(Reading time: 78 - 155 minutes)

ப்படி இப்படி என்று ஒரு வருடமே கழிந்து விட்டது. ஆனால் இப்போதும் யாராலும் சந்துருவிடமோ இல்லை பவித்ராவிடமோ பாசிட்டிவாக ஒரு பதிலை வாங்க முடியவில்லை.

சந்துருவிற்கு ராஜலக்ஷ்மி போன் செய்தார்.

“ஹலோ அம்மா. சொல்லுங்க”

“நீயும் இப்ப வரேன், அப்ப வரேன்னு வராம அங்கேயே இருக்க, இப்ப நீ வர வேண்டிய டைம் வந்துடுச்சி, இப்பவாச்சும் வா, இல்லன்னா நம்ம வீட்டு பங்க்ஷன்க்கு கூட நீ வரலைன்னு பேசுவாங்க” என்றார்.

“என்ன விசேசம்மா. அண்ணிக்கு வளைகாப்பு செய்யக் கூட இன்னும் நாள் இருக்கே. என்ன விசேசம்” என்றான்.

“நம்ம பவித்ராவுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருக்காங்க டா. நிச்சயம் வச்சிருக்காங்க. கல்யாணமும் விரசா முடிச்சிடுவாங்களாட்டும் இருக்கு. அதான் நீ இதுக்கு வரர்துக்காகவாவது இங்க வந்துட்டு போ, அதுவும் இல்லாம உங்க அண்ணனே உன்னை இங்கேயே வர சொல்லிடலாம்ன்னு இருக்கான். நீ மட்டும் அங்க தனியா இருக்கறது கஷ்டமா இருக்கு” என்று பேசிக் கொண்டே போனார்.

ஆனால் சந்ட்ருவிற்கோ அவர் முதலில் சொன்ன விஷயம் தவிர வேறு எதுவும் அவன் காதுகளில் விழவில்லை.

“நிச்சயம் எங்கம்மா”

“அது இங்க சென்னைல தான் டா. மாப்பிள்ளை இங்க தானாம். உங்க அண்ணன் கல்யாணத்துல பார்த்துட்டு பிடிச்சி போய் ரொம்ப நாளா கேட்டுட்டே இருந்தாங்களாம். என் தம்பி இப்ப தான் சரின்னு சொல்லியிருக்கான்”

அண்ணனோட கல்யாணத்துல என்று சொன்னவுடன் அந்த திருமணத்தில் சிலர் பவித்ராவை சைட் அடித்துக் கொண்டிருந்தது தேவையில்லாமல் அவன் நியாபகத்தில் வந்து வெறுப்பேற்றியது. அவர்களில் யாரோ ஒருவர் தான் என்று அவர்களின் முகத்தை நியாபகப்படுத்த அவன் மூளை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது.

போனை காதிலேயே வைத்துக் கொண்டு இதை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் சுய நினைவுக்கு வர லைன் எப்போதோ கட் ஆகி விட்டிருந்தது.

அன்று அவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.

அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்த கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்று தான். பவித்ரா இதற்கு சம்மதித்து விட்டாளா? என்பது தான் அது.

அதை தெரிந்துக் கொள்ள அவன் மனம் ஆசைப்பட்டாலும் எப்படி அதை தெரிந்துக் கொள்வது, இப்போது யாரிடம் இதைக் கேட்டாலும், நான் அப்பவே சொன்னேன்ல்ல நீ தான் டைம் வேஸ்ட் பண்ணிட்ட என்று சொல்வார்கள்.

பவித்ரா அவன் வீட்டில் தான் தங்கி வேலை செய்து கொண்டிருந்தாள். ஆனால் இப்போது திருமணம் பிக்ஸ் ஆகி விட்ட நிலையில் இங்கிருக்கிறாளா என்று தெரியாது. அம்மாவிடமும் இதைப் பற்றிக் கேட்க முடியாது. இப்போது கேட்டால் அவர் அவனை பற்றி என்ன நினைப்பார். ஜோதி அண்ணி, இனியா அண்ணி, அண்ணன் என்று யாரிடமாவது கேட்கலாம். ஆனால் ஏனோ அவனுக்கு நேரில் சென்று பவித்ராவிடமே கேட்க தோணியது.

சந்துரு அடுத்த நாள் இரவு ப்ளைட் பிடித்து நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தான்.

நள்ளிரவில் வீட்டு காலிங் பெல் அடிக்கவும், இனியா தான் வந்து கதவை திறந்தாள்.

வெளியில் சந்துருவை பார்த்தவளுக்கு ஷாக்காக தான் இருந்தது.

“என்ன சந்துரு. இந்த நேரத்துல வந்திருக்கீங்க. சொல்லி இருக்கலாம் இல்ல”

“இல்ல அண்ணி. ஏதோ வரணும்ன்னு தோணுச்சி. அதான் சர்ப்ரைஸா வரலாம்ன்னு வந்தேன்” என்று ஏதேதோ சொல்லி சமாளித்தான்.

யாரையும் எழுப்ப வேண்டாம், காலையில பார்த்துக்கறேன் என்று கூறி விட்டு தன்னறைக்கு சென்று விட்டான்.

போகும் போதே பவித்ரா தங்கி இருந்த அறையை பார்த்துக் கொண்டே சென்றான். ஆனால் அவள் இருக்கிறாளா இல்லையா என்று ஏதும் தெரியவில்லை. மனதை என்னென்னவோ சொல்லி சமாதானம் செய்து கொண்டு போய் விட்டான்.

காலையில் சந்துருவை பார்த்த எல்லோருக்கும் சந்தோசமாகி விட்டது. இளவரசனுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. அவன் இதை எதிர்ப்பார்த்தே இருந்தான்.

பவித்ரா அங்கு இல்லை என்பது சந்துருவிற்கு தெரிந்து விட்டது.

யாராவது அவளை பற்றியோ, இல்லை இப்பவாச்சும் உன் மனசுல என்ன இருக்கு என்றோ கேட்பார்கள் என்று அவன் எதிர்ப்பார்த்திருக்க யாரும் அவனை அப்படி கேட்கவே இல்லை.

அவன் அம்மாவிடம் “பவித்ராவுக்கு எப்ப நிச்சயம்” என்று கேட்டான்.

“இரண்டு நாட்களில்” என்று சொல்லி அவன் மனதை வெடிக்க வைத்தார் ராஜலக்ஷ்மி.

அவனே பொறுக்க முடியாமல் அவன் அண்ணனிடம் இதை பற்றிக் கேட்க, “நாங்க உன் கிட்ட எவ்வளவோ சொன்னோமே டா. அடிக்கடி இதைப் பத்தி கேட்டுக்கிட்டே தான் இருந்தோம். நீ தான் சரியா பிடிக் கொடுக்கலை, இந்த விஷயம் எல்லாம் மாமாக்கு எதுவுமே தெரியாதே, அவர் அவரோட பொண்ணுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணா நாம என்ன பண்றது. நீ சரியான ஒரு பதில் சொல்லாம நாங்க எப்படி பேச முடியும்” என்றான்.

அதற்கு மேல் சந்துரு என்ன சொல்ல முடியும்.

“பவித்ராவுக்கு இஷ்டம் தானா” என்றுக் கேட்டான்.

“அப்படி தான் நினைக்கறேன், அவர் பொண்ணுக்கு விருப்பம் இல்லாமலா அவர் மேரேஜ் பிக்ஸ் பண்ணுவாரு” என்று வேறு கேட்டு வைத்தான் இளவரசன்.

ரக வேதனையாக இருந்த அந்த இரண்டு நாட்களும் சென்று நிச்சய நாளும் வந்தது.

முதலில் பவித்ரா குடும்பத்தினர் இங்கு வருவதாக சொல்லப்பட்டது.

சந்துருவும் எப்படியாவது அவளிடம் ஒரு வார்த்தை பேசியே தீர வேண்டும் என்று எண்ணியிருக்க, கடைசியில் அவர்கள் நேராக மண்டபத்திற்கு வருகிறார்கள் என்று கூறி விட்டனர்.

சந்துருவிற்கு நிமிடத்திற்கு நிமிடம் பிரஷர் ஏறிக் கொண்டிருந்தது.

சீக்கிரமாகவே மண்டபத்திற்கு சென்று விட்டுக் காத்துக் கொண்டிருந்தான்.

ஜோதி குடும்பத்தோடு வந்து சேரவும், அவளை பார்த்த சந்துருவிற்கு கடுப்பாக இருந்தது.

எல்லாரோட லவ்க்கும் விழுந்து விழுந்து ஹெல்ப் பண்ண வேண்டியது. என்னை மட்டும் நட்டாத்துல விட வேண்டியது என்று அவன் மனதிற்குள் பொருமியது ஜோதிக்கு வெளியேவே கேட்டது (அவ்வளவு சத்தமாவா கேட்குது)

ஒரு வழியாக பவித்ராவை அலங்காரத்தில் குடும்பத்தோடு கூட்டிக் கொண்டு வந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.