(Reading time: 26 - 52 minutes)

14. காதல் பயணம்... - Preethi

திருமண களைப்பெல்லாம் ஒய்ந்து போகவே மாதங்கள் ஆனன, விருந்து என்று வாரா வாரம் ஒவ்வரு விருந்தினர் வீடாக சென்று வந்ததில் மனம் நெகிழ்ந்தாலும் உடல் சோர்ந்தது புதுமண ஜோடிகளுக்கு... அர்ஜுன் சென்னையில் வேலை செய்வதால் அங்கேயே சென்றுவிட வேண்டும் என்று முன்பே தெரிந்த ஒன்றுதான் என்றாலும், திருப்பூரில் பெற்றோரிடம் இருந்து விடைபெற்று செல்லும் போது அழுது அழுது கண்கள் வீங்கி என்னவோ விண்வெளியை விட்டு வெளியே போகப்போவது போல் அழுததை அவ்வப்போது அர்ஜுன் சொல்லி சிரித்ததை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருந்தது அஹல்யாவிற்கு.

Kaathal payanam“அஹல் எல்லாம் எடுத்துகிட்டல எதுவும் மறக்கலையே?” என்று எடுத்துவைத்தவற்றையே மீண்டும் மீண்டும் கண்களும் கைகளும் சரி பார்க்க, மனமோ மகளை பிரியப்போவதை நினைத்து வருந்தியது. தாயின் செயல்களை எல்லாம் பார்த்தவளுக்கு தொண்டையில் வார்த்தைகள் சிக்கிகொண்டதே தவிர ஆறுதல் வார்த்தைகள் வெளியே வரமறுத்தது. திரைப்படங்களில் பார்க்கும் பொழுது சிரிப்பாக தெரிந்த தருணங்கள் அனுபவிக்கும் பொழுதுதான் புரிந்தது. மெதுவாக எழுந்து பின்புறமாக தன் அன்னையை கட்டிக்கொண்டவளுக்கு சிறிது நேரத்திலேயே கேவல்கள் அதிகமானது. அவளது கண்ணீர் துளிகள் பட்டு முதுகெல்லாம் ஈரம் ஆக துளசி தடுக்காமல் சத்தமின்றி கண்ணீர் சிந்தினார். வெகு நேரமாக சத்தமே இல்லாமல் இருக்கும் மனைவியையும் மகளையும் தேடி கண்ணன் அறைக்கு செல்ல, இருவரையும் கண்டு சிறிது நேரம் அமைதியாக நின்றார்.

இன்று அஹல்யா கிளம்ப போகிறாள் என்று தெரிந்ததும், நேற்று இரவெல்லாம் முழித்தே நேரத்தை கடத்திய கண்ணனுக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்... ஆனால் இப்போது வேறு வழி இல்லை அவர்களை தேற்றவேண்டியது அவராயிற்றே...

“அடடடடா.... என்ன இது சின்ன பிள்ளைப் போல, ரெண்டு பேரும் இப்படி போட்டி போட்டுக்கிட்டு அழுகுரிங்க?!?!” என்று கூறியவாறு அஹல்யாவின் கண்களை துடைத்துவிட்டார். அன்னையிடம் இருந்து தந்தையின் மார்பில் சரணடைந்த அஹல்யாவின் தலையை கோதியவாறு கூறினார் கண்ணன். “என்னடா இது!!! எங்க போற சென்னைக்கு தானே... எப்போவெல்லாம் தோணுதோ நாங்க வந்து பார்த்திட்டு வரோம்... அஸ்வத் கூட அங்கதானே இருக்கான் அப்பப்போ வந்து பார்த்துட்டு போவான்... சரியா?”    

என்ன கூறியும் அழுகை ஓயவில்லை அஹல்யாவிற்கு, அவளுக்கே ஆச்சர்யமாக தான் இருந்தது இப்படி அழுது தீர்ப்பாள் என்று அவள் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. என்னதான் தேற்றினாலும் மனதில் ஓடிக்கொண்டே தான் இருந்தது இருவருக்கும், இவள் இல்லாமல் இனி வீடே வெறுச்சோடி இருக்குமே... என்ன செய்வது??? ஒருவழியாக அவளே கண்களில் நீர் வற்றிபோய் அழுகையை நிறுத்த மூவரும் வெளியே வந்தனர்.  அஹல்யாவின் முகமே அவளை காட்டிகொடுக்க, ஹேமாவும், வெங்கட்டும் தங்கள் பங்குக்கு தேற்றினர்.  மற்றவரை போல் அஹல்யா அழுவதை கண்டு அருகே சென்று தேற்றாமல் இருந்த அர்ஜுனை ஒருமுறை விழி உயர்த்தி பார்த்தாள், அவனோ அமைதியாக நின்று முகத்தில் எதையும் பிரதிபலிக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது செய்கை மேலும் வழியை தந்தது ஒரு வார்த்தை தேற்றமட்டானா? என்று மனம் கேட்டது.

ருவரும் விடைப்பெற்று செல்ல, காரில் ஏறிய அஹல்யாவின் கண்கள் மீண்டும் கலங்க துவங்கின. தனிமைக்காகவே காத்திருந்த அர்ஜுனின் கைகள் அஹல்யாவின் முன் அவள் கை கேட்டு யாசிக்க, கலங்கிய கண்களோடு அவன் விழிகள் பார்த்து கைக்கோர்த்துக்கொண்டாள். அவனது கையில் என்ன மந்திரம் இருந்ததோ அவள் அறியாள் மனதில் இருந்த தனிமை, சோகம் எல்லாம் வெயில் பட்ட பனியாய் விலகியது. அழுகை அப்படியே அடங்க அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.. அவன் கரங்கள் அவளை சுற்றி வளைத்து தேற்ற மௌனமாக நேரம் கழிந்தது.

“நீ எப்போவெல்லாம் அத்தை மாமாவ பார்க்க நினைக்குறியோ அப்போவே அவங்கள அப்படியே தூக்கிட்டு வந்துடலாம் நம்ம வீட்டுக்கு சரியா?” என்று கூறி அவள் முகம் பார்க்க, ஏன் தான் இங்கு வர கூடாதா என்பது போல் பார்த்தாள் அவள். அவள் மனதை படித்தவன் போல் “நானும் பாவம்மில்லை லியா இத்தனை நாள் உன்னை விட்டு தனியா இருந்ததே கடினம் இனிமேல் எப்படி இருப்பேன்?!” என்று பாவமாக கேட்டான். அவனது பேச்சில் சிரிப்புவர செல்லமாக அவனது மார்பில் அடித்தாள். பின்பு என்னென்னவோ பேசி... செய்து... அவளது மனதை மாற்றினான் அர்ஜுன். 

ரவு உணவை தயார் செய்தவாறே மனதில் இந்த நினைவுகள் அஹல்யாவிற்கு ஓட, இதழில் தானாக ஒரு புன்முறுவல் தோன்றியது. மனதில் செல்லமாக அவளது அஜுவை கொஞ்சிவாறு நேரத்தை கழித்தாள். வாசல் மணி அடிக்க, புன்முறுவல் இன்னும் பெரிதாக.. உற்சாகத்தோடு கதவை நோக்கி சென்றாள். சென்றவள் ஒரு நொடி நின்று முகத்தை சீரியஸ்ஸாக வைத்துக்கொண்டு கதவை திறந்தாள். அர்ஜுன் எப்போதும் போல் உற்சாகத்தோடு “லியாகுட்டி” என்று அழைத்தவாரே அருகே வந்தான். ஆனால் அவனை அருகில் விட்டால்தானே விடுவிடுவென அவன் முகம் பார்க்காமல் சமையல் அரை நோக்கி சென்றாள்.

அவளை புரியாதவனா அர்ஜுன்??? கதவை சாத்திவிட்டு அவள் பின்னே சென்றவனுக்கு அவன் வருவானா என்று திரும்பி திரும்பி பார்த்துவிட்டு சமைத்துக்கொண்டிருந்த அஹல்யாவை  கண்டு சிரிப்பாக இருந்தது. சமையலறை முன்னே நின்றுக்கொண்டிருக்க, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அஹல்யா தொடர்ந்தாள்.

“எல்லா ஆம்பளைகளும் ஒன்னுதான் போல, லவ் பண்ற வரைக்கும் தான் பின்னாடியே வந்து கொஞ்சுறது கெஞ்சுறது எல்லாம் ஹ்ம்ம்.... நல்லா ஏமாந்திட்டேன்... அப்பவே சொன்னாங்க நான் தான் கேட்கலை” என்று பொய்யாக சிரமப்பட்டு போட்டிபோட்டாள்.

இதழ் விரிந்திருக்க பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தவன் மெதுவாக அவன் கைகளுக்குள் அவளை பின்னால் இருந்து வளைத்துக்கொண்டு “அட பாரேன்... அப்பறம் என்னவெல்லாம் சொன்னாங்க லியா????” என்று ஆர்வமாக கேட்டவாறு கழுத்துவளைவில் இதழ் பதித்தான்.

அவன் ஸ்பரிசம் உடல் சிலிர்க்கசெய்ய தொண்டை குழியில் வார்த்தைகள் சிக்கிகொண்டது. அவளது மயக்கத்தை ரசித்தவன், “லியா நீ கோவமாய் பேசிட்டு இருந்த” என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தான். அவன் குரலில் நிகழ்காலம் வந்தவள்.

“ஹா ஆமா ஆமா... இந்த மாதிரி முத்தம்லா கூட குடுத்து ஏமாத்துவாங்க ஏமாரக்கூடாதுன்னு சொன்னாங்க” என்று தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள்.. அவள் சொல்லும் அழகை ரசித்தவன், “பாருடா எவ்வளவு சொல்லிருக்காங்க” என்று கூறியவாறு அவளை மேலும் அவனோடு இறுக்கிக்கொள்ள இம்முறை மொத்தமாக தோற்றாள் அஹல்யா... இடதுகையால் அவன் காதை திருகி “போதும் போதும் இப்படி அழுக்கு மூட்டையா என்னை தொடாதிங்க போங்க போய் fresh up ஆகுங்க” என்று அவனை நகர்த்திவிட்டாள்.

“ஹ்ம்ம்ம்ம் ரொம்ப தான்டி பண்ணுற” என்று பொருமியவாறு சென்றான். திடிரென்று நியாபகம் வந்தவளாக “அஜு இந்த வாரம் படத்துக்கு போகலாமா?” என்று ஆர்வமாக கேட்க, அர்ஜுனோ “ம்ம்ம்ம் ஹ்ம்ம்” என்று இடம் வலமாக தலை ஆட்டினான். அவன் மறுப்பான் என்று எதிர்பார்க்காததால் லியாவின் முகம் சட்டென ஒளி குறைந்து போக “ஏன்” என்று சோகமாக கேட்டாள்.

அர்ஜுன் அவள் அருகில் வந்து ஒரு விரலால் அவள் மூக்கை ஆட்டியவன், “என் லியா செல்லத்துகூட கல்யாணம் ஆனதில இருந்து ஒரு weekend கூட செலவிடலை, ஒவ்வரு வாரமும் ஒவ்வரு விருந்துக்குள்ள போனோம்... அதுனால இந்த வாரம் கதவை எல்லாம் பூட்டிட்டு.....” என்று அவன் இழுக்க லியாவின் கன்னம் சிவக்க துவங்கியது... வேண்டும் என்று வம்பிழுக்க “ஏன் உனக்கு கன்னம் சிவக்குது நான் 2 நாளும் பார்த்து பார்த்து உனக்கு சமைத்து குடுப்பேன்னு தானே சொல்ல வந்தேன்” என்று அவன் இரகசியமாக சிரித்தவாறே கூறினான். அவனது சில்மிஷம் புரிந்துவிட அவனை லேசாக அடித்துவிட்டு அவன் நெஞ்சோடு சாய்ந்துகொண்டாள். 

ர்ஜுன் அஹல்யா திருமணம் பேச்சு ஆரம்பித்ததில் இருந்து அவர்களோடு சேர்ந்து சுத்திய அனுவுக்கும் அஸ்வத்துக்கும் தாம் கல்லூரி நான்காம் ஆண்டு அடியெடுத்து வைத்ததே மறந்து போனது. மூன்று வருடங்கள் கடந்திருக்க, நான்காம் வருடம் மிக வேகமாக வந்தது போலவே இருந்தது அனைவருக்கும். கடைசி வருடம், ஒருபுறம் department சீனியர் அவர்கள் தான் என்ற மிதப்பு ஒருபுறம், இந்த இரு செமஸ்டர் முடிந்துவிட்டால் கல்லூரி வாழ்வே முடிந்துவிடுமே என்ற சோகம் மறுபுறம்.. பின்னே இருக்காதா? ஆட்டம், பாட்டு, அரட்டை, செலவுகளை வீட்டில் பார்த்துக்கொள்ள சுகமாக போன வருடங்கள் இனி campus இன்டர்வியூ, வேலை பளு, நேரமின்மை, காசின் பின்னால் ஓடுவது என்று வாழ்க்கையில் ஒரு பிரளயத்தை உண்டு பண்ண போகும் கடைசி வருடம் ஆயிற்றே....

பரபரப்பாக 7 ஆம் செமஸ்டர் ஓடிக்கொண்டிருந்தது. நிறைய நிறுவனங்களில் இருந்து வந்து தேர்வு செய்ய துவங்கினர். சிலர் தேர்வாகிவிட, இலரோ தேர்வாகாமல் வரபோகும் நிறுவனங்களுக்காக காத்திருந்தனர். இதிலும் மதிப்பெண் பேசப்படும் என்றாலும் பெரும்பாலும் ஒவ்வொருவரின் பேச்சுதிறமையே அவர்களை பெரும்பாலும் காப்பாற்றும். முதலில் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்து ஓடையில் ஒற்றை காலில் நிற்கும் கொக்காய் தன் இரையான நேர்த்தியான மீன்களை (அறிவு ஜீவிகளை) கொத்தி செல்ல அதில் ஒருவனாக அஸ்வத்தும் தேர்வானான். அவனது தோழர்கள் சிலரும் தேர்வாகி இருக்க, மகிழ்ச்சியாக தான் இருந்தனர். அஸ்வதிற்குதான் சிறு வருத்தமே அனு தேர்வாகவில்லை என்று, ஆனால் அனு வருத்தபட்டாள் தானே அவள் ஏங்கி போகவில்லை. வேலை செய்தாக வேண்டும் என்றில்லை இருப்பினும் தனக்கு பிடித்த துறை இதுதானா என்று குலம்பத்திலேயே இருந்தாள். முதல் சில நிருவர நேர்முக தேர்வை முடித்தவளுக்கு அவளது எண்ணம் உறுதி ஆனது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.