(Reading time: 26 - 52 minutes)

வள் முகத்தை சிறிது ஆராய்ந்தவன் “சரி நீ யோசிச்சுகிட்டே இரு நானாவது சொல்லிடுறேன்...” என்று அவன் வாய் திறக்க சட்டென அவன் வாய் பொத்தி, “வேண்டாம் சொல்லிடாத, டேய் அவசரகுடுக்க அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம் கொஞ்சம் பொறுமையா தான் இரேன்” என்று அவள் படபடப்பாக பேச அவளை பேசவிட்டு கவனித்த அஸ்வத்தின் கண்கள் பளபளத்தன... பேசிவிட்டு முளித்தவளுக்கு அப்போதுதான் தான் என்ன செய்கிறோம் என்று புரிந்து போக, அவசரமாக  கையை எடுத்துக்கொண்டாள். சில நொடிகள் தடுமாற்றமே நிலவியது... அவனும் எதுவும் கேட்கவில்லை அவள் வெட்க படுவதை ரசித்துபார்த்தான், அவளுக்கு வெட்கமே போர்வையாகி போனது என்ன பேசுவது என்றே புரியாமல் போக “ந...நான் கிளம்புறேன்” என்று நகர்ந்தாள் அனு, சட்டென அவள் கைபிடித்தவன் அவள் பார்வைக்காக காத்திருந்தான், அவளும் புரியாமல் அவனை நோக்க, வார்த்தையே இன்றி புன்முறுவல் மட்டும் பசை போட்டு இதழில் ஒட்டியிருக்க கண்களில் பேசிவிட்டு, “போயிட்டுவா” என்று கூறி கையை விட்டான். அந்த பார்வை அனுவை ஏதோ செய்துவிட மேலே பேசாமல் மகிழ்ச்சியுடனே கிளம்பிவிட்டாள்...

இருவருக்குமே சென்ற வழியெல்லாம் யாருமே கண்ணனுக்கு தெரியவில்லை, எல்லாமே ரம்யமாக இருந்தது, சுற்றி அத்தனை பேர் இருந்தாலும் அனைவரும் ஆயிரம் மையில்தூரம் இருப்பதுபோல் தோன்றியது. நெஞ்சம் நடந்தவற்றை நினைத்து நினைத்து சிரித்தது...

ஹாய் ஸ்ரீ என்ன ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?” என்று அவசர அவசரமாக வந்த நிரஞ்ஜன் கையில் இருவருக்கும் ஒரு குளிர்பானத்தோடு வந்தான்.

“ஹ்ம்ம் ஆமா எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது... restaurent வந்து போறவங்களாம் பாத்துட்டு போறாங்க”

“சாரி ஸ்ரீ... கிளம்புற நேரத்தில என்னோட ரூம் மேட்க்கு ஒரு பிரச்சனை அதான் போன்ல சொன்னேன்ல சாரிமா” என்று இழுக்கவும் கோவம் குறைந்துவிட, “சரி சரி விடு, காலைல சாப்பிட்டியா?”

“ம்ம்ம்ம் ஆச்சே”

“ஏதோ assignment இருக்குனு சொன்னியே முடுச்சியா?”

“ம்ம்ம்ம் ஆச்சு”

“உங்க professor பார்க்க வர சொன்னதாக சொன்னியே பாத்துட்டியா?”

“ம்ம்ம்ம் ஆச்சு....” என்று எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் கூறினான்.

“அப்பறம்....”

“ம்ம்ம்ம் ஆச்சு...” என்று பழக்க தோஷத்தில் அவள் கேட்கும் முன்னரே கூறினான்.

“டேய் நான் இன்னும் எதுவும் கேட்கலை”

“ஓஹோ அப்படியா?” என்று சிறிது வழிந்துவிட்டு, “ஹே நீ என்ன என் காதலியா? இல்ல டீச்சரா? சும்மா மாத்தி மாத்தி கேள்வி கேட்குற?” என்று சற்று அழுத்து கேட்டான்.

“ம்ம்ம்ம்ம் உனக்கு எல்லாமே நான் தான்...” என்று கூறி அவள் பலசாரை குடித்தாள். அவளின் பதிலில் அவளை கண்ணெடுக்காமல் அவன் பார்த்துக்கொண்டிருக்க, “போதும் போதும் நோ செண்டிமெண்ட்ஸ் சரியா?” என்று கிண்டலாக கூறி பேச்சை மாற்றினாள்.

“இதுக்கெல்லாம் நான் வொர்த்தே இல்லை ஸ்ரீ” என்று மீண்டும் அவன் கூற, “அதெல்லாம் வொர்த் தான் உளறாதே” என்று கொஞ்சம் கண்டித்தாள்.

“ஏன் ஸ்ரீ ஒருவேளை உங்க அம்மா அப்பா நம்ம காதலை ஏத்துக்கலைன்னா?” என்று குழந்தை போல் அவள் பதிலுகாக காத்திருந்தான்.

“அதெல்லாம் ஒத்துப்பாங்க”

“ஒருவேளை அப்படி நடக்கலைனா???”

“ஓடிவந்திட வேண்டியது தான்” என்று ரொம்ப இலகுவாக தேஜு கூற, சட்டென கோவம் வந்தது நிரஞ்ஜனுக்கு...

“லூசு உளறாதே” என்று மெதுவாக அவள் தலையில் தட்டினான்...

“ஆஆஆ வலிக்குதுடா ஏன்டா சொன்னாள் செய்திடுவேனா? அதெல்லாம் அம்மா அப்பா சம்மதம் கண்டிப்பா வேண்டும்... அவங்களை மீறி ஒன்னும் நடக்காது... சரியா???” என்று அவள் கூறவும் தான் நிரஞ்ஜனின் முகம் தெளிந்தது...

“ஏன் ஸ்ரீ உன் சொத்தில் பாதி கூட என்னால உனக்கு இப்போதைக்கு தர முடியாதே, இப்போதான் campusla வேலையே கிடைச்சிருக்கு... வேலைக்கு போய், சில வருடம் சென்றாலும் உங்க அப்பா அளவுக்கு நான் வர பல வருடங்கள் ஆகுமே!!! எப்படி அவங்க ஒத்துபாங்க?” என்று தன் மனதில் குழம்பிக்கொண்டிருப்பதை கேட்டான்.

“நானும் சரி என் பெற்றோரும் சரி பணத்தை பெரிதாக மதிப்பதில்லை” என்று அவனை ஓரகண்ணால் ஊடுருவியபடியே கூறினாள்.

என்னதான் அவள் பேசுவது மனதிற்கு இதமாக இருந்தாலும் மனம் என்னவோ சுற்றி சுற்றி எதிர்மறையாகவே சிந்தித்தது... தேஜுவிற்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர முடியுமா என்ற குழப்பம் பலநாட்களாய் விதைவிட்டு வளர்ந்துக்கொண்டிருக்கிறது அவன் மனதில். 

தேஜுவிற்கு சில நாட்களாகவே மனதில் ஒருவிதமான பயம் நிலவிக்கொண்டுதான் இருந்தது. இப்போதெல்லாம் என்ன பேச்செடுத்தாலும் அதில் ஒரு முறையேனும் அவள் அந்தஸ்தை பற்றி நிரஞ்ஜன் பேசாமல் இருப்பதில்லை எப்போதிருந்து அவனுக்கு இந்த ஏற்றதாழ்வு தோன்ற ஆரம்பித்தது நான் ஏதேனும் அப்படி நடந்துக்கொண்டேனோ என்று தன்னைதானே மனம் கேட்டுக்கொண்டே தான் இருந்தது.

இந்த நினைவெல்லாம் ஒரு முறை மனதில் மேகம் போல் கடந்துசெல்ல தலையை சிலுப்பி நிகழ் காலம் வந்தாள். “நீ இப்படியே பேசிட்டு இருந்தினா இன்னும் 2 நாளுக்கு உன்னோட பேசுறதை நிறுத்திடுவேன் ஜாக்குரதை” என்று மிரட்டினாள் தேஜு.

ஒருவழியாக மனநிலை மாற, “சரி தாயே பேசலை” என்று அதுவும் வாயில் இருந்து மட்டுமே வந்தது... “இன்னும் எத்தனை நாளுக்கு தான் நீ மிரட்டுறன்னு பார்ப்போம் இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு” என்று அவன் கூற, “ஏன் அதுக்கு அப்பறம் என்ன ஆகும்?”

“ம்ம்ம்ம் நான் வேலை நிமித்தமாக மும்பை போயிடுவேன்” என்று கூறவும் தான் தேஜுவுக்கு நியாபகமே வந்தது.. ஆரம்பத்தில் இருந்து லொடலொடவென்று பேசியவள் அமைதியாகினாள்...

அவளது மௌனம் என்னவோ செய்ய, “ஹே எங்க வேலை செய்தால் என்ன? நம்ம மாறிபோவோமா என்ன? என்ன கொஞ்சம் பேசுவது குறையும் செல் போன்கு ரோமிங்னு அதிக செலவாகும்” என்று விளையாட்டாக பேச்சை மாற்றினான்.

அதுவும் சரிதான் என்று தோன்றிவிட அதன்பின் பேச்சு தப்பிதவறியும் வேலை பக்கம் போகாமல் பார்த்துக்கொண்டான் நிரஞ்ஜன்.  

ன்று முழுவதுமே உற்சாகமாக இருந்தான் நவீன்.. ஏதாவது பாடலை பாடிக்கொண்டு அனைவரையும் வம்பிழுத்துக்கொண்டு, திடீர் திடிரென கனவுலகு சென்றுவிட்டு தானே சிரித்துக்கொண்டான். அவனது செயல்களை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனுக்கு சந்தேகமாக இருந்தது... காரணம் புரியாமல் தலை வெடித்துவிடும் போல் ஆக, “என்னடா மச்சான் என்ன விஷயம் செம குஷியாக இருக்க?” என்று கேட்டான்.

அவனை ஒருமுறை பார்த்து சிரித்துவிட்டு “என் முகத்துல கல்யாண கலை தெரியலை???” என்று ஆர்வமாக கேட்டான்.

அவன் கேட்டதில் சிரிப்புவர, “இல்லையே” என்று இலகுவாக கூறினான் அர்ஜுன்.

“அட போடா உனக்கு ஒழுங்கா பார்க்க தெரியலை... எனக்கு பொண்ணு ரெடிடா” என்று உற்சாகமாக கூறினான்.

“ஹே என்னடா சொல்லுற? எப்படி அர்ச்சனா அம்மாவை ஒத்துக்க வைச்ச? சொல்லவே இல்லை?” என்று அவன் அடிக்கிகொண்டே போக... “டேய் நான் அர்ச்சனாவை சொல்லலைடா” என்று அவசரமாக உதித்தான் நவீன்..

“ஹே என்னடா சொல்லுற? நீ அர்ச்சனாவை காதலிக்குற தானே?”

“நான் மட்டும் காதலிச்சு என்ன செய்ய? அந்த பக்கம் இருந்து எந்த சிக்னலும் வரலை அதான் தடம் மாறிட்டேன், என் அத்தை பெண்ணிருக்காள்டா அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...”

அவன் கூறிய பதிலை அர்ஜுன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, தன் நண்பன் இப்படி மாறுவான் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை அவன். கொஞ்சம் கடுப்பாக இருக்க, “என்னடா உளறுற?! அப்போ அர்ச்சனா?”

“மச்சான் த்ரிஷா இல்லாட்டி திவ்யாடா என்னை பார்க்காதவளை நினைச்சு காலத்தை தள்ள என்னால் முடியாதுப்பா...” என்று கூறிவிட்டு தன் இருக்கையை நோக்கி நடக்க துவங்கினான். சென்றவன் மீண்டும் வந்து “டேய் மச்சா அப்பா நல்ல நாள் பார்த்துகிட்டு இருக்காரு பெண் பார்க்க போக கண்டிப்பா நீயும் சிஸ்டரும் வரணும் சரியா???” என்று கூறிவிட்டு அவன் பதில் எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்..

வீன் பேசியதெல்லாம் மண்டையில் ரிங்காரமிட்டு சுத்தியது... அவனது காதுகளை அவனாலேயே நம்ப முடியவில்லை.. மனதில் இருப்பதை யாரிடமாவது சொல்லவேண்டும் போல் இருக்க, வீட்டிற்கு சென்றது அஹல்யாவிடம் கூறினான்.

அவன் கூறியதை எல்லாம் கேட்டவளுக்கு கோவம் பத்திக்கொண்டு வந்தது... “ச்சே இவரை எப்படியெல்லாம் நினைத்தேன் கடைசியில் இவரும் மத்த ஆம்பளைங்க மாதிரி நடந்துகிட்டாரே... நல்ல வேலை அர்ச்சனா இவரை திரும்பி கூட பார்க்கலை இல்லாட்டி என்ன ஆகுறது? ஹ்ம்ம் இவரை நம்பியும் ஒரு பொண்ணு வர போகிறாளே” என்று மனதில் இருக்கும் கோவம் குறையும் வரை கொட்டித் தீர்த்தாள்..

“என்னாலெல்லாம் அவர் பொண்ணு பார்க்க போகும் போது கூட வர முடியாது, நீங்க வேணும்னா பழகின தோஷத்திற்கு போயிட்டு வாங்க” என்று கோவத்தை அவன் மேல் காட்டிக்கொண்டிருந்தாள்.

அர்ஜுனோ இவளிடம் ஏன்டா இதை சொன்னோம் என்றாகிவிட்டது நமக்கு மனசு கேட்கலை இவளிடம் புலம்பலாம்னு பார்த்தாள் இவள் நம்மளை வதைக்குறாள் என்று மனதில் நொந்துக்கொண்டான்.         

Go to Kadhal payanam # 13

Go to Kadhal payanam # 15

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.