(Reading time: 78 - 155 minutes)

தை பார்த்த ஜோதி கண்களில் வியப்பு.

ஜோதி கவனிப்பதை இளவரசனும் கவனித்து விட்டான்.

பின்பு இரவு உணவருந்திய பிறகு இளவரசன் ஜோதியிடம் பேசினான்.

ஜோதிக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்று தெரிந்த பிறகு “தன்னிடம் ஏன் சொல்லவில்லை” என்று கோபப் பட்டான்.

ஜோதி ஏதேதோ சொல்லி சமாதானம் செய்த பின்பு “இது தெரிஞ்சிருந்தா எப்பவோ இதுக்கு ஒரு முடிவு கட்டி இருப்பேன், கொஞ்சம் பொறுத்து செய்யலாம்ன்னு விட்டுட்டேன், இப்ப எனக்கு என்னடா என் லவ், என் மேரேஜ்ன்னு என்னை பத்தியே பார்த்துக்கிட்டு தம்பியை விட்டுட்டோமேன்னு கஷ்டமா இருக்கு” என்றான்.

போனை எடுத்து யாரிடமோ பேசி விட்டு வந்தவன் “பர்ஸ்ட் ஸ்டேப் எடுத்து வச்சிட்டேன். கூடிய சீக்கிரம் எல்லாம் சால்வ் ஆகிடும்” என்றான்.

னால் இவர்கள் ட்ரிப்பை முடித்து விட்டு சென்ற அன்றே ஸ்வேதா வந்து சந்துருவிடம் பேச ஆரம்பித்தாள்.

சந்துரு அவாய்ட் செய்வது அவளுக்கு நன்றாகவே தெரிந்தாலும், பவித்ராவை பழி வாங்குவதற்காகவே இந்த மேரேஜ் நடக்க வேண்டும் என்று விரும்பி வேண்டுமென்றே வந்து பேசிக் கொண்டு பவித்ராவின் வெறுப்புக்கு ஆளாகிக் கொண்டிருந்தாள்.

பவித்ராவும் எவ்வளவோ முயன்று கோபப் படக் கூடாது என்று எண்ணினாலும், அவளால் பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை.

ஸ்வேதா பேசிக் கொண்டே இருக்க, சந்துரு நடு நடுவில் ஏதோ ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆனால் பவித்ராவிற்கு அதையே பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

இனியா அவளிடம் காபி கொடுத்து விட சந்துருவிற்கும், ஸ்வேதாவிற்கும் கொண்டு வந்து கொடுத்தாள்.

அப்போது வேண்டுமென்றே ஸ்வேதா சந்துரு கையில் இருந்த நியூஸ்பேப்பரை பார்ப்பது போல் அவனருகே சாய பவித்ரா சந்துருவை எரித்து விடுவதை போல் பார்த்தாள்.

சந்துரு உடனே எழுந்து விட்டு, ஸ்வேதாவிடமே பேப்பரை கொடுத்து விட்டு வேலையிருப்பதாக சொல்லி விட்டு ஓடி விட்டான்.

இளவரசன் இதை எல்லாம் ஏதோ பைலை பார்ப்பதை போல் அமர்ந்துக் கொண்டு பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

அவனுக்கோ ஒரே சிரிப்பு. (தம்பியும் தன்னை மாறி தான் இருக்கான்னு தான்)

இந்த தகவலை போன் செய்து ஜோதியிடம் சொல்லி சிரித்தான்.

ஜோதியோ “ஏதோ செஞ்சிருக்கேன்னு சொன்னீங்களே, இனி ஸ்வேதா இந்த பக்கம் வர மாட்டான்னு நினைச்சேன். ஆனா நாம ஊருல இருந்து வந்த உடனே வந்து நிக்கறாளே” என்று கவலைப் பட்டாள்.

“இது என்ன நார்மல் பட்சியா என்ன. வில்லங்கம் பிடிச்சது, இதுக்கு ஹெவியா ஏதாச்சும் செஞ்சா தான் அடங்கும். ஏதாச்சும் செய்வோம்”

“ம்ம்ம். ஏதோ செய்ங்க. சந்துருவும், பவித்ராவும் நல்லா இருந்தா சரி தான்”

சந்துரு அதன் பின்பும் ஒரு முறை பவித்ராவிடம் பேச முயற்சி செய்து தோற்று திரும்ப குஜராத்திற்கே செல்லலாம் என்று முடிவு செய்தான்.

ன்னம்மா. மாப்பிள்ளை கிட்ட பேசினியா. கல்யாணத்தை பத்தி என்ன சொன்னாரு” என்று கேட்டார் ஸ்வேதாவின் தந்தை சுந்தரம்.

“அவர் ஒன்னும் சொல்லலைப்பா”

“என்னம்மா இப்படி சொல்ற. அவங்க அம்மாவும் பிடி கொடுக்க மாற்றாங்க. அவங்க பெரிய பையன் மட்டும் தான் செஞ்சிடலாம் அப்படின்னு சொல்றாரு. அந்த அம்மா என்னடான்னா முதல்ல ஜாதகத்தை பார்க்கணும்ன்னு கேட்கறாங்க”

“ஐயோ அப்பா, அவங்க வீட்டுல அவரு தான் எல்லாம், அவர் சொன்னா எல்லாரும் கேட்பாங்க. அவரே நமக்கு நல்ல பாசிட்டிவான பதில் சொல்லி இருக்காரு, அப்புறம் என்ன, என் ஜாதகம் கேட்டா கொடுக்க வேண்டியது தானே”

“அட நீ வேற ஏன் புரியாம பேசற, உன் ஜாதகத்துல ஏதோ பிரச்சனை இருக்குதாம். இப்ப கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு ஜோசியர் சொல்லிட்டாரு, உங்க அம்மா உனக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு சொல்றா. எனக்கும் ஒன்னும் ஜாதகத்துல எல்லாம் அவ்வளவா நம்பிக்கை இல்லை.”

“சரி விடுங்கப்பா. பார்த்துக்கலாம்.”

“என்னத்தை பார்க்கறதோ, உன்னை மாப்பிள்ளை கிட்ட தானே கேட்க சொன்னேன், நீ அதை விட்டுட்டு பார்த்துக்கலாங்கற”

“அவரும் எதுவும் ஒழுங்கா சொல்ல மாற்றாரு.”

“என்னது ஒழுங்கா பதில் சொல்லலைன்னு சொல்ற. எனக்கென்னவோ எதுவும் சரியா படலை. இப்ப கூட உனக்கு ஒரு நல்ல இடத்துல இருந்து சம்மந்தம் வந்திருக்கு, இந்த பாமிலி மாதிரி கூட இல்லை, ஒரே பையன், நல்ல வசதி, எந்த பிக்கல் பிடுங்கலும் கிடையாது. இவங்க பாமிலில கூட அவரோட அண்ணன் கிட்ட தான் எல்லா கண்ட்ரோலும் இருக்கு. ஆனா நான் சொல்ற பையன் எல்லாத்துலயும் பெஸ்ட். நீ தான் ஒத்துக்க மாட்டற”

“நோ டாட். இது எனக்கு ஏதோ ப்ரெஸ்டீஜ் இஸ்ஸூ மாதிரி ஆகிடுச்சி, என் ப்ரெண்ட்ஸ் எல்லார் கிட்டயும் சொல்லிட்டேன், இனி மாத்தி சொன்னா என் இமேஜ் என்ன ஆகறது”

“நீ சொல்றதை நான் ஒத்துக்கறேன் ஸ்வேதா. பட் நாமளா விழுந்து விழுந்து அவங்க கிட்ட போய் கேட்கற மாதிரி இருக்க கூடாது, பொண்ணு கேட்டு அவங்களா வரணும். இப்ப பாரு நான் சொல்ற இடத்துல இருந்து எப்படி ஆள் மேல ஆள் விட்டு அனுப்பறாங்க தெரியுமா, அதுவும் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கூட அந்த பையன் ரொம்ப நல்ல பையன்னு சொன்னாரு”

ஸ்வேதாவிற்கு கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தது. ஆனால் அவளுக்கு பவித்ராவின் முகம் நியாபகத்தில் வந்து சந்துருவை திருமணம் செய்து கொண்டே தான் ஆக வேண்டும் என்று உறுதி வந்தது.

ஆனால் அவளின் ஆசை விரைவிலேயே தகர்ந்து போகப் போவது தெரியாமல் என்ன செய்யலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருந்தாள்.

திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளாகவே இளவரசன் இனியாவை வருத்தப் பட வைத்து விட்டான். என்ன ஆனாலும் அழ மட்டும் கூடாது என்று இனியா மனதில் உறுதி செய்து கொண்டதால் அவள் கண்ணீர் மட்டும் சிந்தவில்லை.

இரண்டு நாட்களாக வீட்டிற்கு சரியாக வருவதில்லை. கேட்டால் சரியான காரணமும் சொல்வதில்லை. அவன் அம்மா கேட்டதற்கும் எதுவும் சரியாக சொல்லவில்லை.

அவளுக்கு ஏதோ மனதிற்குள் பயமாக இருந்தது. ஏதாவது என்றால் அவளிடம் சொன்னாலும் பரவாயில்லை. எதுவுமே கூறாமல் என்ன என்ன என்று நினைத்து அவள் மிகவும் பயந்து போயிருந்தாள். ஆனால் அதை கேட்கலாம் என்று எண்ணினாலும் அவன் நின்று கேட்டால் தானே.

இதை எல்லாம் எண்ணி அவள் வருத்தத்தில் இருக்கும் போது ஸ்வேதா வந்தாள்.

இப்போதெல்லாம் இனியாவிற்கே அவளை பார்த்தால் சிறிது கோபம் தான் வருகிறது. எதிரில் இருப்பவரின் மனநிலை என்ன என்றெல்லாம் ஏதும் எண்ணிப் பார்க்காமல் அவளாகவே ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.