(Reading time: 78 - 155 minutes)

வனை பார்த்த பாலு “என்னடா ஓவரா சிரிக்கிற, உன் கதை எங்களுக்கு தெரியாதா. பொண்டாட்டிக் கிட்ட தோப்புக்கரணம் போடறவன் தானே நீ” என்று கூறினான்.

“அதெப்படி உங்களுக்கு தெரியும்” என்றான் சந்துரு.

“அப்படின்னா நிஜமாவே அது தான் நடக்குதா” என்று பாலு கேட்க அங்கே சிரிப்பலை தொடர்ந்தது.

‘அப்ப நாம தான் வாயை விட்டோமோ’ என்று உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தான் சந்துரு.

இப்போது பவித்ரா உள்ளே நுழைய பார்க்க, மற்ற இருவரும் அவளை விடாமல், இங்கேயே இருக்குமாறு எச்சரித்தனர்.

மற்ற இருவரும் சந்துருவை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, அவனோ கடவுளே என்று நொந்துக் கொண்டான்.

“என்னடா. டெய்லி தோப்புக்கரணம் போடுவியோ” என்று பாலு அவனை சீண்ட,

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை” என்றான்.

“ஹேய் உண்மையை சொல்லு டா”

சந்துரு “சொல்லுவேன், பட் இதை சொல்லி கிண்டல் பண்ணக் கூடாது, சரியா” என்று சொல்ல இருவரும் தலையை நன்றாக ஆட்டினார்கள்.

அப்போது திரும்ப பவித்ரா அவசரமாக நுழைய முற்பட, இனியாவும், ஜோதியும் அவளை பிடித்து இழுத்து அவள் வாயை வேறு மூடினார்கள்.

“இல்ல. நான் தான் ஸ்டார்டிங்ல ரொம்ப சொதப்பினேன் இல்ல ஸ்வேதா விசயத்துல”

“ம்ம்ம்.”

“அதனால பவித்ராவுக்கு ரொம்ப கோபம். அதனால தான் நானே மேரேஜ் வேண்டாம்ன்னு எல்லாம் சொல்லிட்டேன்”

“அதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே. நீ மேல சொல்லு”

“அப்புறம் அப்படி இப்படி கல்யாணமும் பிக்ஸ் ஆகி, மேரேஜ்க்கு முன்னாடி கூட அதை சொல்லி சாரி கேட்டேன், அவ அப்ப எல்லாம் அதைப் பத்தி பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டு பர்ஸ்ட் நைட்ல வந்து என்னை தோப்புக்கரணம் போட வச்சிட்டா” என்றான் அப்பாவியாக.

எதிரில் இருந்த இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தனர்.

இங்கு ஜோதி, இனியா நிலைமையும் அது தான்.

பின்பு பேச்சு எங்கெங்கோ சென்று இளவரசனிடம் வந்து நின்றது.

“நீங்க யாரு, ஹனிமூன்க்கு பாமிலியையே கூட்டிட்டு போனவர் தானே”

“ஏங்க அந்த கொடுமையை கேட்கறீங்க. முதல்ல அவ சொன்ன உடனே நான் நம்பவே இல்லை. ஆனா அவ அவளோட டெசிஷன்ல ஸ்ட்ராங்கா இருந்தா என்ன பண்றது, அப்புறம் அவ விருப்பம் தான் நடந்தது” என்று பேச ஆரம்பித்து அவ வேம்பயர் படம் பார்த்தது, ரன்பீர் கபூர் படம் பார்த்து சிரித்து பயமுறுத்தியது என்று எல்லாம் சொல்லி முடித்தான்.

இந்த முறை ஜோதியும், பவித்ராவும் அவளை பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தனர்.

பாலு “ஏன் சகலை, முன்னாடி எல்லாம் இனியாவை வெறுப்பேத்த நிறைய சாங் பாடுவீங்களே இப்ப ஏன் அந்த மாதிரி ஒன்னும் பாடறதே இல்லை, ஏன் இனியாவும் உங்களை தோப்புக்கரணம் போட வச்சிடுவேன்னு பயமுறுத்தி வச்சிருக்கா” என்றான்.

“சே சே. எனக்கென்ன பயம். பாட்டு தானே கேட்டீங்க. இதோ பாடறேன்” என்று யோசித்து விட்டு,

ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி           மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி                 நான் இருந்தேன் தேருக்குள்ளே இப்ப விழுந்தேன் சேறுக்குள்ளே         நான் இருந்தேன் தேருக்குள்ளே இப்ப விழுந்தேன் சேறுக்குள்ளே           ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி         மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி

என்று பாட அதற்கு மேல் சுத்தமாக பொறுக்க முடியாமல் இனியா அவள் கைகைளை இருவரிடமிருந்து விலக்கிக் கொண்டு அவனிருந்த இடத்திற்கு வந்தாள்.

இனியா கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அவனை முறைக்க முதலில் அவன் இனியாவை கவனிக்கவில்லை. பாட்டை தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தான்.

சந்துரு தான் கவனித்து விட்டு இளவரசனை தோள் தொட்டு அழைத்தான், கண்ணை திறந்தவன் இனியா ரௌத்திரமாக எதிரில் நிற்பதைக் கண்டு “ஐயய்யோ” என்று கத்தி விட்டான்.

“என்ன பாடனீங்க” என்று கேட்டவாறு அவள் அவனருகே வர அவனோ ஓட ஆரம்பித்தான்.

எப்படியோ அவளை ஏமாற்றி விட்டு கீழே தோட்டத்திற்கு ஓடிப் போய் விட்டான். இனியாவும் அவனை துறத்திக் கொண்டே ஓடினாள்.

எல்லோரும் அவர்களை தொடர்ந்து சிரித்துக் கொண்டே கீழே செல்ல, யாழினியும் கீழே விடும்படி அடம் பிடித்து அவர்களுடன் ஓடினாள்.

 

(ஒரு வழியா கதை முடிஞ்சிடுச்சி, எல்லாரும் இந்த சினிமால எல்லாம் வர மாதிரி இனியா, இளவரசன், யாழினி ஓடிட்டே இருக்கற மாதிரியும் பாக்ரவுண்ட்ல அவங்கவங்களுக்கு பிடிச்ச சாங் போற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க.)    

முற்றும்!

En Iniyavale - 32

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.