(Reading time: 78 - 155 minutes)

னியா அமர்ந்திருந்த நிலையை பார்த்த ஸ்வேதாவிற்கு யோசனையாகவே இருந்தது. இந்த ரெண்டு நாளா ஏதும் சரியில்லை என்று எண்ணிக் கொண்டாள்.

“என்னக்கா. ஏன் ஒரு மாதிரி இருக்கறீங்க” என்று கேட்டாள் ஸ்வேதா.

“ம்ப்ச். ஒன்னும் இல்லை.”

“இல்லை. நீங்க என்னவோ ஒரு மாதிரி தான் இருக்கீங்க. அதுவும் கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகலை. இப்பவே இப்படி இருக்கீங்கன்னா எல்லாரும் என்ன சொல்வாங்க”

இனியாவிற்கு உச்சகட்ட எரிச்சல் வந்தது. ஆனால் ஏதும் பேசாமல் அவளுக்கு காபி கொண்டு வருவதாக சொல்லி உள்ளே சென்று விட்டாள்.

ஸ்வேதாவிற்கும் எரிச்சல் தான். என்ன கேட்டும் வாயை திறக்கவில்லையே என்று.

அங்கு அமர்ந்திருந்த பவித்ரா விட்டால் அவளை எரித்து விடுவதை போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையை கண்ட ஸ்வேதா பவித்ராவை பதிலுக்கு வெட்டுவது போல் பார்த்து வைத்தாள்.

இனியா உள்ளே போனவுடனே இளவரசன் வீட்டிற்குள் வந்தான். வந்தவன் யாரையும் கவனிக்காமல் அரக்க பறக்க மேலே சென்றான்.

அதற்குள் இனியா இவளுக்கு காபி கொண்டு வர, பவித்ரா இளவரசன் வந்ததை பற்றிக் கூறினாள்.

இனியா மாடிக்கு செல்ல எத்தனிக்க அதற்குள் இளவரசன் கீழே வந்து விட்டான்.

“இளா ஒரு நிமிஷம்”

“ப்ளீஸ். இப்ப டைம் இல்லை”

“சரி. எப்ப வருவீங்க சொல்லுங்க”

“அதை சரியா சொல்ல முடியாது” என்றான் அவள் முகத்தைப் பார்க்காமல்.

இனியாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“இளா. ப்ளீஸ் என்ன பிரச்சனைன்னு தெரியாம நான் எப்படி பீல் பண்ணுவேன் இளா” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

இனியாவின் பேச்சைக் கேட்டவாறே வெளியே வந்த அவன் தாய் “என்னடா என்ன நடக்குது இங்கே, ரெண்டு நாளா ஏதும் சரியில்லை. என்னன்னு வீட்டுல இருக்கறவங்களுக்கு கூட சொல்லாம நீயும் சந்துருவும் என்னடா பண்றீங்க.”

இளவரசன் “அம்மா ப்ளீஸ் இப்ப ஏதும் சொல்லிட்டிருக்க எனக்கு டைம் இல்லை. புரிஞ்சிக்கோங்க” என்றவாறு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

எல்லோருக்கும் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான். ஸ்வேதா உட்பட. அவளுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் போலிருந்தது. எனவே கிளம்பாமல் அங்கேயே இருந்தாள்.

சிறிது நேரம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

சந்துரு உள்ளே நுழைந்தான்.

இனியாவும், அவன் அன்னையும் அவனை பிடித்துக் கொண்டு “என்ன நடந்தது. சொல்லு” என்று அவனை உலுக்கி எடுத்து விட்டார்கள்.

“அம்மா இப்ப எதை சொல்லவும் நேரம் இல்லைம்மா”

“அப்படி என்னடா நடந்துடுச்சி. தலைல இடியா விழுந்துடுச்சி. ஏன் இப்படி பண்ணிட்டிருக்கீங்க”

“ஐயோ. என்னென்னவோ நடந்துடுச்சி. அப்பா விட்டுட்டு போனப்ப இருந்த நிலைமைக்கே திரும்ப வந்துடுவோமோன்னு பயமா இருக்கும்மா”

“என்னடா சொல்ற.” என்று அதிர்ந்தார் ராஜலக்ஷ்மி.

சந்துரு உடனே பதறி “அம்மா ஒன்னும் பயந்துக்காதீங்க.  அண்ணன் எல்லாத்தையும் சரி பண்ணிடுவார், என்ன கொஞ்ச நாள் எடுக்கும். ஆனா நீங்க எங்களை நம்பணும். அது தான் எங்களுக்கு சக்தி தரும்மா. இல்லன்னா நாங்க ஒடிஞ்சி போயிடுவோம்” என்றான்.

“என்னது” என்று கிட்டத்தட்ட அலறினாள் ஸ்வேதா.

சந்துரு அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, தாயை நோக்கினான்.

ராஜலக்ஷ்மி நிலைமையை புரிந்துக் கொண்டு “சரிப்பா. நாங்க தைரியமா தான் இருக்கோம். என்னன்னு தெரியாம தான் பயமா இருந்துச்சி. நீ போ. ஏதோ அவசரம்ன்னு சொன்னியே” என்றார்.

“சரிம்மா” என்று சந்துருவும் கிளம்பி விட்டான்.

அவன் சென்றவுடன் இனியாவிடம் திரும்பிய ராஜலக்ஷ்மி “நீ தான் இப்ப தைரியமா இருக்கணும்மா. அவனோட தைரியம் குறையாம இருக்கற மாதிரி நீ தான் அவனுக்கு ஆறுதல் கொடுக்கணும். இப்ப சரியா என்ன நிலைமைன்னு எனக்கு தெரியலை. பட் இதை விட மோசமான நிலைமைல இருந்து கூட நாங்க வெளிய வந்திருக்கோம். சோ நீ நாம நல்லா வருவோம்ன்றதை நம்பணும்” என்றார்.

இனியாவும் “எனக்கு புரியுது அத்தை” என்றாள்.

ஆனால் அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.

இன்னும் பிரச்சனை என்னவென்பது சரியாக தெரியவில்லை. ஆனால் ஏதோ பெரிய பிரச்சனை என்று மட்டும் புரிந்தது.

அதற்குள் ஸ்வேதா “ஐயய்யோ அக்கா. என்ன பிரச்சனைன்னு கூட சரியா தெரியலையே. இதுல வேற உங்க கல்யாணம் இப்ப தான் ஆச்சி. அதுக்குள்ளே இப்படி ஒரு பிரச்சனைன்னா ஊர்ல எல்லாரும் என்ன சொல்லுவாங்க. உங்களை தான் தப்பா பேசுவாங்க” என்றாள்.

அதற்குள் பவித்ராவிற்கு கோபம் வந்து “நாக்கை அடக்கி பேசுங்க. எந்த டைம்ல என்ன பேசணும்ன்னு தெரியாதா. அவங்க இப்ப என்ன சிடுவேஷன்ல இருக்காங்கன்னு கூட புரிஞ்சிக்க முடியாதா” என்று கோபமாக கேட்டாள்.

இத்தனை நாட்களாக அடங்கிக் கிடந்தவள் இன்று எல்லோர் எதிரிலும் தன்னை எதிர்த்து பேசுகிறாளா என்ற கோபத்தில் “ஹலோ என்ன ஓவரா பேசற. நான் என்ன யாரும் பேசாததையா சொன்னேன். அதுவும் இல்லாம நீ யாரு என்னை இப்படி கேட்கறதுக்கு, உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு” என்று கேட்டாள்.

ராஜலக்ஷ்மி “ஸ்வேதா. என்னம்மா பேசற. அவ என் தம்பி பொண்ணு. அவளுக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு. அதனால நீ இப்படி பேசாத. அவ சொன்னதுல என்ன தப்பிருக்கு. எந்த நேரத்துல எப்படி பேசணும்ன்னு உனக்கு தெரியாதா” என்று கோபமாக கேட்டார்.

அங்கிருந்த எல்லோரும் அவளுக்கு எதிராக இருக்க, அவளுக்கு வந்த கோபத்தில் அங்கிருந்து சட்டென்று கிளம்பி சென்று விட்டாள்.

டுத்த நாள் இரவு தான் இளவரசன் வீட்டிற்கு வந்தான்.

அவனை அப்போது எதுவும் கேட்டு கஷ்டப் படுத்த விரும்பாத இனியா ஏதும் அவ்வளவாக கேட்காமல், அவனுக்கு வேண்டியதை மட்டும் செய்தாள்.

இளவரசன் சாப்பிட்டு விட்டு படுக்க சென்று விட்டான்.

இனியாவும் வேலைகளை செய்து விட்டு அறைக்கு சென்றாள்.

இளவரசன் முகத்தை பார்த்த படியே படுத்திருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.