(Reading time: 78 - 155 minutes)

33. என் இனியவளே - பாலா

ஹேய் நீ உண்மைய தான் சொல்றியா” என்று அடிக் குரலில் சீறிக் கொண்டிருந்தான் இளவரசன்.

“ஆமா ஏன் இப்படி கேட்கறீங்க.”

En Iniyavaleஇளவரசனுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை.

கோபம் மட்டும் அளவுக்கதிகமாக வந்தது.

யாராவது கல்யாணம் ஆன அடுத்த நாளே இனியா மேல கோவப்படுவன்னு சொல்லி இருந்தா சொன்னவங்களை கேலி பண்ணி சிரிச்சிருப்பான். ஆனா இப்ப அது தான் நடந்துட்டு இருக்குது (அப்படி என்ன நடந்துச்சின்னு கேட்கறீங்களா. குட்டி பிளாஷ் பேக் இதோ)

சில நிமிடங்களுக்கு முன்..

ஜோதியும் பாலுவும் ஹனிமூன் பத்தி கேட்டதுக்கு அப்புறம், இனியாவோட அப்பாவும் “ஹனிமூன்க்கு எங்க போகலாம்ன்னு இருக்கீங்க மாப்பிள்ளை” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்.

“இன்னும் அதெல்லாம் டிசைட் பண்ணலை”ன்னு சொன்னா ‘இன்னுமா டிசைட் பண்ணலை, இவ்வளவு நாள் என்ன தான் பேசனீங்கன்ற மாதிரி எல்லாரும் பார்த்தாங்க.

அவர்களிடம் ஏதேதோ சமாளித்து விட்டு இளவரசன் நேராக இனியாவிடம் வந்தான்.

“ஹேய் எல்லாரும் ஹனிமூன் எங்க போறீங்கன்னு கேட்கறாங்க. எங்க டீ போகலாம்”

“இளா. பாரீன் எல்லாம் வேண்டாம். இந்தியாக்குள்ளவே எவ்வளவோ இடம் பார்க்க வேண்டி இருக்கு.”

“ஓகே மேடம். நீங்க இப்ப தான் பார்ம்க்கு வந்திருக்கீங்க. சோ நீங்க சொல்ற இடத்துக்கே போகலாம்.”

“ஹாஹாஹா. அப்படியா. சரி. எனக்கு கேரளான்னா ரொம்ப பிடிக்கும். என்னோட பேவரைட் ப்ளேஸ்.”

“கேரளா வா. நான் நார்த் சைடுல போகலாம்ன்னு நினைச்சேன். சரி விடு. உனக்கு பேவரைட்ன்னு வேற சொல்லிட்ட. கேரளாவே போகலாம். அடிக்கடி நம்ம ஹனிமூன் போவோம். சோ அப்பறமா எனக்கு பிடிச்ச ப்ளேஸ் எல்லாம் போய்க்கலாம்.” என்றான் உற்சாகத்துடன்.

 “ம்ம்ம். ஓகே ஓகே”

“கேரளா போயிட்டு அப்படியே ஊட்டி போயிட்டு வரலாம். ஒன் வீக் பிளான் பண்ணிக்கலாம் ஓகே வா”

“ம்ம்ம். டபுள் ஓகே”

(இது வரைக்கும் எல்லாம் நல்லா தான் போயிட்டிருந்துச்சி)

“ரெண்டு கார் போதுமா இளா”

“என்னத்துக்கு டீ ரெண்டு கார். ஏன் நீ ஒரு கார், நான் ஒரு கார்ல போகணுமா என்ன” என்றான் சிரித்துக்கொண்டே.

“நம்ம எல்லாரும் தானே போக போறோம்.” என்று இனியா கூறவும், அவன் சிரிப்பு அப்படியே உறைந்து விட்டது.

“என்னது”

“என்ன இளா”

“ஏதோ நம்ம எல்லாரும் போக போறோம்ன்னு சொன்னியே”

“ம்ம்ம். ஆமா. நாம எல்லாரும் தான். அத்தை, சந்துரு அக்கா, மாமா, அம்மா, அப்பா, அப்புறம் மோகன் சித்தப்பா, பவித்ரா வந்தாலும் கூட்டிட்டு போகலாம்”

இளவரசனுக்கு வந்தது பாருங்க ஒரு கோபம். (என்ன பண்ணான்னு கேட்கறீங்களா. கோபமா கையை இறுக்கி இனியா முகத்துல குத்துவான்னு பார்த்தா காத்துல கையை வீசறான்.(அவர் கோபத்தை வெளிப் படுத்தறாறாம். என்ன இதெல்லாம் சின்ன புள்ள தனமா)

இனியாவிற்கு அவள் கூறியதற்கு கோபப்பட்டு தான் அவன் அப்படி செய்யறான்னு எல்லாம் தெரியவே இல்லை. “என்ன இளா” என்றான்.

அவனுக்கு இவ தெரிஞ்சி பேசறாளா தெரியாம பேசறாளா என்று குழப்பமாக இருந்தது (பாவம் அவரே கன்புயூஸ் ஆகிட்டாரு)

“ஏண்டி நாம எங்க போறோம்”

“இப்ப தானே பேசி டிசைட் பண்ணோம். ஏன் திரும்ப கேட்கறீங்க. உங்களுக்கு பிடிக்கலன்னா நீங்க சொல்ற ப்ளேஸ்க்கே போகலாம்.”

‘இப்ப அது தான் முக்கியம் என்று மனதில் நினைத்துக் கொண்டு’, “ப்ளேஸ் இப்ப பிரச்சனை இல்ல, நாம எதுக்கு அங்க போறோம்.” என்று கேட்டான்.

“ஹனிமூன்க்கு. “

“இதெல்லாம் நல்லா தெரியுது இல்ல. அப்புறம் ஏதோ டூர் போகற மாதிரி எல்லாரையும் கூட்டிட்டு போகலாம்ன்னு சொல்ற”

“இல்ல இளா”

“நிறுத்து டீ. என்னாச்சி உனக்கு. பர்ஸ்ட் இதை நீ நல்லா நியாபகம் வச்சிக்க. நாம டூர் போகலை. ஹனிமூன் போறோம். ஓகே வா. நீ டபுள் ஓகே சொல்லும் போதே நான் டவுட் பட்டிருக்கணும். எல்லாம் என்ன சொல்லணும்.”

“எனக்கும் எல்லாம் தெரியுது. அது நமக்கு ஹனிமூனா இருக்கட்டும், அவங்களுக்கு டூரா இருந்துட்டு போகட்டும்.” என்றாள் பிடிவாதமாக.

அவளின் பிடிவாத குரலை கண்டவனுக்கு வெறுப்பாக இருந்தது. ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

அவனருகில் வந்து அமர்ந்து அவன் கையை பிடித்துக் கொண்டு “எனக்கென்னவோ எல்லாரும் போகலாம்ன்னு தோணுது இளா. எல்லாரும் போனா எல்லாருமே சந்தோசமா இருப்பாங்க இல்ல” என்றாள்.

அவள் மேல் இருந்தா கோபம் போய் அவனும் இவ சொல்றது சரி தானோ என்று எண்ண தொடங்கி விட்டான். இருந்தாலும் அவனுக்கு யோசிக்க வேண்டி இருந்தது. யோசியாமல் ஏதும் சொல்லி விட அவன் தயாராக இல்லை.

“கொஞ்ச நேரம் யோசிச்சி சொல்றேன்”

“ம்ம்ம்” என்று அவளும் விட்டு விட்டாள்.

பின்பு இரவு உணவிற்கு பிறகு இனியா தனியாக சிக்காததால் இளவரசன் தோட்டத்தில் உலவ சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் பாலுவும் அங்கு வந்து சேர்ந்தான்.

இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்த பிறகு, இளவரசன் “அவர்களின் ஹனிமூன் பிளான் பற்றி (அதாங்க அந்த பாமிலி டூர்) கூறினான்.”

அதைக் கேட்ட பாலு அவனை விசித்திரமாக பார்த்தான். பாலுவிற்கு “ஆர் யூ ஆல்ரைட்’ என்று கேட்க தோன்றியது.

அதை கேட்காமல் விடுத்து “நீங்க ஹனிமூன் போறீங்க நியாபகம் இருக்கா, நாங்க எல்லாம் எதுக்கு” என்று கேட்டான்.

இளவரசனும் ‘அது எனக்கு தெரியுது, அவளுக்கு தெரியலையே’ என்று எண்ணிக் கொண்டான். இருந்தாலும் அவள் சொன்ன பிறகு அதை செய்யாமலும் இருக்க முடியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.