(Reading time: 78 - 155 minutes)

நான்கு நாட்களுக்கு முன்பு தான் அவர்களுக்கு திருமணமாகி முப்பது நாட்கள் ஆகி இருந்தது. இந்த முப்பது நாட்களுக்கும் அவன் அவளுக்கு ஏதாவது ஒரு கிப்ட் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

அதுவும் முப்பதாவது நாள் ஒரு டாலர் செயின், அதான் டாலரில் அவர்கள் இருவரின் போட்டோவும் வைத்து இருந்தது. இனியா அந்த நாள் வரை சந்தோசத்தின் உச்சக் கட்டத்தில் இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இப்போதோ நிலைமை தலை கீழாகி விட்டது.

சிறிது நேரத்தில் வருத்தம் அதிகமாகி அழ ஆரம்பித்து விட்டாள்.

அவள் அழுகை கேவலாக மாற, அவள் வாயை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

கண் விழித்த இளவரசன் அவள் நிலைமையை பார்த்து, அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னான்.

என்ன சொல்லியும் இனியாவின் அழுகை குறைவதாக இல்லை.

“ஹேய். முதல்ல அழுகையை நிறுத்து” என்று அவன் அதட்டவும், ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் “எல்லாம் என்னால தான் இளா. எனக்கு தான் ஏதோ டைம் சரியில்ல போல, அது தான் இப்படி நடக்குது” என்றாள்.

அவளை கெஞ்சி, கொஞ்சி, திட்டி என்று என்னென்னவோ செய்து இளவரசன் அவளை சமாதானப் படுத்தினான்.

“எல்லாம் சரியாகிடும். ஒரு ரெண்டு நாள் அமைதியா இரு. என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல”

“ம்ம்ம்”

“அப்படின்னா இப்படி நீ அழுது என்னை கஷ்டப் படுத்தக் கூடாது. சரியா”

“ம்ம்ம். ஆனா நீங்க எந்த பிரச்சனையா இருந்தாலும், என் கிட்ட சொல்லிடுங்க இளா. எனக்கு என்னன்னு தெரியாம தான் ரொம்ப கஷ்டமா இருக்கு”

“சரி டா. இனி அப்படியே செய்யறேன். சரியா. இப்ப தூங்கு.” என்று அவளை தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான்.

டுத்த நாள் இனியா விழித்த போது இளவரசன் அங்கு தான் இருந்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்ன இன்னும் இங்க இருக்கீங்க என்று கேட்டாள்.”

“ஏன் இருக்க கூடாதா”

“நீங்க ரெண்டு மூணு நாளா அப்படி தானே பண்ணீங்க”

“சரி விடு.” என்று எழுந்து போய் விட்டான்.

சில நாட்களில் தன் வாழ்க்கை இப்படி மாறி விட்டதே என்று இனியாவால் நம்பவே முடியவில்லை.

காலை ஒன்பது மணிக்கெல்லாம் பாலு இனியாவிற்கு போன் செய்தான்.

“சொல்லுங்க மாமா”

“இனியா. ஸ்வேதா வீட்டுல இருந்து இப்ப தான் போன் பண்ணாங்க. அவளுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்களாம். அப்படின்னு சொல்றாங்க. எனக்கு ஒன்னும் புரியலை” என்றான்.

“என்ன சொல்றீங்க மாமா. நேத்துக் கூட அவ இங்க வந்திருந்தாளே.”

“என்னன்னு எனக்கு தெரியலை. அவ கிட்ட பேச முடியலை”

“ஓ சரி. நான் பேசறேன் மாமா” என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டு ஸ்வேதாவிற்கு போன் செய்தாள்.

ஸ்வேதா இவள் போனுக்காகவே காத்திருந்தது போல் போனை எடுத்து பேசினாள்.

“ஸ்வேதா. மாமா போன் பண்ணாரு, என்னென்னவோ சொன்னாரு. என்ன நடக்குது”

“ஏன்க்கா நேரா கேட்காம சுத்தி வளைச்சி கேட்கறீங்க. எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு. அதுக்கு என்ன இப்ப”

இனியாவிற்கு தலையே சுத்துவது போல இருந்தது.

“என்ன, என்ன சொல்ற நீ” என்றவளுக்கு பேச்சே வரவில்லை.

“ஆமா எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சி. எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கற பாமிலியிலயா என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றீங்க. என்னால அது முடியாது”

“அப்ப நீ சந்துருவை லவ் பண்ணது”

“லவ். ஆமா பண்ணேன். பட் என்னால இப்படி கஷ்டப் படர பாமிலில எல்லாம் மேரேஜ் பண்ணிக்கிட்டு கஷ்டப்பட்டு எல்லாம் வாழ முடியாது. ஏற்கனவே ஒரு நல்ல இடத்துல இருந்து கேட்டுட்டு இருந்தாங்க. நான் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்தேன். இப்ப நேத்து நடந்த இன்சிடென்ட்க்கு அப்புறம் என்னோட எண்ணத்தை மாத்திக்கிட்டேன், அதுவும் உங்க அத்தை என்னை அப்படி பேசினதுக்கு அப்புறம் நான் அந்த வீட்டுல போய் கல்யாணம் பண்ணிட்டு வருவேனா. நெவெர்” என்றாள் ஆணவமாக.

இளவரசன் ஏன் இத்தனை நாட்கள் இவளை குறை சொன்னான் என்று இனியாவிற்கு தெளிவாக புரிந்தது. ஆனால் தெரியும் போது, தான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறோம் என்றும் தெரிந்தது.

ஆனால் தான் தேவை இல்லாமல் தலையிட்டு சந்துருவுடன் இவளுக்கு திருமணம் வேறு பேசி விட்டோமே, இப்போது சந்துருவிற்கு இது தெரிந்தால் எப்படி வருத்தப் படுவான் என்று எண்ணி வருந்தினாள். (ஐயோ ஐயோ நீ இவ்வளவு சின்னப் புள்ளையா இருக்கியே டீ செல்லம்”

போனை வைத்து விட்டு இனியா அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் அவளருகே வந்து அமர்ந்தான்.

ஆதரவாக இனியாவின் தோள் மேல் கை வைத்தான்.

இனியாவால் அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க இயலவில்லை.

“என்னாச்சி டா”

“---“

“இனியா. என்னாச்சின்னு கேட்டேன்”

“இளா. அது வந்து, முதல்ல நான் உங்க கிட்ட சாரி கேட்டுக்கறேன்.”

“எதுக்கு சாரி”

நேற்று நடந்ததில் இருந்து ஆரம்பித்து இனியா இன்று ஸ்வேதா பேசியது வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

இளவரசன் ஒரு நிமிடம் ஒன்றும் கூறாமல், “ஒரு நிமிஷம்” என்று போனை எடுத்து யாருக்கோ போன் செய்து பேசினான்.

“என்னாச்சி என்றான், சரி சரி, கரெக்ட்டா தான் இருக்கு” என்று விட்டு வைத்து விட்டான்.

இனியாவோ அவன் கோபப் படுவான் என்றெல்லாம் எதிர்ப்பார்த்திருக்க அவன் அமைதி அவளை என்னவோ செய்தது.

இளவரசன் போனை வைத்த உடன் இனியா அவனை கேள்விக் குறியாக நோக்க, இளவரசன் “இன்னும் ஒரு நிமிஷம்” என்று கூறி விட்டு திரும்ப போன் செய்தான்.

“ஹேய் சக்சஸ் சக்சஸ். நம்ம பிளான் வொர்க் அவுட் ஆகிடுச்சி” என்று கத்தினான்.

இனியாவிற்கு இப்போது சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.

“சரி சரி. ஓகே. நான் போனை வச்சிடறேன், இங்க புல்லா எக்ஸ்ப்ளைன் பண்ணணும். இங்க வரர்துன்னா கிளம்பி வாங்க” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.