(Reading time: 26 - 52 minutes)

னம் முழுதும் காதல் பொங்கிஎழ இதழ்கள் விரிய மேடைக்கு சென்றான். அனுவோ ஹய்யோ அவன் பாட்டுக்கு propose பண்ணிட்டாள் நானும் இன்னைக்கே சொல்லிடுற மாதிரி இருக்குமே கடவுளே காப்பாத்தேன் என்று மனதில் முனுங்கினாள்.

மேலோகத்தில் கடவுளோ “என்னம்மா நீ அவனவன் ஏதேதோ பிரச்சனை சொல்லுறான் நீ என்னவென்றால் இதுக்கெல்லாம் என்னை கூப்பிடுறாய்” என்று அலுத்துக்கொண்டார்.

அஸ்வத் அங்கு சென்றதும் அருண் விருட்டென எழுந்து வகுப்பின் பக்கம் திரும்பி, “சரி தோழர்களே பாடலை மட்டும் கேட்கணும்.... யாருக்குன்னு கேட்க கூடாது” என்று கூறி சிறிது இடைவெளி விட்டவன் அதுதான் நமக்கே தெரியுமே என்று சிரித்து பேச்சை முடித்து அமர்ந்தான். அவன் கூறவும் வகுப்பே சேர்ந்து சிரிக்க அஸ்வத்திற்கும் அனுவிர்க்கும் வெட்கம் பிடிங்கிதின்றது... தோழிகளோ அவளை சீண்டி காதோரம் கிண்டல் செய்ய, எதுவுமே நடவாதது போல் இருப்பது கடினமாகவே இருந்தது அனுவுக்கு...

மெதுவாக கண்கள் மூடி அனுவை நினைத்தான், அனு வெட்கப்பட்டு கன்னம் சிவந்து தலை குனிந்தாள் அவன் கண்களுக்குள் காதலில் மனம் சிறகடிக்க பாட துவங்கினான்....

““ஹே... காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலாப் போல

என்ன பார்த்தாலே ஒழுஞ்சிக்குறியே.... பெண்ணே...   

பொழுது சாஞ்ஜாலே தலைக்குவியும் தாமரைப் போல

என்ன பார்த்தாலே வெட்கப்படுறியே... பெண்ணே...

உன்னை நான் பார்த்தேன்.. நான் ரசித்தேன்... நான் திண்டாடினேன்...

உன்னை நான் தொடர்ந்தேன்... நான் உணர்ந்தேன்... நான் காதல் கொண்டேன்...

என் வாழ்க்கையின் வாசலே நீயே தானேடி.... ஒஹோஓஓஓ.....””

மெல்ல கண்கள் திறந்து அவளை நோக்கி பாடலைத் தொடர்ந்தவன் அவள் வெட்கம் மறைக்க இன்னும் தலை குனிந்தே இருப்பதை உணர்ந்து மேலும் சீண்டாமல் அவனும் தனக்குள் மூழ்கி பாடினான். பாடல் செல்ல செல்ல மனம் அங்கு தான் இருப்பதையே மறந்து போக மெதுவாக பின்னோக்கி சென்று கைகள் கட்டி ஒற்றை கால் சுவற்றி பதித்து சாய்ந்துக்கொண்டு கனவுலகில் இருப்பது போல் அவன் பாட, தாளம் தப்பாமல் தென்றல் அவன் சிகையோடு ஆடியது... மெல்ல மெல்ல அவன் பாடல் அவளை என்னவோ செய்து அவனோடு கனவுலகம் கொண்டு செல்ல, சுற்றி இருந்த பெண்கள் எல்லாம் அஸ்வத்திற்கு மயங்கினர். ச்சே என்ன feelings என்று உருகிப் போனனர் கொஞ்சம் சைட்டும் அடித்தனர். அதையெல்லாம் உணர இருவரும் அங்கிருந்தால் தானே.... அந்த மோன நிலை பாடல் முடியவும் நிற்க, பெண்கள் எல்லாம் மயங்கி கைதட்ட ஆண்கள் எல்லாம் விசில் அடித்து கைதட்டினர்...

இருவருக்கு மட்டும் இன்னும் கனவுலகில் இருந்து வர மனமே இல்லை, தன்னையும் அறியாமல் சில நொடி அவனையே ரசித்தவள் சிறிது நேரம் கழித்தே சுற்றி இருப்போரை பார்த்துவிட்டு வேறு புறம் திருப்பிக்கொண்டாள்... இவை அனைத்தும் அஸ்வத் கண்களில் இருந்து தப்பிவிட, தர்ஷன் குரோதமாக பார்த்தான்.

சிறிது நேரம் இப்படி நேரம் கழிய அடுத்து அருணின் பார்வை அனுவின் மீது விழ அவள் கெஞ்சுதலாக வேண்டாம் என்று கூறினாள். சரி சிறிது நேரம் செல்லட்டும் என்று அவனும் விட்டுவிட, அஸ்வத்தின் பார்வை அனுவை அளந்தது. அவன் பார்வையை இப்பொதும் பார்க்க முடியாமல் தவித்து கண்கள் திருப்பிக்கொள்ள அவன் ஏமாந்துப்போனான். ஒரே ஒருமுறை காதல் பார்வை கிடைக்காதா என்ற ஏக்கம் அவனுக்கு.        

அதன்பின் சில மணி நேரம் மற்றவர்களின் செயல்களில் நேரம் கழிய, இப்பொது அருண் மீண்டும் அனுவை பார்த்தான். அவள் வேறு வழி இன்றி மேலே செல்ல, எல்லோரும் அவள் ஏதேனும் பாடல் பாடுவாள் என்று எதிர்பாத்தனர். ஆனால் அவளுக்கு அந்த சூழ்நிலை தன்னிலையில் இருக்க முடியாமல் ஏதோ செய்ய, கைகளை கோர்த்துக்கொண்டு நின்றாள். அஸ்வத் மெதுவாக அருணின் காதில் எதோகூற அருண் அனுவை நோக்கி, “சரி நீ பாட வேண்டாம். உனக்கு பிடிச்சதை எதாவது பண்ணு... நீ எதை நல்லா பண்ணுவனு நினைக்குறியோ அதை பண்ணு” என்று அவன் கூறினான்.

ஆஹா நமக்கு ஆட மட்டும் தானே தெரியும் அதுவும் இவர்கள் முன்னால் பண்ண முடியாதே என்று மனம் புலம்ப, ஆர்த்தி, “அனு நீ rj மாதிரி ஒரு ப்ரோக்ராம் ஹோஸ்ட் பண்ணேன் அதை தான் நீ நல்லா பண்ணுவியே” என்று எடுத்து கொடுத்தாள்... அவளது ஐடியாவில் மனம் லேசாக சிறிது யோசித்து பேச துவங்கினாள்.

“சரி நான் பேசுறேன் ஆனால் ஐடியா என்னது நீங்க யாரும் அதுக்கு குறுக்கே லாஜிக் இல்லன்னு சொல்ல கூடாது. ஓகே வா?” என்று கேட்க, “சரி” என்று ஒத்துக்கொண்டனர் அனைவரும். பரபரப்பாக பேச துவங்காமல் தன் குரலை மெதுவாக ரகசியம் சொல்வது போல் மென்மையாக மாற்றிக்கொண்டு பேசத்துவங்கினாள்...

“ஹாய் ப்ரிண்ட்ஸ் நான் உங்க அனு பேசுறேன், நீங்க கேட்டுகிட்டு இருக்குறது “எழுத்தோவியம்” on உங்க “.....”

மணி இப்போ 10.30 ஆகுது இது என்னடா தூங்க போகும் நேரத்தில வந்து ஓவியம் அது இதுன்னு பேசுறாலே என்ன சொல்ல போறேனோன்னு நினைகுரிங்களா?

இது வேற மாதிரி ஓவியங்கள்ங்க, நம்ம சின்ன வயசுல இருந்தே ஒவ்வரு வயதிலும் ஒவ்வரு கதை கேட்டு வளந்தோம், பால் குடிக்கும் போது, நீ இப்போ குடிக்கலேன்னா பூச்சாண்டி வந்திடுவான், தூக்கிட்டு போய்டுவான் அப்படி இப்படின்னு கதை அளப்பாங்க நம்மளும் அதை உண்மைனு நினைச்சு கேட்போம், கொஞ்சம் வாய் திறந்து பேச துவங்கிய வயசுல ஒரு அழகான angel கதையோ, இல்லை காட்டில் இருக்க மிருகங்கள் கதையோ சொல்லுவாங்க, நம்மளும் இரவு நேரத்திலே இப்படி கதை கேட்டு தூங்கியே பழகிட்டோம்... இப்போவும் யாராவது கதைகள் சொன்னா ஆர்வம் குறையாமல் கேட்போம், அப்படி ரம்யமான சுவாரசியமான கதைகள் சொல்லி உங்களை தூங்க வைக்கதாங்க நான் வந்திருக்கேன்...

இது உங்க கதை நீங்க எழுதி எங்களுக்கு அனுப்பும் கதை, உங்க கற்பனைல எழுதிற கதைய பலருக்கு பகிர்துக்கனும்னு ஆசைபட்டிங்கனா உங்களோட கதைகளை எங்க தளத்தில் “....” பதிவு பண்ணுங்க...

இன்னைக்கு நம்ம கேட்க போறது நமக்காக ஒரு சுவாரசியமான காதல் கதையை எழுதி அனுப்பிருக்கும் நம்ம தோழி “...” அவர்களோட கதை தான்...

அதை தொடர்ந்து கேட்பதற்கு முன்னாடி உங்க இனிய இரவ இன்னும் இனிமையாக்க, உங்களை கதைக்குள்ள கொண்டுபோக ஒரு ரம்யமான பாடல் வருது கேளுங்க...”

என்று அவள் இரவு நேரத்தில் தூங்கவைப்பது போல் இனிமையாக பேச அவள் குரல்  அனைவரையுமே கட்டிபோட்டது, அனைவரும் மயங்கித்தான் போனனர். கண்கள் மூடி கேட்டவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் அந்த தருணத்தை அனுபவித்து வந்திருக்க, விழித்து எழுந்தவர்கள் எல்லாம் உற்சாகமாக கைத்தட்டினர்... இதை சற்றும் எதிர் பார்க்காத அனுவிற்கு மனம் குதியாட்டம் போட்டது. இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை அவள் எதிர் பார்க்கவில்லை என்று அவள் துள்ளளிலேயே தெரிந்தது. அஸ்வத்திற்கு பெரும் மகிழ்ச்சி என்னவோ அவள் வாழ்க்கையில் அவளுக்கு பிடித்த துறை எது என்று கண்டுகொண்ட ஒரு உணர்வு, அனுவுக்கும் அப்படிதான்...   

தன்பின் என்ன விளையாட்டாக ஆரம்பித்தது சிலருக்கு கஷ்டத்தையும் பலருக்கு சந்தோஷத்தையும் தந்து வெகுவாக நேரம் கழிந்தது. எல்லாம் முடிந்து அடுத்த வகுப்பும் முடிந்தபின் கூட்டம் களைய எப்போதும் போல் அஸ்வத் அனுக்காக காத்திருந்தான். என்றும் போல் அவன் அருகே சென்றுவிட ஆனால் எப்படி இன்று நடந்ததை சமாளிப்பது என்று மனம் மட்டும் யோசித்தது. அவளை புன்முருவளுடனே பார்த்தவண்ணம் நின்றவன் அவள் வந்ததும் “ரொம்ப நல்லா பேசின இப்படி ஒரு talent உண்ட இருக்கும்னு நான் எதிர் பாக்களை ரொம்ப சூப்பர்” என்று மனதாரப் பாராட்டினான்.  

கொஞ்சம் மனம் இலகுவாக “தேங்க்ஸ்” என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லி கூடவே நடந்தாள். இருவரும் பேசியவாறே கல்லூரியை சுற்றிவர, நேரம் வெகுவாக கடந்திருந்தது பின்பு தனிமையான இடத்தில் அமர்ந்து பேசத்துவங்கினர். எப்போதும் போல் பொதுவான பேச்சுக்களே போக ஹப்பாடா எதுவும் கேட்கலை என்று மனம் நிம்மதியாக இருந்தது அனுவிற்கு.. விடுதிக்கு செல்ல பேசிமுடித்து கிளம்ப எத்தனிக்க, அஸ்வத் தடுத்தான்.

“ஒரு நிமிஷம் இவ்வளவு நேரம் உன் மனசுக்காக பேசியாச்சு இப்போ எனக்காக பேசுவோம், எனக்கு பதில் சொல்லிட்டு போ” என்று அவன் கேட்கவும்...ஒரு நொடி ஆடிபோனாள் அனு, போச்சு கேட்டேவிட்டான் என்ன சொல்றது என்று யோசித்துக்கொண்டே “எ...எதை....பத்தி....?” என்று தடுமாறினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.