(Reading time: 78 - 155 minutes)

பொதுவா சொன்னியா, இரு உன்னை அப்புறமா பார்த்துக்கறேன். அதுல ஒரு விஷயம் என்ன தெரியுமா, பசங்க வந்து அவங்க அப்பா லவ் பண்ணதை எல்லாம் பார்த்தது இல்ல, அதுவும் இல்லாம நமக்குன்னு ஒரு பொண்ணு வந்த மயக்கம், அதுவும் இல்லாம லவ் பண்ற டைம்ல கொஞ்ச நேரம் தானே மீட் பண்ணுவாங்க, அந்த டைம்ல ரெண்டு பேரும் ஒன்னா டைம் ஸ்பென்ட் பண்ணணும்ன்னு தான் நினைப்பாங்க. சோ அவங்களுக்கு அவ்வளவா பைட் பண்ண டைம் இருக்காது, அப்புறம் மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் தன் அப்பா அம்மாவை எப்படி நடத்தறாருன்னு யோசிக்கிறாங்க, அப்பா அம்மாவை அதிகாரம் பண்றதை எல்லாம் பார்த்து வளர்ந்தவங்க, அதை அப்படியே அவங்க வொய்ப் கிட்டயும் பண்றாங்க. அப்புறம் புல் டைம் ஒன்னா இருக்கும் போது தான் அடுத்தவங்களோட மைனஸ் எல்லாம் தெரியுது. அதான் சண்டை வருது”

“இதுல ஒரு விஷயம் என் அப்பா என் அம்மாவை ராணி மாதிரி வச்சிருந்தாரு. அதை பார்த்து வளர்ந்த நான் உன்னை தேவை இல்லாம அதிகாரம் பண்ண மாட்டேன். அதுவும் இல்லாம உன் கண்ணு லேசா கலங்கி இருந்தா கூட உன் அத்தை என்னை சும்மா விட மாட்டாங்க. இன்னொரு விஷயம் நானே அப்படி ஏதாச்சும் ப்யூடர்ல பிஹேவ் பண்ணா அதை தட்டி கேட்கறதுக்கு தான் நான் உனக்கு கீ கொடுத்திருக்கேன் அந்த ப்ராமிஸ் வடிவத்துல, நீ அப்ப வந்து என்ன இளா அப்ப எனக்கு என்னென்னவோ ப்ராமிஸ் எல்லாம் பண்ணீங்க. இப்ப இப்படி பண்றீங்கன்னு கேட்டாளே நான் மாறிடுவேன்.  ஓகே வா”

இனியாவிற்கு திரும்ப திரும்ப குற்ற உணர்ச்சி தான் வந்தது. அவன் செய்யும் ஒவ்வொரு செய்கையிலும் அவன் அன்பு வெளிப்படுகிறது. ஆனால் நான்? என்று எண்ணிக் கொண்டாள்.

அவளின் எண்ணங்கள் புரிந்தவாறு அவளை ஆதரவாக தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை இளா” என்றாள் மெதுவான குரலில்.

இளவரசனுக்கு அவளை கிண்டல் செய்ய தோன்றினாலும், அவள் மனநிலையை எண்ணி ஏதும் கிண்டல் செய்யாமல் “வேண்டாம் எந்த பேச்சும் மாத்த வேண்டாம். ஹனிமூன் போயிட்டு பார்த்துக்கலாம். அப்பவும் உனக்கு தயக்கம் இருந்துச்சின்னா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நமக்கு லைப்ல இன்னும் எவ்வளவு டைம் இருக்கு” என்றான்.

இனியாவே சென்று அவனை கட்டிக் கொண்டாள்.

சில நிமிடம் அமைதியாக இருந்த இளவரசன் அவள் காதோரம் “ஏய் நானும் எவ்வளவு நேரம் வலிக்காத மாதிரியே நடிக்கறது, என்னோட மன வலிமை எல்லாம் தூள் தூளா ஆகிட்டு இருக்கு. சோ கொஞ்சம் தள்ளி நில்லும்மா” என்றான்.

இனியாவிற்கு அவன் பேச்சைக் கேட்டு சிரிப்பு தான் வந்தது.

“நிஜமாவே நீங்க பாவம் இளா” என்றாள்.

“ஏய் வேணாம் டீ. இப்படி எல்லாம் என்னை வெறுப்பேத்தாதே. அப்புறம் அதுக்கு எல்லாம் நீ அனுபவிப்ப”

“அப்படியா சரி சரி பார்த்துக்கலாம்”

ரு வழியாக அனைவரும் கிளம்பி கேரளா சென்று விட்டனர். அங்கு அதிகாலையில் சென்றனர். ஹோட்டலிற்கு சென்று ரெடி ஆகி எல்லோரும் வெளியே செல்ல கிளம்ப இளவரசன் ரூமில் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான்.

“எந்திரிங்க இளா”

“முடியாதுன்னா முடியாது”

“இளா எல்லாரும் என்ன நினைப்பாங்க”

“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க டீ”

“இளா ப்ளீஸ். எல்லாரும் கிளம்பி கீழ வெயிட் செய்யறாங்களாம்.”

“சரி. அப்படின்னா நான் சொல்றதை நீ செய். நான் வரேன்”

“ஏதாச்சும் வில்லங்கமா சொன்னீங்க. கொன்னுடுவேன்”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் சொல்றதை நீ செஞ்சா தான் நான் வருவேன்”

“சரி. சொல்லித் தொலைங்க.”

“நீ வந்து என்னை”

“என்ன”

“இன்னும் சொல்லவே இல்லையே டீ. அதுக்குள்ளே ஏன் ஷாக் ஆகற”

“---“

“என்னை ஒரு முறை மாமான்னு கூப்பிடு பார்க்கலாம்”

“போடா. அப்படி எல்லாம் கூப்பிட முடியாது”

“ஏன் செல்லம் மாமாவை இப்படி எல்லாம் பேசற, வா கீழ உங்க அம்மா எங்க அம்மா எல்லாரும் இருக்காங்க. அவங்க கிட்டவே பஞ்சாயத்து வைக்கலாம்”

“ஐயோ என்ன நீங்க. இப்படி எல்லாம் பண்றீங்க. ஒழுங்கா இப்ப கிளம்பி வறீங்களா இல்லையா”

“நீ மாமான்னு சொல்லாம நான் இங்கிருந்து ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க மாட்டேன்.”

“ஐயோ எனக்கு அப்படி எல்லாம் கூப்பிட வர மாட்டுது”

“ஹேய். அதெல்லாம் எனக்கு தெரியாது டீ. சொன்னா சொன்னது தான். பார்த்துக்க, நீ சொன்ன எல்லாத்தையும் நான் செஞ்சிருக்கேன். எல்லாரையும் ஏதோ ட்ரிப் கூட்டிட்டு வர மாதிரி என் ஹனிமூன்க்கு கூட்டிட்டு வந்திருக்கேன். சோ நீ நான் சொல்றதை செஞ்சி தான் ஆகணும்”

“வவ்வ வவ்வ. இதையே இன்னும் எத்தனை டைம் சொல்லுவீங்க. அவங்க வந்தாங்க. பட் ரூம் கூட எப்படி நமக்கு தனியா அரேஞ் பண்ணிட்டு அவங்க வேற ப்ளோர்ல இருக்காங்க. இதுக்கே இந்த அளவுக்கு பண்றீங்க”

“சரி. அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்ப நான் வரணுமா, வேண்டாமா”

“வரணும்”

“அப்ப நான் சொன்னதை செய்”

“உங்களை. சரி. மாமா. போதுமா”

“என்னது இது, ஆடு மாடுன்னு சொல்ற மாதிரி மாமா அப்படின்னு சொல்ற, இளா மாமா, வாங்க அப்படி இப்படின்னு எதாச்சும் சொல்லு, அட்லீஸ்ட் ஒரு பைவ் டைம்ஸ் அப்படி கூப்பிட்டு பேசினா தான் நான் வருவேன்”

அவனை முறைத்துக் கொண்டே வேறு வழி இல்லாததால் “இளா மாமா. தயவு செய்து கிளம்பி வாங்க மாமா. அப்பா அம்மா எல்லாம் வெயிட் பண்ணுவாங்க மாமா. வாங்க மாமா போகலாம்” என்றாள்.

இளவரசனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

சிரித்துக் கொண்டே “ஹேய் நாலு முறை தான் சொல்லி இருக்க, இன்னொரு முறை சொல்லு டீ” என்று அவளை வெறுப்பேத்திக் கொண்டிருந்தான்.

“வந்து தொலை டா மாமா. போதுமா, இப்ப வறீங்களா இல்லையா.”

“சரி செல்லம். கோபப் படாத போகலாம்” என்றவாறே கிளம்பினார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.