(Reading time: 78 - 155 minutes)

தென்ன இப்படி அடம் பிடிக்கிற,  சர்ப்ரைஸ்ன்னா சர்ப்ரைஸ் தான். நான் என்ன ஏதாச்சும் ட்ரெஷரியா வச்சிருக்கேன், வந்து பார்க்கறதுக்கு, ஒழுங்கா இப்படி உட்காரு.” என்று அவளை பிடித்து அமர வைத்து விட்டு, அவன் எங்கோ சென்று ஒரு குட்டி பார்சலை கொண்டு வந்தான்.

இனியாவிற்கு அதற்குள் “இதுக்குள்ள என்ன இருக்கும்” என்று ஆர்வம் தாங்கவில்லை.

“என்ன இருக்கு” என்று எப்பவும் போல் ஆர்வ கோளாறில் கேட்டாள்.

அவளை சற்று முறைத்து விட்டு, “அதை உன் கிட்ட சொல்றதுக்கு நான் ஏன் கிப்ட் ராப் பண்ணணும். அப்படியே கொடுத்திடலாம் இல்ல, தேவை இல்லாம கேள்வி கேட்காம ஒழுங்கா இதை பிரிச்சி பாரு”

“ம்ம்ம் ம்ம்ம்” என்றவாறே அதை பிரிக்க ஆரம்பித்தாள்.

அதில் மெல்லிய கொலுசுகள் இருந்தன. இனியாவிற்கு அது மிகவும் பிடித்துப் போனது.

“ஐயோ இளா எப்படி எனக்கு பிடிச்ச மாதிரியே எல்லாம் செய்யறீங்க. வீட்டுல கொலுசு வாங்கி தரேன்னு சொல்லிட்டு ரொம்ப தடியா வாங்கி கொடுப்பாங்க, அதனால நான் அதை போடறதையே விட்டுட்டேன். நீங்க மட்டும் எப்படி எனக்கு பிடிச்ச மாதிரியே செய்யறீங்க”

“எப்படி இப்படி செய்யறன்னு கேட்டா என்ன சொல்றது, உனக்குன்னு ஒன்னு பார்க்கும் போது உனக்கு இது தான் பிடிக்கும்ன்னு என் மனசு சொல்லும், அதை தான் நான் வாங்குவேன், நான் என்னோட ஆடம்பரத்தை காண்பிக்க உனக்கு கிப்ட் வாங்கி கொடுக்கலை, சோ அது உனக்கு பிடிச்சதா தானே இருக்கணும்”

இனியாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளுக்கு புரிந்தது அவன் தான் அவன் மேல் வைத்திருக்கும் அன்பை விட அவன் தன் மேல் மிக அதிகமான அன்பை வைத்திருக்கிறான் என்று.

“ஏன் எனக்கு டெய்லி ஏதாச்சும் கிப்ட் கொடுத்துட்டே இருக்கீங்க”

“அதுவா சும்மா தான். ஒரு ஆசை. என் பொண்டாட்டி நான் கொடுப்பேன், உனக்கு என்ன”

“அது சரி. நடத்துங்க. மேரேஜ்க்கு முதல் நாள் அந்த சாங் வித் ரிங் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சி தெரியுமா, எனக்கு அப்ப ஏதோ பறக்குற மாதிரி இருந்துச்சி. அதுவும் அந்த பாக்ரவுண்ட் சாங் சேன்சே இல்லை. எப்படி இளா இதெல்லாம், ஆனா எல்லாரும் என்னை அதுக்கு தான் பயங்கரமா கிண்டல் பண்ணாங்க தெரியுமா”

“யாரு கிண்டல் பண்ணா என்ன. எனக்கு என்ன பண்ணணும்ன்னு தோணுச்சோ நான் அதை செய்யறேன்.”

“ம்ம்ம். அன்னைல இருந்து எனக்கு கிப்ட் கொடுத்துட்டே இருக்கீங்க. ஆனா நான் தான் உங்களுக்கு ஒண்ணுமே கொடுக்கலை”

“நீயே எனக்கு ரொம்ப பெரிய கிப்ட் தான்”

“ஐயோ போதுமே”

“ஏய் நான் சீரியஸா சொல்றேன். எனக்கு உன்னை விட எந்த கிப்ட்டும் பெரிசு இல்லை. அப்பா இருக்கற வரைக்கும் ஒண்ணுமே தெரியாம வளர்ந்துட்டு அப்புறம் திடீர்ன்னு பொறுப்பு எல்லாம் கூடி போச்சி, அந்த சில வருஷம் யாரை நம்பறது யாரை நம்பக் கூடாதுன்னு ஒண்ணும் புரியாத நிலைமை. அம்மாவோ இங்க ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. சந்துருவும் அப்படி தான். சின்ன பையன் வேற. ரொம்ப கஷ்டப் பட்டுட்டேன், கொஞ்சம் நல்லா வர நேரத்துல இன்னொருத்தரை நம்பி ஏமாற நிலைமை வந்துடும். எல்லாத்தையும் சமாளிச்சி வெளிய வரர்துக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சி.”

“எப்படியோ எல்லாம் சால்வ் ஆகிடுச்சி. ஆனா அதுல நான் என்னையே இழந்துட்டேன்னு தான் சொல்லணும். அதுக்கு முன்னாடி என் கிட்ட இருந்த துள்ளல், சந்தோஷம், ஆர்வம், இந்த மாதிரி எதெல்லாம் என்னை துடிப்பானவனா வச்சிருந்துதோ அதெல்லாம் நான் இழந்துட்டேன்”

“நான் மாறிப் போனது எனக்கே கூட தெரிஞ்சிது. ஆனா ஒன்னும் பண்ண முடியலை. என்னை அம்மா, சந்துரு எல்லாம் நோட்டிஸ் பண்றதுக்குள்ள நான் ரொம்ப மாறிட்டேன். அவங்களாளையும் ஒன்னும் செய்ய முடியலை, எனக்கு இருக்கற, பிரஷர், டென்சன் எல்லாம் பார்த்துட்டு ஒன்னும் சொல்ல முடியாம போயிடுச்சி. சில நேரத்துல நான் என்னை செய்யறேன், எப்படி கோபப் படறேன்னு எனக்கே புரியாம என்னென்னவோ நடந்துடும். ஆனா அம்மாவாலயும், சந்துருவாலயும் கூட என்னை ஏதும் சொல்ல முடியலை. அவங்களுக்கு கிட்ட இல்லாம நான் ஏதோ டிஸ்டன்ஸ்ல போயிட்டேன்.”

“அதுக்கு அப்புறம் கிட்ட தட்ட நானும் ஏதோ மெசின் ஆகிட்ட டைம்ல தான் நான் உன்னை பார்த்தேன். எல்லாரும் என்னை ஏதோ பெரிய ஆளுன்னு பயந்து நான் தப்பே பண்ணாலும் ஆமான்னு சொல்றவங்க மத்தியில நீ எனக்கு ஈடா சண்டை போட்ட, நீ செய்யறது தப்பு டா மடையான்னு சொன்ன. ஐயோ அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை. நீ மட்டும் என் லைப்ல வரலைன்னா என் வாழ்க்கைல இந்த உயிர்ப்புன்றதே இருந்திருக்காது. நீ தான் என் வாழ்க்கைக்கே ஒரு பெரிய கிப்ட் தெரியுமா.”

இனியா வாயடைத்து நின்றாள். அவளை சுற்றி எல்லோருமே அவளிடம் அன்பாக தான் இருப்பார்கள் என்றாலும், இவன் அவள் மேல் அன்பு மழையே பொழிவது போல் இருந்தது.

“இளா நீங்க என் மேல எவ்வளவு அபெக்ஷன் வச்சிருக்கீங்க. நான் உங்களுக்கு நியாயம் செய்யலையோ”

அவள் எதை சொல்கிறாள் என்று உணர்ந்தவன் “அப்படி ஒன்னும் இல்லை. இதுல நான் உன்னை எதுவும் கம்பெல் எல்லாம் பண்ண மாட்டேன்.” என்றான்.

“இளா ஏற்கனவே இப்படி தான் வாய் கொடுத்து மாட்டநீங்க. பார்த்து பேசுங்க. அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

சிரித்துக் கொண்டே “இதுல பார்த்து பேச ஒண்ணும் இல்லை. என் மனசுல என்ன நினைக்கிறேனோ அதை தான் சொல்றேன்.” என்றான்.

“இப்பல்லாம் நல்லா தான் பேசறீங்க. இருந்தாலும், அந்த பழி வாங்கற மேட்டர் அப்படியே தான் இருக்குப்பா”

அவளை ஆழமாக பார்த்தவன் “நிஜமாவே நீ என்னை பழி தான் வாங்கறியா டீ. எங்க உன் முகத்தை காட்டு.” என்றான்.

“என்ன இப்ப என் முகத்துல என்ன தெரியுது.”

“உன் முகத்துலையா பழி வாங்கறதுக்கான எந்த அறிகுறியும் தெரியலை, பயம், தயக்கம் இது மட்டும் தான் தெரியுது.”

‘ஐயய்யோ இவன் கண்டு பிடிச்சிட்டானோ’ என்று இனியா மனதில் நினைத்துக் கொண்டே முகத்தில் அசட்டுத் தனமாக ஒரு சிரிப்பை உதிரத்தாள்.

“என்ன இவன் கண்டு பிடிச்சிட்டானோன்னு நினைக்கிறியா” என்று அவள் மனதில் நினைத்ததை வேறு அப்படியே சொன்னான்.

“இல்ல, வந்து” என்று இனியா தடுமாறவும், “உன்னை நான் கண்டிப்பா எதுலையுமே போர்ஸ் பண்ண மாட்டேன் டா. நம்மளுக்கு லைப் புல்லா டைம் இருக்கு. நான் அன்னைக்கு உனக்கு செஞ்ச ப்ராமிஸ் அப்படியே தான் இருக்கு. ஓகே”

“இளா. நீங்க எனக்கு கொடுத்த கிப்ட்லயே அந்த ப்ராமிஸ் தான் ரொம்ப கிரேட் தெரியுமா. என்ன தான் நாம லவ் பண்ணோம், அதுவும் இல்லாம அத்தை எல்லாரையுமே தெரியும், எல்லாம் நல்லவங்க அப்படின்னாலும் எனக்குள்ள ஏதோ ஒரு நெருடல், ஒரு சின்ன பயம் இருந்துட்டே இருந்துச்சி. ஆனா நீங்க சொன்ன அந்த வார்த்தைல எல்லாம் காணாம போயிடுச்சி. ரியல்லி யூ ஆர் கிரேட் ப்பா” என்றவள் கண் கலங்கி விட்டாள்.

“ஹேய் என்னடி. என்ன திடீர்ன்னு இப்படி. இப்ப ஏன் நீ எமோசனல் ஆகற”

“இல்ல, நான் ரொம்ப சந்தோசத்துல இருக்கேன், அதான்.”

“சரி. சின்ன பயம் இருந்துச்சின்னு சொன்னியே, உனக்கு அப்படி என்ன என் கிட்ட போய் பயம் இருந்துச்சி”

“இல்ல. நம்ம லவ் பண்ணது எல்லாம் ஓகே தான். இருந்தாலும், மோஸ்ட்லி அந்த லவ் மேரேஜ்க்கு அப்புறம் இருக்கறதில்லை. அது வரைக்கும் அந்த பொண்ணை ஈகுவலா நடத்தற பையன் மேரேஜ்க்கு அப்புறம் அப்படி இருக்க மாட்டான். நான் உங்களை சொல்லலை, பொதுவா சொன்னேன், இப்படி எத்தனையோ மைன்ட்ல இருந்துட்டு கொஞ்சம் பயமா இருந்துச்சி”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.