(Reading time: 14 - 28 minutes)

ரண்டு நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டிருந்தார்கள் ஸ்வேதாவின் அம்மாவும், அப்பாவும்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் இருவரும்.

மலர்ந்த புன்னகையுடன் சில நிமிடங்கள் ஹாலில் அமர்ந்திருந்த தன் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

பேச்சினிடையே கேட்டார் அவள் மாமா 'என்னமா  அர்ச்சனா? என் பையன் எப்படி? பிடிச்சிருக்கா உனக்கு.?  நல்ல பையன்மா அவன். எனக்கு தெரிஞ்சு பதினேழு வயசிலேருந்து உன்னை லவ் பண்றான். உனக்காக அப்பவே எங்ககிட்டே அடியெல்லாம் வாங்கி இருக்கான். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ அவனை.

அவருடன் அமர்ந்திருந்த மனோவின் கண்கள் அவளை ஊடுருவிக்கொண்டே இருந்தன.

மெல்ல சிரித்த விவேக்கின் கண்கள் மெல்ல மெல்ல நிமிர்ந்து அர்ச்சனாவின் முகத்தை தவிப்புடன் ஆராய்ந்தன.  ஒரு முறை, ஒரே ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்து விட மாட்டாளா என் தேவதை.

கண்களை கூட நிமிர்த்தவில்லை அர்ச்சனா.  சின்னதாய் புன்னகைத்து சமாளித்து, அங்கிருந்து நழுவி சமையலறையை நோக்கி நடந்தவளை பின் தொடர்ந்தான் விவேக்.

சமையலறையில் ஸ்வேதாவுடன் பேசிக்கொண்டிருந்தார் அவள் அம்மா. அவர் முகத்தில் அப்படி ஒரு நிம்மதியும், சந்தோஷமும் குடிக்கொண்டிருந்தது.

'இந்தாமா உன் மருமகள்.  கூட்டிட்டு வந்திட்டேன் உன்கிட்டே. இனிமே எல்லாம் உன் பொறுப்பு. அர்ச்சனாவின் முகத்தை பார்த்துக்கொண்டே தன் அம்மாவிடம் சொன்னான் விவேக்

ஒரு முறை சட்டென அவன் மீது பார்வையை வீசிவிட்டு திரும்பியவளை .அன்பான புன்னகையுடன்  அணைத்துக்கொண்டார் அம்மா.

எப்படிம்மா இருக்கே? என்றார் அவர்.

அழகான புன்னகையுடன் தலையசைத்தாள் அர்ச்சனா.

ஏம்மா? நிச்சியதார்த்த தேதி குறிச்சிட்டு வந்திட்டியா? கேட்டான் விவேக்.

அர்ச்சனவினுள்ளே திடுக்கென்றது . 'இருடா. பறக்காதே.' சிரித்தார் அம்மா.

ரெண்டு, மூணு தேதி குறிச்சிட்டு வந்திருக்கேன். நீ தான் அர்ச்சனா பார்த்து சொல்லணும் உனக்கு எது சவுகரியம் .எப்போ நிச்சியதார்த்தம் வெச்சுக்கலாம்னு' தான் வாங்கி வந்திருந்த பூவை அர்ச்சனாவின் தலையில் சூட்டியபடியே சொன்னார் அம்மா.

விவேக்கின் மனம் தவித்துக்கொண்டே இருந்தது. 'சரி என்று ஒரு வார்த்தை சொல்லிவிட மாட்டாளா அர்ச்சனா'?.  

மெல்ல மாறியது அர்ச்சனாவின் முகம்.  சின்ன புன்னகையுடன் பதில் சொல்லாமல் தவிர்த்தவள் காய் நறுக்கிகொண்டிருந்த ஸ்வேதாவின் அருகில் வந்து ' நீ எதுக்கு  இந்த வேலையெல்லாம் செய்யறே. போய் ரெஸ்ட் எடு போ. நான் கட் பண்றேன். என்றபடியே காய்கறிகளையும், கத்தியையும் எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்தாள் அர்ச்சனா.

னக்கு நிச்சயதார்த்தமா? இன்னொரு முறையா? இத்தனை நாள் இல்லாத ஏதோ ஒரு உணர்வு அவளை அழுத்துவது போல் இருந்தது.

தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள் 'என் அப்பாதான் எனக்கு முக்கியம். அவர் பேச்சை மீறி நான் எதுவுமே செய்யப்போவதில்லை.'

ஆனால் மனம் எதையுமே கேட்பதாக இல்லை. 'ஏதோ ஒன்று தன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகுவதைப்போல் தோன்றியது. ஏனோ வசந்தை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது. ஓடிச்சென்று அவன் தோளில் சாய்ந்து விட வேண்டுமென்று தோன்றியது..

சுற்றி உள்ளவர்களின் பார்வை தன் மீது படர்வதை உணர்ந்தவளாய் முகத்தில் எந்த உணர்வையும் வெளிகாட்டாமல் காய் நறுக்க துவங்கினாள் அர்ச்சனா.

அவள் மனதை மொத்தமாய் படித்தவனாய் .சின்ன பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான் விவேக்.,

சில நொடிகள் அர்ச்சனாவின் முகத்தில் பரவி மறைந்த  அந்த அழுத்தத்தையும் வருத்தத்தையும் யோசனையுடன் பார்த்தபடியே நின்றார் விவேக்கின் அம்மா.

தன் மகன் முகத்தில் பரவிய அந்த ஏமாற்றத்தை அவன் தந்தையால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  அர்ச்சனா அவனை வேண்டாமென்கிறாளா என்ன?

என் மகனின் தகுதிக்கும், அந்தஸ்திற்கும் அவனை எப்படி நிராகரிக்கலாம் அவள்?. கண்களில்  கோபம் படர அர்ச்சனவையே பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

அன்று ஞாயிற்றுகிழமை என்பதால்  ஐ.ஐ.டிக்கு செல்லாமல் தனது அறையில் படுத்துக்கிடந்தார் அப்பா.                      

இரண்டு நாட்களாய்  அவர் மனம் திரும்ப திரும்ப தான் செய்த அந்த காரியத்தைதான்  சுற்றிக்கொண்டிருந்தது..

சந்த் வீட்டில் அவர் தங்கி இருந்த போது, அவன் அப்பா அனுவின் மீது காட்டிய அந்த அளவுக்கதிகமான பாசம் தான் அவரை வியப்பில் ஆழ்த்தியது

அனுவின் முகம் கூட அவருக்கு முன்பே பரிச்சியமானதாகவே தோன்றியது. யோசித்துக்கொண்டே இருந்தபோது தான் அந்த மின்னல் வெட்டியது.

அனு யாருடைய மகள் என்று புரிந்து விட்டிருந்தது அவருக்கு. அவள் அவருடன் வேலைப்பார்க்கும் சந்திரசேகரின் மகள். அவளுடைய முக ஜாடை அவள் அம்மாவை அப்படியே உரித்து வைத்திருந்தது. அதுவே அவருக்கு விடை சொல்லி விட்டிருந்தது.

தனது நண்பரை கைபேசியில் அழைத்து பேச்சினிடையே கேட்டார்' உன் பொண்ணு ஒருத்தி சின்ன வயசிலே காணாம போயிட்டா இல்லையா சந்துரு?

ம். அது ரொம்ப வருஷம் ஆச்சுப்பா. இப்போ எங்கே இருக்காளோ? எப்படி இருக்காளோ தெரியலை.

அதற்கு மேல் அவரிடம் எதுவும் சொல்லவில்லை அர்ச்சனாவின் அப்பா.

மனதிற்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருக்க  தனியே அமர்ந்து  ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த அனுவின் அருகே  அமர்ந்தவர் அனுவிடம் மெல்ல கேட்டார்

'நீ உன் சொந்த அப்பா, அம்மாவை பார்த்தால் என்ன செய்வே?

ஒரு நொடி சட்டென மலர்ந்து தான் போனது அனுவின் முகம்' அவங்க எங்கே இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா.?

தொடரும்

Manathile oru paattu episode # 18

Manathile oru paattu episode # 20

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.