(Reading time: 78 - 155 minutes)

ரியாக பண்ணிரண்டு மணி ஆனவுடன் அவளருகே சென்று “ஹாப்பி பர்த்டே.” என்று சொல்லி விட்டு அறையில் மெல்லிய விளக்குகளை போட்டான். அறை முழுக்க பலூன்கள் ஓட்டப் பட்டிருந்தது.

“ஓ ஆமா இன்னைக்கு என் பர்த்டே இல்ல” என்றாள்.

சந்துரு சிரித்துக் கொண்டிருந்தான்.

நடுவில் கேக் வைத்திருந்தான்.

ஜன்னலையும் சென்று சாத்தி விட்டு, மியூசிக் பிளேயரை ஆன் செய்ய, அதில்

ஹம் தேரே பினு அபி ரேனேய் சக்குதே                                     

தேரே பினா க்யாவ ஜூடு மேரா                                             

துஜ் சே ஜூடா கரு ஹோ ஜாயேங்கு                                        

குஜு சே ஹீ ஹோ ஜாயேங்கு ஜூ தா                                           

டும் ஹி ஹோ, அபு டும் ஹி ஹோ                                     

ஜிந்தகி அபு டும் ஹி ஹோ 

என்று பாடல் ஒலிக்க அவளை கேக் வெட்ட செய்தான்.

வித்ராவின் மனம் சந்தோசத்தில் பறந்தது. அவளுக்கே அவள் பிறந்த நாள் நியாபகம் இல்லை, ஆனால் சந்துரு நியாபகம் வைத்துக் கொண்டு, இந்த பிறந்த நாளை இவ்வளவு ரொமாண்டிக்காக ஆக்கி விட்டான்.

கேக் வெட்டி இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக் விட்டு பின்பு நெடுநேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“பவி. நிஜமாவே நான் உன்னை விரும்பறேன், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மெடூரிட்டி இல்லாம நான் ஏதேதோ பண்ணிட்டேன். ஆனா உன்னை பார்த்த பிறகு எனக்கு உண்மையான லவ்ன்னா என்னன்னு தெரிஞ்சிடுச்சி. அதுக்கே நாம பேசிக்க கூட இல்லை. ஆனா உன் கண் சொல்ற விஷயம் எனக்கு புரிஞ்சது. நீ கஷ்டப்பட்டா என் மனசு தாங்கலை. நான் அங்க இருக்கும் போதும் தினம் தினம் உன் நியாபகம் தான். உனக்கு இன்னும் என்ன சொல்லி புரிய வைக்கறதுன்னு எனக்கு தெரியலை”

“எனக்கு புரியுது. நீங்க சொல்லாம விட்ட விஷயங்கள் கூட எனக்கு புரியுது. நாம இதைப் பத்தி இப்ப பேச வேண்டாம் ஓகே வா. லீவ் இட். இந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன், இப்போத்தைக்கு இந்த நிமிடங்களை தான் என்ஜாய் பண்ண விரும்பறேன். சோ அதை பத்தி பேச வேண்டாம்”

“சரி ஓகே”

ரு வழியாக சந்துரு பவித்ரா திருமணமும் வந்து விட்டது. இனியாவிற்கு ஏழாவது மாதம் நடந்துக் கொண்டிருந்தது.

அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு ஏதாவது செய்துக் கொண்டே இருந்தாள்.

இளவரசன் தான் எந்த வேலையையும் செய்ய முடியாமல் அவள் பின்னால் திரிந்துக் கொண்டிருந்தான்.

“ஏய் இனியா. நில்லு”

“என்னங்க. எந்த வேலையும் பார்க்காம ஏன் என் பின்னாடியே வரீங்க”

“நீ ஏன் டீ குழந்தையை வயித்துல வச்சிக்கிட்டு இப்படி ஓடிக் கிட்டே இருக்க”

“ஐயோ இளா. இது என் மச்சினன் கல்யாணம், அப்புறம் என் தங்கச்சி கல்யாணம். நான் வேலை செய்யாம வேற யார் செய்வா”

“அதெல்லாம் செய்ய நிறைய ஆள் இருக்கு. நீ உன்னை போட்டு கஷ்டப் படுத்திக்காத. அப்புறம் வந்து ஐயோ இளா கால் வலிக்குதுன்னு சொன்ன அடி தான் வாங்குவ”

“அடிப்பீங்களா” என்று கண்ணை முழித்து முழித்துக் கேட்டாள்.

வந்த கொஞ்ச நஞ்ச கோபமும் பறந்தோட “ஏன் டீ இப்படி பண்ற. கொஞ்ச நேரம் இப்படி வந்து உட்காரு. நான் போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன், அதையாச்சும் குடி” என்று அவளை அமர வைத்து விட்டு போய் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து பார்த்தால் அவள் அங்கு இல்லை.

“ஐயோ” என்று புலம்பிக் கொண்டே அவளை தேடிக் கண்டுபிடித்து வலுக்கட்டாயமாக அவளை ஜூஸ் சாப்பிட வைத்தான்.

எல்லோரும் சந்துருவையும் பவித்ராவையும் கிண்டல் செய்தார்களோ இல்லையோ இவர்களை மாற்றி மாற்றி கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.

“ஏங்க எங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆகிடுச்சி. போய் அவங்களை கிண்டல் பண்ணுங்க” என்று கூட சொல்லி பார்த்தான் இளவரசன் ஜோதியிடம்.

“ம்ம். கரெக்ட் தான். ஆனா நீங்க தானே இன்னும் புது கல்யாண ஜோடி மாதிரி ஒன்னாவே சுத்திக்கிட்டு விழுந்து விழுந்து கவனிச்சிக்கிட்டு இருக்கீங்க”

இப்படி ஏகப்பட்ட கிண்டல்களுடன் அந்த திருமணம் நன்றாக நடந்து முடிந்தது.

ரண்டு வருடங்களுக்கு பிறகு,

ஜோதி அவள் குடும்பத்துடன் இனியாவின் வீட்டிற்கு வந்திருந்தாள்.

நாள் முழுக்க ஒரே அரட்டை கச்சேரியாக இருந்தது. அதிலும் எல்லோருக்கும் இனியா இளவரசனின் ஒன்றரை வயது மகள் யாழினி தான் பொழுது போக்கு.

“அம்மா அப்பாவை எப்படிம்மா மிரட்டுவாங்க” என்று கேட்டால், சூ என்று வாயில் விரல் வைத்து, சும்மா இருங்க இளா என்று அவள் மழலைக் குரலில் இனியாவை போலவே செய்து காண்பித்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இளவரசன் தான் “இதுக்கு தான் இனியா சொல்றது, குழந்தை முன்னாடி இப்படி எல்லாம் பண்ணாதன்னு பார்த்தியா, இப்ப இப்படி மானம் போகுது” என்று கூறி அவளை மேலும் கொலை வெறிக்கு ஆளாக்கி கொண்டிருந்தான்.

“உங்களை கவனிச்சிக்கறேன்” என்று அவள் கூற, “பார்த்தீங்களா, இப்பவே இப்படி மிரட்டறா” என்று சொல்லி அவள் மானத்தை வாங்கினான்.

இப்படியே அந்த நாள் முழுவதும் சந்தோசமாக சென்றது.

பெண்கள் அனைவரும் சமையல் வேலையை பார்க்க, ஆண்கள் அனைவரும் அபியையும், யாழினியையும் கவனித்துக் கொண்டே மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் வேலையை எல்லாம் முடித்து விட்டு பெண்கள் அனைவரும் மாடிக்கு செல்ல, பாலு ஜோதி எப்படி கோபப்படுவாள், அப்போது அவன் எப்படி முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொள்வான் என்று கூறிக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

கோபமாக அங்கு செல்ல எத்தனித்த ஜோதியை பவித்ராவும், இனியாவும் தடுத்து நிறுத்தி இன்னும் என்ன தான் சொல்றாருன்னு கேட்கலாம் என்று நிறுத்தி வைத்து அவர்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்தனர்.

பாலு இது ஏதும் தெரியாமல் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

“அதுலயும் அவ சொல்றது சரியா தான் இருக்கும், ஆனா நான் அதெல்லாம் சரி வராதுன்னு சண்டை போட்டு வேற ஏதாச்சும் தப்பா செஞ்சி வைப்பேன், அப்ப அவ முறைப்பா பாருங்க” என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தான்.

சந்துரு தான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.