(Reading time: 78 - 155 minutes)

வளை இத்தனை நாட்களாக பார்க்காமல் அவள் நினைவோடு என்று அவளை பார்ப்பேன் என்று ஏங்கிக் கொண்டிருந்த சந்துரு இன்று அவளை சந்தோசமாக பார்க்க இயலாமல் வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பவித்ரா தலையே நிமிராமல் ஏதோ பொம்மை போல் குனிந்த படியே சென்றாள். அவள் செய்த எந்த அலங்காரமும் அவளின் புன்னகை இல்லாததால் இருந்த இடம் தெரியாமல் போனது.

அவள் முகத்தில் சந்தோஷம் துளியும் இல்லை. அதை பார்த்த பின்பு தான் சந்துருவின் மனதிற்குள் ஒரு குளுமை பரவியது.

அவ மனசுல நான் தான் இருக்கேன் என்று எண்ணிக் கொண்டு அவளை தனியாக பார்க்கும் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.

அந்த சந்தர்ப்பமும் கிடைத்தது. எல்லோரும் வெளியே சென்று விட, ஏதோ ஒரு பெண் மட்டும் அவள் பக்கத்தில் இருக்க, சந்துரு உள்ளே நுழைந்து, அவங்க கிட்ட ஒரு நிமிஷம் பேசணும் என்றவுடன் அவளும் வெளியே சென்று விட்டாள்.

பவித்ரா சந்துரு அங்கு வந்திருப்பான் என்று எண்ணவே இல்லை.

அவனை பார்த்த மாத்திரத்தில் சந்தோஷம் பொங்கிக் கொண்டு வந்தது. ஆனால் வந்த விரைவிலேயே அங்கு மறைந்து போய் அவள் அவன் முகம் பார்க்காமல் திரும்பிக் கொண்டாள்.

அவனை பார்த்தவுடன் அவள் கண்ணில் தோன்றிய அந்த எதிர்ப்பார்ப்பும் சந்தோசமே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

“பவி” என்றான்.

இந்த முறை அப்படி சொல்ல உங்களுக்கு ரைட்ஸ் இல்லை என்று பவித்ரா சொல்லவில்லை.

ஆனால் அடிப்பட்ட பார்வை ஒன்றை மட்டும் செலுத்தினாள்.

சிறிது நேரம் கழித்து “இங்கிருந்து போயிடுங்க” என்று மட்டும் சொன்னாள்.

“எனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் தான் தெரியனும். உனக்கு இந்த கல்யாணத்துல முழு மனசோட சம்மதமான்னு மட்டும் எனக்கு சொல்லு. நான் போயிடறேன்” என்றான்.

பவித்ராவால் ஏதும் சொல்ல முடியாமல் முகத்தைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அதற்குள் இனியா, ஜோதி, இளவரசன், பாலு என எல்லோரும் உள்ளே வர, சந்துரு “அண்ணா. பவித்ராவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா. நாங்க ரெண்டு பேரும் விரும்பறோம்” என்றான்.

எல்லோரும் அமைதி காக்க, ஜோதி மட்டும் பொறுக்க முடியாமல் “ஹேய் பைனலி ரெண்டு பேரும் இதை ஒத்துக்கிட்டாங்க” என்று கத்தி விட்டாள்.

எல்லோரும் அவளை முறைக்க, பாலு “இன்னும் கொஞ்ச நேரம் ரெண்டு பேரையும் கதற விடலாம்ன்னு பார்த்தா ஏண்டீ இப்படி பண்ண” என்றான்.

அவர்களின் வார்த்தைகள் சந்துருவிற்கு கேட்டாலும், அவனால் உடனடியாக எதையும் நம்ப முடியவில்லை.

“ஐயோ மாப்பிள்ளை. வாங்க வாங்க. எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க. நீங்க உங்க ரூம்க்கு போய் ரெடி ஆகணும், இந்த பொண்ணு வேற அழுது முகத்தை இப்படி வச்சிருக்கு, அவளை கொஞ்சம் சரி பண்ணணும், எங்களுக்கு நிறைய வேலை இருக்கு, முதல்ல இவரை இங்கிருந்து கூட்டிட்டு போங்க” என்று பாலுவிடம் கூறினாள்.

அப்போதும் சந்துரு திருதிருவென்று முழிக்க, “ஏய் எல்லாம் உண்மை தான் டா. உங்களுக்கு தான் எங்கேஜ்மென்ட். நாங்க என்னென்னவோ செஞ்சும் ரெண்டு பேரும் உண்மையை ஒத்துக்கவே இல்லை. அதுக்கு தான் இந்த ஷாக் ட்ரீட்மென்ட். போதுமா. வேற எது பேசணும்ன்னாலும் அப்புறம் பேசலாம். டைம் ஆகிடுச்சி” என்று அவனை கிளப்பினர்.

எந்த ஒரு குறையும் இல்லாமல் அந்த நிச்சயதார்த்தம் நல்ல படியாக முடிந்தது எல்லோரின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதத்துடன்.

இந்த ஸ்வேதாவை பத்தி சொல்ல மறந்துட்டேன் பாருங்க. கொஞ்ச நாள்லயே எல்லா விசயமும் அவளுக்கு தெரிய வந்து, ஏதும் பண்ண முடியாம வெளி ஊருக்கு படிக்க போகிறேன் என்று போய் விட்டாள்.

நிச்சயத்துக்கு அப்புறம் பவித்ராவை இங்க இருக்கக் கூடாதுன்னு அவளோட அப்பா ஊருக்கே கூப்பிட்டாரு, அப்புறம் எல்லாரும் ஏதேதோ பேசி, பவித்ராவும் வேலையை எல்லாம் விட முடியாதுன்னு சொன்னதால இனியாவோட அம்மா வீட்டுல அவளை இருக்க சொல்லிட்டாங்க.

எப்பவாச்சும் ஏதாச்சும் ரீசன் க்ரியேட் பண்ணி சந்துரு அங்க போயிடுவான். இல்லைன்னா பவித்ராவை இங்க வர சொல்லி டார்டர் பண்ணுவான்.

ந்துரு பவி கல்யாணத்துக்கு இன்னும் பதினைஞ்சி நாள் தான் இருக்கு, இதுல ரெண்டு நாள்ள அவளுக்கு பிறந்த நாள் வருது.

இப்ப பவித்ராவோட பிறந்த நாளுக்கு பவித்ரா இங்க இருந்தே ஆகணும், அதுவும் நைட் பண்ணிரண்டு மணிக்கு அவ கூட செலிப்ரேட் பண்ணணும், அதுக்கு நீங்க தான் அவளை எப்படியாச்சும் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்ன்னு சந்துரு இனியா கிட்ட ஒரே அடம் பிடிச்சிட்டு இருந்தான்.

அப்புறம் எப்படியோ இனியா வீட்டுல என்னென்னவோ சொல்லி பவித்ராவை முதல் நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டாள்.

ரவு பதினொன்று ஐம்பது.

பவித்ராவோட போன் அடிக்க பவித்ரா தூக்க கலக்கத்துலயே போனை எடுத்தாள்.

“ஹலோ”

“ஹேய். என்ன தூங்கற. எழுந்திரு எழுந்திரு”

“நீங்களா. எனக்கு தூக்கமா வருது. அப்புறம் பேசறேன்”

“அடிப்பாவி. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு, நான் வெளியில தான் நிக்கறேன், ஒழுங்கா வந்து கதவைத் திற, இல்லன்னா நான் எல்லாருக்கும் கேட்கற மாதிரி கதவை தட்டுவேன்” என்று அவன் மிரட்ட, அதில் பயந்த பவித்ரா தூக்கத்திலிருந்து விழித்து வந்து கதவை திறந்தாள்.

கதவை திறந்தவள் “ஏன் இப்படி பண்றீங்க. இதுக்கு தான் நான் இங்க வரக் கூடாதுன்னு இருந்தேன்” என்று சிணுங்கினாள்.

இவளுக்கு இவ பர்த்டே கூட நியாபகம் இல்லையா என்று குழம்பினான்.

சரி இருக்கட்டும் என்று கதவை சாத்தி விட்டு, அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றான்.

“ஏய் என்ன பண்றீங்க”

“ஒரு நிமிஷம் ஏதும் கேட்காத, ஒரே நிமிஷம்” என்றவாறு அவளை அவனரைக்கு அழைத்து சென்று விட்டான்.

இருவரும் உள்ளே சென்ற பிறகு கதவை சாத்தினான். அறையோ இருளாக இருந்தது.

“என்ன பண்றீங்க” என்று பவித்ரா பயத்துடன் கேட்க ஒரு நிமிஷம் என்று கூறி விட்டு மொபைலில் டைம் பார்த்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.