(Reading time: 78 - 155 minutes)

ல்ல இனியா ஆசைப் படுறா. இப்ப எல்லாரும் போனா தான் என்ன. அதுவும் ஜாலியா தான் இருக்கும்” என்றான்.

“இல்லங்க.. என் கிட்ட சொன்ன மாதிரி இதை யார் கிட்டவும் சொல்லாதீங்க. யாரும் வரவும் மாட்டாங்க. அதுவும் இல்லாம ஏதாச்சும் தப்பா நினைச்சிப்பாங்க”

“இதுல தப்பா நினைக்கறதுக்கு என்ன இருக்கு”

“எனக்கு அதெல்லாம் சொல்ல தெரியலை. கல்யாணம் ஆன புதுசுல எல்லாரும் ப்ரைவசி வேணும்ன்னு தான் நினைப்பாங்க. வழக்கத்துக்கு மாறா நாம ஏதாவது செஞ்சோம்ன்னா நம்மளை ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க”

இளவரசன் ஏதும் சொல்லவில்லை.

அவன் முகத்தில் இருந்து என்ன கண்டானோ, “இஸ் எவரிதிங் ஆல்ரைட்” என்றான் பாலு.

இளவரசன் “ம்ம்ம்” என்றான்.

அதற்கு மேல் ஏதும் பேச இயலாதவனாக “ஓகே. பார்த்துக்கோங்க. உங்க டெசிஷனை ரீகன்சிடர் பண்ணுங்க” என்று கூறி விட்டு போய் விட்டான்.

இளவரசனுக்கு ஏதோ தான் மிகப் பெரும் அவமானத்தை சந்தித்து விட்டது போல் ஆகி விட்டது. கோபமாக ரூமிற்கு சென்று விட்டான்.

இவன் சென்ற சிறிது நேரத்திற்குள்ளே இனியாவும் வந்து விட்டாள்.

“இளா” என்று உற்சாகமாக அழைத்துக் கொண்டே வந்தாள் இனியா.

இளவரசனோ கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்தான்.

“என்ன ஏதும் பேச மாற்றீங்க”

“---“

“ஹலோ. என்னாச்சி”

“----“

“என்ன ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்கீங்க”

அதற்கு மேல் பொறுக்க இயலாதவனாக “என்ன வேணும்” என்றான்.

“ஏன் இப்படி கோபமா பேசறீங்க. கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே இப்படி கோபமா பேசறீங்க. இதெல்லாம் சரி இல்லை”

“இங்க என்ன தான் சரியா நடக்குது.”

“இளா”

“ஏண்டி இப்படி பண்ற. நான் தான் சொன்னேன் இல்ல. நீ சொன்ன அந்த டூர் மேட்டர் எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு. அதைப் போய் நான் உங்க மாமா கிட்ட சொல்றேன், அவர் என்ன பரிதாபமா ஒரு பார்வை பார்த்துட்டு இஸ் எவரிதிங் ஆல்ரைட் அப்படின்னு கேட்கறாரு. என்ன ஏதோ ஒரு விதமா பார்த்துட்டு வேற போறாரு” என்றான் கோபத்துடன்.

“நான் சொன்னது உங்களுக்கும் ஓகேன்றதால தானே நீங்களும் அங்க போய் சொல்லி இருக்கீங்க. இப்ப என்ன மட்டும் குறை சொல்றீங்க”

“நீ எது சொன்னாலும் எனக்கு ஓகேன்ற மாதிரி தான் தோணுது. அதை இம்ப்லிமென்ட் பண்ணும் போது தானே அதோட தப்பு எல்லாம் தெரியுது”

“இப்ப என்ன தான் சொல்றீங்க”

“எனக்கு டவுட்டாவே இருக்கு. என்னை ஏன் அவாய்ட் பண்ற. இப்ப இந்த டூர் பிளான் போட்டது நிஜமாவே உனக்கு அப்படி ஆசை இருக்கறதாலயா இல்ல என்னை அவாய்ட் பண்ணணும்ன்ற ரீசனாலயா. அப்படி உனக்கு பிடிக்காம எல்லாம் நாம ஹனிமூன் போக வேண்டாம். ஒரு வேளை என்னை பழி வாங்குவேன்னு சொன்னியே அது தானா இது”

உற்சாகமாக அறைக்குள் நுழைந்த இனியாவின் உற்சாகம் வடிந்தது.

இனியா அமைதியாக அவனை பார்த்தவாறு இருந்தாள். சிறிது நேரம் அப்படியே சென்றது.

அவளின் அமைதியும் பார்வையும் அவனை ஏதோ செய்ய “என்னடா” என்றான்.

ஏதும் கூறாமல் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் இனியா.

“இனியா”

“ம்ம்ம்”

“என் மேல கோபமா”

“ம்ஹூம்”

“பின்ன ஏன் பேச மாற்ற”

நிமிர்ந்து அவனை பார்த்த இனியா “நான் உங்களை அவாய்ட் பண்றேனா இளா. என்னால அப்படி எல்லாம் பண்ண முடியுமா”

“சாரி டா.”

“வேண்டாம். நமக்குள்ள இந்த சாரி எல்லாம் வேண்டாம். எனக்கு கோபம் எல்லாம் வரலை. கஷ்டமா இருக்கு.”

திரும்ப அங்கு அமைதியே நிலவியது.

அவள் மட்டும் கோபமாக பேசி இருந்தால் அங்கு நிலைமையே வேறு மாதிரி ஆகி இருக்கும். அவர்களுக்குள் சண்டை வெடித்திருக்கும். ஆனால் அவளோ நிதானமாக பேசவும், அவனுக்கு தன் தவறு புரிந்தது.

ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் நிதானமாக பேசினாலே சண்டை வராது என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டான்.

“உங்களை அவாய்ட் பண்ணலை இளா. ஏதோ ஒரு தயக்கம். அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை.”

“எனக்கு புரியுது டா. ஏதோ கோபத்துல என்னன்னு யோசிக்காம பேசிட்டேன்”

“எனக்கு என்னவோ எல்லாரும் போகணும்ன்னு ஆசையா இருக்கு இளா. அப்படியே எல்லாரும் வந்தாலும் நம்ம ப்ரைவசிய டிஸ்டர்ப் பண்ணுவாங்களா என்ன”

இப்போது யோசிக்கும் போது இளவரசனுக்கும் சரி என்றே தோன்றியது.

“ம்ம்ம். டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க தான். ஆனா நான் அப்படி கேட்டதுக்கு உங்க மாமா ஒரு ரியாக்ஷன் கொடுத்தாரு பாரு. இதுல எப்படி எல்லார் கிட்டவும் இதைப் பத்தி பேசறதுன்னு தான் எனக்கு தெரியலை”

“உங்களுக்கு இது ஓகே வான்னு மட்டும் சொல்லுங்க. யோசிச்சி சொல்லுங்க. நான் ஏதும் உங்களை கம்பல் பண்ணலை.”

“அது என்னவோ நீ எது சொன்னாலும் எனக்கு ஓகேன்னு தான் தோணுது. அப்படி என்னடீ பண்ண. இது தான் சொக்கு போடி போடறதா”

“போதும். ரொம்ப வழியாதீங்க. விசயத்துக்கு வாங்க”

“நேத்து தான் கல்யாணம் ஆச்சி. என் பொண்டாட்டி. நான் அப்படி தான் வழிவேன். இப்ப என்னங்கற”

“இளா. பீ சீரியஸ். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”

“எனக்கு ஓகே தான். நோ அப்ஜெக்ஷன். போதுமா”

“அப்படின்னா ஓகே. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து எல்லார் கிட்டவும் பேசலாம். அவங்க மெயினா என்ன நினைப்பாங்கன்னா நம்மளை டிஸ்டர்ப் பண்ணிடுவோம்ன்ற மாதிரி நினைச்சிட்டு தான் வர மாட்டேன்னு சொல்லுவாங்க. நாம அதெல்லாம் நமக்கு ஒன்னும் டிஸ்டர்ப் இல்லைன்னு அடிச்சி சொல்லிடலாம். ஓகே வா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.