவரம்ஒரு நிமிடம் நின்றது.

பொம்மு அந்த கப்பலின் அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் பின்னே அரவிந்த் மற்றும் கோக்கி பயத்துடன் வந்தனர்.

எல்லா ஆவிகளும் அவள் கையில் சகானியன் மண்டையோடு இருப்பதை கண்டனர்.

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எங்க எஜமானின் மண்டையோட்டை தொடுவ....” – என்று ஆவிகள் கத்தியது.

“எனக்கு இதை தொட உரிமை இருக்கு.” – பொம்மு உரக்க.

“என்ன உரிமை இருக்கு ? யாரு நீ?” – ரௌ ஆவி.

“நான் பொம்மு! என்னோட மூணாவது ஜென்மம்தான் சகானியன்....” என்று பொம்மு சத்தமாக

எல்லா ஆவிகளும் அதிர்ச்சியாய் பொம்முவை பார்த்தார்கள். அங்கே இருக்கும் நாய்களுக்கும் அதிர்ச்சி.

“என்ன சொல்ற நீ? உன்னை எப்படி நாங்க நம்பறது!” – அஒரு ஆவி.

பொம்மு அந்த மண்டையோட்டில் இருப்பதை படித்துக் காட்டினாள். உடனே எல்லா ஆவிகளும் பொம்முவின் காலடியில் வந்து மண்டியிட்டன. சிலநிநிமிடங்களுக்கு அங்கே அமைதி காணப்பட்டது.

“நீங்க ஜென்மரகசியத்தில் சொன்னது எல்லாமே உண்மை! எங்க எஜமான் சகானியன் உரிமை உங்களுக்கு இருக்கு! நீங்கதான் இனிமே எங்களோட  அடிமைகள்!” – ஆவிகள்.

“இவங்க எங்க நாட்டு மிருகங்களை கடத்திட்டு வந்திருக்காங்க....இவங்களை கொன்னுட்டு வரணும்னு எங்க அரசர் துருயுகன் எங்களுக்கு உத்தரவு போட்டிருக்காரு... இப்ப யாருக்கு அடிமைகள்னாலும் நாங்க இந்த ஆவிகளை கப்பலோடு அழிக்கத்தான் போறோம்!” என்று அத்தனை நாய்களும் கத்தின

“இவங்க பண்ண தப்புக்கு மன்னிப்பு கேப்பாங்க.....இவங்களை நீங்க எதுவும் பண்ணக்கூடாது” – பொம்மு.

“நீங்க எங்களுக்கு உத்தரவு போட முடியாது....இவங்களை கொல்லவேண்டியது எங்க நாட்டு அரசர் போட்ட உத்தரவு!” – நாய்கள்.

“அப்படினா நான் உங்க நாட்டு அரசர் கிட்ட பேசணும்....அவரு ஒருவேளை நான் பேசின பிறகும் ஆவிகளை அழிக்க சொன்னாருணா நீங்க இந்த ஆவிகளை அழிக்கலாம் !” – பொம்மு உரக்க.        

நாய்கள் சில நிமிடம் கலந்து பேச ஆரம்பித்தனர்.

அந்த மரக்கப்பல் கனிஸ் நாட்டை நோக்கி செல்ல முடிவெடுத்தது.                                            

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.