(Reading time: 78 - 155 minutes)

ங்கிருந்த காட்சிகள் எல்லாம் கண்ணைக் கவரும் விதமாக இருந்ததால் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. அப்படியே எவ்வளவு நேரம் நின்றாலோ, இளவரசன் அவளருகே வந்து கத்தவும் பயந்து திரும்பினாள்.

ஒரு நிமிடம் இனியாவின் கண்கள் கலங்கி விட்டது. “என்ன இளா பயமுறுத்திட்டீங்க” என்றாள்.

“ஏய். அதுக்கு ஏண்டி உன் கண் இப்படி கலங்கிடுச்சி. என்ன விட்டுட்டு தனியே வந்து இங்க நிக்கறியேன்னு சும்மா விளையாடலாம்ன்னு பண்ணேன். என்ன நீ இப்படி பயப்படற”

“இல்ல என்னையே மறந்து இங்க நின்னுட்டு இருந்தேன், நீங்க திடீர்ன்னு இப்படி பண்ணவும் தூக்கி வாரிப் போட்டுடுச்சி”

“சரி. ஏண்டி இங்க நின்னுட்டிருக்க” என்று கேலி குரலில் கேட்டான்.

இனியா தலை குனிந்துக் கொண்டு “எல்லாரும் தேடுவாங்க, போலாமா” என்றாள்.

“அது உனக்கு இப்ப தான் தெரியுதா, நான் எந்திரிச்ச அப்ப நீ இல்லை, சரி யாரோட ரூம்க்காச்சும் போயிருப்பேன்னு பார்த்தா, நான் ரெடி ஆகறதுக்குள்ள உங்க அக்கா வந்து நீ எங்கன்னு என்னை கேட்கறாங்க. ஏண்டி நான் என்ன சொல்லுவேன், நீயே சொல்லு, கல்யாணம் ஆகி ஐஞ்சி ஆறு நாள் தான் ஆச்சி, அதுக்குள்ளே பொண்டாட்டியை தொலைச்சிட்டேன்னா சொல்ல முடியும்” என்று ஏதேதோ பேசி அவளை நார்மலாக்கினான்.

“உங்களை..., நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க. வாங்க” என்று நடந்தாள் இனியா.

“எங்கடி போன, நாங்க எல்லாம் பயந்துட்டோம்” என்றாள் ஜோதி.

இனியா பதில் சொல்வதற்குள் இளவரசனே “உங்க தங்கச்சி தான் இயற்கை விரும்பி ஆச்சே, அப்படியே தோட்டத்தை பார்த்து மயங்கி போய் நின்னுட்டிருந்தா, நான் தான் அதை தெளிய வச்சிக் கூட்டிட்டு வந்தேன்” என்றான்.

இனியா அவனை முறைக்க அவன் அதை கண்டு கொள்ளாமல் நடந்தான்.

எல்லோரும் சாப்பிட சென்றார்கள்.

எல்லோரும் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இனியா இளவரசனிடம் “இளா தோட்டத்தை பார்த்துட்டு இருந்தேன் சரி, ஆனா அதை பார்த்து மயங்கி நின்னேன்னு யார் சொன்னது, ஒரு கைல என் தாலியை பிடிச்சிட்டு அதை கட்டினவரை நினைச்சி மயக்கத்துல இருந்தேன்” என்றாள் மெதுவாக.

சாப்பிட்டுக் கொண்டிருந்த இளவரசனுக்கு பொறக்கை ஏறி விட்டது. எல்லோரின் கவனமும் அவனிடம் திரும்ப, இனியா “என்ன இளா பார்த்து சாப்பிட மாட்டீங்களா” என்று அவனிடம் தண்ணியை கொடுத்து விட்டு, அவன் தலையில் வேண்டுமென்றே ஓங்கி தட்டிக் கொண்டிருந்தாள்.

அவன் அதிலிருந்து நார்மலாக சிறிது நேரம் எடுத்தது.

பின்பு அவன் இனியாவை பார்த்து முறைக்க, அவளோ உல்லாசமாக சிரித்தாள்.

“உன்னை பார்த்துக்கறேன் டீ” என்று கை கழுவும் இடத்தில் திட்டி விட்டு சென்றான்.

இனியா பதிலுக்கு “வவ்வ வவ்வ” என்றாள்.

போட்டிங்கிற்கு பெரியவர்கள் யாரும் வர மறுத்து விட்டதால், இவர்கள் ஆறு பேர் மட்டும் சென்றனர். 

அங்கும் ஜோதி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணி அபியை ஊர்ல விட்டுட்டு வந்து இப்படி செகண்ட் ஹனிமூன் என்ஜாய் பண்றீங்களே, உங்களுக்கே நியாயமா இருக்கா, சொல்லுங்க” என்று ஜோதியிடம் கேட்டான் சந்துரு.

“உனக்கு ஏன் இவ்வளவு வருத்தம் இதுல, என் பொண்ணை என்ன நான் தனியாவா விட்டுட்டு வந்திருக்கேன், அவ தான் இவரோட அம்மா கூட ஊருக்கு போவேன்னு அடம் பிடிச்சா, அவளோட பாட்டி தாத்தா கிட்ட தானே இருக்கா, அது இருக்கட்டும் அப்புறம் என்ன கேட்ட, செகண்ட் ஹனிமூனா, ஆமா இப்ப அதுக்கு என்னங்கற, உனக்கு கூட தான் ஒரு நல்லது பண்ணலாம்ன்னு பார்க்கறேன், ஆனா நீ அதுக்கு ஒன்னும் பண்ண மாற்றியே” என்றான்.

சந்துரு பவ்யமாக அமைதியாகி விட்டான்.

அவனுக்கு ஜோதி கூறுவது புரிந்தது. ஆனால் அதற்கு அவன் மட்டும் என்ன செய்ய முடியும். எனவே பேச்சை வளர்ப்பதை விட அமைதியாக இருப்பது மேல் என்று அமைதியாகி விட்டான்.

இளவரசனோ ஒழுங்காக சென்று கொண்டிருந்த படகில், “ஏய் போட் ஆடுது பாரு, ஏன் ஓரத்துல உட்கார்ந்திருக்க, இப்படி வா” என்று அவளை இன்னும் அருகில் இழுத்து அவள் தோளில் வேறு கை போட்டுக் கொண்டான்.

இனியாவிற்கு முகம் சிவந்து விட்டது. அவளால் நிமிர்ந்து யாரையும் பார்க்க முடியவில்லை.

இளவரசன் ஜோதியிடம் சைகை காண்பித்து, அவர்களை அப்படியே ஒரு போட்டோ எடுக்க சொன்னான்.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்த இனியா, “ஒழுங்கா கையை எடுங்க இளா.” என்றாள்.

“ஏன் மா. விழுந்துட போற”

“ஒன்னும் ஆகாது. உங்களை என்ன பண்றதுன்னே தெரியலை, இப்ப போட் அப்படி ஆடுச்சா, எதுக்கு இவ்வளவு அழிச்சாட்டியம் பண்றீங்க”

“எதுக்காகன்னா காலைல சாப்பிடும் போது நீ பண்ணியே அதுக்கு தான், பழிக்கு பழி” என்று சிரித்தான்.

இனியாவிற்கு தான் வசமாக மாட்டிக் கொண்டது தெரிந்தது.

“ப்ளீஸ். என் செல்லம்ல கையை எடுங்க”

“முடியாது முடியாது” என்று சட்டமாக சொன்னான்.

“எனக்கும் ஒரு டைம் வரும், அப்புறம் பார்த்துக்கறேன்”

“பார்த்துக்க பார்த்துக்க”

னைவரும் மதியம் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கழித்து வெளியில் செல்வதாக முடிவு செய்திருந்தனர்.

ஆனால் திரும்பவும் இளவரசன் “வர முடியாது” என்று அடம் பிடித்தான்.

“வாங்க, போகலாம்” என்று அவன் கையை பிடித்து இழுத்தவளை, அவன் எந்திரிக்காமல் அவளை தன்னுடன் சேர்த்து இழுத்துக் கொண்டான்.

“ஐயோ இளா. டைம்க்கு போகலைன்னா மானம் போகும்”

“ஹேய் போடி, எப்ப பார்த்தாலும் இப்படியே சொல்லிட்டு, என்னால வர முடியாது. இன்னைக்கு நான் எங்கயும் வெளிய வருவதா இல்லை, இன்னைக்கு புல்லா ரூம்ல தான்” என்று கண் சிமிட்டினான்.

“இளா, எல்லாரையும் நம்ம கூட கூட்டிட்டு வந்தது தப்புன்னு இப்ப தான் தெரியுது, நீங்க இவ்வளவு அட்டூழியம் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாம போச்சி, நானே அடம் பிடிச்சிக் கூட்டிட்டு வந்து, இப்ப என் மானம் தான் போகுது” என்றாள் அழாத குறையாக.

“இப்ப ஏன் நீ இப்படி பீல் பண்ற”

“பின்ன எல்லாரும் என்ன நினைப்பாங்களாம்”

“நீ இன்னொரு முறை இதையே சொன்னேன்னு வச்சிக்க, அவ்வளவு தான் சொல்லிட்டேன்,” என்று அவளை அதட்டி விட்டு, போனை எடுத்து பாலுவிற்கு போன் செய்தான்.

“நாங்க இங்க கீழே தான் வெயிட் பண்றோம்” என்றான் பாலு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.