(Reading time: 78 - 155 minutes)

ய் எனக்கு பிடிக்கும்ன்னு எப்படி தெரியும்” என்றாள்.

“ஹாஹஹா. இதை தெரிஞ்சிக்கறது என்ன பெரிய விஷயமா. ஜெனரலாவே கேர்ள்ஸ்ன்னா இப்படி தான். அதுவும் இல்லாம அத்தை ஒரு நாள் சொன்னாங்க, அவங்க ஏதோ குழந்தைக்கு உன் டெடி எடுத்து கொடுத்துட்டாங்களாம். அதுக்காக நீ அவங்க கிட்ட அப்படி சண்டை போட்டு பேச கூட இல்லையாம். அதுக்கு அப்புறம் வாங்கி கொடுத்தாலும், அதை நீ வச்சிக்கலை, அப்படி இப்படின்னு”

“ம்ம்ம். இதெல்லாம் எப்ப சொன்னாங்க” என்றாள் முகத்தை குழந்தை கோபிப்பதை போல் வைத்துக் கொண்டு.

“எப்பவோ சொன்னா உனக்கு என்னடி, அந்த இன்சிடென்ட்ல இருந்து எங்கயாச்சும் டெடி பார்த்தா கூட அத்தையை முறைப்பியாம். பொம்மையையும் பார்க்காம முகத்தை திருப்பிட்டு போவியாமே. ஆனா இப்ப யாரோ பாக் பிரிச்ச உடனே நூறு வாட்ஸ் பல்ப் போட்ட மாதிரி பிரகாசமா ஆனாங்க.”

“இப்ப என்ன உங்களுக்கு. உங்க கிப்ட் வச்சிக்கனுமா வேண்டாமா. எதுக்கு இப்ப வம்புக்கு இழுக்கறீங்க. என்னோடதை எடுத்து யாருக்கோ கொடுத்தா கோபம் வராதா”

“ஹேய் சின்ன பசங்க வீட்டுக்கு வந்தா அப்படி தான், நீ அப்பவே காலேஜ் தான் படிச்சிட்டு இருந்தியாமே. அப்ப நீ தானே அட்ஜஸ் பண்ணி விட்டு கொடுக்கணும்”

“இளா சிலதுல சின்னவங்க பெரியவங்கன்னு எல்லாம் கிடையாது. எல்லாருக்கும் சிலது வந்து அவங்களுக்கே அவங்களுக்குன்னு மனசு பிக்ஸ் பண்ணி வச்சிருக்கும். அதை அப்படி எல்லாம் எடுத்து கொடுத்தா தாங்க முடியாது”

“சரி. நாளைக்கு நமக்கும் குழந்தை பிறக்க தான் போகுது, அவங்களும் பெரிசாவாங்க, அப்ப ஏதாச்சும் சின்ன குழந்தை வந்து நம்ம பசங்களோடதை ஆசை பட்டு கேட்டா முடியாதுன்னு உன்னால சொல்ல முடியுமா.”

“கண்டிப்பா குடுக்க மாட்டேன். அந்த குழந்தையை கடைக்கு கூட்டிட்டு போய் புதுசா ஒரு பொம்மை வாங்கி கொடுத்துடுவேன், அதுக்காக என் பசங்களோட பீலிங்க்ஸ்ல எல்லாம் விளையாட மாட்டேன்”

“சரி விடுடீ. இப்ப இது வேணுமா வேணாமா.”

“என்ன இப்படி கேட்கறீங்க. அதை நீங்க எனக்கு குடுத்துட்டீங்க. சோ அதுல உங்களுக்கு ரைட்ஸ் இல்ல. ஓகே”

“ஓ சரிங்க மேடம்”

டுத்த நாள் காலை அவன் எந்திரித்த போது இனியா அங்கு இல்லை. விடிந்தும் நேரம் ஆகி விட்டிருந்தது. டைம் பார்த்தவன் இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா, நைட் தூங்கினா தானே என்று நொந்துக் கொண்டே எழுந்தான்.

காலையிலேயே கார்த்திக் போன் செய்தான். இளவரசன் அவனிடம் பேசி விட்டு இனியாவிடம் கொண்டு போய் போனை கொடுத்தால் அவள் பேச மாட்டேன் என்று அடம் பிடித்தாள். அப்புறம் அவளிடம் கெஞ்சி தாஜா செய்து போனைக் கொடுத்தான்.

அப்போதும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு கொஞ்சம் கோபமாக தான் பேசினாள்.

“ஹலோ அக்கா”

இப்போது அவன் குரல் கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது. வார்த்தைகள் கொஞ்சம் தெளிவாக வந்தது.

“நீ தான் எங்க மேரேஜ்க்கு வரலைல்ல நீ ஒன்னும் என் கிட்ட பேச வேண்டாம்”

“சாரிக்கா ரொம்ப சாரி. நாங்க இங்க கேரளால ஒரு ஆயுர்வேத ஹாஸ்பிடல்க்கு வந்திருக்கோம். இங்க வந்ததுல இருந்து கொஞ்சம் பரவாயில்லை. உங்க மேரேஜ்க்கு வரணும்ன்னு நான் கூட அடம் பிடிச்சேன். ஆனா இங்க இருக்கறவங்க எங்கயும் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்கக்கா. சாரி. உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றவுடன் இனியா உருகி விட்டாள்.

“சாரி கார்த்தி. நான் தான் சாரி கேட்கணும். நீ உடம்பை பார்த்துக்க என்ன, இப்ப உன் வாய்ஸ் கூட கொஞ்சம் பெட்டெரா இருக்கு. கூடிய சீக்கிரமே உனக்கு நல்லா ஆகிடும். அப்புறம் நீ இங்க தானே வருவ. அப்புறம் நாம அடிக்கடி மீட் பண்ணலாம் என்ன. ஏய் இரு. நாங்க கூட ஹனிமூன்க்கு கேரளா தான் வரப் போறோம். நான் உன்னை வந்து பார்க்கறேன் சரி. நீ அட்ரெஸ் கொடு” என்று அவனிடம் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

“ம்ம்ம். இப்ப உன் கோபம் போச்சா. நாங்க சொல்றதையே கேட்காம கோபப் பட வேண்டியது.” என்றான் இளவரசன்.

“ஹிஹிஹி”

“சிரிக்காத, அவன் நம்ம மேரேஜ்க்கு வர முடியலைன்னு எவ்வளவு பீல் பண்ணான் தெரியுமா, வந்தே ஆவேன்னு ஒரே அடமாம். அவங்க அம்மா வேற எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. நான் தான் அப்புறம் அவனை பேசி சமாதானப் படுத்தினேன். நீ சொன்ன மாதிரி நாம அவனை போய் பார்க்கலாம்.”

ன்று முழுக்க அவன் வேலை எல்லோரையும் அவர்கள் ஹனிமூன் செல்லும் போது எல்லோரும் செல்வதற்கு எல்லோரையும் சம்மதிக்க வைப்பதாக தான் இருந்தது.

ஆனால் அப்படி எல்லோரையும் சம்மதிக்க வைக்க அவன் மிகவும் கஷ்டப்பட வேண்டியதாகி விட்டது.

முதலில் சுத்தமாக மறுத்தவர்கள் சிறியவர்கள் வேண்டுமானால் வரட்டும், நாங்க வர மாட்டோம் என்று ஒரே அடியாக பெரியவர்கள் மறுத்தார்கள்.

எப்படியோ எல்லார் கைல கால்ல விழாத குறையா இளவரசன் சம்மதம் வாங்கிய பிறகும், அன்று மூன்றாம் நாள் அவனின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், எல்லோரும் செல்வதனால் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் செய்து விட்டு கிளம்ப இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லி விட்டார்கள்.

இளவரசனோ இனியாவை சோகமாக பார்க்க, அவளோ சிரித்தாள்.

அடுத்த நாள் இளவரசன் வீட்டில் இருக்கும் போது போட்டோ ஆல்பமும், வீடியோ சிடியும் வந்தது.

சந்துரு பாலுவுக்கு போன் செய்ய அவன் எல்லோரையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.

அவர்கள் வருவதற்குள் இங்கே ஆல்பம் பார்க்க எடுத்த இனியாவிடம் இருந்து சந்துரு ஆல்பத்தை பிடுங்கி சீண்டிக் கொண்டிருந்தான்.

கடைசியில் இளவரசன் தான் சந்துருவின் முதுகில் ஒரு அடி வைத்து அவனிடம் இருந்து ஆல்பத்தை பிடுங்கி அவளிடம் கொடுத்தான்.

“அண்ணா நீ இப்பவே இப்படி அண்ணிக்கு சப்போர்ட் பண்ண கூடாது. சொல்லிட்டேன்”

“போடா” என்று அவன் பேச்சை மதிக்காமல் இளவரசன் இனியாவுடன் அமர்ந்து ஆல்பம் பார்க்க ஆரம்பித்தான்.

“வரவர என் பேச்சுக்கு மதிப்பே இல்லாம போச்சி” என்று புலம்பி விட்டு அவனும், அவர்களோடு சேர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.

ஒவ்வொரு போட்டோவிற்கும் சந்துரு ஒவ்வொன்று கூறி கேலி செய்துக் கொண்டிருந்தான்.

இளவரசன் இனியாவிற்கு ரிங் போட்ட போட்டோவை நிறைய ஆங்கிள்களில் எடுத்திருந்தார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.