(Reading time: 5 - 10 minutes)

01. என்னுயிரே உனக்காக - சகி

காலைத் தென்றலின் இனிமையான கீதமும், கொஞ்சும் குயில்களின் ராகமும் துயில் எழ செய்தன அவனை! அவன் நல்ல ஆஜானுபாகுவான தோற்றத்தோடு,ஆறடி உயரத்தோடு, வசீகரமான முகத்தோடு,ஆண்களுக்கே உரிய மிடுக்கோடு உள்ளவன்.அவன் பெயர் ஆதித்யா சரண்.அவன் மெல்ல எழுந்து ஜன்னலின் அருகே வந்து திரைச்சீலையை விலக்கினான் மார்கழி மாத பனிக்காற்று மெல்ல அவனை தீண்டி சென்றது. அவன் அதை ரசிக்கவில்லை. அந்த காலை வேளையில் அவன் செல்போன் சிணுங்கியது.எடுத்துப் பேசினான்.

"ஹலோ,சொல்லு ரகு."
En uyire unakkaga"..........."
"இல்ல!நான் வரலை"
"..........."
"நீ முதல்ல இந்தியா வா! அப்பறம் பார்க்கலாம்."
"............."
"அதான் நீ முதல்ல வான்னு சொல்றேன்-ல!"
"..........."
"சரி வச்சிடுறேன்."இணைப்பைத் துண்டித்து விட்டு, வழக்கமான தன் உடற்பயிற்சிகளையும், கடமைகளையும்  முடித்து விட்டு தன் அறையை விட்டு கீழே இறங்கி வந்தான்.

அங்கே அவன் அன்னை ராஜேஸ்வரி அவனைக் கண்டவுடன்,

"வா!கண்ணா! இரு காபி எடுத்துட்டு வரேன்" என்றார்.

அவன் அதை பொருட்படுத்தாது,

"மனோ!காபி எடுத்துட்டு வா" என்றான்.

அதை கேட்டு அவன் அன்னைக்கு வலித்தப்போதும் அது பழகி விட்ட காரணம் என்பதால் அமைதியாக இருந்தார்.

அவன் ஆணைக்கு இணங்கி அவன் கூறியதுப்போல் இரண்டு நிமிடத்தில் காபி வந்தது."ச்சீப் காபி".அவன் அதை வாங்கி அருந்தினான்.

"ஏன் ஆதி! இதே காபியை தானே நானும் தர போறேன்.நான் என்ன விஷமா கலக்க போறேன்?ஏன்பா எனக்கு இந்த தண்டனை?"

"மனோ!எனக்கு முக்கியமான வேலை இருக்கு.இதை பார்க்க எனக்கு நேரமில்லை.ஒரு வேலை இதுல விஷம் இருந்தா அதனால எனக்கு எதுவும் ஆகாது! ஏன்னா என் மனசு முழுக்க 12 வருஷத்துக்கு முன்னாடியே விஷம் ஏத்தி என்னை கொன்னுடாங்க"என்று கூறிவிட்டு சென்றான்.

அவன் செல்லும் முன் ராஜேஸ்வரி அம்மாவிடமிருந்து கண்ணீர் சிந்தியதையும், அவர் மனம் அவன் சொற்களால் காயப்பட்ட வலியை முகத்தில் பரவ விட்டதையும் அவன் கவனிக்க தவறவில்லை.அலை அலையான எண்ண அலைகளோடு தன் காரில் பயணம் செய்தான் சரண்.

அவனைப் பற்றி கூற வேண்டும் என்றால்,எதையும் சாதித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் கொண்டவன். நினைத்தவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற மனவுறுதி உடையவன்.நியாயத்துக்காக போராடும் இளம் சி.பி.ஐ.அதிகாரி. ஆயிரம் புகழாரங்கள் அவன் கழுற்றில் மாலையாக விழுந்தாலும்,அவன் சிரித்தே 12 வருட காலம் ஆகிறது என்பது முக்கியமான ஒன்றே! பலவித யோசனைகளோடு அலுவலகம் வந்து சேர்ந்தான்.காரை பார்க் செய்துவிட்டு,உள்ளே நுழைந்தான்.

அவன் செயலாளர் மகேஷ்,"குட்மார்னிங் சார்!"என்றான்.

"ம்......வசீகரன் சார் வந்துட்டாரா?"

"எஸ் சார் ஹீ இஸ் வெயிட்ங் ஃபார் யூ"

"ஓ.கே.ஐ வில் மேனேஜ் திஸ் யூ கேன் கோ நௌ"

"ஓ.கே.ச்சீப்" என்று கூறிவிட்டு நகர்ந்தான் மகேஷ்.

ஆதித்யா நேராக ஒரு அறையினுள் நுழைந்தான்.

"குட்மார்னிங் சார்"

"குட்மார்னிங் ஆதி"

"ஏதோ முக்கியமான  வேலைன்னு வர சொன்னீங்க"

"நீ உடனே சென்னைக்கு போகணும்."

"எஸ் சார்"

"டெல்லியவே மிரட்டுற தீவிரவாதி அப்துல்லா,சென்னையை குறி வச்சிருக்கான்.அதனால,கவர்மண்ட் ஒரு நம்பகமான ஆபிஸர இந்த மிஷின்ல இன்வால்வ் பண்ண சொல்லிருக்காங்க! நீ தான் சி.பி.ஐ. மட்டுமில்லாம ஆன்டி டெரரிஸ்ட் யூனிட் ச்சீப் ஆச்சே அதான் உன்னை அனுப்பறேன்"

".........."

"உன் கூட ரகுவும் வருவான்.நீங்க ஏன் போறீங்கன்னு யாருக்கும் தெரியக்கூடாது!"

அவன் மௌணம் சாதித்தான்.

"என்னாச்சு?"

"சார் ரகு வர வேண்டாம்."

"ஏன்?"

"உங்களுக்கே தெரியும் ரகு என்னை மாதிரி யாரும் இல்லாதவன் இல்லை.அவனுக்கு 3 வயசில பையன் இருக்கான்.இதுல,அவனுக்கு ஏதாவது வேணாம் சார்"

-அப்போது,"எக்ஸ்யூஸ்மீ சார்"என்று ரகு உள்ளே வந்தான்.

"எஸ்"

"நான் எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருந்தேன்.அவனுக்கும் ஒரு குடும்பம் இருக்குன்னு அவனுக்கு ஞாபகப் படுத்துங்க சார்"

சரண் அவனை முறைத்தான்.

"அங்கே பேசு"

"நல்லாருக்குடா!உன்னைப் பற்றி அவன் கவலைப்படட்டும் அவனைப் பற்றி நீ கவலைப்படு மொத்ததில் டிபார்ட்மண்ட் பற்றி யார் கவலைப்படப் போறீங்க!"

இருவரும் ஒரே சமயத்தில் கை தூக்கினர்.அதை பார்த்து,

"நீங்க இரண்டு பேரும் இன்னும் திருந்நவே இல்லடா ,இன்னும் சின்ன பசங்களாவா இருப்பீங்க?"

"சார்!இது ஆபிஸ்"என்று அவருக்கு நினைவுப்படுத்தினான் ரகு.

"அப்போ!இரண்டு பேரும் கிளம்புங்க!திஸ் இஸ் மை ஆர்டர்"

"எஸ் சார்"என்றனர் கோரஸாக.

"யூ மே கோ நௌ" இருவரும் அவருக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு வெளியேறினர்.

"நீ எப்படா ஆஸ்ரேலியாவில இருந்து வந்தே?"

"நேற்று இராத்திரிடா!"

"ராகுல்?"

"வீட்டில இருக்கான்!"

"ரகு"

"என்னடா?"

"சென்னைக்கு நீ வர வேண்டாம்"

"ஏன்?"

"இது ரொம்ப சிக்கலான கேஸ்டா,அதான்!"

"என்ன எனக்கு எதாவது ஆகிவிடும்னு நினைக்கிறீயா?"

"இல்லடா"

"அப்போ பேசாதே நாளைக்கு தயாரா இரு"

"சரிடா"

விந்தையிலும் விந்தை ஒன்றே பெற்றோரை கூட ஒருவன் மதிக்காமல் சென்று விடுகிறான்!ஆனால்,நண்பனின் வார்த்தைகளுக்கு அடங்காதவன் ஒருவனும் இல்லை.மாதா,பிதா,குரு,தெய்வம் ஆகிய நான்கினையும் ஒரே பிரதிபலிப்பாய் நண்பன் மட்டுமே காட்டுகிறான். பல சூழல்களில் ஒருவனை தாங்குகிறான்.நண்பன் நம்பிக்கையின் சாயல் என்பது உண்மையே!
ன்றிரவு-
வானில் கொஞ்சி விளையாடும் வெண்ணிலவுக்கு தான் நட்சத்திரங்கள் என்னும் எத்தனை காப்பாளர்கள் என்று களங்கமில்லாத அந்த நிலவை பார்த்தான்.அவன் நினைவுகளில் பல சிந்தனைகள் ஓடின.

"ஆதி"-அவன் திரும்பவில்லை.ஏனெனில்,அழைத்தவர் அவர் அன்னை என்பது அவனுக்கு தெரிந்த ஒன்றே!

"கண்ணா சாப்பிட வாப்பா!"

"............"

"உனக்கு கோபம் இருந்தா என்கிட்ட காட்டு,வாப்பா!"

"மனோ!சாப்பாடு எடுத்துட்டு என் ரூம்க்கு வா"-என்று குரல் கொடுத்துவிட்டு சென்றான்.

"கடவுளே!இன்னும் ஏன் என்னை உயிரோட விட்டு வச்சிருக்க!"-என்று கலங்கினார் அவர்.

"அம்மா! அழாதீங்கமா அவர் சரியாயிடுவாரு!"

"எப்போ மனோ!"

"நாளையில இருந்து கணக்கு வச்சிக்கோங்க."

"அது என்ன கணக்கு?"

"நாளைக்கு அவர் சென்னைக்குப் போறாரு"

"என்ன?"

"ஆமாம்மா!அங்கே குரு,அபி எல்லோரும் இருக்காங்கல"

"அவங்க மட்டும் இல்லை!அங்கே தானே அவளும் இருக்கா!"

"ஆமாம்மா!"

"அதுப் போதும் சரி! அவன் பசி தாங்க மாட்டான் நீ போ!"

"சரிம்மா"-அன்று தான் இறைவன் தன் வேண்டுதலுக்கு செவி சாய்த்தான் என்பது போல உணர்ந்தார் ராஜேஸ்வரி அம்மாள்.இனி தானே எல்லாம் ஆரம்பம்! 

தொடரும்...

Go to EUU # 02

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.