(Reading time: 26 - 52 minutes)

நாம் கடந்து வருபவர்களில் பெரும்பாலானோர் இப்படிதான் தான் படித்தவைக்கும் வேலை தேர்வுக்கும் சம்பந்தம் இருக்காது, அது ஒன்று புகுத்தபட்டதாக இருக்கும் அல்லது கல்லூரி முடிந்த பின் உணர்தவையாக இருக்கும். அனு இன்னும் தனக்கான துறையை கண்டுக்கொண்டதாக தெரியவில்லை ஆனால் விருப்பமில்லாத ஒன்றில் நுழைய தயாராகவும் இல்லை. வீட்டில் தன் மனதை சொல்லியும் ஆயிற்று.. என்னதான் middle class குடும்பம் என்றாலும் அனுவின் விரப்பத்தின் வழியே போக சொல்லி ஊக்குவித்தார் வெங்கட். அனுதான் தட்டி கழித்தாலே தவிர அவள் தோழிகள் அனைவரும் வேறு நிறுவனத்தில் தேர்வு ஆகி இருந்தனர். அனைவரும் தேர்வாகி இருக்க இவள் மட்டும் தனித்திருக்கிறாலே என்று தோழிகளுக்கு வருத்தமாக இருந்தாலும் பெரும்பாலும் campus பற்றி பேசாமல் எப்பவும் போல் அரட்டை அடித்தனர். கடைசி வருடம் ஆயிற்றே வகுப்புகள் நடக்குமா என்ன??? அப்படி நடந்தால் கூட இவர்கள் கவனிப்பார்களா என்ன??? இவர்கள் தான் சீனியர்ஸ் ஆயிற்றே. நினைத்த நேரத்திற்கு பொறுமையாக வகுப்பிற்கு வருவது சாக்கு போக்கு தாஜா செய்து அந்த வகுப்புக்கும் attendance வாங்குவது. வகுப்பு நடக்காமல் வெட்டியாக இருந்தால் சும்மா அமர்ந்திருக்க பிடிக்காமல் பொய் சாக்கு சொல்லி வெளியே சுற்றிவிட்டு வகுப்பு முடியும் நேரத்தில் வருவது என்று உல்லாசமாக நாட்கள் சென்றது. ஆசிரியர்களும் கடைசி வருடம் என்று விட்டுவிடுவர். தங்கள் தியரி பேப்பர்களையும் முடிக்க வேண்டும், கேம்பஸில் வேறு தேர்வாக வேண்டும் பாவம் எத்தனை சுமைகள் இவர்களுக்கு என்று பெரும்பாலும் இன்டெர்னல் மார்குகள் அள்ளி குவிப்பார்கள் ஆசிரியர்கள்.

இப்படி நாட்கள் விறுவிறுப்பாக சென்றாலும் இடையிடையே அனு அஸ்வத் காதல் கீதம் ஓடிக்கொண்டிருக்கத்தான் செய்தது. ஆனால் இப்போதெல்லாம் வெட்க பார்வை இருப்பதில்லை அனுவின் கண்களில், எங்கே முகத்திற்கு நேரே அவசரப்பட்டு காதலை சொல்லிவிடுவானோ அல்லது கேட்டுவிடுவானோ என்ற பதற்றம் இருந்து கொண்டே இருந்தது அவளுக்கு. அஸ்வத்தோ தன்னை ஒருமுறையாவது நேராக பார்க்கமாட்டாளா? காதலை சொல்லிவிட மாட்டோமா என்ற ஆர்வம் மிகுந்த தவிப்பு அவனுக்கு... இவன் தவிப்போடு அவள் முகம் பார்க்க, எங்கே மாட்டிக்கொள்வோமோ என்று அவன் பார்க்கும் போதெல்லாம் தலை குனிந்துகொள்வாள் அனு.... இப்படி நாட்கள் செல்ல அந்த நாளும் வந்தது....

குப்புகள் பெரும்பாலும் நடக்காமல் சில நேரங்களில் ஆசிரியர்களும் வராமல் போக எப்போதும் போல் கூட்டம் களைய துவங்கியது.. அவசரமாக ஆசிரியர்கள் நிற்கும் மேடை ஏறிய அருண்.

“ஹே ஹே எங்கேயும் போகாதிங்க நமக்கு இருக்குறதே கொஞ்ச நாள் தான்... அடுத்த செமஸ்டர்ல சில பேர் internship என்று போய்டுவிங்க சோ இருக்க நாட்களை நல்லா என்ஜாய் பண்ணலாம்” என்று உரையாற்ற அனைவரும் புரியாமல் அவனை பார்த்தனர்.

“சரி சரி ஏன் இப்படி முளிக்குரிங்க நேராகவே பேச்சுக்கு வரேன். இன்னைக்கு எதாவது விளையாடலாம் உதரணத்துக்கு ஒவ்வரு மனதிலும் ஏதேனும் ஏக்கம் இருக்கும் இந்த நபரிடம் இதை சொல்லியிருக்கலாம் என்று மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் அதை கூட சொல்லலாம் பாடல் பாடி dedicate செய்யலாம் அல்லது தன் talent என்னவென்று காட்டலாம்” என்று கூற வகுப்பே சரியென்று ஒன்றாக ஒத்துக்கொண்டது.... அனுவின் மனமோ பக்கென்று  ஒரு நொடி நின்று ஓடியது...

ஆஹா அவன் சும்மா இருந்தாலும் இவர்கள் விடமாட்டார்களே என்று மனம் அடித்துக்கொள்ள லேசாக விழி அஸ்வத்தின் புறம் சென்றது... அவனும் அதே நேரம் அவளை நேராக அளவிட்டவாறு பார்க்க சட்டென கண்கள் தாழ்த்திக்கொண்டாள்... ஒவ்வரு திறமைகளும் வெளிவந்தன. முதலில் வகுப்பு தோழி ஒருத்தி துவங்கி வைத்தாள் என்றோ ஒரு நாள் தோழியுடன் சண்டையாம் பலநாளாக பேசவில்லையாம் மன்னிப்பு கேட்கவே இல்லையாம் இப்போது கூறுவதாக சொல்லி முதல் ஆளாக நின்றாள். பல முகங்கள் ஏதேதோ எதிர் பார்த்து ஒரு மொக்கை விஷயம் முதலில் வந்ததை பார்த்து சிறுத்து போக, மன்னிப்பு கேட்டவளை பாராட்டி சில ஜீவன்கள் கை தட்டின... அந்த பெண் சென்றவுடன் வேகமாக எழுந்த அருண் “இந்த மன்னிப்பு கேட்பவர்கள் எல்லாம் கொஞ்சம் alternate ஆக வாங்கப்பா ஏதாவது சுவாரசியமாக இருந்தால் கொஞ்சம் முன்னே வாங்க” என்று சொல்லி அமர்ந்து கொண்டான்.

அவன் அமரவும் அடுத்து எழுந்த ஒருவன் அதே வகுப்பில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு காதல் தூதாக ஒரு பாடல் பாட ஆர்வமாக மிகவும் உற்சாகமாக கேட்டுக்கொண்டனர் மற்ற மாணவர்கள். அவர்களின் காதல் பல நாட்களாக ரகசியமாகவே இருந்துவிட இன்று அவர்களின் நேரடி தாக்குதல் அனைவர்க்கும் உற்சாகத்தை தந்தது. நம்ம அருண் தான் முதலில் அவன் திணறவும் யாருக்கு dedicate செய்ய போற என்றல்லாம் கேட்டு ஆரம்பித்து வைத்தது. அந்த கலை ரம்யமாக முடிய அடுத்து எழுந்தது நம்ம (வில்லன்) தர்ஷன் தான்... மேடைக்கு சென்று சிறிது நேரம் சுற்றும் முற்றும் பார்த்தான்.

“ஹே தயக்கப்படுறான்டா ஆரம்பிக்க யாருக்கோ propose பண்ண போறான் போல யாருக்குன்னு கேளு” என்று அருண் காதில் கிசு கிசுத்தான் அஸ்வத்.

அவனை நேராக பார்த்த அருண், “ஏன் அவன் யாருக்கு பண்ண போறான்னு உனக்கு தெரியாதா? என்னாலெல்லாம் கேட்க முடியாது. வேணும்னா நீயே கேட்டு, மனம் குளிர்ந்து, உனக்கும் எனக்கும் தெரிந்த விஷயத்தை ஊருக்கே தெரியப்படுத்து” என்று வந்த  முறைப்புடனே நிறுத்தினான்.

அப்போது தான் அவன் அனுவுக்கு propose செய்து விடுவானோ என்ற கோவம் லேசாக தலை தூக்கியது அஸ்வத்திற்கு... அவனையே பேசாமல் உற்று கவனிக்க துவங்கினான்... தலைவன் குரல் கொடுத்தால் அல்லவோ சிப்பாய்களும் தளபதியும் முன்னேற!!! அருண் வாய் திறவாமல் இருக்க வகுப்பே அமைதியாக தான் இருந்தது. மெதுவாக தான் பாடபோவதாக கூறியவன் யாருக்கு என்று சொல்லும் தைரியம் அற்று பாட துவங்கினான் தர்ஷன்.

““காதல் வளர்த்தே... காதல் வளர்த்தே...

உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தே

காதல் வளர்த்தே காதல் வளர்த்தே

என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தே

இதயத்தின் உள்ளே பெண்ணே நான்

செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்

இன்று அதில் பூவாய் நீயேதான்

பூத்தவுடனே காதல் வளர்த்தேன்...””.

என்று வராத குரலில் கஷ்ட்டப்பட்டு காதலோடு அவன் பாட சில நொடிகள் அமைதியாக இருந்த வகுப்பே பின்பு சிரிக்க துவங்கிவிட்டது. வகுப்பே சிரிக்க முகம் உடனே சுருங்கி போனது தர்ஷனுக்கு, அதுவரை அவனை கோவமாக கவனித்த அஸ்வத் ஒரு முறை அனுவை பார்க்க அவள் விழிகள் கேலியாக அவனை பார்த்து சிரிப்பதை பார்த்து “அப்படா விஷயம் சீரியஸ்ஸாக போகவில்லை” என்று நினைத்துக்கொண்டு திரும்பி தர்ஷனை பார்த்தான். வகுப்பே சிரித்ததால் கூனி குரிகியவன் போல் அவன் வந்து அமரவும் அவன் மீது அஸ்வத்திற்கு பரிதாபமே மேலோங்கியது. மனம் இறங்கிவிட எழுந்து, “சரி சரி போதும் ஒருத்தரை இப்படியா கேலி செய்யுறது அடுத்து யாராவது வந்து பாடுங்க” என்று கூறி வகுப்பை அமைதியாக்கினான் அஸ்வத். அவன் கூறிய பிறகே மனம் உறுத்த சிரிப்பினை நிறுத்தினாள் அனு, லேசாக அஸ்வத் பக்கம் திரும்பி கண்கள் சுரக்கி சாரி என்பது போல் அவள் தலை அசைக்க பரவால்லை என்பதுபோல் கண்கள் மூடி திறந்தான் அஸ்வத்.

சில நொடிகள் இதை கண்ட தர்ஷனுக்கு மனம் பற்றி எரிந்தது, தன் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் சிரித்த அனு மீது கோவம் தலைகேற கண்டிப்பாக இதற்காகவேனும் தண்டிக்கவேண்டும் என்று தோன்றியது அவனுக்கு... அஸ்வத் தனக்காக பேசுவான் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லைதான் ஆனால் அதற்காக மனம் இறங்கவும் இல்லை தர்ஷன். அனு இப்போது எதிரி என்றால் அஸ்வத் பலநாள் எதிரி ஆயிற்றே..

இந்த உரையாடலை கண்ட அருண் எழுந்து.... “சரி சரி ரொம்ப பேசிட்டான் இப்போ அவனே பாடுவான்” என்று அஸ்வத்தை இழுத்துவிட்டான். சிறிது திடுக்கிட்ட அஸ்வத் மறுநொடியே சுதாரித்துக்கொண்டு எழுந்து சென்றான். செல்லும் வழியே கண்கள் அனுவை அளவிட அவளோ மனம் படபடக்க சற்று முன் இருந்த தைரியம் போக தலை தாழ்த்திக்கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.