(Reading time: 78 - 155 minutes)

முதலில் இளவரசன் அவளுக்கு ரிங் போடுவதை போலவும், இரண்டாவது ரிங்கை போட்டுக் கொண்டு இளவரசன் பார்க்கும் பார்வையை படம் பிடித்திருந்தார்கள். அவன் காதல் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, இனியாவோ அந்த பார்வையில் மயங்கி நின்றுக் கொண்டிருந்தாள்.

சந்துரு வாயை மூடாமல் கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

சரியாக அப்போது ஜோதி, பாலு, ராஜகோபால், லக்ஷ்மியுடன் பவித்ரா வரவும், முதலில் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டே வந்தவன் பவித்ராவை பார்த்தவுடன் அமைதியாகி விட்டான்.

பின்பு அனைவரும் சேர்ந்து திரும்ப ஆல்பத்தை முதலில் இருந்து பார்க்க ஆரம்பிக்க சந்துரு வாயையே திறக்காமல் மௌனியாகி விட்டான்.

இளவரசன் வேறு “என்னடா இவ்வளவு நேரம் வாயை மூடாம பேசிட்டிருந்த, திடீர்ன்னு சைலென்ட் ஆகிட்ட” என்று கேட்டு வைத்தான்.

ஜோதி “அப்படின்னா எங்களை பார்த்து தான் பேச மாற்றாரா” என்றாள்.

“அப்படி எல்லாம் இல்லை அண்ணி” என்று ஏதோ கூறி சமாளித்தான்.

காலையில் முகூர்த்த ஆல்பத்தில் இளவரசன் தாலி கட்டுவதை முழு பக்கத்திற்கு பெரிதாக போட்டிருந்தார்கள்.

இனியாவும் இளவரசனும் அந்த நேரத்திற்கே போய் மூழ்கி விட்டார்கள். கண் கொட்டாமல் அந்த படத்தை திருப்பாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கிருந்த மன நிலையை அந்த போட்டோ படம் பிடித்திருந்தது.

ஜோதியும், பவித்ராவும் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இனியாவும் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

கடைசியாக ஆல்பம் பார்த்து முடித்து விட்டு சீடி போட்டார்கள். அது அதற்கு மேல் அவர்களின் காலை வாரியது.

அதிலும் அவன் இனியாவிற்கு ரிங் போடும் நிகழ்வு வந்தவுடன் சந்துரு விசில் அடிக்க ஆரம்பித்து விட்டான்.

பவித்ரா அவனை ஒரு முறை முறைத்து விட்டு ‘நீ இதுக்கு தான் லாயக்கு’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.

அதன் பின்பு சந்துரு நல்ல பிள்ளை போல் அமர்ந்து கொண்டான்.

ஜோதிக்கு தான் இதில் எதை பார்த்து சிரிப்பது என்று குழப்பம். அவள் சிரிப்பை நிறுத்த வாய்ப்பே கொடுக்காமல் ஒவ்வொரு நிகழ்வும் நடந்து கொண்டிருந்தது.

ரு அளவுக்கு மேல் பொறுக்க முடியாமல் இனியா எழுந்து அறைக்கு போய் விட்டாள். இளவரசனும் யார் கேலி செய்ததையும் கண்டு கொள்ளாமல் இன்னொரு சீடியை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தான்.

இளவரசன் அறைக்குள் வரும் போது இனியா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“என்னடா”

“யாரும் என்னை சமாதான படுத்த வேண்டாம்”

“இப்ப யாரு உன்னை சமாதானப் படுத்தினாங்க. ஓ அப்படின்னா நீ கோபமா இருக்கியா. பாரேன், சொல்லவே இல்லை”

“பொய் சொல்லாதீங்க”

“நான் என்னடி போய் சொன்னேன்”

“எனக்கு தெரியும், நான் ஏதாச்சும் அப்செட்டா இருக்கற மாதிரி இருந்தா, என்னை சமாதானப் படுத்த தான் நீங்க அப்படி கேட்பீங்க”

அவளை ஆழமாக பார்வையிட்டு “அதெல்லாம் தெரிஞ்சி இருக்கா உனக்கு” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

“ஐயோ விடுங்க. வலிக்குது” என்று கீச்சுக் குரலில் கத்தினாள்.

அவளை விட்டு விட்டு, “இந்த பிரச்சனைல நீ கோபமா இருந்ததை மறந்துட்டியே டா”

“அட ஆமா. மறந்தே போயிட்டேன். நீங்க ஒன்னும் என் கிட்ட பேசாதீங்க”

“ஏன் டா”

“பின்ன என்னவாம். எல்லாரும் என்னை இப்படி கிண்டல் பண்றதுக்கு நீங்க தான் ரீசன்”

“நான் என்னடா பண்ணேன்.”

“நீங்க என்ன பண்ணலை. உங்களால என்னால நம்ம மேரேஜ் வீடியோ கூட பார்க்க முடியலை” என்று சிணுங்கினாள்.

“ஓ செல்லம். உனக்கு இது தான் ப்ராப்ளமா”

“ம்ம்ம்” என்றாள் குழந்தையை போல் முகத்தை வைத்துக் கொண்டு.

“டன்டன்டன்” என்று சீடியை வெளியில் எடுத்து காண்பித்தான்.

“ஹேய். எடுத்துட்டு வந்துடீங்களா. அவங்க எல்லாம் பார்த்துட்டு இருந்தாங்களே”

“என் அறிவு பொண்டாட்டி. இன்னொரு சீடி இருந்தது”

“ஓ” என்று விட்டு லேப்டாப்பில் அதை போட்டு பார்த்தார்கள்.

இளவரசன் இனியாவிற்கு ரிங் போடும் நிகழ்ச்சி, பாக்ரவுண்டில் அந்த பாட்டு, இவர்கள் இருவரின் முக ரியாக்ஷன் என அத்தனையும் போட்டோவை விட தத்ரூபமாக இருந்தது.

இருவரும் அடுத்தவரின் சிறு சிறு அசைவுகளையும், ரியாக்ஷன்களையும் கவனமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அதை பார்த்து முடித்தும் இனியா அந்த நினைவுகளில் இருந்து வெளியே வரவில்லை. அவளுக்கு நடந்து முடிந்த அனைத்துமே இன்னும் கனவு போல தான் இருந்தது.

“நம்பவே முடியலை இளா”

அவளை அணைத்துக் கொண்டு “இப்ப நம்ப முடியுதா” என்று கேட்டான் இளவரசன்.

அவன் கையில் இரண்டு அடி போட்டு “சும்மா இருங்க” என்றாள்.

“பின்ன நீ எப்ப பார்த்தாலும் நம்ப முடியலை நம்ப முடியலைன்னு சொல்றியே அதான். வழக்கமா கையை கில்லுவாங்க. நான் ஒரு சேன்ஜ்க்கு இப்படி பண்ணேன்.”

“இளா எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா. ஏதோ இந்த உலகத்துல இருக்கற எல்லா சந்தோசமும் எனக்கு கிடைச்சிட்ட மாதிரியே இருக்கு. இந்த வீடியோ எல்லாம் எவ்வளவு சூப்பர் இல்ல. நம்மளோட ஒவ்வொரு அசைவையும் அப்படியே காண்பிக்குது”

“ம்ம்ம். கரெக்ட் தான். இந்த மாதிரி மொமென்ட்ஸ் எல்லாம் அப்படியே சேவ் பண்ணி வச்சி அப்பப்ப பார்த்துக்கலாம்”

“ஆமா. நான் ரொம்ப சந்தோசமா இருக்கு. நாம எவ்வளவு லக்கி இல்ல”

“ம்ம்ம். ஆமா. நாம விரும்பனோம். அதெல்லாம் சரி தான். நம்மளோட சர்ப்ரைஸ் எங்கேஜ்மென்ட் எல்லாம் எவ்வளவு சூப்பரா இருந்துச்சி இல்ல”

“எனக்கு எங்கேஜ்மென்ட் மட்டுமா சர்ப்ரைஸா இருந்துச்சி. எனக்கு தினமும் தான் ஒரு சர்ப்ரைஸ் நடக்குது”

“சரி. இப்ப ஒரு சர்ப்ரைஸ் தரவா” என்று கூறி விட்டு அவன் எழுந்து செல்ல, இனியாவும் உடன் எழுந்து “இளா. டெய்லி எங்க தான் போய் எதாச்சும் ஒன்னு எடுத்துட்டு வரீங்க. இன்னைக்கு நானும் வந்து பார்க்க தான் போறேன்” என்று அடம் பிடித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.