(Reading time: 78 - 155 minutes)

ல்ல. நாங்க ஒருத்தரை போய் மீட் பண்ண போறோம். கார்த்தின்னு இனியாவோட ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தான். தெரியுமா”

“ஓ. ஆமாமா. தெரியும் தெரியும். அவன் இங்க எங்க இருக்கான்”

“இங்க ஒரு ஆயுர்வேத வைத்தியம் பார்க்கற இடத்துல இருக்கானாம். என் கிட்ட அட்ரெஸ் இருக்கு. நீங்க போங்க. நாங்க அவனைப் போய் பார்த்துட்டு வந்து ஜாய்ன் பண்ணிக்கறோம்” என்றான்.

“சரி சரி. ஓகே”

அவன் போனை வைத்த வுடன் “ஹேய் நாம கார்த்தியை பார்க்க போறோமா, சொல்லவே இல்லை” என்று உற்சாகமாக கிளம்பினாள்.

 வர்கள் சென்றவுடன் கார்த்திக்கு மிகவும் சந்தோஷம். சந்தோசத்தில் துள்ளி குதிக்காத குறை தான்.

பின்பு அவனுடன் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு இருப்பவர் ஒருவர் வந்து இங்கு ரொம்ப நேரம் இருக்க கூடாது என்று சொன்னவுடன் தான் கிளம்பினார்கள்.

கிளம்பும் போது கார்த்தி, இளவரசனை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்லி சிரித்தான்.

இனியா காரில் ஏறிய வுடன் அவன் என்ன சொன்னான் என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

இளவரசன் சிரித்துக் கொண்டே “நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிப்போம்ன்னு அவனுக்கு முதல்லவே தெரியுமாம். அதனால தான் என்னை மாமான்னு கூப்பிட்டானாம்.” என்றான்.

இனியாவும் சிரித்தாள்.

“பாரு. சின்ன பையன் எப்படி கிண்டல் பண்றான். அந்த அளவுக்கு என்னை நீ செஞ்சி வச்சிருக்க”

“ஹலோ நான் என்ன செஞ்சேன்”

“பின்ன நீ ஏதும் செய்யாமலா உன்னைப் பார்க்க அடிக்கடி ஹாஸ்பிடல்க்கு வந்தேன். அதனால தானே அந்த சின்னப் பையன் எல்லாம் என்னை கிண்டல் பண்றான்”

இப்படி இருவரும் வழி நெடுக சண்டையிட்டுக் கொண்டே சென்றார்கள்.

ல்லோரும் பீச் சென்றிருந்தார்கள். இளவரசனும் இனியாவும் அவர்கள் எங்கு சென்றிருக்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டு அங்கு சென்றார்கள்.

இவர்கள் இருவரும் பீச்சிற்கு சென்று பாலுவிற்கு போன் செய்தால் அவனோ எடுக்கவில்லை. சரி கொஞ்ச தூரம் போய் பார்க்கலாம் என்று இருவரும் நடக்க தொடங்கினர்.

ஒரு இடத்தில் கல்லூரி மாணவிகள் நிறைய பேர் ஏதோ விளையாடிக் கொண்டு இருக்க, இனியா அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் பெண்களாக இருக்க, இளவரசன் இனியாவிடம் சொல்லி விட்டு அவன் மட்டும் நடக்க தொடங்கினான்.

சிறிது தொலைவிலேயே சந்துருவும், பவித்ராவும் இருந்தனர். மற்றவர்கள் எங்கே என்று கண்ணை சுழற்றினால் யாரையும் காணவில்லை, சரி அவர்களருகே செல்லலாம் என்று அவன் செல்ல, சிறிது தொலைவிலேயே அவர்களின் வாக்கு வாதம் அவனுக்கு கேட்டது.

“வேண்டாம். எனக்கு ஏதும் கேட்க வேண்டாம்” என்று கத்திக் கொண்டிருந்தாள் பவித்ரா.

இளவரசன் அப்படியே நின்று விட்டான்.

என்ன நடக்குது இங்க என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“பவி ப்ளீஸ். நான் சொல்றதை கேளு”

“வேண்டாம். என்னை அப்படி கூப்பிடாதீங்க. உங்களுக்கு அந்த ரைட்ஸ் கிடையாது”

சந்துரு அடிப்பட்ட பார்வை பார்த்தான்.

பின்பு சமாளித்துக் கொண்டு “என் மேல தப்பு தான். நான் ஒத்துக்கறேன், எனக்கு எது காதல் அப்படின்னே தெரியாம அப்படி பண்ணிட்டேன், ஆனா உன்னை பார்த்த பிறகு தான் எனக்கு எல்லாம் புரிஞ்சது. அண்ணன் சொன்னதுக்காக ஸ்வேதாவை மீட் பண்ணாம, பேசாம என்னால இருக்க முடிஞ்சது, முதல்ல ஒரு மாதிரி தான் இருந்துச்சி, ஆனா ஒரு டைம்க்கு மேல அது என்னை ஒன்னும் அந்த அளவுக்கு பாதிக்கலை.”

“இதே இந்த மூணு மாசம் உன்னை பார்க்காம இருந்தேன், ஆனா அதுல உன்னை நினைக்காத நாளே இல்லை, ஒரு நாளாச்சும் உன் கூட பேசிட மாட்டோமான்னு ஏங்கி இருக்கேன் பவி. அம்மா பேசும் போது உன்னை பத்தி பேசற ஏதோ ஒரு வார்த்தைக்காக ஏங்கிட்டு இருந்திருக்கேன். எனக்கு உண்மையான காதல்ன்னா என்னன்னு முதல்ல புரியலை. இப்ப தான் புரிஞ்சிருக்கு. ப்ளீஸ் அண்டர்ஸ்டான்ட் பவி”

பவித்ராவின் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் முகம் கல் போல் இறுகி இருந்தது.

“ப்ளீஸ் பேசு பவி”

“என்னை அப்படி கூட உங்களுக்கு உரிமை இல்லைன்னு சொன்னேன். வேண்டாம். எனக்கு எதுவுமே கேட்க வேண்டாம். ஸ்வேதா பேசின பேச்சு எனக்கு இன்னமும் நியாபகத்துல இருக்கு. என்னை இவளை மாதிரி ஒருத்தி நமக்குள்ளே வந்துட்டாளேன்னு சொன்னா, நீ எல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணான்னு கேட்டாளே அந்த வார்த்தைகளே இந்த ஜென்மத்துக்கும் போதும், எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க பேச பேச அவ சொன்ன வார்த்தைகளை நான் நிஜமாக்கிட்டு இருக்கேன்னு எனக்கு தோணுது”

“உங்களுக்கு அவ கூட கிட்டத்தட்ட மேரேஜ் பிக்ஸ் ஆன மாதிரி தான். அவ சொன்னதுல எந்த தப்பும் இல்லை. ஆனா நீங்க இப்ப கூட வந்து என் கிட்ட இப்படி பேசிட்டு இருக்கீங்க. நான் உங்க மேல ஒரு மரியாதை வச்சிருக்கேன், அது அப்படியே இருக்கட்டும்” என்று கூறி விட்டு போய் விட்டாள்.

அங்கு கல்லாக நின்றது சந்துரு மட்டுமல்ல, இளவரசனும் தான்.

அவனுக்கு இத்தனை நாட்களாக இவர்களின் விஷயம் தெரியாது. இப்போது எல்லாவற்றையும் கேட்டு விட்டு அதிர்ச்சியாகி விட்டான்.

இந்த பாம்பு (ஸ்வேதா) ஏதேதோ செஞ்சிருக்கா போல இருக்கே என்று எண்ணிக் கொண்டே சந்துருவின் தோள் தொட்டான்.

அவனின் தொடுகையில் உணர்வு வந்த சந்துரு நிமிர்ந்து அண்ணனை பார்த்து அதிர்ந்தான்.

சந்துருவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ஏன் டா என் கிட்ட சொல்லலை”

சந்துரு ஏதும் பதில் கூறாமல் அமைதி காத்தான்.

“பேசு சந்துரு”

“இல்லண்ணே. ஏற்கனவே ஸ்வேதாவை லவ் பண்றேன்னு வந்து நின்னேன். உனக்கு ஏனோ ஸ்வேதாவை பிடிக்காம நீ எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. அதுவும் சூசைட் வரைக்கும் போயிட்டேன், கடைசியா தான் கொஞ்ச நாள் மட்டும் நீ சொல்றதை கேட்டா ஸ்வேதாவையே மேரேஜ் பண்ணி வைக்கிறேன்னு நீ சொன்னதை கேட்டு கொஞ்சம் அமைதியானேன். இவ்வளவையும் பண்ணிட்டு சடனா எப்படி திரும்பவும் பவித்ராவை பிடிச்சிருக்குன்னு சொல்றது. அதான். அதுவும் இல்லாம எனக்கு என்னை தெரிஞ்சிக்க வேண்டி இருந்துச்சி”

இளவரசனுக்கு தன் தம்பியின் பேச்சில் முதிர்ச்சி தெரிந்தது.

அதற்குள் இனியா அங்கு வரவும் இளவரசன் பேச்சை மாற்றி விட்டான். அவர்கள் எல்லோரிடமும் சென்று விட்டனர்.

இளவரசன் பவித்ராவையே அளவிட்டுக் கொண்டிருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.