(Reading time: 17 - 33 minutes)

ந்த சிறுமி அவர்களை விட்டிற்குள் அழைத்து  அரவிந்துக்கும் கோக்கிக்கும் உணவு பரிமாறினாள். பொம்மு அந்த சிறுமியின் வீட்டை சுற்றி நோட்டமிட்டாள்.  பழைய பொருட்கள் மின்வலைகள் துணிகள் என இருந்தது.

“உதவி பண்ணதுக்கு நன்றி!” – பொம்மு

“இல்ல ...எங்க அப்பா எப்பவும் பசின்னு வந்தவர்களை சாப்பிடாம போக விடமாட்டாரு...நானும் அப்படிதான்” – சிறுமி.

”உங்க அப்பா அம்மா  எங்க?” – பொம்மு.

“அவங்க ரெண்டு பெரும் கடல்ல மீன் பிடிக்கும்போது கடலில் சிக்கி இறந்துட்டாங்க.” – சிறுமி வருத்ததுடன்.

“என்னை மன்னிச்சிடு!....அப்படினா நீ இந்த வீட்ல தனியாதான் இருக்கியா?....” – பொம்மு.

“ஆம்....என் வேலையே மீன் பிடிக்கிறதுதான்....நீங்க எல்லாரும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” – சிறுமி.

“நாங்க இந்த நாட்டில ஒரு அஸ்திரத்தை தேடி வந்திருக்கோம்...அது இந்த கடற்கரையில்தான் எங்கோ இருக்கு!” – பொம்மு.

“அப்படியா..நீங்க தேடி வந்த அஸ்திரம்ரொம்ப பழையதா?” – பொம்மு.

“ஆமாம்...உனக்கு அதுபத்தி எதாவது தெரியுமா?...” – பொம்மு

“எங்க அப்பா ஒரு பழைய அம்பு  வச்சிருக்காரு அது உங்களுக்கு வேணுமா?” – சிறுமி.

இதை கேட்டு பொம்மு அரவிந்த் கோக்கி மூன்று பேருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது.

“என்ன சொல்ற? – பொம்மு.

அந்த சிறுமி தன்னுடய பழைய பொருட்களில் இருந்து ஒரு பெட்டியை எடுத்தாள். அதை அவள் திறந்து உள்ளிருந்து ஒரு பெரிய கனமான அம்பு ஒன்றை எடுத்தாள். அதை பார்க்கும்போதே மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரமாக தெரிந்தது. பொம்மு அதை கையில் வாங்கி பார்த்தாள். அவளுக்கு திடிரென ஒரு நியாபகம் வருவது போல இருந்தது. அந்த நியாபகத்தில் அவள் அந்த அம்பை இதற்கு முன் அதை ஏற்கனவே வைத்திருப்பது போன்ற நியாபகமாக இருந்தது.

“அரவிந்த்...இதுதான் அந்த அஸ்திரம்.....பிரம்மாஸ்திரம்....ஆனா இது உனக்கு எங்க கிடைச்சது?” – பொம்மு

“இது எங்க அப்பாவோட கொல்லு தாத்தா  இறந்த இடத்தில்  கிடைச்ச அம்பு “ – சிறுமி.

“உங்க கொல்லு தாத்தா...எங்க இறந்தார்...அதை வந்து காட்ட முடியுமா?” – பொம்மு வேகமாக.

“சரி வாங்க” – சிறுமி குழப்பமாக

“நீங்க இந்த பொண்ணுகூட போங்க ...நான் போய் பிரம்மாஸ்திரம் கிடைச்சிடுச்சுன்னு அரசர் துரயுகன்கிட்ட சொல்லிட்டு வரேன்” – அரவிந்த் பதட்டமாக.

அந்த சிறுமிக்கு காரணம் கேட்க தோன்றவில்லை. அதனால் அந்த சிறுமி பொம்முவையும் கோக்கியையும் அழைத்து கொண்டு சிறிது தூரத்தில் உள்ள ஒரு சுடுகாட்டிற்கு வந்தாள். அங்கே நிறைய பேர் புதைக்கப்பட்டிருந்தனர். அந்த சிறுமி அவளின் கொல்லு தாத்தா புதைக்க பட்ட இடத்தை காண்பித்தாள். பொம்முவும் கோக்கியும் அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். அந்த சிறுமிக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கே அதற்குள் ஆவிகளும் நாய்கள் படையும் வந்து சேர்ந்தது. அரசர் துரயுகனும் குமரிகாண்டத்தின் வீரர்களும் வந்தனர்.

நீண்ட நேரம் அவர்கள் தோண்டிய பின் எலும்புகள் கிடைக்க ஆரம்பித்தன. பொம்மு அங்கே கிடைத்த மண்டையோட்டை எடுத்துப் பார்த்தாள். அதில் மின்னும் எழுத்துக்கள் அவளுக்கு தெரிந்தன. பொம்மு அதை படித்தாள்.

இதுதான் உன்னுடைய இரண்டாம் ஜென்மம்.

உன்னுடைய முதல் ஜென்மத்தில் நீ குமரிகாண்டத்தில் சிட்டிக்கா என்னும் ஒரு சிறுமியாக பிறந்தாய். உனக்கு அக்காவாக தானுஷா என்பவள் பிறந்தாள்.

அந்த தானுஷாவின் இரண்டாம் ஜென்மம் தான் ஷானுதா 

உன்னுடய முதல் ஜென்மத்தின் ஜென்மரகசியத்தை நீ தெரிந்துக் கொண்டால் அடுத்த நொடியில் உன்னுடைய முதல் ஆறு ஜென்மகளின் உயிர் அழிந்துவிடும்

பொம்முவுக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு வேலை தன்னுடைய முதல் ஜென்மத்தின் ஜென்மரகசியம் தெரிந்தால் அவளின் உயிர் அழிந்து விடும். அங்கே சுற்றி உள்ள அத்தனை பேரும் பொம்முவை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஷானுதா பொம்முவின் முதல் ஜென்மத்தில் அவளுக்கு உடன் பிறந்த அக்காவாக ஜென்மம் எடுத்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. அதேநேரத்தில் பொம்முவின் முதல் ஜென்மத்தில் ஜென்ம ரகசியத்தை தெரிந்துக்கொண்டால் அவளுக்கு மரணம் நிச்சயம் என்பதும் அதிர்ச்சியாக இருந்தது.

“வேண்டாம் பொம்மு....நீ உன்னோட  முதல் ஜென்மத்தின் ஜென்மரகசியத்தை....தெரிஞ்சுக்க வேண்டாம்” – அரசர் துரயுகன்.

“இளவரசி உங்களுக்கு நாங்க பணிகிறோம்” – குமரிகான்டத்தின் வீரர்கள்

குமரிகாண்டத்தில் பொம்மு நுழைந்த போது அந்த நாடே திருவிழா போல ஜொலித்தது. பொம்மு தான் இளவரசி சிட்டிக்கா என்ற விஷயம் அதற்குள் நாடு முழுவதும் பரவியது. மக்கள் வெள்ளத்தின் நடுவே பொம்மு குமர்கான்டத்தின் வீரர்கள் நடுவே அரண்மனையை நோக்கி சென்றாள். அவர்களை தொடர்ந்து அரசர் துரயுகனும் ஆவிகள் மற்றும் நாய்கள் படை வந்தது. பொம்முவின் அதிர்ச்சி இன்னும் அவளை விட்டு நீங்கவில்லை. தனக்கு அக்காவாக பிறந்து தன்னுடய ஜென்மங்களை அழிக்க ஷானுதாவுக்கு தான் செய்த துரோகம் என்னவென்று அவளுக்குள் பல கேள்விகள் இருந்தது.

பொம்மு அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டாள். அங்கே அவள் சிட்டிக்காவாக வாழ்ந்த போது வரையப்பட படங்களை கண்டாள். அவளின் அக்காவான தானுஷாவுடன் அவள் சேர்ந்து நிற்கும் படங்களை கண்டாள். அதை பார்க்கும் போது பொம்மு மனதில் ஆனந்தமாக இருந்தது. எல்லா பிரச்சனைக்கும் தொடக்கம் இங்கே தான் என்பதுதான் அவள் வருந்தும் ஒரு விஷயம். உன்,உண்மையில் இங்கே நடந்த ஏதோ ஒரு விஷயம் தான் ஷானுதா தன்னை அழிக்க நினைக்கும் காரணம் என்று அவள் நினைத்தாள்.

அங்கே நீண்டகாலம்  வாழும் புலவர்களிடம் மக்களும் தன்னுடைய சிட்டிக்கா ஜென்மத்தின் வரலாற்றை விசாரித்தாள். அதன்படி பொம்மு புரிய வந்தது என்னவென்றால்.

சிட்டிக்காவும் தானுஷாவும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். இரண்டு பெரும் சமமான அறிவு. ஆனால் தானுஷாவுக்கு பிறவியிலேயே பார்வை இல்லை. ஒருப்பக்கம் சிட்டிக்கா படிப்பிலும் வீரத்திலும் சிறந்தவளாக இருக்க மறுப்பக்கம் தானுஷா பார்வை இல்லாத குறையில் தன அறையிலேயே மனது உடைந்து இருந்திருக்கிறாள். இதனால் தானுஷாவுக்கு சிட்டிக்காவை பிடிக்காமல் போனது.

அவர்களின் பெற்றோரும் சிட்டிக்கா மேல் தான் பாசம் காட்டி வந்ததால் தானுஷாவுக்கு சிட்டிக்காவை கொல்லும் எண்ணம் வந்திருக்கிறது. அதனால் அவளை கொல்லும் நோக்கத்தில் தானுஷா சிட்டிக்காவுக்கு கொடுக்கப்பட்ட பாலில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறாள். கடைசியில் அந்த பால் தானுஷாவுக்கே வந்து சேர்ந்திருக்கிறது. தானுஷாவுக்கு பார்வை இல்லாத காரணத்தினால் அவள் கலந்த விஷப்பாலை அவளே அறியாமல் குடித்துவிட்டு இறந்திருக்கிறாள். சாகும் முன் சிட்டிக்காவை கொள்வேன் என்றும் கூறி இறந்திருக்கிறாள்.

அவள் இறந்தபின் தானுஷா அடுத்த ஜென்மமாக ஒரு சூனியக்காரிக்கு மகளாக பிறக்கிறாள். சிறுவயதிலேயே தன்னுடைய போன ஜென்மத்தை ஆராய்ந்து தனக்கு தானுஷா என்று பெயரை மாற்றிக்கொண்டாள். தன் தாயிடம் மந்திர வித்தைகளை கற்றப்பின் முதல் வேலையாக  சாகாவரத்தை தேடி அலையும் ஷானுதா ஒரு மந்திரவித்தையின் மூலம் தனக்கு சாக வரம் கிடைக்க சிட்டிக்காவின் அத்தனை ஜென்மங்களையும் அழிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்கிறாள். அதனால் தான் இது வரை அவளது எல்லா ஜென்மங்களையும் அழித்து வருகிறாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.